Published:Updated:

ஒருநாள் சம்பளம் ஒரு லட்சம்.. இது வேற சிவாஜி! #டப்பிங் சீரியல் நடிகர்கள்

Vikatan Correspondent
ஒருநாள் சம்பளம் ஒரு லட்சம்.. இது வேற சிவாஜி! #டப்பிங் சீரியல் நடிகர்கள்
ஒருநாள் சம்பளம் ஒரு லட்சம்.. இது வேற சிவாஜி! #டப்பிங் சீரியல் நடிகர்கள்

ஆண் பெண் வெளியில் வேலை செய்பவர்கள் வீட்டை பார்த்துக்கொள்பவர்கள் என யாராய்  இருந்தாலும் மாலை நேரத்தில் டி. வி  முன்பு அசையாமல்  அமர்ந்து கொள்கிறார்கள் . இதற்கு  முழு காரணம் தொலைக்காட்சிகளில்  வரும்  பெரும்பாலான ஹிந்தி டப் சீரியல்கள் தான். நம்மை ஈர்த்து வைத்திருக்கும் இந்த சீரியல்களின் ஹீரோ, ஹீரோயின்களின் வாழ்க்கை ஒரு ரசிக கண்ணோட்டத்தில் இங்கே... 

1. இனி எல்லாம் வசந்தம் ஷாஹிர் ஷேக்
பாலிமர் டி.வி.யில் வெளிவரும் இந்த சீரியலில் ரோகினி, திலீப்புடன் சேருவர் என்ற பதற்றத்துடன் பார்ப்பவர்களின் கவனத்திற்கு, 
நமக்கெல்லாம் திலீப்பாக அறிமுகம் ஆன ஷாஹிர் ஷேக் சட்டம் படித்தவர். ஜம்முவில் பிறந்தவர்.  டிஸ்னி சேனல் வரை சென்று "பெஸ்ட் ஒப்பி லக் நிக்கி " என்ற தொடரில் நடித்து ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் . நடிப்பை ஒருபுறம் பாத்துக்கொண்டு ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றையும் நடத்திக்கொண்டிருக்கிறார் . கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசைதான் என்கிறார் இவர்.
திலீப்பின் ஜோடி ரோகினியாக  நடிக்கும் எரிகா பெர்னாண்டஸ் மிஸ் மகாராஷ்டிரா பட்டத்தை வென்ற ஒரு  அழகி. இவரின் அப்பாவும் மாடலிங் மற்றும் டிசைனிங் துறையில் இருப்பதாலோ என்னவோ இவரும் இளம் வயதிலேயே மாடலிங் துறைக்குள்  நுழைந்தார் .  இவர் சீரியல்களில் நடிப்பதுமட்டும் அல்லாமல் 555 என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார் . மேலும் சில படங்களும் தற்போது நடித்து வருகிறார்.
2. சிந்து பைரவி
கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஹிந்தியிலும், மலையாளத்திலும் மட்டுமின்றி தமிழில்  'சிந்து பைரவி' என்ற பெயரிலும் வெளிவரும் தொடர்கதையின் ஸ்டார் டீனா டாட்டாவை பற்றிய சில குறிப்புக்கள் இதோ...
இவர் ஒரு குழந்தை நட்சத்திரம். சிஸ்டர்  நிவேதிதா என்ற தொடரில் 1992 ம் ஆண்டிலேயே  நடித்து அசத்திய டீனா, பின்னர் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். உலக அழகி ஐஸ்வர்யா ராயுடனும், 'சொக்கர் பாலி' என்ற படத்தில் நடித்துள்ளர். இந்த பேரழகி அசத்தலான நடன கலைஞரும் கூட.
3. சி. ஐ. டி:.
1998- ஆம் ஆண்டுகளில் இருந்து மக்களை ஈர்த்து இன்னும் மகிழ்வித்துக்கொண்டிருக்கும் இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரம் தான்      A.C.P. பிரதியுமன். இங்கு இவரை பற்றி காண்போம்.
இவர் பெயர் சிவாஜி சட்டம். நடிக்க வருவதற்கு முன்பு ஒரு வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். திடீரென  நடிப்பின் மீது ஆர்வம் பெருக்கெடுக்க, வங்கி வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு, நடிப்புத் துறையை தேர்தெடுத்தார். இவரின் கலை ஆர்வத்திற்கு பல இயக்குனர்கள் தீனி போட, ஃபீல்டிலும், மக்களிடமும் செம செல்வாக்கு. 1998லிருந்து இதே கேரக்டரில் நடிக்கறோமே என்று போரடித்து, சினிமாவில் வரும் வாய்ப்புகள் பக்கம் இவர் பாதை திரும்ப, ரசிகர்கள் கொதித்தெழுந்து, ‘இவர்தான் வேணும்’ என்று கூப்பாடு போட.. இன்று வரை அந்த சீரியலில் ACP இவர்தான். தற்போது இவரது ஒரு நாள் சம்பளம் ஒரு லட்சம்! மனுஷன் கலக்கறார்!
4. உள்ளம் கொள்ளை போகுதடா:.
எல்லோரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு நேயர் விருப்பத்தினால் இன்னொரு முறை ஒளிபரப்பு செய்யப்படும் இந்த சீரியலின் ஸ்டார் குண்டு  மிஸ்டர் குமார் பற்றித்தான்  பார்க்க போகிறோம் .
'குமார்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ராம் கபூர் கொடைக்கானலில் தனது பள்ளி படிப்பை முடித்தார். பின்னர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் அமெரிக்கா சென்று நடிப்பு கற்றுக் கொண்டார். இவரது உழைப்பும், நேரமும், கனவும் வீண் போகவில்லை. பல படங்களிலும், சீரியல்களிலும் வாய்ப்புகள் வாசல் தேடி வரத்தொடங்கியது. பல தளங்களின் தன்னுடைய நடிப்பை நிரூபித்தார். நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பிரபலத்தின், ஒரு நாள் சம்பளம் ஒன்று முதல் இரண்டு லட்சம் வரை. 
-பெ.கெசன்ட்ரா இவாஞ்சலின்
    மாணவ பத்திரிகையாளர்