Published:Updated:

As I'm Suffering From Kadhal - இவர்கள் சொல்லும் ரிலேஷன்ஷிப் லாஜிக் ஓகேவா?

As I'm Suffering From Kadhal - இவர்கள் சொல்லும் ரிலேஷன்ஷிப் லாஜிக் ஓகேவா?

As I'm Suffering From Kadhal - இவர்கள் சொல்லும் ரிலேஷன்ஷிப் லாஜிக் ஓகேவா?

As I'm Suffering From Kadhal - இவர்கள் சொல்லும் ரிலேஷன்ஷிப் லாஜிக் ஓகேவா?

As I'm Suffering From Kadhal - இவர்கள் சொல்லும் ரிலேஷன்ஷிப் லாஜிக் ஓகேவா?

Published:Updated:
As I'm Suffering From Kadhal - இவர்கள் சொல்லும் ரிலேஷன்ஷிப் லாஜிக் ஓகேவா?

பாலாஜி மோகன் இயக்கத்தில் தமிழின் முதல் சீரீஸ், As I'm Suffering From Kadhal-ன் பாகம்-1, பத்து எபிசோடுகளுடன் வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டது. `இதிலிருந்து அவர்கள் சமூகத்துக்குச் சொல்லவரும் கருத்துதான் என்ன?' என ஒன்றும் புரியாத நிலையில் உளவியலைச் சற்று அலசிப்பார்த்தால், திருமணம் அல்லது காதலை எதிர்கொள்ளும்போது நம்மில் பலருக்குச் சில மனநல மாற்றங்கள் நிகழலாம். அது நாம் யாரைக் காதலிக்கிறோம் என்பதில் தொடங்கி நம் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து அனைத்தும் மாறுபடுகின்றன. இந்த மாற்றங்களை மையமாக வைத்து தொகுக்கப்பட்ட இந்த சீரீஸ் உணர்த்திய கூற்றுமொழிகளை உளவியல்ரீதியில் சற்று சிந்தித்துப்பார்த்தால் நமக்குத் தோன்றியது இதுதான். இந்த சீரீஸின் ஒவ்வொரு எபிசோடின் தொடக்கத்தில் கேட்கப்படும் பிரமாதமான கேள்விகளும், அதற்கான உளவியல் விளக்கங்களும் சில. 

``நீங்கள் அடிக்கடி சண்டைபோடுவீர்களா?''

``காதலில் சண்டையே வராது. ஆனால், கல்யாணத்தில் கண்டிப்பா வரும்" இதுதான் இந்த சீரீஸில் பலவாறாகக் கூறப்பட்டுள்ளது. கணவன், கல்யாணத்துக்குப் பிறகு பேச்சுலர் ட்ரிப்பில் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ள, அது தெரிந்த மனைவி `நானும் அதேபோல் தவறாக உறவு வைத்துக்கொள்வேன்' என்றும்,`கணவனைப் பழிவாங்குவேன்' என்றும் கூறுவதெல்லாம் நவீன காலத்து சபதமாக இருப்பினும், இது `அட்ஜெஸ்ட்மென்ட் டிஸாடர்' வகையைச் சார்ந்தது. அதாவது, பிரச்னைகளை எதிர்கொள்ளாத்தன்மையும் மற்றவர்களைப் புரிந்துகொள்ளாத் தன்மையும் உறவில் பிரச்னைகளுக்கு மட்டுமல்ல, நிரந்தர பிரிவுக்கும் வழிவகுக்கும். இதற்கு அடிக்கொருமுறை சண்டைபோட்டு பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் உளவியலாளர்கள்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்யச் சொல்லி உங்கள் பார்ட்னர் வற்புறுத்தியிருக்கிறாரா?''

`` `எனக்கு பெர்சனல் ஸ்பேஸ் வேண்டும்' என்பதுதான் தற்போதைய ரிலேஷன்ஷிப் ட்ரெண்ட். இதை `புராக்ஸிமிஸ்' என்று உளவியலில் கூறுவார்கள். அதாவது, நாம் எல்லாரும் நமக்கென ஒரு வட்டத்தை அமைத்துக்கொண்டு அதனுள் யாரைச் சேர்க்கலாம், யாரை விலக்கலாம் என முடிவெடுப்போம். குறிப்பாக, காதலர்களை அந்த வட்டத்தினுள் சேர்த்துக்கொள்வது வழக்கம். அப்படி வட்டத்துக்குள் வரும் நபர்கள் நமக்குப் புத்திமதி சொல்வதும், நல்லது கெட்டதில் பங்கேற்பதும் என நம் பெர்சனல் விஷயங்களிலும் சில சமயம் தலையிடுவார்கள். ஆனால், தற்போதைய காதல் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து எதிலும் தலையிட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. எப்படியென்றால், `நீ நீயாக இரு, நான் நானாக இருக்கிறேன். நம்முடைய இந்தக் குணமும் செயலும் இருவருக்கும் பிடித்திருக்கிறது என்றால், ஒன்றாக வாழலாம். இல்லையெனில், இன்னொரு பார்ட்னர்தான் புதிய வழி' என்கின்றனர் . நிற்க... இருப்பினும் இந்த `புராக்ஸிமிஸ்' காதலில் தேவையா என்பதை நம் மனப்பக்குவத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்ள வேண்டும். சிலர் என்னதான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும், `தற்குறி' போன்றே யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களை இந்த `புராக்ஸிமிஸ்'சிலேயே விட்டுவிடுவதுதான் நல்லது.'' #Verified Bro

``ஒருத்தர்மேல் இன்னொருத்தர் எவ்வளவு டிப்பெண்டன்ட்டாக இருக்கிறீர்கள்?''

``அதற்கெல்லாம் நோ சான்ஸ்! ஏனென்றால், தற்போதைய இளைஞர்களுக்குள் வளர்ந்திருக்கும் `ரிவ்யூ மென்டாலிட்டி'தான் முக்கியக் காரணம். அதாவது, சமூக வலைதளங்களில் எதற்கெடுத்தாலும் `கமென்ட்' போடும் பழக்கம்தான் இதற்கு அடித்தளமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் ரேடியோவில் ஒலிக்கும் ஒரு பாடலை மீண்டும் கேட்க ஒரு நாளோ, இரண்டு நாள்களோ அல்லது ஒரு வாரம்கூட ஆகலாம். வருடத்தில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ பண்டிகை தினத்தன்று மட்டும்தான் நெல்லுச் சோறும் புதிய ஆடையும். தற்போது, திகட்டத் திகட்டக் கிடைக்கும். இந்தச் சூழலில் அனைத்தையும் கேலியும் கிண்டலுமாகப் பார்க்கத் தோன்றுகிறது. இதில் அடுத்தவர்களைப் பற்றி எப்படி யோசிப்பது? யோசித்தால்தானே அவர்களை நாம் சார்ந்திருக்கிறோமா... இல்லையா என்பது புலப்படும். அதனால் ஒருத்தர்மேல் இன்னொருத்தர் டிப்பெண்டன்ட்டாக இருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை ப்ரோ.''

``உங்கள் பார்ட்னரை நீங்கள் மிகவும் அனுசரித்துப்போகிறீர்களே ஏன்?''

``காதலில் மிகவும் அனுசரித்துப்போவதுகூட `ஆளுமையின் இயலாமை' என்றே கூறலாம். எப்போதுமே நன்கு அனுசரித்துப்போகும் ஆண்களை, பெண்கள் `தனக்காக எதுவும் செய்யத் தயாராக இருக்கிறான்' என எண்ணுவது உண்டு. அதன் பின்னால் இருக்கும் உளவியலை உற்று நோக்கினால், `அவாய்டன்ட் பெர்சனாலிட்டி' டிஸார்டரின் மறுமுகத்தைப் பார்க்கலாம். இவர்கள், எதிலும் ஆர்வமில்லாதவர்கள். சில உரையாடல்களையும் விவாதங்களையும் தவிர்ப்பதற்காக சில விஷயங்களில் தங்களின் பாட்னர்களுடன் மிகவும் அனுசரித்துப்போவார்கள்.''

`லிவ்விங் டுகெதர்' வாழ்க்கையைப் பற்றி நாங்கள் கூறுவது இதுதான்...

அனைத்து உறவு முறைகளிலும் சிக்கல்கள் இருப்பது வழக்கம்தான். இருப்பினும், லிவிங் டுகெதர் முறைதான் சிறந்தது எனத் திரையில் காட்டியுள்ளனர். `பெர்சனல் ஸ்பேஸ்' எனும் தனக்கான தனிப்பட்ட நேரம், சந்தேகமில்லாமல் செயல்படும் தன்மை, குறைந்த எமோஷனல் டிராமாக்கள், எப்போது வேண்டுமானாலும் ரிலேஷன்ஷிப்பிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்பது போன்ற சில எக்ஸ்க்ளூசிவ் சலுகைகள் இதில் மட்டும்தான் உண்டு. அதனால், இந்த சீரீஸில் உறவில் எந்தவோர் எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படும் தன்மைதான் முக்கியம் என்ற கொள்கையில் இயங்கும் லிவிங் டுகெதர்தான் சிறந்தது என்றும் கூறுகின்றனர். #லவ்வுக்கு ஏதுய்யா கொள்கை!

``சரி, காதல் என்றால் என்ன - ஒரு சிறு குறிப்பு''

``கொஞ்சம் யோசித்துப்பாருங்களேன்... இந்தக் கேள்வியை அந்த சீரீஸில் கேட்டிருந்தால் என்னென்ன பதில்கள் வந்திருக்கும் என்று. அதனால்தான் உளவியல் பக்கங்களிலிருந்து அருமையான ஒரு விடை காதலைப் பற்றி. முக்கோணக் காதல் கோட்பாட்டை வரையறுத்த ராபர்ட் ஸ்டென்பர்க் என்பவர் `நெருக்கம், அர்ப்பணிப்பு மற்றும் பேரார்வம் இவை மூன்றும் கலந்ததுதான் நிறைவான காதல்' என, சமூக உளவியலில் விளக்கமளித்துள்ளார். ஆனால், அப்படிப்பட்ட காதல் வாழ்க்கை இந்த சீரீஸில் இல்லை என்பது தனிக்கதை. #அப்பறம் ஏன் As I'm Suffering From Kadhal-ன்னு பெயர் வெச்சாங்கன்னு தெரியலை!

மேலும் இந்த சீரீஸில் பெண்கள் குடிப்பது, கெட்டவார்த்தைகளின் திட்டுவது போன்ற காட்சிகள் வெஸ்டர்ன் கலாசாரத்தை எடுத்துக்காட்டும்விதமாக இருந்தாலும், சீரீஸ் கலாசாரத்துக்கு இது கொஞ்சம் ஓவர்தான் பாஸ். என்னங்க... கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லை என்றுதானே யோசிக்கிறீர்கள்? முதல் எபிசோடிலிருந்தே அப்படித்தான்.