Published:Updated:

இதைப் படிக்காதீங்க!

விகடன் டீம்

இதைப் படிக்காதீங்க!

விகடன் டீம்

Published:Updated:
##~##

• ஆட்சி, காட்சி மாறியதும், 'இந்தப் படத்தைப் பாருங்க, அந்தப் படத்தைப் பாருங்க’ என்று இலை சேனலிடம் விழுந்தடித்து ஓடியபடி இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். 'அவசரம் வேண்டாம். முன்னவர்கள் செய்த தவறை நாமும் செய்துவிடக்கூடாது. மோனோபோலி கூடாது. பொறுமையாக இருங்கள்!’ என்று கண்டிப்பான உத்தரவு வந்து இருக்கிறதாம்!

•  கடந்த வாரம் பெரிய, சின்ன திரை பிரபலங்கள் சிலர் மரியாதை நிமித்தமாக முதல்வரைச் சந்தித்தபோது, 'உங்களுக்குப் பிரமாண்டமா பாராட்டு விழா ஒண்ணு ஏற்பாடு பண்றோம். அம்மா அவசியம் கலந்துக்கணும்!’ என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். 'போதும் போதும்... வேற

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைப் படிக்காதீங்க!

ஏதாவது பேசுங்க’ என்று உடனே கடுகடுத்து இருக்கிறார் சி.எம். 'அந்த பையனூர் இடப் பிரச்னையை ஸ்மூத்தா முடிச்சுக் கொடுத்திருங்கம்மா!’ என்று அடுத்த கோரிக்கையை நீட்டி இருக்கிறார்கள்.  'அவர்தான் ஏதோ விளம்பரத்துக்காகப் பண்ணினார்னா அதை நீங்களும் நம்பிட்டு வந்து இருக்கீங்களே!  அங்கே எல்லாம் இடம் தர வாய்ப்பே இல்லை’ என்று பட்டென வெட்டியிருக்கிறார்  முதல்வர். 'இல்லைன்னா முதியோர் இல்லம்போல் நலிந்த கலைஞர்களுக்கான வாழ்விடமாக அதைக் கட்டிக்கொள்ளலாமா?’ என்று விடாப்பிடியாக மல்லுக்கு நின்று இருக்கிறார்கள். பிடிகொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டாராம் முதல்வர்!

• சமீபத்தில் திருமணம் முடித்த சின்ன திரை ஸ்டார் ஜோடிகளுக்குள் சின்னச் சின்ன சலசலப்புகள். இந்தப் புலம்பல் சலம்பல்கள் விரைவிலேயே வெளிச்சத்துக்கு வரலாம். 'சமாளிக்க முடியலையே என்ன செய்யலாம்?’ என்ற யோசனையிலேயே அந்த மியூஸிக் பார்ட்டிகளின் பொழுதுகள் கட்டிங்குகளுடன் கழிகின்றன!

• எல்லா சேனல்களும் விருது விழா என்று கிளம்பிவிட்டதால் டார்ச்சராகிக்கிடக்கிறார்கள் ஸ்டார்கள். டி.ஆர்.பி-க்காக, 'உங்களுக்கு அந்த விருது, இந்த விருது’ என எல்லாரையும் அழைத்து 'அப்புடியே ரெண்டு வரி பாடுங்க, ஆடுங்க, சிரிங்க, உட்காருங்க, எப்புடி இருக்கு இந்த ஃபீல்’ என்று மேடையிலும் இம்சிப்பதால், விருது விழா என்று எந்த சேனல் சென்றாலும் பிள்ளை பிடிக்கும் கும்பலை கண்டவர்களைப்போல தெறித்து ஓடுகிறார்களாம்!

•  'அவர் மியூஸிக்... இவர் நடிகர். ஒரு எபிசோடுக்கு எட்டு லட்ச ரூபாய் கொடுங்கள். சின்ன திரையிலேயே சினிமாவைக் காட்டுகிறேன்’ என்று உதார் விட்டுக் கிளம்பிய ரொமான்டிக் ஸ்டைலிஷ் இயக்குநரை யாரும் நம்பத் தயாராக இல்லையாம். 'ஏன்டா வாயை விட்டோம்!’ என்று விழி பிதுங்கி  நிற்கிறாராம் இயக்குநர்!

• டி.வி. ரியாலிட்டி ஷோக்கள், கலை நிகழ்ச்சிகள் என்று சீரியல்  நட்சத்திரங்கள் அடிக்கடி மீட்டர் போட கிளம்பிவிடுவதால், டார்ச்சர் ஆகிக்கிடக்கின்றனர் சீரியல் தயாரிப்பாளர்கள். 'உங்களுக்குப் பேர், புகழை  பெற்றுத் தந்தது சீரியல்கள்தானே? அதை டீலில் விட்டுவிட்டு மால் பார்க்கக் கிளம்புவது எந்த வகையில் நியாயம்?’ என்று கொதித்துக்கிடப்ப‌வர்கள் கூடிய சீக்கிரமே கொடி பிடிப்பார்களாம்!

•  இந்தக் காதலுக்கு 'லிங்க்' கிடைத்ததே ஒரு ரியாலிட்டி ஷோ பங்கேற்பு மூலம்தான்.  விர்... கிர்ரென டாப் கியரில் சென்ற காதல், கல்யாணப் பத்திரிகை வரை சென்றது. ஆனால், திடீர் என  'வீட்ல சம்மதிக்கலை’ என்று அந்தப் பெண்  பேக் அடித்துவிட்டது. 'கேப்ல கிடா வெட்டிட்டா சார். பல்க் ஒருத்தன் சிக்கிட்டானு என்னை கழட்டி விட்டுட்டா!’ என்று போவோர் வருவோரிடம் எல்லாம் புலம்பிக்கொண்டு இருக்கிறார் மியூஸிக் பார்ட்டி!

•  ஒரே சீரியல் மூலம் உச்சத்துக்குச் சென்ற அந்த மிஸ்டர் இயக்குநர், அடுத்த பிரைம் டைம் சீரியலில் கமிட் ஆனார். ஆனால், அவரின் கவனம் பெரிய திரை பக்கமே நிலைகொண்டு நின்றதால், டி.ஆர்.பி-யில் தள்ளாடத் தொடங்கிவிட்டது அந்த ஆடலரசி பெயர் கொண்ட சீரியல். 'சீக்கிரம் முடிச்சுட்டு வேற சீரியல் ஆரம்பிங்க’ என்று சேனல் தரப்பு கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism