Published:Updated:

'கல்யாணம் முதல் காதல்வரை’க்குப் பிறகு சீரியலில் நடிக்க மாட்டேன்!' - ப்ரியா பவானிஷங்கர்

'கல்யாணம் முதல் காதல்வரை’க்குப் பிறகு சீரியலில் நடிக்க மாட்டேன்!' - ப்ரியா பவானிஷங்கர்
'கல்யாணம் முதல் காதல்வரை’க்குப் பிறகு சீரியலில் நடிக்க மாட்டேன்!' - ப்ரியா பவானிஷங்கர்

'கல்யாணம் முதல் காதல்வரை’க்குப் பிறகு சீரியலில் நடிக்க மாட்டேன்!' - ப்ரியா பவானிஷங்கர்

சென்னை, பல்லாவரத்தில் இருக்கும் அப்பார்ட்மென்டில் முதல் தள வீடு. வீட்டின் நடுவில் பெரிய மர ஊஞ்சல். பால்கனியில் ஜில் தோட்டம். பெப்ஸி புளூ டாப், ஃபுல் ஸ்கர்ட்டில் பளிச் என வந்து ‘ஹாய்!’ சொல்கிறார் ப்ரியா பவானிஷங்கர்.  புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக மீடியாவுக்கும் மக்களுக்கும் அறிமுகமானவர், இன்று விஜய் டிவியின் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடர் மூலம் தமிழ்க்  குடும்பங்களின் ‘டார்லிங் கேர்ள்’ ஆகியுள்ளார்.

அர்ஜுனின் ப்ரியா 'ஸ்வீட்' என்று தெரியும். நிஜத்திலும் ப்ரியா ஸ்வீட்டி என்பது, பேட்டியை ஆரம்பித்த சில நிமிடங்களில் புரிந்தது!

‘‘மயிலாடுதுறை டூ மீடியா பயணம் எப்படி?’’

‘‘சொந்த ஊரு மயிலாடுதுறைன்னாலும், படிச்சது எல்லாம் சென்னையிலதான். மீடியாவில் வேலை பார்க்க ஆசைனு வீட்டில் சொன்னதும், ஓ.கே சொல்லிட்டாங்க. செய்தி வாசிப்பாளரானேன். அடுத்ததா, சீரியல் சான்ஸ் கிடைச்சது. ஆல் இஸ் வெல்.’’

‘‘அமித்துக்கும் உங்களுக்கும் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அவ்ளோ அழகு. ஆஃப் ஸ்கிரீன்ல நீங்க ரெண்டு பேரும் எப்படி?’’

‘‘அமித் ரொம்ப புரொஃபஷனல். ஷாட்ஸ் எல்லாம் ரொம்பத் தெளிவா இருக்கணும்னு எதிர்பார்ப்பார். ஆக்ஷன்னு சொல்லிட்டா, ‘அர்ஜூனா’வே கூடு பாய்ஞ்சுடுவார். நான் அப்படியே ஆப்போஸிட். நிறைய சண்டைகள் போட்டுக்குவோம். ஆனா குட்ஃப்ரெண்ட்ஸ்.’’

‘‘ ‘கல்யாணம் முதல் காதல்வரை’ ப்ரியாவுக்கும், ப்ரியா பவானி ஷங்கருக்கும் எவ்வளவு வித்தியாசம்?’’

‘‘நிறைய இருக்கு. முக்கியமா, எனக்கு அந்தளவுக்குப் பொறுமையெல்லாம் இல்ல.யாரையும் அவ்வளவு பொறுத்துப்போக மாட்டேன். சீரியல்ல வர்ற ‘ப்ரியா’ மாதிரி இருக்கிறது ரொம்பக் கஷ்டம். அது சீரியலுக்குதான் ஓ.கே.’’

‘‘சீரியல் அனுபவம் எப்படி இருக்கு?’’

‘‘ஆரம்பத்தில் எனக்கு நடிக்கவே தெரியாது. முதல் நாள் ஷுட் முடிஞ்சதும் ஒரே அழுகை. சாதனா மேம், வந்தனா எல்லோரும்தான் என்னை சமாதானப்படுத்தி அட்வைஸ் பண்ணினாங்க. இப்போ எல்லாம் கத்துக்கிட்டேன்.’’

‘‘மறக்க முடியாத பாராட்டு?’’

‘‘ ‘நீங்க அழகா இருக்கீங்க’, ‘உங்க டிரெஸ்ஸிங் அழகா இருக்கு’னு சில பாராட்டுக்கள் வாங்கியிருக்கேன். ஒருமுறை வளசரவாக்கத்தில் ஒரு ஹோட்டலுக்குப் சாப்பிடப் போயிருந்தப்போ ஒரு பையன் வந்து, ‘நீங்க நல்லா நடிக்கிறீங்க’னு சொன்னார். நடிப்புக்கு எனக்குக் கிடைச்ச முதல் பாராட்டு அதுதான். வாழ்க்கையில் மறக்க முடியாதது.’’

‘‘சீரியல்ல உங்க காஸ்ட்யூம்ஸ் எல்லாம் ரொம்ப க்யூட். இதுக்கான க்ரெடிட்ஸ் யாருக்கானது?’’

‘‘நிச்சயமா ப்ரியாவாகிய எனக்கேதான். சீரியல்ல என் காஸ்ட்யூம்களை நான்தான் தேர்ந்தெடுப்பேன். கேஎம்கேவி(கல்யாணம் முதல் காதல்வரை)ல் என் கேரக்டர் ரொம்ப ஆடம்பரம், அடாவடினு இல்லாம, எனக்குப் பிடிச்ச மாதிரி டிரெஸ் தேர்ந்தெடுக்கிற விதமா என்னோட கம்ஃபர்ட் ஸோன்ல அமைஞ்சது நல்ல விஷயம்.’’

‘‘நடிக்க வந்த ஆரம்ப காலத்தைவிட இப்போ கொஞ்சம் ஒல்லியா ஆகியிருக்கீங்க. என்ன டயட்டா..?’’

‘‘டயட்டெல்லாம் எதுவும் இல்ல. பொதுவா ஸ்கிரீன்ல நம்ம உருவம் இயல்பைவிட 4% பெருசாதான் தெரியும். அதனாலதான் நான் குண்டா தெரியுறேன். அதுக்காக நான் ஒல்லினு சொல்லமாட்டேன். ஆனா நான் குண்டு இல்ல. சரியாதான் பேசுறனா ?! (சிரிக்கிறார்)’’

‘‘உங்ககிட்ட உங்களுக்குப் பிடிக்காத குணம் எது?’’

‘‘கோபம். அதைக் கட்டுப்படுத்த ரொம்ப முயற்சி செய்றேன். ஆனா முடியல.’’

‘‘மீடியாவில் உங்களுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரு?’’

‘‘கவின். அப்பப்போ ஜாலியா அவுட்டிங் போற அளவுக்கு, ரெண்டு பேரும் க்ளோஸ்  ஃ ப்ரெண்ட்ஸ். அப்புறம், பாவனா, சாதனா மேடம் ரெண்டு பேரும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ். வந்தனாவும் நானும் அக்கா தங்கச்சிபோல. எனக்கு டிவி சீரியல் மேக்கப் போடக் கற்றுக்கொடுத்தது வந்தனாதான். விஜய் டிவிக்கு வெளியே, எனக்கு மீடியா ஃப்ரெண்ட்ஸும் யாரும் இல்ல.’’

‘‘நீங்க சிங்கிளா?’’

‘‘இல்ல! ஆனா அதைப் பத்தி மேல எதுவும் இப்போ சொல்ல முடியாது. ப்ளீஸ்வெய்ட்...(சின்னப் புன்னகையுடன் கண்களைச் சுருக்கிக் கெஞ்சலாகக்கேட்கும்போது, க்யூட்!)!’’

‘‘அடுத்து என்ன?’’

‘‘ ‘கேஎம்கேவி’க்கு பிறகு நான் சீரியல்ல நடிக்க மாட்டேன் மாட்டேன்... மாட்டேன்!’’

ப்ரியா ஃபேன்ஸ்... இந்த பேட் நியூஸுடன் பேட்டியை முடிப்பதற்கு ஸாரி!

எஸ்.எம். கோமதி(மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: சி. சதீஷ்குமார் (மாணவப் பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு