Published:Updated:

’டான்ஸர்...டப்பிங் ஆர்டிஸ்ட்’ - சீரியல் நடிகர்களின் சீக்ரெட் முகம்!

பா.விஜயலட்சுமி
’டான்ஸர்...டப்பிங் ஆர்டிஸ்ட்’ - சீரியல் நடிகர்களின் சீக்ரெட் முகம்!
’டான்ஸர்...டப்பிங் ஆர்டிஸ்ட்’ - சீரியல் நடிகர்களின் சீக்ரெட் முகம்!

வெள்ளித்திரையின் சூப்பர் ஸ்டார் ரஜினி, முன்பொரு காலத்தில் பஸ் கண்டக்டர். நடிகர் அஜித், ரேஸிங் உலகில் கிரேஸ் கொண்டவர். கமல்ஹாசன், நடிப்பைத் தாண்டி ஸ்க்ரீன் ப்ளே, இயக்கம் என்று சகலகலா வல்லவர்.  நடிகர் விஜய், நல்ல பாடகர். இப்படி சினிமா உலகின் நடிகர், நடிகைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தனி பின்புல முகம் உண்டு. இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல, சின்னத்திரை நடிகர், நடிகைகள். சின்னத்திரையை தவிர அவர்களின் பின்னால் என்னென்ன சீக்ரெட்ஸ் இருக்கிறது. பார்ப்போமா?

நடிகை வாணி போஜன் (தெய்வமகள்):

சத்யப்பிரியாவாக நம் எல்லார்க்கும் தெரிந்த வாணி போஜன், திரையுலகில் நுழைவதற்கு முன்னர் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் ஏர்ஹோஸ்டஸ். வாணியின் தந்தை, வைல்ட் லைஃப் போட்டோகிராபர். அண்ணன் பத்திரிகையாளர். மாடலிங் ஹாபியில் தொடங்கிய வாணியின் ஆன் - ஸ்கீரின் என்ட்ரன்ஸ், தற்போது சீரியல் உலகின் ‘தி மோஸ்ட் வாண்டட்’ ஹீரோயின் என்னும் உச்சத்தில் நிற்கிறது.

நடிகை பிரவீணா (ப்ரியமானவள்): 

உமாவாக கலக்கும் நடிகை பிரவீணா, தமிழ் சீரியல் உலகிற்கு மலையாள வரவு. சினிமா உலகில் நுழைவதற்கு முன்னர் இவர் நடனத்தில் சிறந்து விளங்கினார். நல்ல குரல்வளம் கொண்ட பிரவீணா, பல நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடியிருக்கிறார். முறைப்படி சங்கீதமும், நடனமும் பயின்றவர். 

நடிகை நிஷா கணேஷ் வெங்கட்ராம் (தலையணைப்பூக்கள்):

சீரியல் உலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு, நிஷா பல ஷோக்களைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி. விஜய் டிவியின் கனாக்காணும் காலங்கள் கல்லூரியின் கதை மூலமாக, சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தவர், வரிசையாக தெய்வமகள், மகாபாரதம் என்று நடிகையாக மிளிர ஆரம்பித்தார். தற்போது, தலையணைப்பூக்களில் லீடிங் ரோல். நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து, மணம் புரிந்து கொண்டார். 

நடிகர் அமித் பார்கவ் (கல்யாணம் முதல் காதல் வரை):

கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலமாக பலரின் மனம் கவர்ந்த அர்ஜூன் அலைஸ் அமித் பார்கவ், டிவி உலகில் நுழைவதற்கு முன் பல நடிகர்களுக்கு குரல் கொடுத்தவர். நம்பர் ஒன் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தடம் பதித்தவர். தலைவா, தனி ஒருவர் திரைப்படத்திலும் பின்னணி குரல் கொடுத்துள்ளார் அமித். 

ரியோ (சரவணன் மீனாட்சி):

சரவணன் மீனாட்சி தொடரின் புதிய சரவணனான ரியோ, சரவணனாக அவதாரம் எடுப்பதற்கு முன்பு சன் மியூசிக்கில் கலக்கிய தொகுப்பாளர். மூன்று வருடம் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பிறகு இப்போது நடிகராகவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

நடிகர் கிருஷ்ணா (தெய்வமகள்):

தெய்வமகளில் ‘ஹலோ அண்ணியாரே’ என்று வில்லி கண்ணில் விரல் விட்டு ஆட்டும் பிரகாஷ் அலைஸ் கிருஷ்ணா, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பட்டறையில் இருந்து உற்பத்தியானவர். ஏனெனில் இவரது முதல் டிவி என்ட்ரன்ஸ், பாலசந்தரின் ’சகானா’. அதற்கு பிறகு, சிதம்பர ரகசியம் அமானுஷ்ய தொடரில், சோமேஸ்வரன் வேடம். தொடர்ந்து வரிசையாக பல சினிமாக்கள், பல்வேறு சீரியல்கள். இதற்கு நடுவில், ‘மன்மத ராசா’ புகழ் நடிகை சாயா சிங்கை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரகாஷ் வேடத்தில் பல ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 

நடிகர் ஸ்ரீ (தலையணைப்பூக்கள்):

தலையணைப்பூக்களில் நிஷாவுடன் ஜோடி போட்டுள்ள ஸ்ரீக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. முதலாவது, இவர் இசையமைப்பாளர் கணேஷ் (ஷங்கர் கணேஷ்) மகன். ’பாண்டவர் பூமி’ திரைப்படத்தில் ஹீரோயினாக கலக்கிய ஷமிதாவைத் திருமணம் செய்து கொண்டார். சிவசக்தி சீரியலின் மூலமாக அறிமுகம் ஆன இவர், திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தலையணைப்பூக்களில் நாகராஜ் கேரக்டரில் ஹாப்பியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-பா.விஜயலட்சுமி