Published:Updated:

சித்ரவதை ஸ்ரீதேவி... மாட்டிக்கொண்ட மகேஷ்!

இர.ப்ரீத்திபடங்கள் : வீ.நாகமணி

சித்ரவதை ஸ்ரீதேவி... மாட்டிக்கொண்ட மகேஷ்!

இர.ப்ரீத்திபடங்கள் : வீ.நாகமணி

Published:Updated:
##~##

(குறிப்பு: இக் கட்டுரையில் இடம்பெறும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனை அல்ல... அத்தனையும் அக்மார்க் நிஜம்!)

 'பேச்சுலர் டு புது மாப்பிள்ளை’ புரொமோஷன் வாங்கியிருக்கும் 'ஈரோடு’ மகேஷின் 'ஒரு நாள் குடும்பத் தலைவன்’ குடைச்சல்கள் இங்கே...  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இவங்கதான் ஸ்ரீதேவி. இவங்களுக்குத்தான் நான் வாக்கப் பட்டு வந்திருக்கேன்!'' எடுத்த உடனேயே ஃபுல் ஸ்விங்கில் ஆரம்பிக்கிறார் மகேஷ். ''மெஷின்ல சிக்குன கரும்பு மாதிரி இருந்த ஸ்ரீதேவி, இப்போ எந்நேரமும் வெடிக்க ரெடியா இருக்குற தக்காளி மாதிரி ஆகிட்டாங்க. பந்து மாதிரி ஜிவ்வுனு இருந்த நான், நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன். என் வேலையை நான் பார்க்க, அவங்க வேலையையும் நானே பார்க்க... ரெண்டு பேரும் இப்போ ரொம்ப பிஸியா இருக்கோம் பாஸ்!''- மகேஷ் முடிக்கும் முன்னரே அவரது தலையில் 'ணங்’கென்று கொட்டுகிறார் ஸ்ரீதேவி.

சித்ரவதை ஸ்ரீதேவி... மாட்டிக்கொண்ட மகேஷ்!

''காதலிக்கும்போது எனக்கு வெஜிடபிள்ஸை வெட்டிச் சாப்பிடக்கூடத் தெரியாது. நான் வளர்ந்த குழந்தைன்னு சொன்னேன். அப்போ 'எங்கேயாவது ஒரு பப்பாளி, தக்காளி வெட்டுமா? கேரட், பீட்ரூட் கடிக்குமா? எல்லாம் நான் பார்த்துக் கிறேன்’னு பிராமிஸ் பண்ணிட்டு, இப்போ புலம்பினா நான் என்ன பண்றது? மனுஷன்னா வாக்கு முக்கியம்!'' என்று கவுன்ட்டர் கொடுக்கிறார் ஸ்ரீதேவி.

''அது எப்படி.. பொண்ணுங்க கல்யாணம் ஆன உடனே இந்தப் பேச்சு பேசுறீங்க. கல்யாணம் ஆன முதல் நாளே, என் கைல இருந்து டி.வி. ரிமோட், பர்ஸ், ஏ.டி.எம். கார்டு, பேங்க் பாஸ்புக் எல்லாம் பறிபோயிருச்சு. பதிலுக்கு பால் கார்டு, ரேஷன் கார்டு வந்திருச்சு. புருஷன்கிறவன் வெறும் விசிட்டிங் கார்டுதான் போல!'' என்று தலையில் கை வைத்துக்கொள்ளும் மகேஷின் காதைத் திருகி, ''வேலை பார்க்குறது புருஷ லட்சணம் பாஸ்!'' என்று கண்ணடிக்கிறார் ஸ்ரீ. ''டார்லிங்... அது வீட்டுக்கு வெளியே பார்க்குற வேலை. வீட்டுக்கு உள்ளே பார்க்குறது இல்லை. உன் குடும்பத்துக்கே ஜி.கே. பின்னுதே!''- மகேஷ் சொல்லச் சொல்லவே தடதடவெனப் பொம்மைகளால் மொத்து விழுகிறது.

சித்ரவதை ஸ்ரீதேவி... மாட்டிக்கொண்ட மகேஷ்!

''அடிச்சாலும் பிடிச்சாலும் ஸ்ரீக்கு என் மேல பாசம் அதிகம். 'ஏங்க... அந்த ட்ரெஸ்ஸை அயர்ன் பண்ணி முடிச்சுட்டு, காய்கறி வாங்கப் போங்க. காய் வாங்கிட்டு வந்து ரூமைச் சுத்தம் பண்ணிருங்க’னு ஒரு சமயம் ஒரு வேலைதான் கொடுப்பா. அந்தக் கருணைக்காகவே எவ்வளவு வேணும்னாலும் தாங்கலாம்!''- சட்டென மகேஷை இடைமறித்து, ''நீங்க சொல்றதைப் பார்த்தா நான் உங்களைக் கொடுமை பண்றதா தப்பா நினைச்சுடப் போறாங்க!'' என்கிறார் ஸ்ரீதேவி. ''சேச்சே... அவங்க சரியாதான் நினைப்பாங்க. 'சித்ரவதை ஸ்ரீதேவி... மாட்டிக்கொண்ட மகேஷ்!’னு தலைப்பு போட்டு நியூஸ் வரும்போது, இந்த நாடும் நாட்டில் என்னைப்போல் அல்லாடும் பல்லாயிரம் ஆண்களும் எனக்கு நேர்ந்த அநீதியை நினைச்சுக் கண் கலங்குவாங்க!'' என்று மகேஷ் சொல்ல, ''எல்லா ஆம்பளைங்களும் மொக்கதான்... எல்லா மொக்கயும் மகேஷ்தான்!'' என்று பஞ்ச் அடித்தார் ஸ்ரீதேவி.

சித்ரவதை ஸ்ரீதேவி... மாட்டிக்கொண்ட மகேஷ்!

''இவங்களைக் கட்டிக்கிட்டு காய்கறி வாங்கப் போனதால எனக்குத் தெருவுல எக்கச்சக்க கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக் காங்க. என்ன ஒண்ணு... எல்லாமே 60 ப்ளஸ் வயசுக்காரங்க. வெண்டைக்காயை ஒடிச்சுக்கிட்டே அவங்களோட மொக்க போடுறதும் சுவாரஸ்யமா தான் இருக்கு!''- மகேஷ் சொல்ல, ''என்னது... 16 ப்ளஸ்ஸா... சொல்லவே இல்லையே... பாவி. வீட்டு வேலை பார்க்கும்போதே இவ்ளோ பேரை கரெக்ட் பண்ணினா, உன்னை வெளியில விட்டா என்ன பண்ணுவே?'' என்று மகேஷ் கையை முறுக்குகிறார். ''ஆஆஆ... அம்மா... இதுக்கு மேலே சென்சார்... அவங்க சந்தோஷமா இருக்காங்க... சுபம்னு எழுதிருங்க!''- அலறியபடியே வீட்டுக்குள் ஓடுகிறார் மகேஷ்.        

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism