Published:Updated:

இந்த சேனல்கள் எல்லாம் உங்க கேபிள் கனெக்‌ஷனில் இருக்கா? #Channels

இந்த சேனல்கள் எல்லாம் உங்க கேபிள் கனெக்‌ஷனில் இருக்கா? #Channels
இந்த சேனல்கள் எல்லாம் உங்க கேபிள் கனெக்‌ஷனில் இருக்கா? #Channels

இந்த சேனல்கள் எல்லாம் உங்க கேபிள் கனெக்‌ஷனில் இருக்கா? #Channels

தொலைக்காட்சிதான் மக்களின் பிரதான பொழுதுபோக்கு. டிவியை ஆன் செய்ததுமே எக்கச்சக்கமா டிவி சேனல்கள் கொட்டிக்கிடக்கும். சில சமயங்களில் எதைப்பார்க்கலாம் என்ற குழம்பம் கூட வரலாம். தமிழில் மொத்தம் 100க்கும் மேலான டிவி சேனல்கள் இருக்கின்றன. அதில் சில நீங்கள் பார்க்காமல் கூட இருந்திருக்கலாம். சில உங்கள் ஃபேவரைட் சேனலாகக்கூட இருக்கலாம். அப்படியான தமிழ் சேனல்களின் லிஸ்ட்! 

கமர்ஷியல் சேனல்கள்:-

ஸ்பெஷல் நிகழ்ச்சிகள், டிவி சீரியல்கள், திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம்புதிய திரைப்படங்கள், டாக் ஷோ என்று வியாபார ரீதியிலும், விமர்சன ரீதியிலும் டாப் ரேட்டிங் பெறுபவைதான் கமர்ஷியல் சேனல்கள்.  

 சன் டிவி,

 ஜெயா டிவி,

 கலைஞர் டிவி,

விஜய் டிவி,

கேப்டன் டிவி,

மக்கள் டிவி,

 மெகா டிவி,

 பாலிமர் டிவி,

 புதுயுகம் டிவி,

 ராஜ் டிவி,

 சூப்பர் டிவி,

 வசந்த் டிவி,

 வேந்தர் டிவி,

ஜீ தமிழ்,

டிடி பொதிகை

மூவீ டைம்ஸ்:-

இந்த சேனல்களில் பழைய படங்கள் தொடங்கி புதுப்படம் வரையிலும் 24 மணிநேரமும் நான் ஸ்டாப் படங்கள் தான். விடுமுறை நாட்களில் புதுப்படங்களும், ஒவ்வொரு நாளும் மதிய நேரத்தில் பழைய படங்கள் என்று ஒவ்வொரு நாளுக்கேற்ற மாதிரியும் படங்களை தொகுத்து வழங்குகிறார்கள். 

 ஜெ மூவிஸ்

 கே டிவி

 மெகா 24

 ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்

 ஸ்டார் விஜய் ஹிட்ஸ்

 சன் ஆக்‌ஷன் 

மியூசிக் சேனல்ஸ்:- 

பொழுது போகவில்லையென்றால் அனைவரின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் பாடல் கேட்பதுதான். ஒரு காலத்தில் ரேடியோ பெட்டியில் பாடல் கேட்டு பழகிய நாம், அதன் நீட்சியாக இன்று மியூசிக் சேனல்களை தேர்ந்தெடுக்கிறோம். அன்றைய நாட்களில் வெள்ளிக்கிழமை மட்டும் ஒளிபரப்பான ஒலியும் ஒளியும் இன்று ஆல் டைம் டெலிகாஷ்ட்.

சன் மியூசிக்  

 இசையருவி,

 ஜெயா மேக்ஸ்,

ராஜ் மேக்ஸ்,

 எஸ்எஸ் டிவி,

 ட்யூன்ஸ் 6,

 7எஸ் மியூசிக்,

 சேனல் UFx. 

80களில் வெளியான பழைய படங்கள் மற்றும் பாடகளுக்காகவே ப்ரத்யோகமாக சில க்ளாசிக் சேனல்கள்:-  

 முரசு டிவி

  சன் லைஃப் டிவி 

நியூஸ் சேனல்கள்:-

அரசியல் தலைவர்கள் கட்சித் தொடங்குவதற்கு முன்னாடியே, தங்களுக்கென ஸ்பெஷலாக டிவி சேனலைத் தொடங்கிவிடுகிறார்கள். கட்சிக்கான விளம்பர செய்தி ஊடகமாகவே மாறியும் விடுகிறது. அதையும் தாண்டி விரைந்து, உண்மைச் செய்திகளைத் தரவும் நிறைய சேனல்கள் தமிழில் இருக்கின்றன. 

