Published:Updated:

''டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு அழுவேன்'' - என்ன சொல்கிறார் டிடி? #VikatanExclusive

''டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு அழுவேன்'' - என்ன சொல்கிறார் டிடி? #VikatanExclusive
''டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு அழுவேன்'' - என்ன சொல்கிறார் டிடி? #VikatanExclusive

''டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு அழுவேன்'' - என்ன சொல்கிறார் டிடி? #VikatanExclusive

‘டாப் சின்னத்திரை ஸ்டார்கள்’ என்று லிஸ்ட் போட்டால், தவிர்க்கவே முடியாத நபர்... டிடி!  சர்ச்சைகளைத் தாண்டி, திவ்யதர்ஷினியிடம் பேச எத்தனையோ நல்ல விஷயங்களும் இருக்கின்றன. 

'அன்புடன் டிடி' நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மூலம் நிதிஉதவி பெற்று, தான்  படிக்க வைக்கிற மாணவரை அறிமுகப்படுத்தினார் டிடி. அதே மாணவரின் தம்பியைப் படிக்க வைப்பதும் டிடிதான். வாரம் ஒருமுறை ஆதரவற்ற முதியோர்களுக்குச் சாப்பாடு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வருவதும் டிடியின் வழக்கம். அதைப் பற்றியெல்லாம் கேட்டால் அநியாயத்துக்குக் கூச்சப்படுகிறார் டிடி. ''இதையெல்லாம் வெளியில சொல்லிக்கணுமா? வேணாமே ப்ளீஸ்...'' என்கிற கோரிக்கையுடன் பேட்டிக்குத் தயாரானார்.

''எக்ஸாம் ரிசல்ட்டுக்குக் கூட இப்படிப் பயந்திருக்க மாட்டேன். 'அன்புடன் டிடி' ஒளிபரப்பாகிற அன்னைக்கு, செம டென்ஷன். புரோகிராமைப் பார்க்காம தூங்கிடலாமானுகூட நினைச்சேன். அப்புறம் மனசு கேட்காம பார்க்க ஆரம்பிச்சேன். 'நல்லாத்தான் பண்ணியிருக்கேன்'னு தோணிச்சு. தெரிஞ்ச, தெரியாதவங்க பலரிடம் இருந்தும் 'ஷோ சூப்பரா இருக்கு'னு பாராட்டுகள் வந்தது. அப்புறம்தான் நிம்மதியானேன்'' டிரேட்மார்க் சிரிப்புடன் ஆரம்பமாகிறது டிடியின் பேச்சு. 

''தனிப்பட்ட முறையில என்கிட்ட நல்லாப் பேசுற பிரபலங்களை 'என் ஷோவுக்கு வாங்க'னு நான் கூப்பிடவே மாட்டேன். அந்த நட்பையோ செல்வாக்கையோ பயன்படுத்தி யாரையும் கூப்பிடவும் நினைச்சதில்லை. அதனாலேயே என் ஷோவுக்கு வரும் பிரபலங்களுக்கு என் மேல நிறைய நம்பிக்கை இருக்கு. என் ஷோவுக்கு வரும் கெஸ்ட், 'நீ என்ன வேணா கேளும்மா'னு சொல்வாங்க.  அந்த நம்பிக்கையைக் காப்பாத்தவேண்டிய பொறுப்பு என்கிட்ட இருக்கு. என் வீட்டுக்கு ஒருத்தங்க வந்தா நான் எப்படிக் கவனிச்சுப்பேனோ, அதே அக்கறை ஷோவுல இருக்கும். என் ஷோவைப் பார்த்துட்டு எத்தனையோ பேர், 'உங்களைப் பார்த்துட்டுதான் எப்படி இன்டர்வியூ பண்ணணும்ங்கிறதையே கத்துக்கிட்டோம்'னு சொல்றவங்க இருக்காங்க. என்னையும் என் வேலைகளையும் நிறைய பேர் கவனிச்சிட்டிருக்காங்க... சந்தோஷமா இருக்கு!'' என்றவரிடம், சில கேள்விகள். 

''சிரித்துக்கொண்டே இருப்பதும் உடன் இருப்பவர்களைக் கலகலப்பாக்குவதும் டிடிக்கு எப்படிக் கைவந்தது?''

''அது இயல்பா எனக்குள்ள வளர்ந்த விஷயம்னுதான் நினைக்கிறேன். நான் இருக்கிற இடத்துல ரொம்ப இறுக்கமான சூழல் நிலவறதை நான் அனுமதிக்க மாட்டேன். சின்ன வயசுலேருந்தே அது எனக்குப் பிடிக்காது. என்னைக் கிண்டல் பண்ணியாவது அந்தச் சூழலை லேசாக்கிடுவேன். பிளான் பண்ணி வர்ற விஷயமில்லை காமெடி.''

'' 'பவர் பாண்டி'யில நடிச்சிருக்கீங்க. இயக்குநர் தனுஷ் என்ன சொல்றார்?"

''என்னை நடிக்கச் சொல்லும்போதே 'பொண்ணு நிறைய டேக் எடுக்கப்போகுது... குழந்தைக்கு ஒழுங்கா நடிப்பு சொல்லித்தரணும்'னு நினைச்சிருப்பார். ஆனா நான் டேக் வாங்காம முடிச்சிட்டேன். என்கூட அந்த சீன்ல இருந்தவங்க ரேவதி மேடம். அவங்களுக்கு நான் அட்வைஸ் பண்ற மாதிரியான சீன். 'ரொம்ப நல்லா நடிச்சிருந்தீங்க.. ஈஸியா பண்ணிட்டீங்க'னு  தனுஷ் சார் அடுத்த நாளே ட்வீட் பண்ணியிருந்தார். தனுஷ் சார் மாதிரி ஒருத்தர்கிட்டருந்து இப்படியொரு வாய்ப்பு வரும்போது வேணாம்னு சொல்ல யாருக்குத்தான் மனசு வரும்?''

''உங்களுக்கு எதிரான விமர்சனங்கள்?"

''வருத்தமாதான் இருக்கும். ஆனா வருத்தப்படுறது வேற டிபார்ட்மென்ட்டுனு நினைச்சுக்கிட்டு வேலையைப் பார்க்கப் போயிடுவேன். வருத்தமே படமாட்டியானு கேட்டீங்கன்னா, எல்லாத்துக்கும் வருத்தப்படுவேன்னு சொல்வேன். வருத்தப்படுறதைவிட வேலை செய்றது முக்கியம். தவிர, என்னைக் காயப்படுத்துற விஷயங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன். இந்த விஷயத்துக்கு அரை மணிநேரம் சோகமா இருப்போம். இந்த விஷயத்துக்கு ரெண்டு நாள் சோகமா இருப்போம்னு எனக்கு நானே டைம் ஃபிக்ஸ் பண்ணி, அழுது முடிச்சிடுவேன். பிறகு, அதுல இருந்து வெளியே வந்துடுவேன்!''

''சுச்சிலீக்ஸ்...?"

'தயவுசெஞ்சு அதைப்பத்தி பேசவேணாமே ப்ளீஸ்!''

(டிடியின் வேறு சில கேள்விகள் அடங்கிய ஆனந்த விகடன் பேட்டியைப் படிக்க இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்)

- ஆர்.வைதேகி

அடுத்த கட்டுரைக்கு