Published:Updated:

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்!

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்!
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்!

இந்தியில ரொம்ப பாப்புலராக ஓடிக்கிட்டு இருந்த 'பிக்பாஸ்' நிகழ்ச்சி சில மாறுதல்களோட தமிழ்ல வருதாம். தொகுத்து வழங்குறது வேற யாரு, நம்ம கமல்ஹாசன் தான். சரி, சும்மாவே அட்ராசிட்டிகளுக்கு பஞ்சம் வைக்காத கமல், அந்த பிக்பாஸை நடத்துனா  என்னென்ன அட்ராசிட்டீஸ்லாம் நடக்கும்னு சும்மா ஒரு கற்பனை பண்ணிப்பார்க்கலாமா பாஸு...

* முதல்வேலையாக 'இதுவரைக்கும் தன்னோட படங்கள்லதான் எதாவது புதுசு புதுசாக இறக்கிவிட்டு எல்லாருக்கும் தண்ணி காட்டிட்டு இருந்தாரு. இப்பப்பாருங்க டி.வி ஷோ கூட தமிழ்நாட்டுல பலபேருக்கு அறிமுகமே இல்லாத ஒரு புது நிகழ்ச்சியைதான் பண்ணப்போறாரு. தலைவர் ஆல்வேய்ஸ் கெத்துடாவ்வ்வ்... கமல்டாவ்வ்வ்... ஆண்டவர்டாவ்வ்வ்...' என பூரித்து அவரது ரசிகர் படை சிலாகித்து இன்ட்ரோக்கள் கொடுத்துக்கொண்டிருக்கும்.

* 'ஆஹா இதுக்கு ஆப்போசிட்டா ஏதாவது சோசியல் மீடியாவுல கம்பு சுத்தியே ஆகணுமே' என கை கால்கள் பரபரக்கும் எதிரணி, 'ஜியோ பேக்' புண்ணியத்தில் யூ-டியூபில் அவசர அவசரமாகப் போயி இந்தி பிக்பாஸை லைட்டாக பார்த்துவைத்துக்கொள்ளும். அப்புறம் என்ன, 'ரொம்ப ஆடாதீங்க பிரண்ட்ஸ், இது ஒண்ணும் புதுசுலாம் இல்லை, நாங்களாம் பல வருசமா (!) பார்த்து பார்த்து அலுத்துப்போன இந்தி ப்ரோக்ராம்தான் இது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்' என வம்படியாக வந்து பந்தா காட்டி, வாலண்டியராக வண்டியில் ஏறி கம்பு சுத்துவார்கள். 

* அதுலாம் கிடக்கட்டும் நாம மொதல்ல கமல் மேட்டருக்கு வருவோம். நிகழ்ச்சியைத் தொடங்குற கமல், 'பிக்பாஸ்' நிகழ்ச்சின்னா என்னங்கிறது இருக்கட்டும். மொதல்ல 'பிக்பாஸ்'னா என்னன்னு தெரியுமா பாஸு..?' என பிக்பாஸுக்கே  நீ...ண்ட விளக்கம் கொடுப்பார். ரெஃபரன்ஸ் சொல்கிறேன் என சங்ககாலத்துக்குள் புகுந்து ஷங்கர் பட காலத்துக்கு வெளியே வந்து, திரும்ப சல்மான் கான் காலத்துக்கு உள்ளே போயி பஸ் ஏறி, அந்த விளக்கத்தை மட்டுமே 7 எபிஸோடுகளுக்குப் பேசி  கதறவிடவும் வாய்ப்பிருக்கிறது மக்களே.

* சும்மாவே கமலுடன் ட்விட்டரில் அடித்துக்கொள்ளும் சுப்ரமணியசாமி சும்மா இருப்பாரா என்ன? கமல் நடத்தும் ப்ரோக்ராமை பார்க்காமலே கூட 'இந்தியில ரொம்ப நல்லா இருக்கும் அந்த ப்ரோக்ராம். இங்க இவர்கிட்டலாம் கொடுத்தா விளங்குனமாதிரிதான்' என கொளுத்திப்போட, பதிலுக்கு செந்தமிழிலும், சிவப்பு ஆங்கிலத்திலும் வந்து கமல் அவருக்கு பதில் போட்டு தெறிக்கவிட ஒரே கூத்துகளும், கும்மாளமுமாக இருக்கும். நிகழ்ச்சி பாப்புலர் ஆவதற்குள் இவர்கள் போடும் மல்லுக்கட்டுகளும், மண்டை உடைப்புகளும் செம பாப்புலர் ஆகிவிடும்.

* அப்புறம் நிகழ்ச்சியில நடக்கப்போற காமெடியைலாம் சொல்லி வேற தெரியணுமா என்ன. சும்மாவே கமல் பேசுறது புரியமாட்டேங்குதுனு பலபேர் புலம்பிட்டு இருப்பாங்க. கமலும், கன்டெஸ்டன்டுகளும் பேசிக்கிறப்போ என்னலாம் கூத்துகள் நடக்கப்போகுதுங்கிறதுதான் தெரியலை. பழக்கதோசத்துல இவர் பாட்டுக்கு ஏதாவது ஒரு கேள்விக்கு சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச்சென்று 'யாதும் யாதும் யாராகியரோ' லெவல் தமிழில் இருந்து ஏதாவது கேட்க , 'தமிழ் ப்ரோக்ராம்னுதான சொன்னாங்க. இது என்னது 'காளகேயர்' காலத்து லாங்க்வேஜா இருக்கே இதை என்னன்னு புரிஞ்சு, என்னன்னு பதில் சொல்றது' என கன்டஸ்டன்டுகள் விழி பிதுங்கி நிக்கவும் வாய்ப்பிருக்குது பாஸ்.

* 'பெரிய திரையிலேயே நான் சின்ன ஆள்தான்;  இந்தச் சின்னத்திரையில் இன்னும் நான்  சின்ன ஆள்தான்' என அவருக்கே உண்டான வார்த்தை ஜாலங்களிலும் பஞ்ச்களை விட்டு விளையாடவும் வாய்ப்பிருக்கிறது மக்களே. அதையே கட், காப்பி அண்ட் பேஸ்ட் பண்ணி டி.விகளில் ப்ரோமாவாகபோட்டு பல்ஸ் ஏற்றி கண்கலங்க வைப்பாங்கங்கிறது தனிக்கதை.

* அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். மொத்தம் 100 நாட்கள் 100 எபிசோட்கள் ஓடக்கூடியது  இந்த ப்ரோக்ராம். தினமும் ராத்திரி ஒளிபரப்பப்பட்டு மறுநாள் காலையில அதை ரீ டெலிகாஸ்ட் பண்ணுவாங்களாம். முக்கியமான விஷயத்துல இன்னொரு முக்கியமான விஷயம் மக்களே. இந்த 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை நடத்துறது 'விஜய் டிவி'யாம். ஹ்ம்ம்.  'கும்கி' படத்தையே வாரத்துல அஞ்சு நாளைக்குப் போட்டு 'வச்சு' செய்யிறவங்க இதை என்ன பாடு படுத்தப்போறாங்களோன்னு நினைக்கும்போதுதான்....

- ஜெ.வி.பிரவீன்குமார்