கேப்டன் நியூஸ்,

 ஜெயா ப்ளஸ்,

 கலைஞர் செய்திகள்,

 சன் நியூஸ்,

 தந்தி டிவி,

 மாலை முரசு டிவி,

 நியூஸ் 7

 லோட்டஸ் டிவி,

 நியூஸ் 18,

 பாலிமர் டிவி,

புதிய தலைமுறை,

 ராஜ் நியூஸ்,

 சத்யம் நியூஸ், 

காமெடி ஸ்பெஷல்:-

தமிழில் காமெடிக்கென தி பெஸ்ட் இரண்டு சேனல்கள் மட்டுமே இருக்கின்றன. காமெடி காட்சிகள், ஸ்பெஷல் நிகழ்ச்சிகள், ப்ராங்க் வீடியோஸ் என்று எந்த நேரமும் நம்மை சிரிப்பூட்டும் சேனல்கள். 

ஆதித்யா டிவி

சிரிப்பொலி டிவி 

கிட்ஸ் டைம்:- 

விடுமுறை நாட்களில் டிவி ரிமோட் எப்பொழுதுமே குழந்தைகளின் கண்ட்ரோலில் தான் இருக்கும். ஒளிபரப்பான நிகழ்ச்சிகளே திரும்பத் திரும்ப போட்டாலும், புதுசா பார்க்குற மொமன்ட்டிலேயே இருப்பார்கள் சுட்டிகள். இந்த சேனல்களால் குழந்தைகளின் ஆங்கில அறிவும் நிச்சயம் செழுமையாகும். 

சுட்டி டிவி,

சித்திரம்,

கார்ட்டூன் நெட்வொர்க்,

டிஸ்கவரி கிட்ஸ்,

டிஸ்னி சேனஸ்,

டிஸ்னி ஜூனியர்,

 ஹங்கமா,

நிக்,

போகோ 

இன்போடெயின்மென்ட்: 

புதுசா எதாவது கற்றுக்கொள்ள வேண்டும், புதுசா எதையாவது ரசிக்கவேண்டும் என்று விரும்பும் தேடல்வாதிகளுக்காகவே சில சேனல்களும் இருக்கத்தான் செய்கிறது. 

டிஸ்கவரி சேனல் தமிழ்,

ஃபாக்ஸ் டிராவல்லர்,

ஹிஸ்ட்ரி டிவி18,

நேஷனல் ஜியோகிராஃபிக். 

ஸ்போர்ட்ஸ் சேனல்கள்: 

இதுவரை விளையாட்டுக்கென்று தமிழில் தனிச் சேனல்களே இல்லாத நிலையில், தமிழின் முதல்  ஸ்போர்ட்ஸ் சேனல் தான் விஜய் சூப்பர் டிவி. ஸ்போர்ட்ஸுக்கென்றுதான் ஸ்டார் விஜய், விஜய் சூப்பர் என்ற சேனலைத் தொடங்கியிருக்கிறது. கபடி, ஹாக்கி, கிரிக்கெட்டில் என்று அனைத்து நிகழ்ச்சிகளையும் லைவ் அப்டேட் செய்ய ரெடியாகிவருகிறது. ஆனால் தற்பொழுது பழைய நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பியும் வருகிறது சூப்பர் டிவி.

 சோனி சிக்ஸ்

 டென் கிரிக்கெட்

 டென் ஸ்போர்ட்ஸ்

 டிடி ஸ்போர்ட்ஸ்

 ESPN,

 ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.  

ஆன்மீகம்: 

தமிழின் முக்கிய மூன்று மதங்களான இந்து, கிறிஸ்துவ, முஸ்லீம் மக்களின் ஆன்மீக சிந்தனைக்காக சில ஸ்பெஷல் டிவிக்களும் இருக்கின்றன. அந்த சேனலகள் முழுக்க முழுக்க இறையருளையும், இறை வழிபாட்டையும், ஸ்பெஷல் தரிசனத்தையும் நேயர்களுக்கு வழங்கிவருகிறன. 

 ஸ்ரீ சங்கரா

 ஏஞ்சல் டிவி

 ஆசீர்வாதம் டிவி

 மாதா டிவி

 மூன் டிவி 

HD சேனல்கள்: 

50 இஞ்ச் வரைக்குமான டிவிகளைப் பயன்படுத்த தொடங்கிவிட்டோம். டிவி சைஸ் பெரிதாகும் போது, ஒளிபரப்பாகும் வீடியோக்களின் தரமும் உயர்வாக இருக்க வேண்டும். அதற்காகவே சில சேனல்கள் HDயில் ஒளிபரப்பாகின்றன.  

 ஜெயா டிவி, 

 கே டிவி,

 சன் டிவி,

 ஸ்டார் விஜய் டிவி,

 சன் மியூசிக். 

-’சீரியல்’ கில்லர் 

அடுத்த கட்டுரைக்கு