Published:Updated:

பைரஸியில் ஹிட் அடித்த டாப் 10 சீரியல்கள்!

பைரஸியில் ஹிட் அடித்த டாப் 10 சீரியல்கள்!
பைரஸியில் ஹிட் அடித்த டாப் 10 சீரியல்கள்!

பைரஸியில் ஹிட் அடித்த டாப் 10 சீரியல்கள்!

பைரஸி சினிமாவுக்கு மட்டும் கிடையாது, சீரியலுக்கும் கூட இருக்கிறது. சென்ற வருடம் ஒளிபரப்பான சீரியல்களில் எவை எல்லாம் திருட்டுத்தனமாக அதிகம் பார்க்கப்பட்டிருக்கிறது என தேடிப் பார்த்ததில் சிக்கிய லிஸ்ட் இது தான்.

10. த கிராண்ட் டூர்:

சென்ற வருடத்தின் இறுதியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல் இது. வெறும் 13 எபிசோடுகள் மட்டுமே உள்ள இந்த சீரியல் முழுக்க முழுக்க ட்ராவல் பற்றிய கதை. மூன்று நண்பர்கள் இணைந்து நான்கு கண்டங்களுக்கு பயணம் செய்வதும் இடையில் சில ரேஸுமாக நகரும். ரிச்சர்ட் போர்டர் எழுதிய இதை பில் சர்ச்வார்ட், ப்ரைன் க்ளைன், ராபின்சன் ஆகிய மூவர் இயக்கியிருந்தார்கள். 

9. சூட்ஸ்:

இது லீகல் ட்ராமா வகையைச் சேர்ந்தது. நியூயார்கில் இருக்கும் 'சட்ட ஆலோசனை நிறுவனத்தில்' நடக்கும் வழக்குகள், தீர்வுகள் தான் கதை. சட்டக்கல்லூரி மாணவர் மைக் ரோஸ், வழக்குரைஞர் ஹார்வி ஸ்பெக்டருடன் இணைந்து எப்படி ஒவ்வொரு வழக்கையும் முடிக்கிறார்கள் என்பது தான் ஆறு சீசன்களாக ஒளிபரப்பானது. 

8. லூசிஃபர்:

காமெடி, மிஸ்ட்ரி, போலீஸ், க்ரைம், ஹாரர் ஃபேண்டசி எல்லாமும் கலந்த சீரியல் இது. லூசிஃபர் மார்னிங்ஸ்டார் நாயகன். நரகத்தின் கடவுளாக இருந்து போர் அடித்துவிட, தன் பதவியைத் துறந்துவிட்டு பூமிக்கு வந்துவிடுகிறான். போலீஸ் ஆக வேலை செய்து கொண்டு, லக்ஸ் என்கிற நைட் க்ளப்பையும் நடத்துகிறான். லூசிஃபர் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளே இந்த சீரியல்.

7. வைகிங்ஸ்:

நோர்ஸ் இனத்தைச் சேர்ந்த விகிங்ஸ் பற்றிய வரலாற்று சீரியல் தான் வைகிங்ஸ். இந்த இனத்தில் தலைவனான ரக்னர் லோட்ப்ரோக் பற்றியும், அவன் வளர்ச்சி பற்றியும் கூறுவதாக இந்த சீரியல் நீளும். நான்காவது சீசன் மட்டும் இரண்டு பாகங்களாக 20 எபிசோட் பிரிக்கப்பட்டு ஒளிப்பரப்பாகியிருக்கிறது. விரைவில் இதன் அடுத்த பாகம் தொடங்க இருக்கிறது.

6. த பிக் பேங் தியரி:

சிட்காம் அதாவது சிட்சுவேஷன் காமெடி தான் இதன் ஜானர். சீரியல் வாசிகளிடம் மிகப் பிரபலமானது இந்த பிக் பேங் தியரி. ஒரே அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் ஐந்து பேரின் காமெடி கலாட்டாக்கள் தான் கதை. இதுவரை பத்து எபிசோடுகளைக் கடந்திருக்கும் இந்த சீரியல். சீக்கிரமே அடுத்த இரு பாகங்களை ஒளிப்பரப்ப இருக்கிறது. அதையாவது பைரஸில பார்க்காம, நேர்மையான ஆடியன்ஸா பாருங்க ஃப்ரெண்ட்ஸ்.

