Published:Updated:

விஜய் சூப்பரின் ‘சூப்பர் 5’ நிகழ்ச்சிகள் இதுதான்!

முத்து பகவத்
விஜய் சூப்பரின் ‘சூப்பர் 5’ நிகழ்ச்சிகள் இதுதான்!
விஜய் சூப்பரின் ‘சூப்பர் 5’ நிகழ்ச்சிகள் இதுதான்!

என்னதான் புதிது புதிதாக மாற்றங்கள் வந்தாலும், பழைய விஷயங்களையும், அதன் நாஸ்டால்ஜிக் நினைவுகளையும் மறக்கமுடியாது. அந்த நினைவுகள் அப்படியே மனதில் பொக்கிஷமாக இருக்கும். அந்த மாதிரி நாம் பார்த்து ரசித்த நாஸ்டால்ஜிக் டிவி நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுத்து மறு ஒளிபரப்பு செய்து வருகிறது விஜய் சூப்பர் டிவி. ஸ்டார் விஜய்யின் புதுவரவு. இந்த புதுச்சேனல் நாஸ்டால்ஜிக் சம்பவங்களுக்காக மட்டுமில்லாமல் ஆச்சரியப்படுத்தும் பல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.

விஜய் சூப்பர் சேனலின் நோக்கமே ஸ்போர்ட்ஸ், படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதுதான். கபடி, கால்பந்து, ஹாக்கி போட்டிகள் நடக்கும்போது அதை தமிழ் வர்ணனையுடன் நேரடி ஒளிபரப்பு செய்வது, ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்களுக்கு கிடைத்த தீனி. இந்த சேனலில் பல வெரைட்டிகள் இருந்தாலும், முதல்கட்டமாக மறுஒளிபரப்பு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் சூப்பரில் மறுஒளிபரப்பு செய்யப்படும் நாஸ்டால்ஜிக் டிவி நிகழ்ச்சிகள்: 

மகான் 10.30 (காலை)
சீதையின் ராமன் 11.00
மகாபாரதம் 11.30
காவியாஞ்சலி  12.00
சலனம் 12.30
அக்னி சாட்சி 01.00
பூ விலங்கு 01.30
மாயா மச்சீந்திரா 05.00 (மாலை)
இது ஒரு காதல் கதை 07.30
கனா காணும் காலங்கள் 08.00
காதலிக்கநேரமில்லை 08.30
கலக்கப்போவது யாரு 09.00
புதிரா புனிதமா  11.00 (இரவு)

ஹிஸ்டாரிக்கல்: 

இறையருளைப் பேசும் இதிகாசத் தொடர்களுக்கும், வரலாற்றுச் சம்பவங்களைப் பேசும் தொடர்களுக்கும் வரவேற்பு நிச்சயம். ஏனென்றால் வரலாற்றுச் சம்பவங்களைப் பிரமாண்ட அரங்க அமைப்புகளுடன் ஒரிஜினாலிட்டியுடன் பார்ப்பதே காரணம். இதற்காக ‘மகான்’, ‘சீதையின் ராமன்’, ‘மகாபாரதம்’ போன்ற இதிகாச நிகழ்ச்சிகளை வழங்குகிறது விஜய் சூப்பர். அதுமட்டுமில்லாமல் சென்டிமென்டில் சிக்ஸர் விளாசும் காவியாஞ்சலி, அக்னிசாட்சி போன்ற தொடர்களும் அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்கின்றன.

ரியாலிட்டி ஷோ: 

அனுஹாசனின் எதார்த்தமான பேச்சுகளால் ஹிட்டடித்த நிகழ்ச்சி தான் “காஃபி வித் அனு”. இந்நிகழ்ச்சியின் வெற்றி தான் தற்பொழுது டிடி வரை தொடகிறது. தவிர, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு, ஹோம் ஸ்வீட் ஹோம், பாட்டு பாட வா என்று அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் ரீ கேப் செய்யப்படுகிறது. இத்துடன் தமிழில் முதன்முறையாக பாலியல் சார்ந்த பிரச்னைகளைச் சீரியஸாகப் பேசிய “புதிரா புனிதமா” நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிறது. . 

சுட்டீஸ் ஸ்பெஷல்: 

அப்போதெல்லாம், தினமும் மாலை பள்ளி முடிந்த அடுத்த நிமிடம் குழந்தைகள் வீட்டில் ஆஜராகிவிடுவர். காரணம், 5 மணிக்கு ஒளிபரப்பாகும் மாயா மச்சீந்திரா தொடர். முன்பு போலவே அதே 5 மணிக்கு தற்பொழுது மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சூப்பர் ஹீரோ, மாயாஜாலம் போன்றவை சுட்டிஸ்களின் ஃபேவரைட் ஷோ! 

காதலும் காதல் நிமித்தமும்: 

பள்ளிப் பருவத்தில் நடக்கும் சுவையான சம்பவங்களின் கோர்வைதான் ‘கனாக் காணும் காலங்கள்’. பள்ளிப்பருவத்தில் தொடங்கும் நட்பும், காதலும்தான் கதைக்களம். இதைத் தொடர்ந்து மற்றுமொரு ஹிட் ‘காதலிக்க நேரமில்லை’. ரொமான்ஸில் சிக்ஸர் விளாசிய இந்தத் தொடரின் டைட்டில் பாடல் இன்றும் பலரின் ரிங்டோன். பெண்கள் மட்டுமே சீரியல் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் ஆண்களையும் சின்னத்திரைக்குள் இழுத்துவந்தது இந்த இரண்டு தொடர்கள் தான்.

காமெடி அதகளம்: 

அதிரிபுதிரி சிரிப்பு வெடிகளை விளாசும் நிகழ்ச்சி தான் கலக்கப்போவது யாரு. பல சீசன்களைத் தாண்டியும் சக்கைப்போடு போட்டது. நாள் முழுவதும் வேலை பார்த்து விட்டு, இரவு செம டென்ஷனாக டிவியை ஆன் செய்தால் அப்படியே கவலை மறந்து சிரிக்கவைக்கும் அதிரடி நகைச்சுவை வேட்டை தான் கலக்கப்போவது யாரு. பல காமெடியன்களைத் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதும் இந்நிகழ்ச்சியே. 

விஜய் சூப்பரின் ‘சூப்பர் ஃபைவ்’ டெக்னிக்ஸ் இது தான். விஜய் டிவியின் க்ளாசிக் நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்புசெய்வது, ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளை லைவ் செய்வது என டாப் கியரில் பறக்கிறது விஜய் சூப்பர். 

- 'சீரியல்’ கில்லர்