Published:Updated:

''சாமி ஏன் கேமராவைப் பார்க்கலை?''

ரீ.சிவக்குமார், படம் : என்.விவேக்

''சாமி ஏன் கேமராவைப் பார்க்கலை?''

ரீ.சிவக்குமார், படம் : என்.விவேக்

Published:Updated:
##~##

க்கள் தொலைக்காட்சியில்'புதிய கோணங்கிகள்’ நிகழ்ச்சியை வழங்கும் பிரகதீஸ்வரன், சமூகப் பிரச்னைகளை நகைச்சுவைச் சாட்டை யால் விளாசுபவர். அவரைச் சந்தித்து உரையாடியபோது...

 ''நாட்ல எங்கே பார்த்தாலும், சமச்சீர்க் கல்வி பத்தின விவாதம்தான். 'அந்த ஸ்கூல்ல தரம் சரி இல்லை. எங்க ஸ்கூல்ல படிச்சா, வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுறோம், கழுத்தைக் கீறி கைலாயத்தைக் காட்டுறோம்’னு சொல்றவங்களைப் பார்த்தா, அவ்ளோ எரிச்சல். எப்படி இருந்தாலும், ஏ.பி.சி.டி. மொத்தம் 26 எழுத்துதானே? ஸ்கூல் நடத்தச் சொன்னா, அவனவன் ஆடுகளம் பேட்டைக்காரன் மாதிரி சண்டைச் சேவல்களைத் தயார் பண்றாய்ங்க. கேட்டா, 'இது போட்டி நெறைஞ்ச உலகம்’ங்கிறான். படிக்கிறதுல என்ன போட்டி? நேஷனல் பெர்மிட் வெச்சிருக்கிற லாரி டிரைவருக்கு சர்வசாதாரணமா 14 மொழி தெரியுது. அவங்க எவ்ளோ ஈஸியா மொழியைக் கத்துக்கிறாங்க! இங்கே என்னடான்னா, இங்கிலீஷை விழுந்து விழுந்து படிச்சிட்டு, அமெரிக்காகாரன்கிட்ட பேசுறதுக்குத் தனியா கோச்சிங் கிளாஸ் போறான். படிச்சு முடிச்சவன், கால் சென்டர்ல வேலைக்குச் சேர்ந்து, ராத்திரி 11

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சாமி ஏன் கேமராவைப் பார்க்கலை?''

மணிக்கு அமெரிக்காவுல இருக்கிற ஆண்டர்சனுக்கு, 'குட் மார்னிங் சார்’ சொல்றான். அடிப்படையே தப்பா இருக்கு!

படிப்புங்கிறது, அறிவை வளர்க்கிறதுக்காக. அறிவு வளர்ந்துச்சுனா, இங்கே ஏன் இத்தனை சாமியார்? செல்போனானந்தா, சிம்மானந்தானு நாட்டுல டாஸ்மாக் கடை அளவுக்குச் சாமியார்கள் இருக்காங்க. ஒரு சாமியார், தெனம் காலையில டி.வி-யில் 'நட்சத்திரத்தைப் பாருங்கள்; கடவுள் தெரிகிறார். பனித் துளியைப் பாருங்கள்; கடவுள் தெரிகிறார்’னு சொல்றார். நாங்க அதைப் பார்த்துக்கிறோம். ரூமுக்குள்ளே இருக்கிற கேமராவை நீங்க பார்த்தீங்களா? 'கோபத்தைக் குறைப்பது எப்படி?’ன்னு தியானம் பண்ணச் சொல்றான். கோபம்கிறது மனித உணர்ச்சிகளில் ஒண்ணு. 'ரௌத்ரம் பழகு’ன்னு பாரதி சொல்ல லையா? கோபம் இருந்தாத்தான், சமூக அநியாயத்தைத் தட்டிக் கேட்போம். ஆனா, கோபப்படுறேன்னு வன்முறையில் இறங்கிடக் கூடாது.

அப்புறம், இந்த பன்னாட்டு கம்பெனிகள். 'நான்தான் அமெரிக்க அப்பாடக்கர் கம்பெனியை ஆவடிக்குக் கொண்டுவந்தேன்’னு இந்நாள் முதல்வர் சொன்னா, 'நான்தான் இப்பாடக்கர் இங்கிலாந்து கம்பெனியைச் சாவடிக்குக் கொண்டுவந்தேன்’னு முன்னாள் முதல்வர் சொல்றாரு. அப்ப, இங்கே இருக்கிற கம்பெனி எல்லாம் என்ன ஆச்சு? ஒரு லிட்டர் பெப்சி, கோக் தயாரிக்கிறதுக்கு 30 லிட்டர் நல்ல தண்ணி வேணுமாம். 'ஆத்துல போட்டாலும், அளந்து போடு’ங் கிறது நம்மூருப் பழமொழி. ஆனா, இப்போ ஆத்தையே அளந்து அளந்து வெளிநாட்டு கம்பெனிக்காரனுக்குக் குடுத்துக்கிட்டு இருக்கோம். ஒபாமா, இங்கே வந்து சந்தோஷமா குத்து டான்ஸ் ஆடிட்டுப் போறாரு. ஆனா, நம்ம மத்திய அமைச்சரையே அமெரிக்க ஏர்போர்ட்ல அண்டர்வேரை அவுத்து சோதனை போடுறான். நம்ம மன்மோகனுக்கும் மைக் மோகனுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? மைக் மோகன், தலையை ஆட்டியாட்டிப் பாடுவாரு. மன்மோகன், சோனியாவோட பாட்டுக்குத் தலையைத் தலையை ஆட்டுவாரு. எல்லாம் அமெரிக்கக்காரன் பாட்டு!

'ஸ்பெக்ட்ரம்ல எப்படி ஊழல் நடந்துச்சு?’, 'காமன்வெல்த்ல ஊழல் எப்படி நடந்துச்சு?’, 'ஊழல் பண்ணின பி.ஜே.தாமஸே எப்படி ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவர் ஆனாரு?’னு எது கேட்டாலும், மன்மோகன் 'தெரியாது’ன்னே சொல்றாரு. அவருக்குப் பிடிச்ச ஒரே  வார்த்தை 'தெரியாது’தானோ?

பள்ளிக்கூடத்துல எது கேட்டாலும் 'தெரியாது’ன்னு சொன்னா, ஃபெயில் ஆக்கிறான். ஆனா பாலிடிக்ஸ்ல, மட்டும் பிரதமர் ஆக்குறான். என்ன கொடுமைடா இது?

இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் படுகொலைன்னு 'இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூடு’னு ஏகப்பட்ட பேர் போராடினாங்க. நம்ம மத்திய அரசும் மூட ஆரம்பிச்சிடுச்சு. எதை? போஸ்ட் ஆபீஸை. இனி, இன்லேண்ட் கவரையே இங்கிலாந்து கம்பெனிதான் விக்கப்போறான்போல. ஒருவேளை 'அதிகமாத் தந்தி அடிக்கிற கலைஞர் ஆட்சியே போய்டுச்சு. இனிமே எதுக் குடா போஸ்ட் ஆபீஸு?’னு மூடிட்டாங்களோ என்னவோ?

''சாமி ஏன் கேமராவைப் பார்க்கலை?''

பெரியாரிடம் ஒரு முறை, 'பேப்பர்ல ஒருத்தரோட மரணச் செய்தியைப் போடணும், காலமானார்னு போடலாமா... மறைந்தார்னு போடலாமா?’ன்னு கேட்டாங்களாம். 'செத்துட்டார்ல, அப்போ 'செத்துப்போயிட்டார்’னு போடுங்க’ன்னா ராம் பெரியார். 'செத்துப்போனார்னு போட்டா, நல்லா இருக்காதே’னு சொன்னவங்ககிட்ட, 'செத்துப்போனா நல்லாத்தான் இருக்காது’ன்னாராம் பெரியார். இப்படி எல்லாத் தையுமே நேரடியாச் சொல்லிப் பழக்கப்பட்டவர் பெரியார். ஆனா, அதையே நக்கல், நையாண்டி கலந்து மக்களுக்குக் கொடுத்தது கலைவாணர் என்.எஸ்.கே-வும் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும். என்னை மாதிரியான ஆட்களும் இதே வேலையைத்தான் செய்றோம். இப்போ சிரிங்க... அப்புறம் சிந்திங்க!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism