Published:Updated:

`சஹானா, ப்ரேமி, ரமணி, அங்கயற்கண்ணி’ - கே.பாலசந்தர் கண்ட புதுமைப்பெண்கள்!

`சஹானா, ப்ரேமி, ரமணி, அங்கயற்கண்ணி’ - கே.பாலசந்தர் கண்ட புதுமைப்பெண்கள்!

`சஹானா, ப்ரேமி, ரமணி, அங்கயற்கண்ணி’ - கே.பாலசந்தர் கண்ட புதுமைப்பெண்கள்!

`சஹானா, ப்ரேமி, ரமணி, அங்கயற்கண்ணி’ - கே.பாலசந்தர் கண்ட புதுமைப்பெண்கள்!

`சஹானா, ப்ரேமி, ரமணி, அங்கயற்கண்ணி’ - கே.பாலசந்தர் கண்ட புதுமைப்பெண்கள்!

Published:Updated:
`சஹானா, ப்ரேமி, ரமணி, அங்கயற்கண்ணி’ - கே.பாலசந்தர் கண்ட புதுமைப்பெண்கள்!

வெள்ளித்திரையில் ஹீரோவுடன் டூயட் பாடவே ஹீரோயின்கள் என்னும் புரிதலை மாற்றி, கலைஞர்களில் ஆண், பெண் வித்தியாசம் தேவையில்லை என்று நிரூபித்துக் காட்டியவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். அவருடைய கதைகளில் கதை நாயகர்களைவிட, கதை நாயகிகளுக்கு எப்போதும் முதலிடம் இருக்கும்.

அமலா, ஸ்ரீவித்யா, சுகாசினி, ரேவதி, கீதா, மோகினி என்று சினிமா உலகின் ஸ்டார் கதாநாயகிகளையும் டிவியில் ஜொலிக்க வைத்தவர் பாலசந்தர். வீடோ, வேலையோ எத்தகைய களம் சார்ந்த கதைகளாய் இருந்தாலும் அந்த கதைச் சக்கரம் சுற்றிச் சுழலும் ஆரம், பாலசந்தரைப் பொறுத்தவரை பெண்கள்தான். மிகப்பரிச்சயமான முகங்களைத் தாண்டி, கேபியால் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷமான கதைநாயகிகள் ஏராளம்...எக்கச்சக்கம். அவர் அறிமுகப்படுத்தாவிட்டாலும், அவருடைய சீரியல்களில் தலைகாட்டியதாலேயே, புகழ்பெற்ற சின்னத்திரை நடிகைகள் பலர்.  

டிவி உலகில் கே.பாலசந்தரின் ஆஸ்தான கதாநாயகி என்றால் அது ரேணுகா தான். சூர்யாவின் தாயாக ‘அயன்’ படத்தில் அட்டகாசம் செய்திருப்பாரே அவரேதான். டிவி தொடரில் 90களில் கொடிகட்டிப் பறந்தவர். காரணம், இயக்குனர் கேபி. திரையில் ஒரு வலுவான கதாபாத்திரமா, ஹீரோயின் அல்ட்ரா மாடர்ன் யுவதியா, குடும்பத்தையே தோளில் சுமக்கும் ஒற்றைப் பெண்ணா, கூப்பிடு ரேணுகாவை என்று கதைக்கு முன்பே ரேணுகாவின் பெயரை ’டிக்’ அடித்திருப்பார் கே.பாலசந்தர். கேபியின் ’ப்ரேமி’ சீரியலால் அறிமுகமாகி, ப்ரேமியாகவே ரசிகர்களின் மனதில் வாழ்ந்தவர். தொடர்ந்து கையளவு மனசு, ஜன்னல், காதல் பகடை, சஹானா, அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்று கே.பாலசந்தரின் ட்ரேட் மார்க் டிவி ஹீரோயின் ரேணுகாதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரேணுகாவைப் போலவே பாலசந்தரின் கதைநாயகி பட்டியலில் இடம்பிடித்திருந்த மற்றொருவர் மாளவிகா அவினாஷ். பரதம் பேசும் கண்களும், நெற்றி நிறைக்கும் நீண்ட பொட்டுமாக மாளவிகா ‘அண்ணி’யாகவே வாழ்ந்தவர். அண்ணி தொடரின் மூலக்கதைக்குச் சொந்தக்காரர் கே.பாலசந்தர். மற்ற நாயகிகள் போலவே, இதிலும் திறமையும், அன்பும் ஒருசேர வாய்த்த நாயகிதான் கதையின் ஹீரோயின் அங்கயற்கண்ணி.  தொடர்ந்து காமெடி காலனியின் கலாட்டா கதாநாயகியும் இவர்தான். 

கே. பாலசந்தரின் கதைகளில் நாயகிகள் திறமை, தைரியத்துடன், சுற்றியிருப்பவர்களின் வயிறும், மனமும் நிறையும் சிரிப்புக்கும் பஞ்சமில்லாமல் செய்பவர்கள். அதற்கு உதாரணம், ’ரமணி VS ரமணி’. ரமணியாக நடித்திருந்தவர், நடிகை வாசுகி.  இவர் ஆர்ட் டைரக்டர் ஆனந்த் சாயின் மனைவி. தொடரில் செம காமெடியான ரோல் வாசுகிக்கு. கணவன், மனைவி இருவரது பெயருமே ரமணி. இரண்டு ரமணிகளும் இணைந்து நடத்தும் காமெடி கலாட்டாதான் ‘ரமணி Vs ரமணி’. தொடரை இயக்கியவர் இயக்குனர் சமுத்திரக்கனி. 

கேபியின் ‘சிந்துபைரவி’ தொடர் சஹானாவாக டிவிக்காக உருவெடுத்தபோது, அதில் பைரவியின் மகளான சஹானாவாக நடித்தவர் நடிகை காவ்யா சேகர். கேபியின் கதைநாயகி தேர்வு என்றுமே தப்பிப் போவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நீருபித்துக் காட்டியவர் காவ்யா. கண்களே பாதி மொழி பேசிவிட, கோபம், குமுறல், தாயின் மீதான மறைத்து வைக்கப்பட்ட பாசம் என்று அத்தனை நவரசங்களையும் உடல் அசைவுகளிலேயே அழகாய் எடுத்துக் காட்டியிருப்பார் காவ்யா சேகர். இவர் கே.பாலசந்தரின் கண்டுபிடிப்பில் மற்றுமொரு பொக்கிஷம். 

சினிமா தாண்டி, டிவியிலும் லட்சியப் பெண்களைக் கதைகளில் வடித்த கே.பாலசந்தர் சாதனைப் படைக்கத் துடிக்கும் புதுமைப்பெண்களின்  நாயகர்!

-பா.விஜயலட்சுமி


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism