Published:Updated:

தமிழின் முதல் சுற்றுலா மற்றும் லைஃப் ஸ்டைல் சேனல் ’டிராவல் XP’-ல் என்ன ஸ்பெஷல்?

சுஜிதா சென்
தமிழின் முதல் சுற்றுலா மற்றும் லைஃப் ஸ்டைல் சேனல் ’டிராவல் XP’-ல் என்ன ஸ்பெஷல்?
தமிழின் முதல் சுற்றுலா மற்றும் லைஃப் ஸ்டைல் சேனல் ’டிராவல் XP’-ல் என்ன ஸ்பெஷல்?

மிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காத இன்டர்நேஷனல் சேனல்களே இல்லை. ஸ்டார் நிறுவன சேனல்களில் தொடங்கி டிஸ்கவரி வரை பல சேனல்கள் தமிழில் வந்துவிட்டன. இந்த வரிசையில் மற்றுமொரு புதிய தமிழ் சேனல் ‘டிராவல் XP'.   

உலகளவில் தமிழ் பேசும் 75 மில்லியன் மக்களுக்காகவே, சுற்றுலா மற்றும் லைஃப்ஸ்டைலின் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் `டிராவல்XP தமிழ்' சேனல் ஆரம்பிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தன் முழுநேர ஒளிபரப்பைத் தொடங்கியது தமிழின் முதல் டிராவல் சேனல். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சிநிரலில், சில ஸ்பெஷல்கள் இவைதான்;- 

டிராவல் XP பற்றி? 

2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் சுற்றுலா சேனல் `டிராவல் XP HD’. இந்த நெட்வொர்க், மொத்தம் நான்கு சேனல்களை ஒளிபரப்பிவருகிறது. அவை, `டிராவல் XP HD’, `டிராவல் XP HD யூரோப்’, `டிராவல் XP 4K’ மற்றும் `டிராவல் XP தமிழ்’.

பயணம், பாரம்பர்யம்,  உணவு,  கலாசாரம், வாழ்க்கைமுறை,  இயற்கை என வித்தியாசமான ஆறு கோணங்களில் நிகழ்ச்சிகளைப் பிரித்து வழங்குகிறது `டிராவல் XP தமிழ்’. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள 40 நாடுகளில் இந்தச் சேனல் ஒளிபரப்பாகிறது. அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கும் உணவு ப்ரியர்களுக்கும் இந்த சேனல் ஒரு கிஃப்ட்.

என்னென்ன நிகழ்ச்சி இருக்கு தெரியுமா?

தமிழ் தொகுப்பாளர்களும், செலிபிரிட்டிகளுமே நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

தாமூஸ் கிச்சன்:

காலை 7 மணிக்கு `தாமூஸ் கிச்சன்' என்ற நிகழ்ச்சியை செஃப் தாமு பலவிதமான சவுத் மற்றும் நார்த் இண்டியன் உணவுகளைச் செய்துகாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு, பிரமாதமான வரவேற்பு கிடைத்துவருகிறது.

எக்ஸ்ப்ளோர் இந்தியா:

காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் `எக்ஸ்ப்ளோர் இந்தியா' நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் சிறப்பையும் பெருமையையும் சொல்லும் செக்மென்ட்.

சிட்டி பிரேக்ஸ்:

காலை 12 மணிக்கு `சிட்டி பிரேக்ஸ்'  நிகழ்ச்சியில் இந்தியாவின் முக்கியமான பல நகரங்களின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்களை விளக்குகின்றனர். இதுவரை பெங்களூரு, கார்கில், ஜம்மு, ராஜஸ்தான் மற்றும் லடாக் போன்ற நகரங்களுக்கான நிகழ்ச்சி முன்னோட்டம் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

கிரேஸி ஃபுட்டீ:

காலை 12.30-க்கு `கிரேஸி ஃபுட்டீ' நிகழ்ச்சியில் ஊர் ஊராகச் சென்று அந்த ஊரில் என்ன ஸ்பெஷல் உணவுகள், குறிப்பாக ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் மற்றும் பழமையான உணவுவிடுதிகளையும், பல்வேறு உணவு பழக்கங்களையும் அறிமுகப்படுத்துகின்றனர்.

பெஸ்ட் ஃப்ரம் தி ரெஸ்ட்:

மதியம் 3 மணிக்கு `பெஸ்ட் ஃப்ரம் தி ரெஸ்ட்' நிகழ்ச்சியில் பல்வேறு நகரங்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள் எனப் பல்வேறு 
விஷயங்களுடன் சேர்த்து, அங்கு உள்ள மனிதர்களையும் பேட்டி எடுத்து ஒளிபரப்புவது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரேட் இண்டியன் ஹோட்டல்ஸ்:

இந்தியாவின் புகழ்பெற்ற ஹோட்டல்களுக்குச் சென்று அங்கு இருக்கும் உணவு வகைகள், வசதிகள் மற்றும் சேவைகள் என எல்லாவற்றையும் விளக்கும் கலர்ஃபுல் செக்மென்ட். தமிழில் இதுவே முதல் முறை. மேலும், இங்கிலீஷ் டிராவல் XP சேனலில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டும்  ஒளிபரப்பப்படுகின்றன. மேற்கண்ட ஆறு நிகழ்ச்சிகளும் மறுஒளிபரப்பும் செய்யப்படுகின்றன.

டிராவல் கைடு:

இந்தி மொழியை எதிர்க்கும் மேற்குவங்காளம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில், தற்போது அந்தந்த மொழிகளில் சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேனலின் இயக்குநர் நிஷா சோத்தானி கூறும்போது, ``இந்த சேனலில், நூறு சதவிகிதம் தமிழில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழுக்கான எக்ஸ்க்ளூசிவ் நிகழ்ச்சிகளும் விரைவில் வெளியாகும். தமிழ்நாட்டின் அனைத்து இடங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்படும். தமிழ் மக்களிடையே எங்களது சேவையை விரிவுபடுத்தியதற்காக மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறியுள்ளார். 

இந்த சேனல் டாடா ஸ்கை, வீடியோகான், ஜியோ டி.வி, ஏர்டெல் டிஜிட்டல் டி.வி மற்றும் கேபிள் நெட்வொர்க்கிலும் கிடைக்கப்பெறும் வகையில் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. நாம் எங்கேயாவது சுற்றுலாவுக்குச் செல்ல வேண்டும் என நினைத்தவுடன், திட்டமிடுவது, பயணத்தை மேற்கொள்ளவது, தங்குவது, அந்த ஊரில் சாப்பாடு எப்படி இருக்கும்... என்பது போன்ற பல கேள்விகள் நம்முள் எழும். இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு இடையே டிராவல் டிப்ஸ்களை வழங்குவது இந்த சேனலின் கூடுதல் சிறப்பு.

இப்படி ஒரு டிராவல்  கைடு தமிழில் இருக்கும்போது கவலை எதற்கு? விரைவில் ஆரம்பியுங்கள் உங்கள் சுற்றுலாவை!