5. ஏரோ:

டிசி காமிக்ஸின் கதாபாத்திரமான க்ரீன் ஏரோவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சீரியல் தான் ஏரோ. ஆலிவர் குயின் ஐந்து வருட ஹோஸ்டில் தீவு வாசத்திலிருந்து திரும்பி தன் குடும்பத்துடன் இணைந்து குற்றங்களைத் தடுப்பதுடன், ஃப்ளாஷ் பேக்கில் தீவிலிருந்து எப்படி வந்தான் என்பதையும் சேர்த்து சொல்லும் சீரியல். 

4. த ஃப்ளாஷ்:

இதுவும் டிசி காமிக்ஸ் கதாபத்திரத்திலிருந்து உருவான சீரியல் தான். ஏரோ போல் அல்லாமல் ஃப்ளாஷ் கொஞ்சம் நமக்கு பரிச்சயம் ஆன சூப்பர் ஹீரோ தான். ஒளியின் வேகத்தை விட வேகமாக இயங்கக் கூடிய பவர் தான் ஃப்ளாஷுக்கு. கடைசியாக இதன் மூன்றாவது சீசன் ஒளிப்பரப்பான சமயத்தில் ஃபேஸ்புக்கில் அதிக மீம்ஸைக் கூட பார்த்திருக்க முடியும். இந்த சூப்பர் ஹீரோ சந்திக்கும் சூப்பர் பிரச்னைகளும், சூப்பரோ சூப்பர் வில்லன்களும் தான் களம்.

3. வெஸ்ட்வேர்ல்ட்:

1973-ல் மைகேல் க்ரிச்டோன் இயக்கத்தில் வெளியான வெஸ்ட்வேர்ல்ட் படத்தைத் தழுவி உருக்கப்பட்ட சீரியல் தான் இது. முதலில் இதை எழுத்தாளரும் மனைவியுமான லிசா ஜாயுடன் இணைந்து உருவாக்கியவர் ஜோனதன் நோலன் (க்ரிஸ்டஃபர் நோலனின் சகோதரர்). இதன் கதை சைன்ஸ்பிக்‌ஷன் ஜானரைச் சேர்ந்தது. வைல்ட் வெஸ்ட் என்ற பார்க்கிற்கு உள்ளே நடக்கும் ஆக்‌ஷன் அட்வென்சர்கள் தான் கதை.

2. தி வாக்கிங் டெட்:

ராபர்ட் க்ரிக்மேன் எழுதிய தி வாக்கிங் டெட் காமிக் சீரிசைத் தழுவி அதே பெயரில் உருவான சீரியல் தான் இது. ஸோம்பி ஜானர் வகையறா. உலகமே ஸோம்பிக்களின் ஆதிக்கத்தில் இருக்க அதனுடன் சண்டை போடும் சில காவலர்கள் பற்றிய கதை. 

1. கேம் ஆஃப் த்ரோன்ஸ்:

இறுதியாக, அது தான் அதே தான். ஜி.ஓ.டி என்கிற கேம் ஆஃப் த்ரோன்ஸ் தான் முதல் இடத்தில் இருக்கிறது. ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்டின் எழுதிய ஃபேன்டசி நாவலை அடிப்படையாக கொண்ட சீரியல். இதுவரை ஆறு சீசன்களைத் தாண்டியிருக்கும் சீரியலின் ஏழாவது பாகம் ஜூலை 16ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. 

நம்ம ஊர்ல எல்லாரும் டிவியிலே சீரியலைப் பார்த்து பைரஸிய ஒழிச்சிருக்காங்கனு நினைக்கும்போது பெருமையா இருக்கு. சீரியலைக் கண்டுபிடிச்ச நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல!

அடுத்த கட்டுரைக்கு