Published:Updated:

தெளியவைத்து தெளியவைத்து அடிப்பது தான் டக்கேஷிஸ் காஸ்டில் ஸ்டைல்! #takeshi'scastle

தெளியவைத்து தெளியவைத்து அடிப்பது தான் டக்கேஷிஸ் காஸ்டில் ஸ்டைல்! #takeshi'scastle
தெளியவைத்து தெளியவைத்து அடிப்பது தான் டக்கேஷிஸ் காஸ்டில் ஸ்டைல்! #takeshi'scastle

தெளியவைத்து தெளியவைத்து அடிப்பது தான் டக்கேஷிஸ் காஸ்டில் ஸ்டைல்! #takeshi'scastle

சிறுவயதில் நம்மை குலுங்கக் குலுங்க சிரிக்கவைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சி `டக்கேஷிஸ் காஸ்டில்'. பள்ளி முடிந்து சாயங்காலம் களைப்பாக வீடுதிரும்பிய நம்மை கலகலப்பூட்டிய இந்த நிகழ்ச்சியை, அப்போது குடும்பத்தோடு அமர்ந்து பார்த்தோம் ஞாபகம் இருக்கிறதா? அவை பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்...


மறுக்கா,மறுக்கா மறுஒளிபரப்பு செய்தாலும் மணிகணக்கில் நாம் உட்கார்ந்து பார்த்த `டக்கேஷிஸ் காஸ்டில்' நிகழ்ச்சிகள் அனைத்தும், ஜப்பானில் 1986-90 ஆண்டுகளிலேயே ஒளிபரப்பு செய்யபட்டவை. அதைத்தான் பல வருடங்களாக நாம் திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறோம்  ஓல்டா இருந்தாலும் கோல்டு...

பிரபல ஜப்பானிய நடிகரும், இயக்குநருமான டக்கேஷி கிட்டானோ இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்தியன் வெர்ஷனில் `கவுண்ட் டக்கெஷி' என்ற ஒரு கதாபாத்திரம் வருமே அது டக்கேஷி கிட்டானோவே தான். நிகழ்ச்சியின் கதைப்படி, அவர் தான் அந்த காஸ்டிலின் உரிமையாளரும், போட்டியாளர்களை எதிர்கொள்பவரும். ஓஹோ...

விசில் அடித்து போட்டியாளர்களை உசுப்பேற்றும் `ஜெனரல் லீ' யின் உண்மையான பெயர் ஹயாடோ டானி. இவரும் இவரது மனைவி கிக்கோ மட்ஸுவாகாவும் இணைந்து தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் காமெடி அள்ளும். எப்போதும் சிரித்த முகமாய் வலம் வந்து நம் மனம் கவர்ந்த ஜெனரல் லீக்கு வயது எழுபது ஆகிவிட்டது. ஜெனரல் லீ இப்போ தாத்தா லீ...

எல்லா நிலையையும் வெற்றிகரமாக கடந்தவர்களே 'ஷோ டவுனில்' டக்காஷியை எதிர்த்து சண்டையிட தகுதி பெறுவார்கள். 133 எபிஸோடுகள் ஓடிய டக்கேஷிஸ் காஸ்டில் நிகழ்ச்சியில் இதுவரை ஒன்பதே பேர் தான் டக்கேஷியை தோற்கடித்திருக்கிறார்கள். சூப்பரே...

நமக்கு நாமே பந்தை தட்டிவிட்டு பிடிக்கும் பால் கப்பிங், தங்க நிறப் பந்தைக் கையில் பிடித்துக்கொண்டு கயிற்று பாலத்தைக் கடக்கும் 'ப்ரிட்ஜ் பால்', கயிற்றில் சாகசம் செய்யும் டிராகன் லேக், வீடியோ கேமை கண் முன்னால் கொண்டு வரும் 'தி காண்ட்லட்', திக்கு தெரியாமல் சுற்ற வைக்கும் 'ஹனி கோம்ப் மேஸ்', கால் வைக்கும் இடமெல்லாம் கலவரம் செய்யும் 'ஸ்லிப்பிங் ஸ்டோன்', காளானை பிடித்துக்கொண்டு பறக்கும் 'மஸ்ரூம் ட்ரிப்', ஸ்பைடர்மேன் போல் ஒட்டிக்கொள்ளும் 'வெல்க்ரோ ஃபளை' என எல்லா டக்கேஷிஸ் காஸ்டிலின் எல்லா சவால்களுமே செம சுவாரஸ்யமானவை. இதுபோன்று கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட சவால்கள் இருக்கின்றன. ஆத்தி...

நம்மை வழிநடத்தும் ஜெனரல் லீ, மெகா சைஸ் கிண்ணத்தில் உட்காரவைத்து தண்ணீருக்குள் தள்ளிவிடும் சங்கு மற்றும் மங்கு, திடீரென நீருக்குள் இருந்து எழுந்து நம்மை பீதியாக்கும் மசனோரி, பார்வையிலேயே பயமுறுத்தும் தாடிக்காரம் அனிமல், ஒல்லி பெல்லி மிச்சிரு ஜோ, முகத்தில் கரியை பூசும் கிபாஜி என அத்தனை கதாபாத்திரங்களும் நம் மனம் கவர்ந்தவை. வெளிநாடுகளில் இந்த கதாபாத்திரங்களுக்கு ரசிகர் மன்றமே இருக்கிறது. சினிமாக்களிலும், வீடியோ கேம்களிலும் கூட இந்த கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சூப்பரே சூப்பரே...

இந்த ஜப்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி இந்தியா,ஆஸ்திரேலியா,ஸ்பெயின்,ஈரான் என இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் மிகப்பிரபலமடைந்தது. நம் ஊரில் டக்கேஷிஸ் காஸ்டில் பிரபலமடைய ஜாவித் ஜாஃப்ரியின் கலாய் கமென்டரியும் மிக முக்கியமான காரணி. ஆமாப்பே...  90ஸ் கிட்ஸ் எல்லோரும் கொடுத்துவெச்சவங்கய்யா...

-டப்பாவாலா

அடுத்த கட்டுரைக்கு