Published:Updated:

இந்திய அளவில் கலக்கும் 'டாப் - 5’ சீரியல் நடிகைகள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்திய அளவில் கலக்கும் 'டாப் - 5’ சீரியல் நடிகைகள் !
இந்திய அளவில் கலக்கும் 'டாப் - 5’ சீரியல் நடிகைகள் !

இந்திய அளவில் கலக்கும் 'டாப் - 5’ சீரியல் நடிகைகள் !

முப்பது வயதுக்கு மேல் ஆகியும் ஹீரோயின் வாய்ப்பிலிருந்து ‘ரிட்டயர்மென்ட்’ கொடுக்காத துறை டிவி சீரியல் மட்டும்தான். இந்திய அளவில் 30 வயதுக்கு மேல் படு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமான 5 பேர்கள் பற்றிய ஒரு சின்ன டேட்டா...


 

ஜெனிபர் விங்கெட்

'அக்லே தும் அக்லே ஹம்' படத்தில் சின்னப் பெண்ணாக நடிக்கத்துவங்கிய ஜெனிபர், சினிமாவை இப்போது வரை விட்டுவிடவில்லை. அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி வந்தாலும் டிவியில் முழு மூச்சாக நடித்து வருகிறார். பிரபல மாடலும் நடிகருமான கரண் சிங் க்ரூவரை கடந்த 2012-ல் மணமுடித்த ஜெனிபர், தற்போது சிங்கிள். இரண்டே ஆண்டுகளில் இவரை விவாகரத்து செய்த கரண், பிபாஷா பாஸுவை மணம் முடித்துள்ளார். ஆனால் பெர்சனல் உறவுச் சிக்கலில் இருந்து விடுபட ஃபுல் ஸ்விங்கில் டீவியில் நடித்து வருகிறார். அதிலும் சோனி டிவியில் கடந்த அக்டோபர் முதல் ஒளிபரப்பாகி வரும் 'பேகாத்' தொடருக்குப் பார்வையாளர்கள் மத்தியில் செம ‘ரெஸ்பான்ஸ்’ என்பதால், மகிழ்ச்சி!  

ஸ்வேதா திவாரி 

இந்திய அளவில் ஸ்வேதா அளவிற்கு அதிக விருதுகள் வாங்கிய டிவி நடிகையே இல்லை எனச் சொல்லலாம். பல்வேறு ஜானர்களிலும் தொடர்ந்து விருதுகள் வாங்கிய ஸ்வேதா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் வெற்றிபெற்று 1 கோடி ரூபாய் பரிசு வென்றவர். கடந்த 18 ஆண்டுகளாக நடித்து வரும் ஸ்வேதாவை கண்டிப்பாக நீங்கள் ‘மிஸ்’ செய்திருக்க முடியாது. நடிகர் ராஜ் சௌத்ரியுடன் செய்த திருமணம் கடந்த 2007-ம் ஆண்டு முறிந்து போனது. பின்னர் தொலைக்காட்சி நடிகரான அபினவ் ஹோலியை திருமணம் செய்து வாழ்கிறார். 30 வயதுக்கு மேற்பட்ட நடிகைகளில் இந்தியா முழுவதும் அறிமுகமானவர் இவர். 

த்ரஷ்டி தமி 

'ஈஸ்டரன் ஐ' இதழ் கடந்த இரு மாதங்கள் முன்பு வெளியிட்ட பட்டியலில், இந்தியாவில் அதிகம் வருவாய் ஈட்டும் தொலைக்காட்சி நடிகை என த்ரஸ்டி தமியைக் குறிப்பிட்டது. தொடர்ந்து 9 ஆண்டுகளாகத் தொலைக்காட்சியில் மட்டுமே நடித்து வரும் நடிகை தமி. அதாவது ஒரு எபிசோடுக்கு ரூ.2 லட்சம் வரை வாங்குகிறாராம். பிடித்த நடிகையாக அனுஷ்கா சர்மா சொல்லும் தமியின் மொபைல் ஸ்கிரீன் சேவரில் இருப்பவர் ரன்பீர் கபூர். கடந்த ஜனவரி 10-ம் தேதியோடு 33 வயது ஆரம்பித்து விட்டது உபரி தகவல். 

கவிதா கௌசிக் 

'சந்தரமுகி சௌதாலா' எனச் சொன்னாலே அது கவிதா என டிவி ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிய 'ஃஎப்.ஐ.ஆர்' என்கிற புலனாய்வு தொடரின் நாயகி. கடந்த 15 ஆண்டுகளாகத் தொலைக்காட்சி துறையில் இருந்தாலும் இன்னமும் இவருக்கான ‘க்ரேஸ்’ குறையவேயில்லை. நாலைந்து சினிமாக்களில் நடித்துப்பார்த்தார். செட் ஆகவில்லை என்பதால் தொலைக்காட்சியிலேயே தொடர்ந்து இருக்கிறார். இவரின் ப்ளசும்,மைனஸூமாக இவர் சொல்லுவது தனது உயரமான "5 அடி 11" அங்குலங்களைத்தான். இந்தியப்பெண்களின் சராசரியை விட அதிகம் இது. 

தனிஷ்கா முகர்ஜி

எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா... 'உன்னாலே உன்னாலே' படத்தில் நடித்த நம்ம கஜோல் தங்கச்சிதான். 15 படங்களுக்கும் மேல் நிறைய மொழிகளில் நடித்துப்பார்த்தார். வேலைக்கு ஆகவில்லை. வயதும் கூடிக்கொண்டே போனதால் டிவி ஷோக்களில் எண்ட்ரி கொடுத்தார். ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ் 7' ல் ரன்னர் அப் வரைக்கும் வந்தார். அப்படியே பிக் அப் செய்து 'கேங்ஸ் ஆப் ஹாசிப்பூர்' என்கிற ‘ஸ்டான்ட் அப்’ காமெடி ஷோவில் ஜட்ஜ், பிக் பாஸ் 9 மற்றும் 10 ஆகியவற்றில் கெஸ்ட் என புல் ஸ்விங்கில் போய்க்கொண்டிருக்கிறார். 

- வரவனை செந்தில்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு