Published:Updated:

‘ரொம்ப சந்தோஷமா இருக்கேன், சீக்கிரமே நல்ல சேதி சொல்றேன்!’ - தொகுப்பாளினி பிரியங்கா

‘ரொம்ப சந்தோஷமா இருக்கேன், சீக்கிரமே நல்ல சேதி சொல்றேன்!’ - தொகுப்பாளினி பிரியங்கா
‘ரொம்ப சந்தோஷமா இருக்கேன், சீக்கிரமே நல்ல சேதி சொல்றேன்!’ - தொகுப்பாளினி பிரியங்கா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யத்தோடும் நகைச்சுவையாகவும் தொகுத்துவழங்கும் வெகுசில தொகுப்பாளினிகளில் பிரியங்கா தேஷ்பாண்டேவும் ஒருவர். இவர், டி.வி ஷோக்களில்தான் படபடவெனப் பேசுகிறார் என்றால், பேட்டியின்போதும் அப்படியே. இயல்பு மாறாத பேச்சு, அதே நகைச்சுவை உணர்வு, தெளிவான கருத்து... என க்யூட் எக்ஸ்பிரஷன்ஸோடு நம் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார் பிரியங்கா.

``டி.வி ஷோ வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?"

``சத்தியமா சொல்றேன், அது ஒரு ஆக்ஸிடென்ட். நான் தொகுப்பாளினி வாய்ப்புக்காக ட்ரை பண்ணவே இல்லை. என்னோட ஃப்ரெண்ட் ஷோ பண்ணிட்டிருந்தாங்க. அவர் ஏதோ வேலைக்காக ஒரு வாரம் வெளியூர் போக, அந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. அது அப்படியே க்ளிக் ஆகிடுச்சு. அவ்ளோதான்!''

``எப்படி இவ்வளவு  ஹ்யூமரா ஷோ பண்றீங்க? சிலசமயம் `செல்ஃப் ட்ரோல்'கூட பண்றீங்களே?"

``ஆமாங்க. அதான் என் ஸ்டைல். நான்  எப்பவுமே இப்படித்தான் ஜாலியா பேசுவேன். `செல்ஃப் ட்ரோல்' பண்றதுல என்ன தப்பு? சில சமயம் பசங்க எலிமினேட் ஆகுறப்போ, நானும் சீரியஸ் ஆகிடுவேன். சில ஷோஸ்ல அழுத்திருக்கேன்." 

``மறக்க முடியாத லவ் புரப்போஸல் மொமென்ட்?"

``ஒருதடவை ரோட்ல முட்டிப்போட்டு ரொம்ப சினிமாட்டிக்கா ஒரு பையன் எனக்கு புரப்போஸ் பண்ணினான். எல்லாரும் என்னையே பார்த்தாங்க. நான் முகத்தை கவர் பண்ணிக்கிட்டிருந்ததால நிறைய பேருக்கு அது பிரியங்கான்னு தெரியலை. இன்னொருத்தர் என்னோடு  நல்ல நண்பரா இருந்தவர். 'பிரியங்கா புருஷன்'ங்கிறதுதான் அவரோடஃபேஸ்புக் புரொஃபைல் பெயர். அந்த அளவுக்கு என்மேல் லவ்."

``இந்த ஜிம்... டயட்... அழகுக் குறிப்பு..!"

``என்னைப் பார்த்து இப்படிக் கேட்டுட்டீங்களே! இதைப் பற்றியெல்லாம் நான் கவலையே பட மாட்டேன். நல்லா சாப்பிடணும். நல்லா தூங்கணும். இந்த டயட்... கியட் எல்லாத்துக்கும் நோ... நோ... அப்புறம் பிரியங்கா இப்படி இருந்தால்தாங்க ரசிகர்களுக்குப் பிடிக்கும்." 

``சினிமா நடிகைகளுக்கு இருப்பது மாதிரி டி.வி தொகுப்பாளர்களுக்கும் சிரமங்கள் இருக்குமா?"

``ம்ம்ம்ம்ம்ம்... தனக்குன்னு ஒரு தனி ஸ்டைல் ஃபாலோ பண்ணாத வரை எல்லாமே சிரமம்தான். அது தவிர, மீடியானாலே சிரமம் இருக்கும். அதுலயும் பெண்களுக்கு சிரமங்கள் கொஞ்சம் கூடுதல்தான். நோ டவுட்!"

``வெள்ளித்திரை வாய்ப்புகள் வந்தால் எந்த கேரக்டர்ல நடிப்பீங்க?''

``எனக்கு ரொம்பப் பெரிய ஆசையெல்லாம் இல்லைங்க. விஜய் சாரோட தங்கச்சியா நடிக்கணும்.''

``பிடித்த ஹீரோ, ஹீரோயின்?"

``பிடிச்ச ஹீரோ தனுஷ். அவரோட டை ஹார்ட் ஃபேன். ஹீரோயின்ல... நடிப்புன்னா நயன்தாரா... அழகுன்னா சமந்தா... க்யூட்ன்னா நஸ்ரியா."

``மராத்திப் பொண்ணு நீங்க. எப்படி இவ்ளோ சரளமா தமிழ் பேசுறீங்க?"

``மராத்திப் பொண்ணு பொறந்தது ஹூப்ளி, கர்நாடகா. வளர்ந்தது  சென்னை. ஸோ, தமிழ் கத்துக்கிட்டேன்."

``நீங்க ஷார்ட் ஃபிலிம் கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்குகிறீங்க?"

``விஸ்காம் படிக்கிற பசங்களுக்கு ஒரு ஹெல்ப் மாதிரிதான் பண்றேன். நானும் ஒரு விஸ்காம் ஸ்டூடன்ட். அதனால இந்த புராஜெக்ட் கஷ்டமெல்லாம் எனக்கும் தெரியும். ஸோ... நடிப்பை அவாய்ட் பண்ண மாட்டேன்."

``உங்களோட எதிர்கால ப்ளான் என்ன?

`` நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னோட கணவரும் மீடியா பெர்சனாலிட்டிதான். அதனால என்னைப் பற்றியும், என்னோட வேலை பற்றியும் அவருக்கு நல்ல புரிதல் இருக்கு. கூடியசீக்கிரமே நல்ல சேதியும் சொல்றேன்" என வெட்கத்தோடு முடிக்கிறார் பிரியங்கா.