Published:Updated:

”லவ் யூ சொன்ன ஃபேக் ஐ.டி நான் இல்லைங்க!” - ‘அச்சச்சோ” அசார்

”லவ் யூ சொன்ன ஃபேக் ஐ.டி நான் இல்லைங்க!” - ‘அச்சச்சோ” அசார்
”லவ் யூ சொன்ன ஃபேக் ஐ.டி நான் இல்லைங்க!” - ‘அச்சச்சோ” அசார்

”லவ் யூ சொன்ன ஃபேக் ஐ.டி நான் இல்லைங்க!” - ‘அச்சச்சோ” அசார்

ஆதித்யா சேனலில் 'தலதளபதி' நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திவருபவர் அசார் . விரைவில் அவர் நடித்திருக்கும் 'ஏண்டா தலையில எண்ண வெக்கல' என்ற படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. புது வருடத்தைப் புத்துணர்ச்சியாகத் தொடங்கியிருக்கும் அசாரிடம் 'ஹேப்பி நியூ இயர்' வாழ்த்துச் சொல்லி பேசினேன்.

'தலதளபதி' நிகழ்ச்சிப் பேரே வித்தியாசமாக இருக்கே?

”எல்லாருக்குமே தெரியும் தல,தளபதி பெயரை பிரிச்சு சொல்லும் பொழுது எவ்வளவு பிரச்னை வரும்னு. எனக்கு தல, தளபதி ரெண்டு பேரையுமே பிடிக்கும். ‘இந்த இரண்டு பேரையுமே இணைச்சு ஒரு ஷோ பண்ணா என்ன?'னு ஒரு ஐடியாவைத்தான் எக்ஸிகியூட் பண்ணி இப்போ சக்சஸ் ஃபுல்லாப் பண்ணிட்டு இருக்கோம்!”

வெளியூர்களில் நிறைய ஷோக்கள் பண்றீங்க போல?

”ஆமாம். கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் வெளியிடங்கள் என நிறைய ஷோக்களுக்கான அழைப்புகள் வரும். நான் இப்போ தொடர்ந்து செய்துட்டு இருக்கிற வேலையில் எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொண்டு, அந்த ஷோக்களையும் செய்துட்டு இருக்கேன். எஃப்.எம்மில் வேலை பார்த்த அனுபவம் இப்போ எனக்குப் பல இடங்களில் உதவியாக இருக்கு. பேசும்போதே இயல்பா நகைச்சுவை கலந்து பேசிப் பார்வையாளர்களைக் கவரமுடியுது!”

”இந்த வருஷம் எந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்தணும்னு நினைக்கிறீங்க?”

“இதை ரொம்ப காலமா சொல்லணும்னு நினைச்சுட்டே இருக்கேன். இதுதான் அதற்குச் சரியான டைம்னு நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து 90 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். அதில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதால் என்னமாதிரியான பாதிப்புகள் வருகின்றன என்பதைப் பெரும்பாலும் பலர் உணர்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் இதில் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் தான். ஃபேஸ்புக்கிலேயே காதல் ஆரம்பித்து, கல்யாணம் ஆகி, டைவர்ஸ் வரை சென்று, மீண்டும் ஒரு உறவின் காதலில் விழுந்து திருமணத்தில் முடிகிறது. இப்படி பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவனை நம்புறோமோ இல்லையோ, ஃபேஸ்புக்கில் இருப்பவரை அப்படி நம்பிவிடுகிறோம். எனக்கே அப்படி ஒரு பெர்சனல் அனுபவம் இருக்கு!

அசார் என்கிற பெயரில் ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணிடம் ஒருவன் பேசிப் பழகி, காதலித்து, கடைசியில் கல்யாணம் வரை வந்து நிற்கும் பொழுது ஆள் எஸ்கேப். அந்தப் பொண்ணு அத்தனை நாட்களாக என்னைத்தான் காதலிப்பதாக நினைத்திருக்கிறார். ஒரு நாள் எங்கள் ஆபீஸூக்கு வந்து, 'அசார் யார்?'னு கேட்டாங்க. நான் போய் நிற்கிறேன். 'ஹோ..' னு அழ ஆரம்பிச்சிட்டாங்க. நான் எல்லாத்தையும் தெளிவாகக் கேட்ட பிறகு, என்ன தவறு நடந்திருக்கு என எடுத்துச் சொல்லி ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன். இந்த டெக்னாலஜி யுகத்தில் பொண்ணுங்க ரொம்பப் பாதுகாப்பாக இருக்கணும். இந்தப் புது வருஷத்துல இந்த மாதிரி பிரச்னைகள் வராமல் இருக்கப் பெண்கள் முயற்சி எடுக்கணும். இது எனக்கு மட்டும் அல்ல பல பிரபலங்களுக்கு நடந்திருக்கு. பிரபலங்கள் பெயரை சொல்லி மத்தவங்களை ஏமாத்தாதீங்க ப்ளீஸ்.'' என்று வேண்டுகோள் விடுக்கிறார் அசார். 

-வே.கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு