Published:Updated:

இது சீரியல் புதுவரவு ஹீரோயின்களின் பயோடேட்டா!

இது சீரியல் புதுவரவு ஹீரோயின்களின் பயோடேட்டா!
இது சீரியல் புதுவரவு ஹீரோயின்களின் பயோடேட்டா!

இது சீரியல் புதுவரவு ஹீரோயின்களின் பயோடேட்டா!

சின்னத்திரையில் இது புதுவரவு ஹீரோயின்களின் அடைமழைக்காலம். ஒருபக்கம் புதுப்புது சீரியல்களின் வரவு ரசிகர்களைக் குஷிப்படுத்துகிறது என்றால் மற்றொரு பக்கம் அந்த தொடர்களில் நடிக்க வருகிற கதைநாயகிகளும் புத்தம்புது வரவாகவே இருக்கின்றனர். சேனல்களுக்கிடையேயான இந்த அழகுப் புயல்களின் வருகைப் போட்டியில், ரசிகர்களுக்குத்தான் ஏக குழப்பம். ஹீரோயின்களின் ரீல் பெயர் தெரியும், ரியல் பெயரையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கறோமே என்பவர்களுக்காக இந்த சீரியல் ஹீரோயின்கள் பயோடேட்டா.

நந்தினி, கங்கா:

“நந்தினி” கங்காவுக்கு அப்பா, அம்மா வைச்ச பெயர் நித்யா. அப்பாவோட பெயரும் கூடவே ஒட்டிக்க பொண்ணை எல்லாரும் நித்யா ராம்-னு கூப்பிடறாங்க. கன்னட நடிகை ரக்‌ஷிதா ராம், நித்யாவின் சொந்த சகோதரி. இந்த சாண்டல்வுட் தேவதையின் அழகு சீக்ரெட் கிளாஸிக்கல் டான்ஸ். அந்தளவுக்கு ரசனையைப் பிழிஞ்சு, சுழண்டு சுழண்டு பரதநாட்டியம் ஆடறதில் நித்யா கில்லி. படிச்சது பயோடெக்னாலஜி. திருமணத்திற்கு பிறகு நடிக்க வந்தும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அழகுப் பொண்ணு. அன்பான கணவர் வினோத் கவுடா, நித்யாக்கு ஃபுல் சப்போர்ட். வெள்ளித்திரைக்கு ’முடு மனசே’  திரைப்படம் கொடுத்த கிப்ட் கேர்ள் நித்யா ராம். விஜய் டிவியின் ‘அவள்’ சீரியல் ஹீரோயினாக தமிழில் ஏற்கெனவே அறிமுகம் ஆகியிருக்காங்க. நந்தினி பாம்பா தமிழில் அடுத்த ரவுண்ட் ஆக்‌ஷன் ஸ்டார்ட்ஸ்.

 கங்கா, அபிராமி:

“கங்கா” தொடரில் அபிராமியாக ஜொலிஜொலிக்கும் பொண்ணோட ஸ்வீட் நேம் பியாலி பி.முன்ஷி. ஆகஸ்டு 30ம் தேதி உலகிற்கு கிடைச்ச அழகி. கொல்கத்தாவின் சந்தோஷ்பூரில் பிறந்து, வளர்ந்த பியாலி இப்போ மும்பையில் செட்டில்டு. கங்கா ஷூட்டிங்கிற்காக அடிக்கடி சென்னை வந்துபோற பியாலி, பில்டர், ப்ரூ, கேப்புசினோ-னு காபி எந்த டேஸ்ட்டில் இருந்தாலும் அதுக்கு அடிமை. எல்.எல்.பி படிச்ச லாயர் கேர்ள். பெங்காலி மொழியில் வெளிவந்த ‘ரங்கீன் கோதுலி’ங்கற படத்தில் முதன்முதலில் பெரிய திரைக்கு பிரவேசமான பியாலிக்கு‘ஜெய் ஜக் ஜனனி மா துர்கா’ சீரியல், சின்னத்திரை என்ட்ரி கொடுத்தது. தொடர்ந்து ஸ்டார் ப்ளஸ் சேனலின் ’சியா கி ராம்’ தொடரில் மண்டோதரி கேரக்டருக்கு அப்ளாஸ் அள்ளிச்சு. கங்கா சீரியல் மூலமா பியாலி இப்போ நம்ம வீட்டுப் பொண்ணு.

நீலி, ரேகா:

“நீலி’ சீரியலில் வில்லியாய் கண்களை உருட்டி, உருட்டி பயம் காட்டும் ரேகாவின் உண்மையான பெயர் கவிதா. பெங்களூரு, பெண்ணின் சொந்த ஊர். தமிழில் ஒன்றிரண்டு வார்த்தைகள் தெரியும். செல்லமாய் எல்லாருக்கும் சின்னு. கன்னடத்தின் ”லக்‌ஷ்மி பாரம்மா” சீரியலில் நடித்ததில் இருந்து நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் லக்‌ஷ்மி. கவிதா படிச்சது காமர்ஸ் டிகிரி. போனவருடம்தான் ப்ரெஷ்ஷாய் கல்லூரியில் இருந்து, டிவிக்கு முழுவதுமாக தனது நேரத்தை கொடுத்திருக்கிறார். கிளாஸிக்கல் டான்சரான கவிதா, முதன்முதலில் வெள்ளித்திரையில்தான் கால் பதித்திருக்கிறார். ஆர்.ஜேவும், ‘லவ் குரு’ ஃபேமுமான ராஜேஷ்-க்கு ஜோடியாக இவர் நடித்த “சீனிவாச கல்யாணா” கவிதாவிற்கு மீடியா உலகில் ரெட் கார்ப்பெட் விரித்துத் தந்தது. பொண்ணு இப்போ விஜய் டிவியில் ‘நீலி’ ரேகாவாக செம பிசி.

யாரடி நீ மோகினி, வெண்ணிலா:

”மாமா...மாமா என்னை கட்டிக்கோ மாமா” என்று கிராமத்து வெகுளித்தனத்துடன் சஞ்சீவைத் துரத்தும் வெண்ணிலாவின் நிஜப் பெயர் நட்சத்திரா. கேரளக்கரையோரம் பிறந்த வண்ணமயில். தமிழில் ‘கிடா பூசாரி மகுடி’ திரைப்படம்தான் நட்சத்திராவிற்கு, நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. படத்திற்காக தலையை மொட்டையடித்துக் கொண்ட டெடிகேட்டட் நடிகை. 

பூவே பூச்சுடவா, ஷக்தி:

ஜீ தமிழின் புதிய சீரியல் ‘பூவே பூச்சுடவா’. சீரியலில் செம போல்டான ஹீரோயினாக வலம் வரும் ஷக்தியின் ரியல் நேம் ரேஷ்மா ரேயா. கேரளாவின், கோட்டயம் சொந்த ஊர். 2016ல் மிஸ் மெட்ராஸ் ரன்னர் அப் வாங்கிய அழகி. எம்.ஓ.பியில் பி.பி.ஏ படிப்பு. இப்போ சென்னைப் பொண்ணு. சீரியல் மாதிரியே நிஜத்திலும் தைரியமான பொண்ணு. தமிழ் நல்லாவே தெரியும். மாடலிங், போட்டோஷூட்-னு பொண்ணு எப்பவும் பிசி.

லட்சுமி கல்யாணம், லட்சுமி:

விஜய் டிவி லட்சுமி கல்யாணத்தில் அடக்கமாக பாவாடை, தாவணியில் ஜொலிக்கும் லட்சுமி, நிஜத்தில் தீபிகா. பண்ருட்டி பொண்ணு. சென்னையில் குடியேறியாச்சு. முதலில் கேப்டன் டிவியில் நியூஸ் ரீடர். ஷாப்பிங்கும், தந்தூரி சிக்கனும் பொண்ணுக்கு உயிர். சீரியலில் அடக்கமா இருந்தாலும், நிஜத்தில் செம துறுதுறு  தீபிகா

அடுத்த கட்டுரைக்கு