Published:Updated:

டூ இன் ஒன் காதல் கதை!

எஸ்.கலீல்ராஜாபடங்கள் : உசேன்

டூ இன் ஒன் காதல் கதை!

எஸ்.கலீல்ராஜாபடங்கள் : உசேன்

Published:Updated:
##~##

டி.வி. சீரியல் உலகின் சூப்பர் டாப் ஸ்டார்கள்... சஞ்சீவ் - தீபக்!

 சஞ்சீவ் அறையை நெருங்கும்போதே தீபக்கின் மொபைல் 'நண்பேன்டா... நண்பேன்டா’ என்று அலற, ''வர்றேன்டா... வர்றேன்டா!''என்ற படியே அறைக்குள் நுழைகிறார் தீபக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டூ இன் ஒன் காதல் கதை!

''நானும் சஞ்சீவும் 10 வருஷ தோஸ்துங்க. ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் சொல்லட்டா? 2001-ல் சின்னத் திரை கலைஞர்கள் சங்கத்தின் சார்பா ஸ்டார் நைட் கொண்டாடினோம். அப்போ டான்ஸ் ரிகர்சலில் அடிக்கடி சந்தித்ததில் நல்ல ஃப்ரெண்ட் ஆகிட்டோம்!''- என தீபக் ஆரம்பிக்க, ''ஆமா,  எங்க ரெண்டு பேருக்குமே டான்ஸ் வரலை. எப்படிச் சமாளிக்கிறதுன்னு பேசிப் பேசியே ஃப்ரெண்ட் ஆகிட்டோம்!'' என்று குறுக்குசால் ஓட்டுகிறார் சஞ்சீவ்.

''நான் 'திருமதி செல்வம்’ சீரியல் கமிட் ஆனேன். தீபக் 'ஜோடி நம்பர் ஒன்’ கமிட் ஆனான். அப்போதான், கலா மாஸ்டர் தீபக்கிட்ட, 'மானாட மயிலாட ஆரம்பிக்கப்போறோம். யாராவது நல்ல காம்பியர் இருந்தா சொல்லு?’னு கேட்டு இருக்காங்க. என்கிட்ட, 'அந்த புரொகிராமை நீ நடத்து!’னு, என்னை வற்புறுத்திச் சம்மதிக்கவெச்சான். அந்த ஷோ செம ஹிட். எனக்கு செம ரீச். தேங்க்ஸ் தீபக்!'' என்று சஞ்சீவ் சொல்ல, ''நானும் ஒரு நன்றி சொல்லணும். 'திருமதி செல்வம்’ சீரியல்ல ஒரு கெஸ்ட் ரோல் இருக்கு. 10 நாள்தான் ஷூட்டிங். டைரக்டர் குமரன்கிட்ட உன்னைப்பத்தி சொல்லி இருக்கேன்’னு சஞ்சீவ் கூப்பிட்டான். ஃபாரின் மாப்பிள்ளை கேரக்டர்ல 10 நாள் நடிச்சேன். அந்த டிராக் நல்லாப் போனதால, என் கேரக்டரை டெவலப் பண்ணிட்டாங்க. என் பெர்ஃபார்மன்ஸ் பார்த்து 'தென்றல்’ சீரியல்ல நடிக்க வாய்ப்பு கொடுத்தார் குமரன் சார்!'' என்று தீபக் நிறுத்த, ''இந்த மாதிரி ரெண்டு பேரும் மாறி மாறி சான்ஸ் வாங்கிக் கொடுத்துக்கிட்டாதான் உண்டுபோல...'' என்று கமென்ட் அடித்துக் கலகலக்கவைக்கிறார் சஞ்சீவ்.

டூ இன் ஒன் காதல் கதை!

''நான் டூ இன் ஒன் காதல் கதை சொல்லவா? தீபக், விஜய் டி.வி-யில் வேலை பார்த்துட்டு இருந்த ரஞ்சனியைக் காதலிச்சான். அவங்ககிட்ட 'நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’னு கேட்டு இருக்கான்.

டூ இன் ஒன் காதல் கதை!

உடனே பதில் எதுவும் சொல்லாதவங்க, அவங்களோட தோழி ப்ரீத்திகிட்ட, 'எனக்கு தீபக்கைப் பிடிச்சிருக்கு. ஆனா, அவனோட ஊர் சுத்துற ஃப்ரெண்ட்ஸ் நல்லவங்களாத் தெரியலையே’னு சொல்லி இருக்காங்க. அதுக்கு அந்த ப்ரீத்தி, 'ஆமா. தீபக் அந்த சஞ்சீவ் ஃப்ரெண்ட்ஷிப்பைக் கட் பண்ணிட்டா, நீ தீபக்கைக் கல்யாணம் பண்ணிக்கலாம்’னு ஐடியா கொடுத்திருக்காங்க. ஒரு நல்லவன் மேல அபாண்டமாப் பழி சுமத்தின அந்த ப்ரீத்திக்குக் கடைசியில் வாழ்க்கை என்ன பரிசு தந்துச்சு தெரியுமா? ரஞ்சனி தீபக்கைக் கல்யாணம் பண்ணிக்கவும், ப்ரீத்திக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தது. ரஞ்சனிக்கு இப்போ நான் அண்ணன். எங்களை எல்லாம் பார்த்தாப் பிடிக்காது பாஸ்.... பழகப் பழகத்தான் பிடிக்கும்!'' - சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறார் சஞ்சீவ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism