Published:Updated:

'காஸ்ட்யூம் பார்த்துட்டு நமீதா பாராட்டினாங்க' 'மகிழ்ச்சியில்' இசையருவி நிஷா!

'காஸ்ட்யூம் பார்த்துட்டு நமீதா பாராட்டினாங்க' 'மகிழ்ச்சியில்' இசையருவி நிஷா!
'காஸ்ட்யூம் பார்த்துட்டு நமீதா பாராட்டினாங்க' 'மகிழ்ச்சியில்' இசையருவி நிஷா!

'காஸ்ட்யூம் பார்த்துட்டு நமீதா பாராட்டினாங்க' 'மகிழ்ச்சியில்' இசையருவி நிஷா!

இசையருவியில் நிஷா வழங்கிய நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக டிவி முன்னாடி தனியாக ஒரு பட்டாளமே தவம் இருக்கும். அதே டி.வி யில் மற்றொரு நிகழ்ச்சியைத்  தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த முரளியும், இவரும் காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். நிஷாவுடன் ஒரு உரையாடல்... 
"எங்க திருமணம் முடிஞ்சு அதுக்குள்ள ஐந்து வருஷம் ஆகிடுச்சு.  எவ்வளவு ஸ்பீடா காலம் போகுது. என் பொண்ணு ஜீஶ்ரீ- க்கு மூன்று வயசு ஆகுது. ஜீஶ்ரீ கூடவே சுத்திட்டு இருக்கேன். ஃபோட்டோகிராஃபர் சுகுமாரின் மனைவி சத்யாவும், நானும் இணைந்து ஒருவருஷத்துக்கு முன்னாடி 'forus'என்கிற பொட்டீக்கை சாலிகிராமத்தில் ஆரம்பிச்சோம். இதில் திருமணத்திற்கு தேவையான  மணப்பெண் சேலைகள் மற்றும் ப்ளவுஸ் டிசைனிங் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த மூன்று மாதத்திற்கு முன்னாடிதான், நான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த கலைஞர் டி.வி 'சிநேகிதியே, சூப்பர் சமையல் நிகழ்ச்சிகளில் இருந்து வெளியே வந்தேன். இப்போ முழுக்க முழுக்க பொட்டீக் பிசினஸ். வித்தியாசமான விஷயங்களை பண்ண முடியுது. 
''குழந்தை பிறந்ததுக்கு பின்னாடி உடம்பு வெய்ட் போட ஆரம்பிச்சுடுச்சு. கடந்த ஒரு வருஷத்துல, ஜி.எம். டயட், யோகா என பல முயற்சிகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட எட்டு கிலோ எடை குறைச்சுட்டேன். இதுல நான் சொன்ன ஜி.எம் டயட் எல்லாராலயும் முயற்சிக்க முடியாது.  கூடாது. ஏன்னா வாரத்துல ஏழு நாளும் பழங்கள், காய்கறிகள் மட்டுமே சாப்பாடு. வேற எதையும் சாப்பிடக்கூடாது. அதுவும் நான் இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் இந்த டயட்டை மேற்கொள்வேன். எதுக்கு இவ்வளவு மெனக்கெடல்னு நிறைய பேர் கேட்கிறாங்க. மாடலிங், மீடியானு அதுக்காகவே வாழ்ந்துட்டு இருக்கோம்.. அதற்கான டெடிகேஷன் வேணும்னு நினைப்பேன். அதனாலதான் இந்த முடிவு. இன்னும் சொல்லப்போனா  பாப்பா ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டா.. இனி மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்.''
எங்க பொட்டீக்-குக்கு வந்து நடிகை நமீதாவுக்கு சாரி, ப்ளவுஸ் டிசைன் பண்ணிக்கொடுக்க சொல்லி கேட்டிருந்தாங்க. அவங்க விருப்பப்படி பர்ஃபெக்டா தச்சுக் கொடுத்தோம். ரொம்ப சந்தோஷம் ஆகிட்டாங்க. 'பொதுவா நான் ஒரு டிரெஸ்சை இரண்டு முறைக்கு மேல போடமாட்டேன். ஆனா, நீங்க தச்சுக் கொடுத்தத எப்படியும் பத்து முறைக்கு மேல போடப்போறேன்னு சொல்லிட்டுப் போனாங்க. இப்போ அவங்களுக்கு கவுன்,  வெஸ்டர்ன் டிரெஸ்லாம் டிசைன் பண்ணிட்டு இருக்கோம். இதுமட்டும் இல்லாம பல மாடல்களுக்கும் டிரெஸ் டிசைனிங் பண்ணிக்கொடுத்திட்டு இருக்கோம்.
என்னோட கணவர் முரளி செம்ம ஃபிட்டான பர்சன். அவராலதான் ஓரளவுக்காவது டயட்டை என்னால மெயின்டெய்ன் பண்ணமுடியுது. இப்போ அவர் 'பத்தவச்சிட்டியே பரட்டை' படத்துல நடிச்சிருக்கார். எங்களோட மிகப்பெரிய கனவு சென்னைல இரண்டு, மூன்று ஷூட்டிங் ஹவுஸாவது கட்டணும். நாங்க இல்லாத காலத்துலயும் எங்க பேர சொல்லுவாங்கள்ல" கலகலவென சிரிக்கிறார் நிஷா.
-வே. கிருஷ்ணவேணி 
அடுத்த கட்டுரைக்கு