Published:Updated:

"என்னை இம்ப்ரஸ் பண்ண நானே டிப்ஸ் தர்றேன்” - வி.ஜே மணிமேகலை கலகல

"என்னை இம்ப்ரஸ் பண்ண நானே டிப்ஸ் தர்றேன்” - வி.ஜே மணிமேகலை கலகல
"என்னை இம்ப்ரஸ் பண்ண நானே டிப்ஸ் தர்றேன்” - வி.ஜே மணிமேகலை கலகல

"என்னை இம்ப்ரஸ் பண்ண நானே டிப்ஸ் தர்றேன்” - வி.ஜே மணிமேகலை கலகல

நேயர்களின் கலாய்களுக்கு அசால்ட்டாகக் கவுன்டர்களை விளாசும் செம க்யூட் விஜே மணிமேகலை. சன் மியூசிக்கில் இவரின் ஷோவிற்கு அத்தனை க்ரேஸ். ஜாலிப் பேச்சும், அரட்டையுமாக நிகழ்ச்சியில் பார்ப்பது போலவே, அதே எனர்ஜியோடுதான் வீட்டிலும் இருக்கிறார். அவரின் வீட்டிற்குள் நுழைந்ததும் முதலில் என்னை வரவேற்றது பப்பு. மணிமேகலை வளர்க்கும் பச்சைக்கிளி அது. கீச்சிடும் குரலில் நம்மை வசீகரிக்கிறது அந்தக் கிளி. மணிமேகலையிடம் எந்தக் கேள்விக் கேட்டாலும் முதல் பதில் பப்புவிடமிருந்து தான் வருகிறது. மணிமேகலையுடனும் பப்புவுடனும் ஒரு ஜாலி சேட். 

மீடியா என்ட்ரி? 

நேட்டிவ் கோயம்புத்தூர். சின்ன வயசுலயே சென்னையில செட்டிலாகிட்டோம்.  மீனாட்சி காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும் போது, தோழிகளோட சேர்ந்து சும்மாக்காச்சி விஜே வேலைக்கு விண்ணப்பிச்சேன்.  ஆனா நான் மட்டும் தான் செலக்ட்டானேன். கெத்து மொமன்டோட படிக்கும் போதே விஜே-வானதுனால காலேஜ்ல செம ஃபேமஸாகிட்டேன். 

வீட்டுல என்ன சொன்னாங்க? 

விஜே-வாக போறேன்னு வீட்டுல சொன்னபோது, முதல்ல எதிர்ப்புதான். படிப்பு ஒழுங்கா வரமாட்டேங்குது. இதுல விஜே-வாகிட்டா  படிப்பை மறந்துடுவேன்னு 144 தடை உத்தரவு போட்டாங்க. நானும் பதிலுக்கு ஒழுங்கா படிக்க மாட்டேன் பரவாயில்லையானு ப்ளாக்மெயில் பண்ணதுனால தான் விஜே வேலைக்கே அனுமதிச்சாங்க. கல்லூரி முதல் வருடத்தில் தொடங்கி இன்னைக்கு வரைக்கும் சன்மியூசிக்ல மட்டும்தான் விஜே. 

உங்க ஃபேவரைட் ஷோ? 

சன் மியூசிக்ல ‘ப்ளாக் ஷோ’ பார்த்திருக்கீங்களா? பொதுவா விஜே-ன்னா நேயர்களோடு போன்ல பேசிணும். ஆனா ‘ப்ளாக் ஷோ’ கொஞ்சம் வித்தியாசம்.  பேய் இருக்குற இடத்துக்கு இரவு நேரத்துல போய் ஷோ பண்ணனும். செம த்ரில்லிங்கா இருக்குங்கிறதுனால ஆல் டைம் ஃபேவரைட் நிகழ்ச்சி. 

அப்போ நடந்த மறக்கமுடியாத நிகழ்வு? 

இரவு 1 மணி, பேய் இருக்குற இடத்துக்கு ஒட்டுமொத்த யூனிட்டோட போய்ட்டோம். நான்  கொஞ்சம் பயப்படுவேங்கிறதுனால வழக்கமா எங்க டீம் எப்போதுமே என்னை பயங்காட்டுவாங்க. அன்னைக்கி ஷோ நேரத்துல கால் பிடிச்சி இழுக்குறமாதிரி இருந்துச்சு. நிஜமாவே பேய், பிசாசு, இரத்தகாட்டேரி, மோகினிலாம் ஒண்ணு கூடிவந்துடுச்சுன்னு நினைச்சு பயந்து அழுதுட்டேன். ஆனா என்ன வச்சி காமெடி பண்ணிருக்காங்கன்னு அப்புறம் தான் தெரியும். நான் அழுததையும் படமாக்கி, நிகழ்ச்சிக்குப் புரோமோவா பயன்படுத்தினாங்க. இந்தமாதிரி பல்பு வாங்கும் போது அசிங்கமாதான் இருக்கும். அப்புறம் பழகிடும். 

மணிமேகலை சினிமாவுக்கு வரணும்னு உங்க ரசிகர்கள் ஆசைப்படுறாங்களே? 

நான் தொகுப்பாளினியாகுறதுக்கு வீட்டில் போட்டமுதல் கண்டிஷன் சினிமாவுக்கு போகக்கூடாதுங்கிறது தான். ஒன்லி விஜேதான். சீரியல், சினிமானு போகலாமேனு யோசிச்சாலே வீட்டுல சேர்க்கமாட்டாங்க. அதையும் தாண்டி நிறைய எதிர்கால திட்டங்கள் இருக்கு.

ஏன் வீஜே -லைஃப் போர் அடிச்சிடுச்சா? 

ஆங்கரிங் வேலையெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் பண்ணமுடியும்.  என்னுடைய வயசுக்கு இன்னும் ஐந்து வருடம் கூடுதலா விஜே-வா இருக்கலாம். வாழ்நாள் முழுவதும் விஜே-வா வேலை செய்யவும் முடியாது. அடுத்தக் கட்டமா சொந்தமா தொழில் தொடங்கணுங்கிறது தான் என் ஆசை. 

தி பெஸ்ட் ‘கலாய் மொமன்ட்’ ? 

நிகழ்ச்சிக்கு லேடி ஒருத்தங்க போன் பண்ணி, ‘ என் பையனுக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கோம். உன்ன மாதிரி பொண்ணா தான் தேடிக்கிட்டு இருக்கோம். நீ என்ன படிச்சிருக்க, அப்பா, அம்மாட்ட பேசணுமே’னு நேரலையில் கேக்குறாங்க. அப்போ நான் கல்லூரி படிச்சிட்டு இருந்த நேரம். என்ன ரியாக்ட் பண்ணணும்னே தெரியலை. இந்தமாதிரி பல விசித்திர நேயர்கள் போன் பண்ணுவாங்க. நேயர்களிடம் பல்பு வாங்குறதும் ஜாலிதான் பாஸ். 

மறக்கமுடியாத டிவி நேர்காணல் யாருடன்? 

சன் மியூசிக் சேனலோட எட்டாவது வருட கொண்டாட்டத்துக்காக கமல்ஹாசன் சாரைப் பேட்டி எடுத்தேன்.  எனக்கும், எங்க சேனலுக்கும் மறக்கமுடியாத நாள் அது. ஒரு கவிதை சொல்லுங்க சார்னு கேட்கவும், வீட்டிக்குள்ள போய் டைரி எடுத்துட்டு வந்தார். டைரி முழுக்க கவிதை தான்.  கமல் சார் எப்பவுமே க்ரேட் தான். 

உங்களை எப்படி இம்ப்ரஸ் பண்றது? 

என்னை இம்ப்ரஸ் பண்ண நானே டிப்ஸ் தர்றதா.... சரி.. சொல்றேன். டான்ஸ்னா ரொம்ப பிடிக்கும். யார் டான்ஸ் ஆடுனாலும் ஈஸியா  இம்ப்ரஸ்ஸாகிடுவேன். நான் கல்யாணம் பண்ணிக்கப்போற மாப்பிள்ளைக்கு நல்லா டான்ஸ் ஆடத்தெரிஞ்சிருக்கணும். அப்போ தான் கல்யாணம் பண்ணிப்பேன். 

அடுத்த கட்டுரைக்கு