Published:Updated:

‘பூனை எனக்கு என்ன கத்துக் கொடுத்துச்சு தெரியுமா?!’ - சீரியல் நடிகை தேவி கிருபா

‘பூனை எனக்கு என்ன கத்துக் கொடுத்துச்சு தெரியுமா?!’ - சீரியல் நடிகை தேவி கிருபா
‘பூனை எனக்கு என்ன கத்துக் கொடுத்துச்சு தெரியுமா?!’ - சீரியல் நடிகை தேவி கிருபா

‘பூனை எனக்கு என்ன கத்துக் கொடுத்துச்சு தெரியுமா?!’ - சீரியல் நடிகை தேவி கிருபா

2001-ம் ஆண்டு விஜய் டி.வி யில் ஒளிபரப்பான 'கிரேஸி டைம்ஸ்' தொடரின் மூலம் அறிமுகம் ஆகி, 2003-ம் ஆண்டு சன் டி.வி யில் ஒளிபரப்பான 'ஆனந்தம்' சீரியலில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து மக்களிடையே பிரபலமானார். அதற்குப் பிறகு நடிகர் கிஷோருடன் 'பயம் அறியான்' படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு சின்னத்திரையில் சீரியல், நிகழ்ச்சி தொகுப்பாளி என பிஸியாக இருந்துவரும் அவரிடம் பேசினோம்,

''வசந்த் டி.வி யில் 'குக்கரி புரோகிராம்' திங்கள் மற்றும் ஞாயிறு வரை மதியம் 1.05 க்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.30 முதல் 10.30 வரை ஒளிபரப்பாகி வரும் 'பெண் ஓவியம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். இந்த நிகழ்ச்சியில், சாதனைப் பெண்களின் நேர்முகம், மருத்துவருடனான உரையாடல், பியூட்டி டிப்ஸ், ஃபேஷன் என பல விஷயங்களை தொகுத்து வழங்கி வருகிறேன். வானவில் தொலைக்காட்சியில் 'மூவி ஒன்' என்கிற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக இருந்து வருகிறேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கிரேஸி மோகன் சாருடைய குழுவில் இணைந்து நிகழ்ச்சிகளில் நடிக்க ஆரம்பிச்சேன். கல்லூரி படிப்பும் ஃபேஷன் டிசைனிங் என்பதால், ஆடை வடிவமைப்பு, நகை அலங்காரம் என பல விஷயங்கள் அத்துப்படி. நான் நிகழ்ச்சியில் அணிந்து வரும் ஒவ்வொரு டிரெஸ்ஸூம் நான் வடிவமைத்ததுதான். அதே போல நகைகளையும் செலக்ட் செய்வது மற்றும் டிசைன் செய்வது  எல்லாமே நான் தான். எனக்கு இதில் எவ்வளவு நேரம் போகுது என்றே தெரியாது. உட்கார்ந்தால் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். வீட்டில் இருக்கும்போது டி.வி பெட்டியை விட தையல் மிஷின் முன்னாடிதான் உட்கார்ந்து கிடப்பேன். என்னோட டிரெஸ்ஸிங் சென்ஸைப் பார்த்துட்டு, பிரண்ட்ஸ் கேட்டதால, அவங்களுக்கும் அப்பப்போ டிசைன் செய்து கொடுப்பேன்.  D.K என்கிற பெயரில் ஒரு பொட்டீக்கையும் ஆரம்பிக்கிற ஐடியாவில் இருக்கேன். 

ஆங்.. ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே, எங்க வீட்ல எப்போதும் 14 உறவினர்கள் இருப்பாங்க. யார்னு கேட்கிறீங்களா..? ஆதரவற்று தெருக்களில் கிடந்த 12 நாய்குட்டிகள், 2 பூனை குட்டிகளை வளர்த்து வருகிறோம். என் தம்பி கோகுல் எங்கே பூனைக்குட்டியோ, நாய்குட்டியோ கிடந்தாலும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்திடுவான். இரண்டு பூனைக்குட்டியில ஒரு பூனைக் குட்டியை அவனும், இன்னொரு பூனைக்குட்டியை நானும் வளர்த்து வருகிறோம். என் பூனைக் குட்டிப் பேர் கில்லி. 2007-ல் இருந்து என்னோட பெஸ்ட் பிரண்ட். என் தம்பி வளர்க்கும் பூனைக்குட்டிப் பேர் டக்கிலா. நாங்க பெரும்பாலும் அதுங்கள கஷ்டப்பட்டு குளிப்பாட்டத் தேவையில்லை. குளித்து முடிச்ச உடனே அதுகளே சுத்தப்படுத்திக்கும். பொதுவா நாய்க்குட்டிகளை வளர்க்கும் போது, வீட்டுக்குள் பூச்சி வரும் என்பார்கள். அதே போலதான் பூனைக்குட்டி வளர்க்கும் போது பூச்சிகள் வரும் என்பார்கள். ஆனால், இத்தனை வருஷங்களா பூனைகளை வளர்க்கிறோம். ரொம்ப சுத்தமா இருக்கும். அதுக்கிட்ட இருந்துதான் நான் சுத்தத்தை இன்னும் கத்துக்கிட்டேன். அதுகளுக்கு கொஞ்சம் டஸ்ட் இருந்தாலும் பிடிக்காது. எங்களோட செல்லக் குழந்தைகள் அதுங்க. அடிக்கடி சண்டைப் போடுறது, கொஞ்சிக்கிறது என எங்க வீட்ல சொந்தங்களாக மாறிடுச்சுங்க. இன்னும் எத்தனை பெட் அனிமல்ஸ் கிடைச்சாலும் எடுத்து வளர்த்துடுவோம்' என்கிறார் தேவி கிருபா நெகிழ்ச்சியாக!

-வே. கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு