Election bannerElection banner
Published:Updated:

'லவ் சொல்லிட்டு, கேட்டானே ஒரு கேள்வி..!’ - காதல் கதை சொல்கிறார் ஃபரீனா ஆசாத்

'லவ் சொல்லிட்டு, கேட்டானே ஒரு கேள்வி..!’ - காதல் கதை சொல்கிறார் ஃபரீனா ஆசாத்
'லவ் சொல்லிட்டு, கேட்டானே ஒரு கேள்வி..!’ - காதல் கதை சொல்கிறார் ஃபரீனா ஆசாத்

'லவ் சொல்லிட்டு, கேட்டானே ஒரு கேள்வி..!’ - காதல் கதை சொல்கிறார் ஃபரீனா ஆசாத்

ன் டி.வி 'கிச்சன் கலாட்டா' நிகழ்ச்சியில் சமையல் வகைகளை வரிசைகட்டி வர்ணிக்கும் ஃபரீனா அசாத், தனக்கான ரசிகர்களையும் வரிசைகட்டி நிற்கவைத்த பெருமைக்குரியவர். தற்போது 'புதுப்படம் எப்படி இருக்கு' நிகழ்ச்சியை வி.ஜே மணிமேகலையுடன் இணைந்து தொகுத்து வழங்கிவருகிறார். சமீபத்தில் தன்னுடைய முகநூலில் 'காட் என்கேஜ்டு' என்று ஸ்டேட்டஸ் தட்டிய கன்னக்குழி அழகியை ஃபோனில் தொடர்பு கொண்டோம். '' இன்னும் மூணு மாசத்துல மேரேஜ்" என்று வெட்கத்தோடு சிரிக்க சிரிக்கப் பேசினார் ஃபரீனா ஆசாத். 

''வாழ்த்துகள்.. இந்தச் சின்ன வயசுல கல்யாணமா?'' 

''ஹய்யோ.. கலாய்க்காதீங்க. எல்லாம் கல்யாணம் ஆகுற வயசுதான். சரியான நேரத்துல காதல் வயப்பட்டுட்டேன். அதனால கல்யாண காலத்தையும் சீக்கிரமா முடிவு பண்ணிட்டோம்.''

''காதல் கல்யாணமா... அவரைப் பற்றி?'' 

''லவ் கம் அரேஜ்டு மேரேஜ். கடந்த வியாழக்கிழமைதான் நிச்சயதார்த்தம் முடிஞ்சது. அவன்(!) பேர் ரஹ்மான். பிராட் மைண்ட் பெர்சனாலிட்டி. எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். நாங்க இரண்டு பேரும் காதலுக்குள்ள தொபுகட்டீர்னு விழுந்தை எல்லாம் கதையா எழுதி சினிமா எடுக்கலாம்.. அப்படி ஒரு ஃபீல் இருந்தது.''

''அப்படி என்ன கதை சொல்லுங்க?'' 

''ரஹ்மான் சன் டி.வி புரோகிராம் எடிட்டரா இருக்கான். கூடவே, வெளியில விளம்பரப் படங்களும் எடுத்துட்டு இருக்கான். நானும் சன் டி.வி வி.ஜேங்கிறதுனால ஹலோ, ஹாய்னு பேசிக்கிறது உண்டு. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னாடி, ஒரு விளம்பர ஷூட்டிங்கில் இருந்தப்போ ஸ்கை பேக்கிரவுண்ட் ஷாட் எடுத்துட்டு இருந்தான். அப்போ பயபுள்ளைக்கு என்ன தோணுச்சோ தெரியல, என் மேல திடீர்னு ஒரு பிரியம் வந்திடுச்சு. அதுல இருந்து என்னை 'ஹெவன் ஏஞ்சல்'னு சொல்லிட்டு இருப்பான். அப்பவே, 'இவனுக்கு என்னாச்சு... ஏன் இப்படி பேசுறான்'னு தோணுச்சு. ஆனாலும் ஒண்ணுமே தெரியாத மாதிரி காட்டிக்கிட்டேன். அன்னைக்கு மதியம் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டிட்டிருந்தோம். அப்போ என்கூட இருந்தவங்க 'ரஹ்மான் ஜி வருகிறார்'னு சொன்னாங்க. எனக்கு என்ன ஆச்சுனு தெர்ல.. திடீர்னு ஒரு பதற்றம். 'மாப்பிள்ளை வர்றார்’னு அம்மா சொல்ற மாதிரி கேட்டுச்சு. 

அவன் தூரத்துல வரும் போது பார்த்தேன். அந்த நிமிஷம் 'இனி அவன்தான் உனக்கு எல்லாம்னு உள்ளுணர்வு சொல்லுச்சு. அப்புறம் வந்து உட்கார்ந்து சாப்பிட்டான். எல்லாரும் கிளம்பினதுக்குப் பிறகு, 'உன்ன எனக்குப் பிடிச்சிருக்கு. நீ என்னோட மனைவியா வந்தா என் லைஃப் அழகா இருக்கும்னு நினைக்கிறேன்'னு லவ்வ அழகா புரபோஸ் பண்ணினான். நான் சிரிச்சுட்டு எதுவும் சொல்லாம கைகுலுக்கிட்டு 'கிளம்புறேன்'னு சொன்னேன். அவன் என் கையை விடாம கேட்டானே ஒரு கேள்வி, 'அவ்வளவுதானா.. வேற ஒண்ணுமில்லியா'ன்னு சினிமா ஸ்டைல்ல கேட்டான். 'வேற ஒண்ணுமில்லை.. யோசிச்சு சொல்றேன்'னு சொல்லிட்டுக் கிளம்பிட்டேன். கிட்டத்தட்ட மூணு வாரம் எந்தப் பதிலும் அவனுக்குச் சொல்லலை. அதிகமா பேசவும் இல்ல.''

''அப்புறம் எப்படி ஓ.கே சொன்னீங்க?'' 

''அவன் என்கிட்ட லவ் புரபோஸ் பண்ணின அன்னிக்கு வீட்டுக்குப் போனதும், ரூம் கதவை சாத்திட்டு, 'ஒன்றா இரண்டா ஆசைகள்', 'சிநேகிதனே..'னு ரொமான்டிக் பாட்டா போட்டுக் கேட்டுட்டு செம்ம ஆட்டம் போட்டேன். ரூமை விட்டு வெளிய வரும்போது சமத்துப் பொண்ணா அப்பா அம்மாகிட்ட விஷயத்தைச் சொன்னேன். வீட்ல இருக்கவங்களும் அவனைப் பத்தி விசாரிச்சிட்டு ஓ.கே சொல்லிட்டாங்க. என்ன இருந்தாலும் உடனே போய் ஓ.கேனு சொல்லக்கூடாதுல... அதனால, மூணு வாரம் கழிச்சுப் போய் 'எனக்கும் உன்னப் பிடிச்சிருக்கு'னு சொன்னேன்.''

''அவர் உங்களுக்கு வாங்கிக் கொடுத்த முதல் கிஃப்ட்?'' 

''அதைச் சொன்னா சிரிப்பீங்க... எனக்குச் செருப்பு வாங்க வேண்டியிருந்தது. அதுக்காக ஷாப்பிங் போயிருந்தேன். அவனும் என்கூட வந்திருந்தான். நான் எனக்குப் பிடிச்சமாதிரி செருப்பு வாங்கினேன். பில் கொடுக்கப் போகும்போது, நான்தான் கொடுப்பேனு சொல்லிக் கொடுத்துட்டான். அதனால அதுதான் அவன் வாங்கித் தந்த முதல் கிஃப்ட் என்னைப் பொறுத்தவரைக்கும். ஆரம்பமே அசத்தலா செருப்புல ஆரம்பிச்சிருக்கு.. சோ சேட்ல?'. மத்தபடி ஐபாகோ ஐஸ்கிரீம்னா எனக்கு உயிர். எங்கள அங்க அடிக்கடி பார்க்கலாம்''. 

''நீங்க இரண்டு பேரும் சேர்ந்து எந்த இடத்துக்கு முதல்ல போகணும்னு யோசிச்சு வச்சிருக்கீங்க?'' 

''எங்க இரண்டு பேருக்கும் ஒரு பெரிய ஆசை. அந்த ஆசை அவன்கிட்ட இருந்துதான் வந்தது. ஊட்டி மலைமேல இருக்கிற சூசைட் பாயின்ட் உச்சியில நின்னு 'ஓ' னு கத்தணும். சத்தியமா இது என்னோட ஐடியா இல்லங்க. அவனோட பிளான். எனக்குப் பிடிச்சிருந்ததால ஓ.கே சொல்லியிருக்கேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஒருநாள் ஊட்டி போயிட்டு வரணும். கல்யாணத்துப் பிறகும் ஒரு பிளான் இருக்கு. அது எங்க பேமிலிக்குத் தெரியாது. அதனால அது சர்ப்ரைஸாகவே இருக்கட்டும்.''

''ரஹ்மான் வீட்டார் எப்படி?'' 

''அவனோட அப்பா மட்டும்தான் இருக்கார். அம்மா இறந்துட்டாங்க. மத்தபடி அவங்க வீட்ல எல்லாருமே அவ்வளவு ஜாலியான ஆட்கள். அவனை மாதிரியே அவரோட அப்பாவும் நல்ல பிராட் மைண்ட். என் மருமகளுக்குப் பொட்டு வச்சா அழகா இருக்கு. 'இந்த டிரெஸ் நல்லா இருக்கு'ன்னு அடிக்கடி பாராட்டிட்டு இருப்பார். குடும்பத்தோட எல்லாரும் உட்கார்ந்து என்னோட ஷோவை பார்ப்பாங்க. இன்னும் சொல்லப்போனா, நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமா எங்க வாழ்க்கை இருக்கும்னு தீர்க்கமா சொல்வேன்'' என்கிறார் ஃபரீனா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு