Published:Updated:

இளசுகளின் ஃபேவரைட் டிவி நிகழ்ச்சிகள் இவைதானாம் #மினிசர்வே

இளசுகளின் ஃபேவரைட் டிவி நிகழ்ச்சிகள் இவைதானாம் #மினிசர்வே
இளசுகளின் ஃபேவரைட் டிவி நிகழ்ச்சிகள் இவைதானாம் #மினிசர்வே

இளசுகளின் ஃபேவரைட் டிவி நிகழ்ச்சிகள் இவைதானாம் #மினிசர்வே

தொலைக்காட்சியில் விதவிதமான பல சேனல்கள் கொட்டிக்கிடக்கின்றன. நமக்கான ஃபேவரைட் டிவி நிகழ்ச்சிகள் ஒவ்வொருத்தருக்குமே மாறுபடும். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி எது என்று ஒரு குட்டி சர்வே நடத்தினோம். அவர்கள் அதிகமாக லைக் செய்யும் டிவி நிகழ்ச்சிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. ஏன் பிடிக்கும் என்று சில மாணவர்கள் சொன்ன கருத்துக்களும் இங்கே...! 

நீயா? நானா?: 

சேனல்: விஜய் டிவி | நேரம்: மதியம் 3 மணி (ஞாயிறு)

“சமுகப்பிரச்னைகளை எதிரெதிர் கோணங்களில் அலசி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் ஸ்பெஷல். அதே நேரம் எதிர்மறைக் கருத்துகளை வெளிக்கொண்டுவருவதும் நிச்சயம் பாராட்டத்தக்கது. ஏனெனில் எதிர்மறை கருத்துகள் வரும்போதுதான், பிரச்னைகளுக்கான தீர்வும் கிடைக்கும். சமுக பொறுப்புணர்ச்சியுடைய நிகழ்ச்சி தான் நீயா? நானா?” என்று பொறுப்புடனேயே பேசுகிறார் செல்வகுமார். அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குகும் சுகன்யா, “நான் தவறாமல் பார்க்கும் நிகழ்ச்சி இது. பலதரப்பட்ட மக்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தச் சமூகத்தை பெண்ணாக புரிந்துகொள்ளமுடிகிறது. தெரியாத நாட்டு நடப்புகளையும் கற்றுக்கொள்ளமுடிகிறது. கோபிநாத்தின் பேச்சுத்திறமை என்னைச் சிந்திக்க வைக்கிறது”. 

தெய்வமகள்: 

சேனல்: சன் டிவி | நேரம்: இரவு 8 மணி

“பெண்கள் மட்டும்தான் சீரியல் பார்ப்பாங்கனு யார் சொன்னது. நிறைய ஆண்களும் இப்போ சீரியல் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்போ வர சீரியல்கள் எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கிறது. குறிப்பா தெய்வமகள் சீரியலின் கதை நகர்வும், திரைக்கதையும், இயக்கமும் சிறப்பாக இருக்கு. குறிப்பா நாயகி சத்யா செம... அவங்களுக்காகவே சீரியல் பார்க்கலாம்” என கனவில் மூழ்கிவிடுகிறார் சாஃபர் முஹம்மத். 

மேன் Vs வைல்ட் (Man Vs Wild)  

சேனல்: டிஸ்கவரி தமிழ்

“நான் இப்பொழுது தன்னந்தனியாக அடந்த இந்தக் காட்டுக்குள் மாட்டிக்கொண்டேன். இங்கிருந்து எப்படி உயிருடன் தப்பிப்பது என்பது பற்றி உங்களுக்குச் சொல்லப்போகிறேன்...” பாட்டாகவே படிக்கிறார் தேவசுகா. தனியாக காட்டில் மாட்டிக்கொண்டால் என்ன செய்தால் மனிதன் உயிர்பிழைக்கமுடியும் என்பதை சுவாரஸ்யமாகச் சொல்வதால் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சிக்கு ஆயிரம் லைக்ஸ் கொடுக்கலாம். ஆனாலும் பியர் கிரில்ஸ் காட்டு உயிர்களை கொன்று சாப்பிடுவார். காட்டு விலங்குகளை கொல்வதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது. ஜல்லிக்கட்டையே தடை பண்ணுறாங்க.. இவருக்கும் தடை போட்டுடவேண்டியது தான்” என்று ஜாலியாக கலாய்த்துக்கொண்டே எஸ்கேப் ஆகிறார். 

கலக்கப்போவது யாரு..

சேனல்: விஜய் டிவி | நேரம்: இரவு 7 மணி (சனி)

“கிட்ட வாங்களேன் கலாய்க்கமாட்டேன் என்று கூப்பிட்டு கலாய்க்கும் நிகழ்ச்சிதான் கலக்கப்போவது யாரு. அதுவும் நிஷா அக்காவும், பழனி அண்ணாவும் செம ரகளை. நான் அவங்களோட பெரிய ரசிகை. அதுமட்டுமில்லாமல் ஜாக்குலின் வாங்கும் மொக்கை தான் நிகழ்ச்சியோட ஹைலைட்ஸ். இப்போ புது டீம் வந்துருக்காங்க. அவங்களும் செமத்தியா பண்ணுறாங்க.... கடுப்புல இருந்தா நிச்சயம் நம்ம சிரிக்கவைக்கும்” என்று சிரிக்கிறார் சரண்யா. 

“காமெடி மட்டுமில்லாமல் ஏதாவது ஒரு விஷயத்தையும் யோசிக்கவச்சிடுவாங்க. அதுமட்டுமில்லாமல் ட்ரெண்டுக்கு ஏத்தமாதிரி புதுசுபுதுசா காமெடியில் அப்டேட்டா இருக்குறதும் இந்த நிகழ்ச்சிதான். நடுநடுவே ஐந்து நடுவர்களும் கமெண்ட் பண்ணுறது, கலாய்க்கிறதுனு நிகழ்ச்சியே பிரமாதமா இருக்கும். போன சீசன்ல ஃபைனல் போன நவீன் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் அப்துல் கலாம் மாதிரி பேசுனதுல நான் ரொம்பவே இம்ப்ரெஷ் ஆகிட்டேன்” என்கிறார் தமிழ்செல்வன். 

கோலிவுட் சம்பிரதாயம்

சேனல்: ஆதித்யா | நேரம்: காலை 10 மணி (ஞாயிறு)

“செம ஜாலியான ஷோ. ஒவ்வொரு வாரம் முடியும் போதுமே ஐயோ அடுத்த வாரம் எப்போ வரும்னு தான் இருக்கும். கலாய், மொக்கை, பல்ப் வாங்குறதுனு முழுக்க முழுக்க சிரிச்சிட்டே இருக்கலாம். நிச்சயம் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் தேவை” என்கிறார் கமலக்கண்ணன் 

விவாத மேடை: 

சேனல்: தந்தி | நேரம் : இரவு 8 மணி 

மாணவர் தனபாலனுக்கு எதாவது புதுசுபுதுசா கற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பது தான் ஆசையாம். அரசியல் சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுத்ததே விவாத மேடை நிகழ்ச்சி தான் என்கிறார். “தவறாமல் விவாதமேடை நிகழ்ச்சியை பார்த்துவிடுவேன். ரங்கராஜ் பாண்டே கேட்கும் சரமாரியான கேள்வியும், அவரின் சிந்தனையும் ரொம்ப பிரமிப்பா இருக்கும். இந்நிகழ்ச்சியின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது” என்கிறார். 

சரவணன் மீனாட்சி 

சேனல்: விஜய் டிவி  | நேரம்: இரவு 8.30 மணிக்கு 

“முதல் சீசனிலிருந்தே நான் சரவணன் மீனாட்சி நிகழ்ச்சிக்கு ரசிகை. கிராமத்து சூழலில் கதை செல்வதால் தான் எனக்கு இந்த தொடர் ரொம்ப பிடிக்க அரம்பித்தது. இயற்கையான மனிதர்கள் வாழ்வில் நடக்கும் காதல், குடும்ப பிரச்னை எப்படியிருக்கும்னு சூப்பரா சொல்லிருப்பாங்க” என்று முடித்தார் நவீனா.

தொகுப்பு: ‘சீரியல்’  கில்லர்
நன்றி: மாணவப் பத்திரிகையாளர்கள்

அடுத்த கட்டுரைக்கு