Published:Updated:

’கோலங்கள்’ அபி...’மதுரை’ மீனாட்சி.... மறக்க முடியுமா இந்த ஹீரோயின்களை?!

Vikatan Correspondent
’கோலங்கள்’ அபி...’மதுரை’ மீனாட்சி.... மறக்க முடியுமா இந்த ஹீரோயின்களை?!
’கோலங்கள்’ அபி...’மதுரை’ மீனாட்சி.... மறக்க முடியுமா இந்த ஹீரோயின்களை?!
’கோலங்கள்’ அபி...’மதுரை’ மீனாட்சி.... மறக்க முடியுமா இந்த ஹீரோயின்களை?!

’சித்தி’...90களின் முடிவில் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஆக்கிரமிப்பு செய்து கொண்ட எல்லா வீடுகளிலும் பெண்களை டிவி முன்பு ஆடாமல், அசையாமல் அமர வைத்த மெகா தொடர்.

அன்று தொடங்கி, இன்று வரை உணர்வுகளின் குவியலாய் பெண்களையும், ஆண்களையும் பாரபட்சமில்லாமல் டிவி ஸ்கீரின் முன்பு கட்டிப் போட்டிருக்கும் சீரியல்கள் ஏராளம். ட்ரேட் மார்க் சீரியல் வில்லத்தனங்களையெல்லாம் சமாளித்து ஜெயிக்கும் பெண்களாக சின்னத் திரையில் ‘மாஸ்’ ஹிட்டடித்த பெண் கேரக்டர்களை அவ்வளவு எளிதாக டிவி ரசிகர்கள் மறந்து போக முடியாது.

அந்த வகையில் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் சில சீரியல் ஹீரோயின் கதாப்பாத்திரங்களின் ஸ்மால் லிஸ்ட் இதுதான்.

’சித்தி’ சாரதா:

’கோலங்கள்’ அபி...’மதுரை’ மீனாட்சி.... மறக்க முடியுமா இந்த ஹீரோயின்களை?!

* 'கண்ணின் மணி...கண்ணின் மணி’ என்ற இந்தப் பாடலுக்கே சீரியல் ரசிகர்களிடம் பெரும் கிரேஸ் இருந்தது. சக்தியாகவும், சாரதாவாகவும் ராதிகா சரத்குமாரின் ஸ்டைலான நடிப்பு டிவி சீரியல் உலகையே ஒரு சுழட்டு சுழட்டியடித்தது.

* பிசினஸ்வுமனாகவும், குழந்தைகளின் மீது அன்பான அம்மாவாகவும் கலக்கிய சாரதாவின் லீடர்ஷிப்பும், கலெக்டராக ஓப்பனிங் சாங்கிலேயே கெத்தாக நடந்து வரும் சக்தியின் கம்பீரமும் பல பெண்களையும் ஏன்.. ஆண்களையும் பிரமிக்க வைத்திருந்தது.

'கோலங்கள்’ அபி:

’கோலங்கள்’ அபி...’மதுரை’ மீனாட்சி.... மறக்க முடியுமா இந்த ஹீரோயின்களை?!

* பிறந்த வீட்டுச் சூழ்நிலையால் பணத்திற்கு ஆலாய்ப்பறக்கும் குடும்பத்தில் அப்பாவி பெண்ணாக மருமகளாகும் அபி என்கிற அபிநயா. வாழ்வில் அடிகளையும், வலிகளையும் ஒரு சேர தாங்கிக் கொண்டு அபிநயா விஸ்வரூபம் எடுத்து நிற்பதுதான் இந்த சீரியலின் கதை.

* ஒரே அடியாக தொழிலிலும், வாழ்க்கையிலும் தன்னை ஒழித்துக் கட்ட நினைக்கும் ஆதித்யாவிடம், ’இனி ஒவ்வொரு அடியும் உனக்கான பதிலடி ஆதி’ என்று சவால் விடும் அபி கேரக்டர்,  கம்பீரம் கலந்த அழகு.

தொல்காப்பியன் - அபியின் நட்பு, இன்றும் ஆண்-பெண் நட்பின் ஆழத்தை திரையில் அட்டகாசமாக காட்டிய கதாபாத்திர வடிவமைப்பு. அபியாகவே திரையில் தேவயானி வாழ்ந்திருப்பார்.

’மதுரை’ மீனாட்சி:

’கோலங்கள்’ அபி...’மதுரை’ மீனாட்சி.... மறக்க முடியுமா இந்த ஹீரோயின்களை?!* மூன்றாவது சீசனாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகின்ற சரவணன் - மீனாட்சி சீரியலின் தாய்தான் இந்த ‘மதுரை’ சீரியல். சரவணனைக் காதலிக்கும் மீனாட்சியாக உலா வந்த ஸ்ரீஜா, ‘சார் தமிழில் சொல்லமாட்டிங்களோ....நானும் உன்னைக் காதலிக்கறேன் டா’ என்று கண்களை சுழட்டி சிரித்தே பலபேரின் உள்ளங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்.

’திருமதி செல்வம்’ அர்ச்சனா:

’கோலங்கள்’ அபி...’மதுரை’ மீனாட்சி.... மறக்க முடியுமா இந்த ஹீரோயின்களை?!


* அமைதியான அம்மா பெண்ணாக வலம் வரும் ஒரு எளிய குடும்பத்துப் பெண்...செல்வம் என்னும் மெக்கானிக்கிற்கு மனைவியாகி, அவனை வாழ்வின் உயரத்தில் உட்கார வைக்கும் கேரக்டர்தான் ‘அர்ச்சனா’.

* அவ்வளவு  அப்பாவி பெண்ணான அர்ச்சனா கணவனுக்கான புகுந்த வீட்டினைரையே எதிர்த்துக் கொண்டு நிற்பதாகட்டும், ஒரு கட்டத்தில் கணவன் விட்டுச் சென்ற நிலையில் தைரியமாக கார் ஓட்டத் தொடங்குவதாகட்டும் பலபேரின் வீடுகளை இரவு 8 மணிக்கு விளம்பரத்திற்காகக் கூட சேனல் மாற்றவிடாமல் செய்த கேரக்டர்தான் அர்ச்சனா.

இங்கே இருப்பது ரொம்ப சின்னப்பட்டியல்தான். ’தென்றல்’ துளசி, ‘அரசி’ செல்வி, ‘தெய்வமகள்’ சத்யா, ’நாதஸ்வரம்’ மலர், ’பிரியமானவள்’ உமா, ’அவள்’ ஷாலினி... இவர்களும் இந்த ‘க்யூட் அண்ட் ஸ்வீட்’ பட்டியலில் அடக்கம். இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாமே மோசமான லைப் ஸ்டைல் பிரச்னைகளைக் கூட சமாளிக்கும் ‘தி கிரேட்’ பெண் கேரக்டர்கள்...

சீரியல் அழுக்காச்சியையெல்லாம் மட்டுமே மைண்ட்டில் ஏற்றிக் கொள்வதை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு இந்த கதாபாத்திரங்கள் சொல்லும் நல்ல குணாதிசயங்களையும் ஹார்ட்டில் பதிய வச்சுக்கலாம்...தப்பில்லை!

                                                                                                                                                                       -பா.விஜயலட்சுமி