Published:Updated:

இன்னைக்கு டி.வில இந்த 5 அதிரடி ஆங்கிலப் படங்களை மிஸ் பண்ணாதீங்க!

நா.செந்தில் குமார்
இன்னைக்கு டி.வில  இந்த 5 அதிரடி ஆங்கிலப் படங்களை மிஸ் பண்ணாதீங்க!
இன்னைக்கு டி.வில இந்த 5 அதிரடி ஆங்கிலப் படங்களை மிஸ் பண்ணாதீங்க!

வீக்கெண்ட் படங்கள் ஒரு பக்கம் ரிலீஸ் ஆகிப் பரபரப்பாக  ஓடிகிட்டு இருந்தாலும் வீட்டில் கையில் ரிமோட்டைக் கைப்பற்றி வச்சுகிட்டு, டீ, முறுக்கு, டிபன், டின்னர் என சோபாவை விட்டு அகலாமல் சின்னத்திரையில் படம் பார்க்கும் சுகமே தனிதான். இன்றைக்கு இரண்டாவது சனிக்கிழமை பெரும்பாலும் விடுமுறையாகத்தான் இருக்கும். இன்றைக்கு ஒளிபரப்பாகும் ஆங்கிலப் படங்களில் பெஸ்ட் ஐந்து படங்களில் பட்டியல் கீழே...

மேட்ரிக்ஸ் - நூறு வருடங்களுக்குப் பிறகு நடக்கும் கதை. மனிதர்கள் - இயந்திரங்கள் இடையே ஏற்பட்ட ஆதிக்கப்போட்டியில் இயந்திரங்கள் வெல்ல இருக்கும் நிலையில் மனிதர்கள் இயந்திரங்களின் ஆதார சக்தியாக விளங்கும் சூரிய ஒளி பூமியில் விழாத படிக்கு  கரியமில மேகங்களை உருவாக்கி விடுகின்றனர். ஆனால் போரில் வெற்றி பெற்ற இயந்திரங்கள் மனிதர்களில் இருக்கும் சக்தியை அவர்களை அடைத்து வைத்துத் திருடிக்கொண்டு இருக்கின்றன. அதை வெல்ல வருகிறான் நியோ. எத்தனையோ முறை பார்த்திருப்பீர்கள் இருந்தாலும் திரும்ப பார்க்கும் அளவுக்கு செம ஆக்‌சன் படம்! ( HBO - காலை 9 மணிக்கு ) 

ட்ரான் லெகஸி  - இதுவும் மேட்ரிக்ஸை போலவே வர்ச்சுவல் உலக கதைதான். விடியோ கேம் வடிவமைப்பளாள அப்பா நெடுநாட்களாகக் காணாமல் போய் விடுகிறார். அவரைக் கண்டுபிடிக்க அவரின் அலுவலகம் போகும் மகன் அவர் க்ரிட் என்கிற மெய்நிகர் உலகத்தில் மாட்டிக்கொண்டு இருப்பது தெரிய வருகிறது. அதற்கு மகனும் போய் மாட்டிக்கொள்கிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே கதை. (காலை 10.30 மணிக்கு ஸ்டார் மூவிஸில் ஒளிபரப்பப்படுகிறது ) 

ரெட் 2 - முதல் பாகத்தில் அதிகாரிகளால் துரத்தப்பட்டு பின்னர் அவர்களை வெற்றிகொள்ளும் ரிட்டையர்ட் அதிரடிப்படை அதிகாரியாக  ப்ரூஸ் வில்லிஸ் நடித்திருந்தார் . இதில் அவரின் முன்னாள் கூட்டாளி ஒருவர் இவரையும் இவரது நண்பரையும் தீவிரவாதிகள் அணுகுண்டு வைத்திருக்கிறார்கள் எனச் செய்தியை பரப்பி விடுகிறார். துரத்தும் அரசுகளிடம் இருந்தும் வில்லன்களிடம் இருந்தும் தப்பிக்கும் கதை. ( இந்தப்படம் 'வார்னர் பிரதர்ஸ்' சேனலில் மதியம் 2.15 மணிக்கு ஒளிபரப்பாகிறது ) 

ரீகாயில் - டெக்ஸாசில் போலிஸாக வேலை பார்க்கும் ரேயானி குடும்பம் கொல்லப்படுகிறது. ரேயான் மட்டும் தப்பிக்கிறார். கொலைகாரர்களைத் தேடிப்போகிறார். போன பின்னர் தான் தெரிகிறது ஒரு நகரமே அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை. அந்த ஊர் ஒரு பெண்ணுடன் சேர்ந்து அவ்வளவும் பெரிய கும்பலை ஒழிக்கிறார் நாயகன். இதன் இரண்டாவது பாகமும் வெளியானது. இந்தப்படம் இன்று மாலை 5.15க்கு ஜீ மூவிஸில் ஒளிபரப்பாகிறது.

ஸ்பைடர் மேன் 2  -  வெளியாகி 12 ஆண்டுகள் ஆனாலும் இந்தப்படத்தின் விறுவிறுப்பு கொஞ்சம் கூடக் குறையவில்லை. ஸ்பைடர் மேனாக உருவாகிவிட்டாலும் ரகசியமாக அநீதிக்கு எதிராகப் போராடும் பீட்டர் சொந்த வாழ்க்கையில் பணத்துக்கு கஷ்டப்படுகிறார். இந்நிலையில் நகரத்துக்கு டாக்டர் ஒருவரின் கண்டுபிடிப்பால் சிக்கல் வருகிறது.  தனது தற்போதைய நிலைக்கு ஸ்பைடர் மேன் தான் காரணம் என அவரைக் கொல்லத்துடிக்கும் டாக்டரும் முதல் பாகத்தில் ஸ்பைடர் மேனுடன் மோதி இறந்து போனவரின் மகனும் ஒன்றிணைகின்றனர். இறுதியில் ஸ்பைடர் மேன்தான் வெல்லுவார் என்றாலும் எப்படி வெல்கிறார் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லும் திரைக்கதை. மூவீஸ் நவ் சேனலில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள்.