Published:Updated:

ரிமோட்!

விகடன் டீம்

ரிமோட்!

விகடன் டீம்

Published:Updated:

ரம்யாவின் புது வேலை!

ரிமோட்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'யூ டி.வி’-யில் 'க்ரியேடிவ் வொர்க் கன்சல்டன்ட்’ ஆக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் விஜய் டி.வி. ரம்யா. இயக்குநர்களிடம் கதை கேட்டு சரியான கதைகளை நிறுவனத்துக்குப் பரிந்துரைப்பது, படங் களை மார்க்கெட் செய்ய உதவுவது, எனப் பல பரிமாணங்களில் இயங்க வேண்டிய பணியாம். ''நான் படிச்ச விஸ்காம் படிப்புக்கு ஏற்ற வேலை. விஜய் டி.வி-யில் காம்பியரிங்கும் தொடரும்'' என்கிறார் ரம்யா. ''உங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்கேன். எப்படி வர்றது?'' என்று போனில் வழி கேட்டு வந்து கல்யாணப் பத்திரிகையை நேரில் கொடுத்த நடிகர் கார்த்தியின் அன்புக்கு நெகிழ்ந்துகொண்டு இருக்கிறார் ரம்யா!

 கலைஞரின் அடுத்த முரசு!

இவ்வளவு ஆப்புக்கு அப்புறமும் ஒரு சூப்! ஸ்பெக்ட்ரம் விசாரணைகள் ஒருபுறம் இருக்க, கலைஞர் டி.வி. குழுமத்தில் இருந்து அடுத்த சேனல் உதயமாக இருக்கிறது. சேனலின் பெயர் 'முரசு’! சினிமா, இசை, நடனம் என பொழுதுபோக்கு அம்சங்கள்கொண்ட நிகழ்ச்சிகள் முரசில் இருந்து வருமாம். கலைஞர் டி.வி. தொடங்கப்பட்ட அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி அன்று 'முரசு’ கொட்டத் தொடங்கலாம்!

எதிரி தோழி!

ரிமோட்!

'தென்றல்’ வில்லி சாரு ஸ்ரீவித்யாவின் நெருங்கிய தோழி யார் தெரியுமா? சீரியலில் அவர் முட்டி மோதும் ஸ்ருதி தானாம்! 'சீரியல்ல எதிரும் புதிருமா இருந்தாலும், நாங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். ஷூட்டிங் இல்லாத நாட்களிலும் போன்ல  அரை மணி நேரமாவது அரட்டை அடிப்போம்!'' எனும் ஸ்ரீவித்யா, தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். '' 'கோலங்கள்’ ஆரம்பிக்கும்போது ஸ்கூல் மாணவி. அது முடியும்போது கல்லூரி பி.ஜி. ஸ்டூடன்ட். சூப்பர்ல!'' என்று சிரிக்கிறார்.

தமிழ் பேசு... அள்ளு காசு!

ராஜ் டி.வி-யில் விரைவில் துவங்கவுள்ள நிகழ்ச்சி 'தமிழ்ப் பேசும் கதாநாயகிகள்’. தமிழ்ப் பேசத் தெரிந்த பெண்களுக்கு சினிமா கதாநாயகி வாய்ப்பு பெற்றுத் தருவதுதான் நிகழ்ச்சியின் நோக்கம். சிங்கப்பூர், மலேசியா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கோவை, மதுரை, திருச்சி என மொத்தம் 10 இடங்களில் அழகிகள் தேடல் நடக்கின்றனவாம். நிகழ்ச்சியில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் பெண்களில் ஒருவருக்குத் தங்கள் படங்களில் ஹீரோயின் வாய்ப்பு தருவதாகச் சொல்லி இருக்கிறார்களாம் இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸும் வெற்றிமாறனும்!

ஜாக்பாட் பூஜா!

ரிமோட்!

ஜெயா டி.வி-யில் 'ஜாக்பாட்’ நிகழ்ச்சி தொகுப்பாளர் இனி பூஜா! குஷ்புவுக்குப் பிறகு நதியா அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தார். ஆனால், அடிக்கடி வெளிநாடு சென்று வர வேண்டி இருப்பதால், நதியாவால் ஜாக்பாட் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்த முடிய வில்லையாம். இதற்கான தேர்வுப் படலத்தின்போது, பெங்களூரில் இருந்து ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு அழைக்கப் பட்ட பூஜா, தெள்ளிய தமிழில் பேசி அசத்தினாராம். சேனல் நிர்வாகிகளுக்கு ஏக ஆச்சர்யமாம். '' 'தம்பி’ படத்தில் நடிச்சப்ப சீமான் சார்தான் தமிழ் கத்துக் கொடுத்தார்!'' என்று பூஜா பெருமிதப்பட, ''இவ்வளவு தூய தமிழ் வேண்டாம். பேச்சுத் தமிழே போதும்!'' என்று டிப்ஸ் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்!

நீலிமாவின் பாலா பக்தி!

ரிமோட்!

ஈழத்துப் பின்னணியைக் கதைக் களமாகக் கொண்ட 'விதை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நீலிமா ராணி. ''அந்தப் படத்தில் நடிப்பது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. சிட்னி என்ற ஆஸ்திரேலிய தமிழர்தான் இயக்குநர். இயக்குநர் பாலாவோட அதிதீவிர ரசிகை நான். அவர் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சா சம்பளமே வாங்காம 10 வருஷம் கூட நடிப்பேன்!'' என்று சிரிக்கும் நீலிமா, தீவிர சிவன் பக்தை. இவருடைய காதல் கணவர் இசைவான இயக்குநர் கே.எஸ்.அதியமானிடம் உதவி இயக்கு நராகப் பணிபுரிந்து வருகிறார்!

கை கொடுத்த 2 ஜி!

அ.தி.மு.க-வின் எம்.பி-யாக ராஜ்யசபாவில் அடியெடுத்து வைக்கிறார் ரபி பெர்னார்ட். டாக்டர் வெங்கடேஷ் தொடங்கி பொன்னையன் வரையிலான பரபர போட்டிகளுக்கு இடையில், ஆச்சர்ய அதிர்ச்சி யாக ஜாக்பாட் அடித்திருக்கிறது ரபி பெர்னார்டுக்கு. பவ்யத்தோடு ஜெயலலிதாவிடம் நன்றி சொன்ன ரபி பெர்னார்டிடம், ''ஜெயா டி.வி-யில் 2 ஜி குறித்து தொடர்ந்து நீங்கள் செய்த விவாதங்களுக்காகத்தான் இந்தப் பரிசு. தா.பாண்டியன், மலைச்சாமி, தம்பிதுரை, பழ.கருப்பையா ஆகியோரை வைத்தும், பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கப் பிரமுகர்களைவைத்தும் நீங்கள் நடத்திய விவாதம் மக்களுக்கு எளிமையாகப் புரிந்தது. 2 ஜி குளறுபடிகள் குறித்து டெல்லியில் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!'' என ஆணையிட்டு அனுப்பி இருக்கிறாராம் அம்மா!

பச்சக் பொண்ணு!

ரிமோட்!

'காசு மேல’ கல்யாணி இப்போ சேனல் வட்டாரத்தில் செம பிஸி. ராஜ் டி.வி. பீச் கேர்ள்ஸ், விஜய் டி.வி. 'பிரிவோம் சந்திப்போம்’ என பச்சைக் கிளி பரபரத்துக் கொண்டே இருக்கிறது. '' 'பீச் கேர்ள்ஸ்’ நிகழ்ச்சி செம ரவுசா இருக்கும். பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை எந்த ஒளிவு மறைவும் இல்லாம ஷேர் பண்ணிக்கிறாங்க. 'எங்கப்பா டான்ஸ் இப்படித்தான் இருக்கும்’னு சாந்தனு எக்சர்சைஸ் ஸ்டெப்ஸ் போட்டபோ ஸ்டுடியோவே விழுந்து விழுந்து சிரிச்சது. 'அழுதுகிட்டே சிரிங்க’னு ஸ்ரீகாந்த்கிட்ட கேட்டதும் அவர் பண்ண காமெடி அதகளம்!'' என்கிறார் கல்யாணி.  

மெகா மேட்னி!

விஜய், ஜெயா சேனல்கள் இரண்டும் மதிய நேரங்களில் மெகா சீரியல்களைக் களம் இறக்கும் திட்டத்தில் உள்ளன. தகவல் கசியவும் பல தயாரிப் பாளர்கள், இயக்குநர்கள் சேனல் அலுவலகங்களை   வலம் வரத் துவங்கி இருக்கிறார் கள். இப்போதைக்கு 'பாட்ஷா’ பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா விஜய் டி.வி-க்காக ஒரு மெகா சீரியல் இயக்குவது கிட்டத்தட்ட கன்ஃபார்ம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism