Published:Updated:

அஞ்சனா, தியா, அமித் பார்கவ், ’மைனா’ நந்தினி... இவங்க கல்யாணத்துல இருக்குற ஒற்றுமை..!

Vikatan Correspondent
அஞ்சனா, தியா, அமித் பார்கவ், ’மைனா’ நந்தினி... இவங்க கல்யாணத்துல இருக்குற ஒற்றுமை..!
அஞ்சனா, தியா, அமித் பார்கவ், ’மைனா’ நந்தினி... இவங்க கல்யாணத்துல இருக்குற ஒற்றுமை..!

திருமணத்திற்கு ஜாதி, மதம், பணம் இனி தடையில்லை என்பதை நிரூபித்துவிட்டார்கள் இந்த டிவி பிரபலங்கள். கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட இளம் தொலைக்காட்சி பிரபலங்களின் லிஸ்ட் எடுத்தால் அவற்றுக்கிடையே ஓர் சுவாரஸ்யமான ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்பதை இறுதியில் பார்ப்போம். 

’தொகுப்பாளினி’ அஞ்சனா -  ’நடிகர் கயல்’ சந்திரன் :-

பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியன ’கயல்’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சந்திரன். இவருக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர் அஞ்சனா இடையே இருந்த நட்பு மலர்ந்து காதலாக மாறியது. அந்தக் காதல் 2016 மார்ச் 10ம் தேதி திருமணத்தில் முடிந்தது. பிரபல விருது வழங்கும் விழா ஒன்றில் அஞ்சனாவைச் சந்தித்திருக்கிறார் கயல் சந்திரன். இருவருக்குமான நட்பை ட்விட்டர் நீர் ஊற்றி வளர்க்க, காதலாகிக் கசிந்துருகி கல்யாண மேளமும் கொட்டிவிட்டார்கள். தற்பொழுது ‘கிரகணம்’ மற்றும் பிரபுசாலமன் தயாரிக்கும் ‘ரூபாய்’ படங்களில் நடித்துவருகிறார் சந்திரன். அஞ்சனாவும் கலகலவென்று நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றிவருகிறார். 

’சன் டிவி’ தியா - கார்த்திக்:- 

பளிச் முகமும், குறும்பு ரியாக்‌ஷனுமாக யூத்களின் ஃபேவரைட் ‘கிரேஸி கண்மணி’ தியா. சிங்கப்புரைச் சேர்ந்த இன்டோர் கிரிக்கெட் டீம் கேப்டன் கார்த்திக் தான் மாப்பிள்ளை. கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. தியாவின் ஃபர்த்டே நிகழ்ச்சியில் திடீரென தோன்றி ஷாக் கொடுத்தார் அந்நியன் கார்த்திக். ஏனென்றால் அதற்கு முன்பு வரை கார்த்திக்கைத் தியா சந்தித்ததே இல்லை. முதல் பார்வையிலேயே நண்பர்களாக மாறினார்கள். இவர்களது திருமணத்திற்கு வீட்டில் எந்த தடாவும் இல்லை. கடந்த வருடம் திருமணம் முடிந்த கையோடு தியா சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டார். தற்பொழுது சிங்கப்பூரில் உள்ள டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றிவருகிறாராம். இந்த ஜோடி இப்போ சிங்கப்பூரில் செம ஜாலி!  

அமித்பார்கவ் - ஸ்ரீரஞ்சனி:-

விஜய் டிவியின் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடிக்கும் அமித் பார்கவ், தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி திருமணம் கடந்த ஜூன் 16ம் தேதி நடந்தது. காதல் திருமணம். இருவீட்டார் சம்மதத்தில் திருமணமும் செய்துகொண்டார்கள். அமித் பெங்களூர் பையன். ஸ்ரீ ரஞ்சனி திருநெல்வேலிப் பொண்ணு. இருவரின் நட்பிற்குமான ஒரே பாலம் மீடியாவில் வேலை. தமிழக ஒட்டுமொத்த வீஜே நண்பர்களும் இவர்கள் திருமணத்தில் ஒன்று கூட செம ரகளையாக நடந்தது திருமணம். சென்னையில் ஹாப்பியாக இருக்கிறார்கள் இந்த க்யூட் ஜோடி. 

‘மைனா’ நந்தினி - கார்த்திக்:- 

“திடீர் திருமணங்குறதுனால யாருக்குமே சொல்லவில்லை. இப்போ நினைத்தாலும் கனவு மாதிரி இருக்கிறது. காதலிக்க ஆரம்பிச்ச நான்காவது  நாளில் அவர் வீட்டில் வந்து பேசிட்டார். எங்க வீட்டிலும் உடனே ஓகே சொல்லிட்டாங்க. உடனே நிச்சயதார்த்தம். அடுத்த நாள் திருமணம்” என்று மூச்சுவிடாமல் பேசுகிறார் சரவணன் மீனாட்சி புகழ் ’மைனா’ நந்தினி. செம அரட்டை சிம்மக்கல் பொண்ணு நந்தினி.இவரின் உறவினரான செலிஃபிட்டி ஜிம் ட்ரெய்னர் கார்த்திக்குடன் திருமணம் மதுரையில் நடந்தது.  

ஓகே பாஸ், இப்போ  இந்தக் கல்யாணங்களில் என்ன ஒற்றுமைனு பார்க்கலாமா? இந்த நான்கு பிரபலங்களுமே காதல் திருமணம். அதுவும் எந்தப் பிரச்னையோ தடையோ இல்லாத கெட்டிமேளம்தான். காதலர்களின் கரம்பிடித்த இந்த நான்கு ஜோடிகளையும் வாழ்த்தலாமே ப்ரெண்ட்ஸ்!

-பி.எஸ்.முத்து