என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
Published:Updated:

''நான் தயார்... தமிழகம் தயாரா?''

இர.ப்ரீத்தி

##~##
ருண் ராபர்ட்... குழந்தைகள் உலகின் சூப்பர் ஸ்டார்! போகோ சேனலில் 'MAD’ நிகழ்ச்சி மூலம் எட்டு வருடங்களாக லட்சக்கணக்கான குழந்தைகளை வசீகரித்து வைத்திருப்பவர்! குண்டூசியோ, குப்பைத் தொட்டியோ ராபர்ட் தொட்டால், அது கலர்ஃபுல் பொக்கிஷமாக மாறிவிடுகிறது. டெல்லி வீதிகளில் உலவிக்கொண்டு இருந்த 'மேட் பாயை’ அலைபேசியில் பிடித்தேன்.
''நான் தயார்... தமிழகம் தயாரா?''

 ''எப்படிக் கிடைச்சது 'மேட்’ வாய்ப்பு?''

''நான் டெல்லிக்காரன். ஸ்கூல் படிக்கும்போது மனசுல என்னலாம் தோணுதோ, அதை கலர்கலரா செஞ்சு பார்ப்பேன். அந்த ஆர்வத்தால் கல்லூரியில் நுண்கலை எடுத்துப் படிச்சேன். என் உலகத்தில் இன்னும் அழகிய நிறங்கள் சேர்ந்தது. அப்புறம் அனிமேஷன் படிச்சுட்டு வேலை தேடி மும்பை வந்தேன். கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி 'வியாதவ்’ங்கிற ஸ்டுடியோ மூலம் வித்தியாசமான அனி மேஷன் புராஜெக்ட்ஸ் பண்ண ஆரம்பிச் சேன். அதைப் பார்த்துட்டு, போகோ சேனலில் இருந்து அழைப்பு வந்தது. 'குழந்தைகளுடைய கற்பனை வளத்துக்குத் தீனி போடுற மாதிரியான விஷயங்கள் பண்ண முடியுமா’ன்னு கேட்டாங்க. 'ஓ.கே’-ன்னு சொல்லி உடனே ஆரம் பிச்சதுதான் மேட்!''  

''இருக்கிறதுலயே குழந்தைகளைத் திருப்திப்படுத்துறதுதான் கஷ்டம்னு சொல்வாங்க. அதை எப்படி இத்தனை வருஷமா சமாளிக்குறீங்க?''

''குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள். அவங்களை அவ்வளவு சீக்கிரம் ஏமாத்த முடியாது. அவங்க நேர்மையா இருப்பாங்க. நாம தப்பு பண்ணினா சமரசம் பண்ணிக் காம முகத்துக்கு நேரா சொல்லிடுவாங்க. அவங்க முன்னாடி விஷயம் இல்லாம சும்மா டிராமா பண்ணவே முடியாது. தினமும் பக்கா ஹோம் வொர்க் பண்ணிட்டுத்தான் நான் ஷூட் போவேன். என் திறமைகளைப் பட்டை தீட்ட குழந்தைகள்தான் சரியான சாய்ஸ்!''

''இப்போ இருக்குற கார்ட்டூன் சேனல்களில் குழந்தைகளுக்குத் தேவையான விஷயங்கள் இருக்கா?''

''மனசார 'ஆமா’ன்னு சொல்ல முடியாது. 'மேட்’ மாதிரி சில நிகழ்ச்சிகள்தான் குழந்தைகளின் சிந்தனைத் திறனுக்கு வேலை கொடுக்குது. பெரும்பாலான நிகழ்ச்சி கள் வெறும் பொழுது போக்கை மட்டுமே குறிக் கோளா வெச்சிருக்கு. அதை விட்டுட்டு கல்வி, பொதுஅறிவு, மன வளம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் கொடுக்கணும்!''

''நான் தயார்... தமிழகம் தயாரா?''

''தமிழ்நாட்டிலும் உங்களுக்கு எக்கச்சக்க ஃபேன்ஸ் இருக்காங்க. அவங்களுக்காக ஏன் தமிழ் சேனலில் நிகழ்ச்சிகள் பண்ணக் கூடாது?''

''எனக்கும் ஆசை இருக்கு. ஆனா, உண்மையைச் சொல்லணும்னா 'போகோ’ தவிர, வேற எந்த சேனலில் இருந்தும் எனக்கு அழைப்பு வரலை. அழைப்பு வந்த அடுத்த நிமிஷம்... நான் ஓடி வந்திருவேன்!''  

''தலை முடியை மறைக்கும் ஸ்கார்ஃப், தாடி ஸ்டைலுக்கு ஏதாவது காரணம் உண்டா?''

''ஹா...ஹா...ஹா! தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் ஃபேஷனுக்காக சும்மா வெச்சது. அது நல்ல ரீச் ஆகவும், அதையே  அடையாளம் ஆக்கிட்டேன்!''

''குழந்தைகள், பெரியவங்ககிட்ட இருந்து என்ன எதிர்பார்க்குறாங்க?''

''முதல்ல ஃப்ரெண்ட்லியான அணுகுமுறை. அவங்க லெவலுக்கு இறங்கிப் பழகணும். ரெண்டாவது,

''நான் தயார்... தமிழகம் தயாரா?''

குழந்தைகள் புதுசு புதுசா கத்துக்கணும்னு நினைப்பாங்க. புதுப்புது விஷயங்களைத் திட்டாம பொறுமையா சொல்லித் தரணும். இந்த ரெண்டையும் சரியா செஞ்சா, நீங்கதான் அவங்களுக்கு நம்பர் ஒன் ஃப்ரெண்ட்!''

'' 'மேட்’ ராபர்ட் எந்தப் பொண்ணுகிட்டயாவது 'மேட்’ ஆகி இருக்காரா?''

''அட நீங்க வேற... இப்போ வரைக்கும் அப்படி ஒரு ஐடியா இல்லை. 33 வயசுலாம் ஒரு வயசா? பாருங்க... கடைசியில் என்னையும் சினிமா நடிகை மாதிரி பதில் சொல்ல வெச்சிட்டீங்க!''