Published:Updated:

‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்? ஸ்பாட் ரிப்போர்ட்

‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்? ஸ்பாட் ரிப்போர்ட்
‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்? ஸ்பாட் ரிப்போர்ட்

‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்? ஸ்பாட் ரிப்போர்ட்

நம்ம 'ரெடி ஸ்டெடி கோ'ன்னு சொல்லித்தான் எல்லா விளையாட்டையும் ஆரம்பிப்போம். அதுல கொஞ்சம் ட்விஸ்ட்டைக் கலந்து, 'ரெடி ஸ்டெடி போ' என்று சொல்லி இந்த ரியாலிட்டி கேம் ஷோவை ஆரம்பிக்குறாங்க ரியோ ராஜ் மற்றும் ஆன்ட்ரூஸ். 'கேம் ஷோ'ன்னாலே டி.வி ஷெட்யூலில் ஒரு தனியிடம் கண்டிப்பா இருக்கும். அந்த வரிசையில புதுசா சேர்ந்திருக்குற இந்த நிகழ்ச்சி விஜய் டி.வியின் ஹிட் நம்பராக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்'ன்னு கூட சொல்லலாம். பேருதான் ரியாலிட்டி ஷோ...ஆனால், எப்பவுமே சில பல 'கல்லாட்டம்', 'கண்கட்டி வித்தைகள்', 'பிஹைண்ட் தி ஸ்க்ரீன் ஸ்டோரி' என்று நிறைய விஷயங்கள் கண்ணில் தென்படும் என்ற மைண்ட் செட்டோடதான் விஜய் டி.வி செட்டுக்குள்ள போனோம். அதுக்கேத்த மாதிரி நிறையா ட்விஸ்ட் இருந்துச்சு...

இந்த கேம் எப்படி இருக்கு...

இதுவரை யாரும் யோசிக்காத வேற லெவல் கேம்தான் எல்லாமே. செட்டுக்குள்ள நுழைந்த உடனேயே மேடையில நாலு பேர் கட்டிப்புடி வைத்தியம் பண்ணிட்டு இருந்தாங்க...! ரெண்டு போட்டியாளர்கள் கட்டிப்புடிச்சு அவங்களுக்கு இடையில இருக்குற பலூனை உடைக்கணும். இதை மூணு பேர் கொண்ட ரெண்டு குழுக்களாக விளையாடிட்டு இருந்தாங்க. இரண்டாவது விளையாட்டாக, முதல்வன் படப் பாடல்ல வர்ற மாதிரி போட்டியாளர்களோட தலையில் மண்பானையை அடுக்கிவச்சு...ஆடாம அசையாம பேலன்ஸ் பண்ணி நிக்கணும். இந்த காலத்து மாடர்ன் பொண்ணுங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமான கேம்தான். இருந்தாலும், இந்த மாதிரியான விளையாட்ட போட்டியாளர்கள் அசால்டாக விளையாடுறதுக்கு இரண்டு தொகுப்பாளர்களும் கடைசி வரை உத்வேகம் கொடுக்குறது கூடுதல் ப்ளஸ் பாயின்ட். 

சரி...இதுல விளையாடுற பொண்ணுங்கெல்லாம் யாரு...?

இதுல விளையாடுற பொண்ணுங்கள்ல சில பேர் காலேஜ் படிக்குறவங்க, சில பேர் வேலைக்கு போறவங்க, இன்னும் சில பேர் மீடியால வரணும்'ன்ற ஆசை உள்ளவங்க. இவங்க எல்லாருக்கும் ஆடிஷன் வச்சு, அதுல கேமரா பயம் இல்லாதவங்க, நல்லா பேசுறவங்க, அடிக்கடி ஜோக்கடிச்சு எண்டெர்டைன் பண்றவங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டிருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி கல கல ஜாலி பாட்டுகளின் மயம்தான் செட் முழுக்க... 

வேற எதாவது ஸ்பெஷல் கேம்ஸ் இருக்கா...?

இந்த கேமே ஸ்பெஷல்தான். அது எப்படின்னா...கேம்ல கம்மியா பாயிண்ட்ஸ் எடுத்தவங்க மேல, முட்டையை உடைச்சு ஊத்தறாங்க. இந்த கேம் பெயர் 'செஞ்சுருவேன்'. ஒரு குட்டி பக்கெட் நெறையா முட்டைக் கருவை டேபிள் மேல ரெடியா வச்சுருக்காங்க. கடைசி ரவுண்டுல தோற்றவங்க மேல, அதை எடுத்து ஊத்தி விளையாட்டை முடிக்கணும். கேம் டைட்டிலுக்கு ஏத்த மாதிரி நல்லா வச்சு செய்றாங்கய்யா...! 

இருட்டு அறையில், முரட்டு குத்து' -இதுதான் கேம் டைட்டில்...

'பெயரே வித்தியாசமா இருக்கே'ன்னு அந்த இருட்டு அறைக்குள்ள  எட்டிப் பார்த்தால், பாம்பு, உடும்பு, கீரிப்பிள்ளை எல்லாம் கண்ணாடிப்பெட்டிக்குள்ள அடைக்கப்பட்டுருக்கு. இப்படி விலங்குகளையெல்லாம் வச்சு நிகழ்ச்சி நடத்துறீங்களே...இது சரியா? என்று கேட்ட போது, 'அதற்கு தனியா விலங்குகள் நலத்துறையில் அனுமதி வாங்கியிருக்கோம். விஷமுள்ள ஆபத்து ஏற்படுத்தும் எந்த ஒரு விலங்கையும் நாங்க அனுமதிக்குறது இல்ல." என்று பதிலளித்தார் ரியாலிட்டி ஷோவின் இயக்குனர். 

இதுல வர்ற ரெண்டு தொகுப்பாளர்களும் எப்படி..? 

விளையாட்டு கொஞ்சம் சீரியஸா போனா கூட, நகைச்சுவையா பேசி எல்லாரையும் சிரிக்க வைக்குறாங்க இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள். "இந்த 'ஆன் தி ஸ்பாட் ஹ்யூமர்' கூட ஸ்க்ரிப்ட் ல இருக்குமா?"ன்னு அவங்கக் கிட்ட கேட்டவுடனே, "நாங்க ரெண்டு பேரும் இப்படித்தான். கொஞ்சம் கல கல டைப் ஆட்கள். ஸ்க்ரிப்ட் தனியா கொடுப்பாங்க. ஆனால், அதை கொஞ்சம் மாத்திக்கலாம்'ன்றது எங்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம். அது கூட இல்லைன்னா...ரிப்பீட் வசனங்கள்தான் நிகழ்ச்சி முழுக்க இருக்கும். ஸோ, தொகுப்பாளர்களுக்கு எப்பவுமே க்ரியேட்டிவிட்டி இருக்கனும்." என்று இடைவேளை நேரத்தில் மின்னல் வேகமாய் பதிலளித்தனர். 

இருங்க பாஸ்...இதுக்கு மேலதான் இருக்கு ஒரு டாப் டக்கர் ட்விஸ்ட்... 

போட்டி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி, இரண்டு அணியின் போட்டியாளர்களையும் ஒரு மோட்டார் இயந்திரத்துல நிற்க வச்சு...சுத்திவிடுறாங்க. ஐந்து நிமிஷத்துக்கு அப்புறம் பயங்கரமா தலை சுற்ற ஆரம்பிக்கும் போதுதான் ஆட்டத்தையே ஆரம்பிக்கணும். அந்த கிரக்கத்தோட விளையாடும் போது அவங்க நல்லா சொதப்புவாங்க...! சரிதான் பாஸ்...நாமெல்லாம் சின்ன வயசுல கண்ணாமூச்சி விளையாடும் போது, கண்ணைக் கட்டிவிட்டு...அப்டியே ரெண்டு மூணு ரவுண்ட் சுத்திவிட்டு... அப்புறம் விளையாட ஆரம்பிப்போம்ல...அதே கான்செப்ட்தான் இங்க கொஞ்சம் டெக்னிக்கலா இருக்கு. இப்போ புரியுதா மக்களே...ஏன் இந்த நிகழ்ச்சிக்கு 'ரெடி ஸ்டெடி போ'ன்னு பெயர் வச்சுருக்காங்கன்னு...

சரி..எண்ட் பாயின்டுக்கு வந்தாச்சு...ஷோ டீட்டைல்ஸை பாப்போம்...

சிரிப்பு மத்தாப்புகளை கொளுத்திப் போடும் இந்த கேம் ஷோ விஜய் டி.வியில் ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகுது. இது சீசன் 1, சீசன் 2 என்று போகும் அளவுக்கு வரவேற்புகளும், வாய்ப்புகளும் அதிகம். இனி இதில் வரும் ஸ்பெஷல் எபிசோட்களுக்கு செலிபிரிட்டிகள் வருகை தர இருக்காங்க.

அடுத்த கட்டுரைக்கு