Published:Updated:

என்னன்னமோ மாறிடுச்சு... சீரியல்ல இதெல்லாம் மாறலையே... ஏன்?

என்னன்னமோ மாறிடுச்சு... சீரியல்ல இதெல்லாம் மாறலையே... ஏன்?
என்னன்னமோ மாறிடுச்சு... சீரியல்ல இதெல்லாம் மாறலையே... ஏன்?

என்னன்னமோ மாறிடுச்சு... சீரியல்ல இதெல்லாம் மாறலையே... ஏன்?

ஒரு படத்துக்கு எப்படி காதல், காமெடி, ஃபைட், ஹீரோயிசம், பாடல் என இருக்குமோ அதே போல எந்த சீரியல் எடுத்துக் கொண்டாலும் டிரேட் மார்க்காக சில சீன்கள் கட்டாயம் இடம்பெறும். அதில் முக்கியமான ஐந்து சீன்கள் என்னென்ன தெரியுமா? 


அழாமல் ஒரு சீரியலா...? அம்மா கோச்சுப்பாங்க:

'ஒரு வீட்டில் குடும்பத்தலைவிகள் பிடிவாதம் பிடித்துக் கேட்பதை விட, கண்ணீர் வராமல் விசும்பிக் கேட்டாலே அந்த காரியம் நடந்துவிடும் என்பதை, எந்த டைரக்டரோ கண்டுபிடிச்சதன்  விளைவு. எந்த சீரியல் எபிசோடும் அழுகாச்சி இல்லாம ஆரம்பிக்கவோ, முடிவதோ  இல்லை. அப்படி இல்லைன்னா வீட்டுல இருக்கிற தாய்க்குலங்கள் கோச்சுக்கும்'.

பாசக்காரப் புள்ளையா இருந்தாலும், பழிவாங்கியே தீரணும்:

'எவ்வளவுதான் அன்யோன்யமா இருந்தாலும், தான் நேசிக்கும் காதலனுக்கோ, கணவனுக்கோ, தான் பெற்ற பிள்ளைக்கோ எதிரி யாராவது இருந்தா அவங்களைப் பழிவாங்கத் துடித்தால்தான் அது உண்மையான அன்புனு 'உரக்க' சொல்லுது ஒவ்வொரு சீரியலும். 

நாங்களாம் புடம் போட்டத் தங்கம், தப்பா பேசிடாதீங்க:

ஹீரோக்கள் கஷ்டப்படுறதுங்கறது தமிழ்ப் படங்களோட தலையெழுத்துன்னு சொல்றதா, தட்டிக் கொடுக்கறதான்னு தெரியல. விக்ரமன் படத்தில் வருவது போலதான் பெரும்பாலான படங்களில், ஹீரோ கடைசி வரை பலதரப்பட்ட அவமானத்திற்கு உள்ளாகி நொந்து நூடுல்ஸாப் போகுற தருணத்தில, ஹீரோயின் என்ட்ராகி அவரை உச்சத்துக்கு கொண்டு போவாங்க. அதே பாணியைத்தான் சீரியல்லயும் ஃபாலோ பண்றாங்க. சீரியல் நாயகிக்கு அவ்வளவு தொந்தரவுகள், போட்டிகள், பொறாமைகள் வரும். அதை எல்லாம் தன்னோட பிறந்த வீட்டுக்காகவும், புகுந்த வீட்டுக்காகவும் பொறுத்துப் போயிட்டே இருப்பாங்க. வெளி ஆட்கள் யாராவது உள்ளே நுழைந்தால் அவ்வளவுதான் சம்ஹாரம் பண்ணிடுவாங்க. 

வூட்டுக்குள்ளியே எதிரியா.. விட்டுதராத, வூடுகட்டி விளையாடு:

இந்தப் பாணியும் கிட்டத்தட்ட மேலே சொன்னா மாதிரிதான். சும்மானாச்சுக்கும் யாராவது சீண்டினாலே விடமாட்டோம். அதிலும் வீட்டுக்குள்ளயே எதிரியா... நெவர். அண்ணி, நாத்தனார், கொழுந்தனார், ஓரகத்தி, மாமியார் என யாராவது பழிவாங்கினாலோ, போட்டி போட்டாலோ அதை அடிச்சுத் துவம்சம் பண்ணும் ஹீரோ, ஹீரோயின்களை எல்லா சீரியல்லயும் தவறாமப் பார்க்கலாம். 

மாமியார் பிரச்னையா, அப்போ மருமகளுக்கு ஒரு கடமை பாக்கியிருக்கு:

'சின்னப் பாப்பா பெரியப் பாப்பா' சிரிப்பு சீரியலா இருந்தாலும் சரி, சீரியஸான சீரியலா இருந்தாலும் சரி மாமியார் ரோல் நெகட்டிவ் ரோலாகத்தான் இருக்கும். மருமகளை மாமியார் வூடுகட்டி அடிக்கிறதும், மருமகள் மாமியாரை வூடுகட்டிப் பழிவாங்கறதும் தமிழ் சீரியல்களின் ஒரு அங்கமாகவே இருந்துச்சு. இப்போ அது கொஞ்சம் குறைஞ்சது போல தோணுது. அதுக்குப் பதிலாத்தான் மத்த எதாவது ஒரு கேரக்டரை ஸ்ட்ராங்கா உள்ள கொண்டு வந்துடுறாங்களே..!

நீங்க மட்டும்தான் மேக்கப் போடுவீங்களா..? நாங்களும் போடுவோம்:

நல்லா உத்து கவனிச்சீங்கனாத் தெரியும். நைட்டு டின்னர் சாப்பிடும் போது, தூங்குறதுக்கு முன்னாடி இப்படி எல்லா நேரத்திலும் உதட்டுச்சாயம், கண் மை, கலையாத கேசம்னு எப்பவும் ஃப்ரிட்ஜ்ல வச்ச ஆப்பிள் மாதிரியே இருப்பாங்க சீரியல்ல வரும் பொண்ணுங்க. போதாததுக்கு இப்ப பசங்களும் எப்பவும் மேக்கப்லதான் இருக்காங்க. துக்கம் விசாரிக்கப் போகும்போதாவது, தூக்கலா மேக்கப் போடுறதைக் குறைச்சா நல்லாத்தான் இருக்கும். மேக்கப் இல்லாம இயல்பா நடிக்கிற எந்த சீரியலும் கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் இல்லை இல்லை, இல்லவே இல்லை. அது டைனோசர் காலத்துலயே அழிஞ்சுப் போச்சு. மருமகள் சிங்கிள் கோட்டிங் மேக்கப் போட்டா,  மாமியார் டபுள் கோட்டிங் மேக்கப் போடுறதுதான் இப்போதைய லேட்டஸ் ஃபேஷன். பணக்கார மாமியார் கேரக்டர் வரும்போது ஃபுல் மேக்கப்புக்கு நாங்க கேரண்டினு சொல்றமாதிரியே ஒரு ஃபீலிங். காலம் மாறிடுச்சு சித்தப்பூ... ஆனா, இந்த சீரியல் மாறவே இல்ல... ஆங்..!

-வே.கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு