Published:Updated:

'ஸாரி' சொல்ல கற்றுக்கொடுத்ததே சக்திமான் தான்... #90sKids

'ஸாரி' சொல்ல கற்றுக்கொடுத்ததே சக்திமான் தான்... #90sKids

'ஸாரி' சொல்ல கற்றுக்கொடுத்ததே சக்திமான் தான்... #90sKids

'ஸாரி' சொல்ல கற்றுக்கொடுத்ததே சக்திமான் தான்... #90sKids

'ஸாரி' சொல்ல கற்றுக்கொடுத்ததே சக்திமான் தான்... #90sKids

Published:Updated:
'ஸாரி' சொல்ல கற்றுக்கொடுத்ததே சக்திமான் தான்... #90sKids

அமெரிக்காவுல இருக்கலாம், ஐரோப்பால இருக்கலாம் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன். ஆனா இந்த மேன், இந்தியா மேன், இனிமையான மேன் அவர் தான் சக்திமேன்... ஸாரி 'சக்திமான்'. இப்பிடி என்னை மாதிரி நைன்டீஸ் குழந்தைகளுக்கு 'ஸாரி' சொல்லணும்ற நல்ல பழக்கத்த கத்து கொடுத்ததே 'சக்திமான்' தான். வேலாயுதம் படத்துல விஜய் "உங்க எல்லாருக்குள்ளயும் ஒரு வேலாயுதம் இருக்கான்"னு சொல்ற மாதிரி நம்ம எல்லோருக்குள்ளயும் சக்திமான் இருப்பார். அவர நினைச்சு சுருள சுத்துவோமா...

 • அப்போ பொதிகையில போடுற வயலும் வாழ்வும் நிகழ்ச்சியவே அசராம பார்ப்போம், அடிதடி ஆக்‌ஷனோட, ஆரவாரமா வாரம் வாரம் ஒரு சூப்பர் ஹீரோ நாடகம் வருதுனா சும்மா விடுவோமா..!
   
 • ஞாயிற்றுக்கிழமை மதியம் பம்பரம் விளையாடணும், கிரிக்கெட் விளையாடணும்னு வெளிய எவ்வளவு பெரிய வேலை இருந்தாலும் "போடா எல்லாம் விட்டு தள்ளு"னு சக்திமான் பார்க்க டி.வி. முன்னாடி உட்கார்ந்துருவோமேப்பு.
   
 • இப்பலாம் எனக்கு பென் 10 பிடிக்காது சோட்டா பீம் தான் பிடிக்கும்னு ஒரு குரூப்பும், எனக்கு சோட்டா பீம் பிடிக்காது பென் 10 தான் பிடிக்கும்னு ஒரு குரூப்பும் இந்த பிஞ்சு வயசுலயே நெஞ்சு வலிக்க கத்திகிட்டு இருக்காய்ங்க. அப்போ எல்லாம் இப்பிடி கிடையாது. மறுநாள் ஸ்கூலுக்கு போனோம்னா எல்லோரும் சக்திமானின் சாகசங்கள் மட்டும் தான் பேசுவோம். ‘ஆப்பனன்ட்டா ஆளே இல்லா சோலோ’ வீரன்டா சக்திமான்.
   
 • குண்டலினி யோகா பண்ணிதான் சக்திமானுக்கு சக்தி வந்துச்சுனு, அரசல் புரசலா கேள்விபட்டு... குண்டலினினா என்ன எதுவும் வலி நிவாரனியானு சிந்திச்சோமேயா.
   
 • ’பார்லே-ஜி'னு ஒரு பிஸ்கெட் இருக்குனு நமக்கு தெரியவச்சதே சக்திமான் தான். ஜி ஃபார் Goat- க்கு பதிலா ஜி ஃபார் ஜீனியஸ்னு படிக்க வச்சவர் நம்மாளு.
   
 • பார்லே-ஜிக்கு இலவசமா கிடைக்குற சக்தி மான் ஸ்டிக்கர்கள வாங்கி பீரோ, கதவுனு எல்லா இடத்திலயும் ஒட்டி வச்சு இன்னும் பொக்கிஷமா பாதுகாத்துட்டு வர்றீங்களா.. என் இனமடா நீ...
   
 • மழை பெய்தால் ஆண்டெனாவுக்கு சிக்னல் கிடைக்காது... சக்திமான் பார்க்க முடியாதுனு, ஆண்டனாவுக்கு குடை வைக்க போய் எர்த் அடிச்சுச்சே ஞாபகம் இருக்கா?
 • சக்திமான் டிரெஸ் வாங்க கடை கடையா அலைஞ்சதும். சக்திமானின் டிரெஸ் மாதிரியே பேப்பர்ல வரைஞ்சு போட்டுகிட்டதையும் மறக்க முடியுமா...
   
 • சக்திமானோட இன்னொரு பெயரான கங்காதர்ன்றது கூட வாயில நுழையாமா கங்காரு கங்காருனு சொல்லிட்டு இருந்தவைங்க தான நாம.
   
 • தலைவன் மாதிரி பறக்குறேன் பேர்வழினு, உயரமான இடத்துல இருந்து சுத்தி சுத்தி குதிச்சு சுளுக்கு பிடிச்சு கிடந்தோமே. சக்திமான் ஹெல்ப் மீ...
   
 • சக்திமானுக்கு ஏழு சக்கரத்துல தான் சக்தி அடங்கியிருக்குனு, ரவுண்டா எத பார்த்தாலும் பாக்கெட் உள்ள போட்டுகிட்டு சுத்தினோமே ஞாபகம் இருக்கா?
   
 •  ‘பகல்ல இருக்குறவனுக்கு தான்டா, இருட்ட பார்த்தா பயம். நான் இருட்டுலயே வாழ்றவன்டா"ன்ற வசனத்துக்கு பொருத்தமான ஆள் நைட் வாட்ச்மேன் கிடையாது, சக்திமானோட வில்லன் 6000 ஆண்டு‘ உயிர்வாழும் டம்ராஜு கில்விஷன்தேன்... சக்திமானுக்கு கொஞ்ச நஞ்ச தொல்லையடா கொடுத்த..
  .
 • இப்போ சமந்தா, த்ரிஷா, நயன்தாரானு சுத்துற பயலுகலாம் யாரு... அப்போ 'கீதா...கீதா'னு சக்திமான் காதலி பேர சொல்லிகிட்டு திரிஞ்ச பயலுகதேன்.
   
 • இப்பவும் சக்திமான் போடுறாங்க. அனிமேஷன்லயும் வந்துட்டாப்ல, படமும் வந்துடுச்சு. இருந்தாலும் அப்போ மாதிரி வராது. சக்தி...சக்தி...சக்திமான்...

- ப.சூரியராஜ்