Published:Updated:

ஒரே நிகழ்ச்சி... ஓஹோ புகழ்!

சார்லஸ்

ஒரே நிகழ்ச்சி... ஓஹோ புகழ்!

சார்லஸ்

Published:Updated:
##~##

'ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’... 150 நாடுகள், பல மில்லியன் பார்வையாளர்கள் என உலகம் முழுவதையும் கட்டிப்போட்ட ஒரே டாக் ஷோ!  

 செப்டம்பர் 8, 1986-ம் ஆண்டு வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் கீலிசி சேனலில் காலை நேரத்தில் அரை மணி நேர டாக் ஷோவாகத் துவங்கியது. முதலில் ஓப்ரா வின்ஃப்ரே இதில் இல்லை. நிகழ்ச்சி துவங்கி நான்கு மாதங்கள் கழித்துதான், ஓப்ரா வின்ஃப்ரே அதன் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். அப்போது, ஓப்ராவின் வயது 32. பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே ரேட்டிங்கில் அதல பாதாளத்தில் இருந்த நிகழ்ச்சியைத் தனது வசீகரப் பேச்சு மற்றும் விறுவிறு பேட்டிகள் மூலம் முதல் இடத்துக்குக் கொண்டுவந்தார் ஓப்ரா. இதனால், அதுவரை வெறுமனே 'டாக் ஷோ’வாக மட்டுமே இருந்த  நிகழ்ச்சி, 'ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’வாக மாறியது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரே நிகழ்ச்சி... ஓஹோ புகழ்!

ஓப்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், ஒரே நாளில் அமெரிக்கா முழுவதும் பிரபலமாகிவிடலாம் என்பதால், அரசியல்வாதிகள், நடிகர்கள், சமூக சேவகர்கள், எழுத் தாளர்களுக்கு இடையே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கடும் போட்டி நிலவியது. நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகளை மட்டும் இந்த நிகழ்ச்சி மூலம் பேட்டி காணாமல், கேன்சர், எய்ட்ஸ் நோய்களுக்கு எதிராகப் போராடியவர்கள், சமூக சேவகர் கள், வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து உழைத்து, போராடி வெற்றி கண்டவர்கள், மிகச் சிறந்த பேச்சாளர்கள் எனப் பலரையும் பேட்டி கண்டார். நடிகர், நடிகைகளின் பேட்டிகளும் கொஞ்சல் பேட்டிகளாக இல்லாமல், நடிகர்களின் கறுப்புப் பக்கங்கள் குறித்தும் ஓப்ரா தயவுதாட்சண்யம் இல்லாமல் கேட்டதாலேயே, நிகழ்ச்சி இறுதிவரை உச்சத்திலேயே இருந்தது.  

1993-ம் ஆண்டு ஒளிபரப்பான மைக்கேல் ஜாக்சனின் பேட்டிதான் ஓப்ரா வின்ஃப்ரே ஷோ மீது, உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியில்தான் தோல் நோயான விட்டிலிகோவால், தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக மைக்கேல் ஜாக்சன் வெளிப்படையாகத் தெரிவித்தார். சிறு வயதில் அவரது அப்பா கொடுமைப்படுத்தியதையும், விபத்தில் மூக்கு நுனி உடைந்ததால் மேற்கொண்ட சிகிச்சை கோளாறாகி, அடுத்தடுத்து பல ஆபரேஷன்கள் செய்துகொள்ள வேண்டிய சோகத்தையும் மனம் திறந்து பேசினார் மைக். அதுவரை வெறும் ஷோ மேனாக மட்டுமே இருந்த மைக்கேல் ஜாக்சன், உணர்வும் உயிரும் நிரம்பிய ஒரு மனிதராக அந்த நிகழ்ச்சியில் வெளிப்பட்டார். அதற்குப் பிறகே மைக்கேல் ஜாக்சனை எதிர்த்து வந்த பலரும், அவரது ரசிகர்களாக மாறினர்.

ஒரே நிகழ்ச்சி... ஓஹோ புகழ்!

''இதுவரை இந்த ஷோவில் நான் சந்தித்த பிரபலங்களிலேயே எலிசபெத் டெய்லரைப் பேட்டி கண்ட அனுபவம்தான் மிகவும் சவாலாக இருந்தது!'' என்கிறார் வின்ஃப்ரே. எந்தக் கேள்விகளுக்குமே நேரடியாகப் பதில் சொல்லாமல் நழுவிய எலிசபெத் டெய்லர், ஒரு கட்டத்தில் திருமணம், இப்போது உங்கள் கணவர் யார்? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், நிகழ்ச்சியைவிட்டுப் பாதியிலேயே எழுந்து வெளியேறினார். ஆனால், பிறகு இந்தச் செயலுக்காக ஓப்ராவிடம் மன்னிப்புக் கேட்டார் எலிசபெத் டெய்லர்.

இந்த ஷோவில் கலந்துகொண்ட முதல் இந்தியர் ஐஸ்வர்யா ராய். அப்போது ஐஸ்வர்யா ராயிடம், 'நீங்கள் வேகமாக சேலை கட்டுவீர்களாமே?’ என்று ஓப்ரா கேட்டார். நான்கே நிமிடங்களில் ஓப்ரா வுக்கு சேலை கட்டி அசத்தினார் ஐஸ்வர்யா. சில வருடங்களுக்குப் பிறகு, கணவர் அபிஷேக் பச்சனுடனும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஐஸ்வர்யா.

ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் அதிகபட்சமாக 27 முறை கலந்துகொண்ட பிரபலம், ஹாலிவுட் நடிகை செலின் டியோன். அந்த ஒவ்வொரு பேட்டியிலும் வித்தியாசம் காண்பித்து புதுப்புது

ஒரே நிகழ்ச்சி... ஓஹோ புகழ்!

புத்தகங்களைப்பற்றி ஆழமாக விவாதிக்கும் அளவுக்கு 'இன்டலிஜென்ட்’ நடிகை செலின்!

ஓப்ரா வின்ஃப்ரே சிறு வயதிலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி, பெற்ற குழந்தையையும் பலி கொடுத்து, யாருடைய ஆதரவும் இன்றி தனித்துப் போராடிய பெண்.

25 வருடங்களாக வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கும் ஓப்ராவின் சக்சஸ் ஃபார்முலா ரொம்பவே சிம்பிள். ''வெற்றி பெறுவது பெரிய விஷயம் அல்ல. நேரம் காலம் பார்க்காமல் உழைக்க மனம் இருந்தால் போதும், எந்த அளவு வெற்றியும் சாத்தியம்தான்!'' என்பார் ஓப்ரா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism