Published:Updated:

சல்மான் கானா... ஷெர்லாக் ஹோம்ஸா? - வீக் எண்ட் டி.வி நிகழ்ச்சிகள் #TVSchedule

சல்மான் கானா... ஷெர்லாக் ஹோம்ஸா? - வீக் எண்ட் டி.வி நிகழ்ச்சிகள் #TVSchedule
சல்மான் கானா... ஷெர்லாக் ஹோம்ஸா? - வீக் எண்ட் டி.வி நிகழ்ச்சிகள் #TVSchedule

சல்மான் கானா... ஷெர்லாக் ஹோம்ஸா? - வீக் எண்ட் டி.வி நிகழ்ச்சிகள் #TVSchedule

இந்த வார இறுதியில் சில படங்களை Must watch list-ல்  சேர்த்துதான் ஆக வேண்டும். கதை, வசனம், நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் இசை என எதைச் சொல்வது... எதை விடுவது என்ற அளவுக்கு  சினிமா வரலாற்றையே ஒருமுறை `வாவ்' சொல்லவைத்த பெருமை இந்தப் படங்களுக்குத்தான் பாஸ்! கூடவே பட்டையைக்கிளப்பும் ரியாலிட்டி ஷோக்களில் வார இறுதி ஸ்பெஷல் என்ன? யார் இந்த வார பிக்பாஸ் பலிகடா?

WB:`ஷெர்லாக் ஹோம்ஸ்', சனிக்கிழமை, இரவு 12.43:

துப்பறியும் கதாபாத்திரம் எனச் சொன்னாலே, முதலில் ஞாபகத்துக்கு வருவது ஷெர்லாக் ஹோம்ஸ்தான். ஆங்கிலப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்கொண்டவர்கள் நிச்சயமாக ஆர்தர் கானன் டாய்லின் ஷெர்லாக் கதைகளைத் தவறவிட்டிருக்க மாட்டார்கள். மற்றவர்கள் இந்தக் கதைகளிலிருந்து ஏதாவது ஒன்றைப் படித்துப் பாருங்களேன், இருளும் பனியும் சூழ்ந்த இங்கிலாந்து நம் கண் முன் வந்து போகும். 

ராபர்ட் டௌனி ஜூனியர் மற்றும் Jude Law நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை, கை ரிட்சி இயக்கியுள்ளார்.  துப்பறியும் படத்தைக் காணவிரும்பும் ரசிகர்கள் நிச்சயம் இதைப் பார்க்கலாம். 

ஸ்டார் கோல்ட் HD: `பஜ்ரங்கி பாய்ஜன்', ஞாயிறு, காலை, 9.10 :

இந்தியா-பாகிஸ்தான் உறவை முன்னிறுத்தி பாலிவுட்டில் வந்திருக்கும் மற்றுமொரு திரைப்படம் `பஜ்ரங்கி பாய்ஜன்'. ஒரு ரயில்பயணத்தில், இந்தியாவில் இறங்கிவிடும்  வாய்பேச முடியாத பாகிஸ்தான் சிறுமியை, சல்மான்கான்   அவருடைய குடும்பத்திடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான் கதை.  இயக்குநர் கபீர் கான் இயக்கியிருக்கும் இந்தப் படம்,  இந்தியில் பெருவெற்றிபெற்றது. 

ஜீ ஆக்‌ஷன்: ருத்ரமாதேவி, ஞாயிறு, காலை, 10.56 :

காக்திய சாம்ராஜ்யம்தான் கதை நிகழும் இடம். அப்போது அந்த அரசின் மூத்த அரசனுக்கு குழந்தைப் பிறக்கிறது. அந்தக் குழந்தை ஆணாக இருந்தால் மட்டுமே எதிரிகளிடமிருந்து ஆட்சியைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலை. ஆனால், அவர்களுக்குப் பிறந்ததோ பெண் குழந்தை. `ருத்ரமாதேவி' என்று பெயரிட்டார்களே தவிர, `ருத்ர தேவுடு' என்ற பெயரில் ஆண் குழந்தையாக மாற்றி பட்டம் சூட்டி ஆசனத்தில் அமரவைத்தனர். ருத்ர தேவுடுவும் தன் அடையாளங்களை மறைத்து போர்க் கலைகளையும் நாடாளும் திறமைகளையும் பெறுகிறார். ஒருநாள் பட்டத்து இளவரசன், ஆண் மகனே அல்ல என்ற உண்மை வெளியில் தெரியவருகிறது. பிறகு ருத்ர தேவுடு என்ன செய்கிறான்... எதிரி நாட்டவர்கள் படையெடுத்து வந்தார்களா? மேலும் அல்லு அர்ஜுன் மற்றும் ராணாவுக்கு படத்தில் என்ன ரோல் என்பது பற்றிய கேள்விகளுக்கு நீங்கள் படத்தைத்தான் பார்க்க வேண்டும். 

விஜய் டிவி: `நீயா நானா' ஞாயிறு, மதியம் 3.00 :

இந்த வார நீயா நானாவில்,  தங்களின் மனச்சோர்வினால் உருவாகும் செய்கைகளைப் பற்றி பெண்கள் விவாதிக்கிறார்கள்.  இருபுறங்களிலும் பெண்கள் மட்டுமே, ஒருபக்கம் மனசோர்வுகளின்போது அவர்களின் செய்கைகள்  பற்றியும், மறுப்பக்கம் அதைப் பற்றிய தங்கள் பார்வையைப் பகிர்ந்தும் அலசுகிறார்கள்.  இந்த வார `நீயா? நானா?'வில் விவாதிக்க உள்ளனர். 

அண்ட் பிக்சர்ஸ்: `கஹானி-2' ஞாயிறு, இரவு, 8 :00 :

முதல் பாகத்தில் கணவனைத் தேடும் மனைவியாக வந்த வித்யா பாலன், இதில் கடத்தப்பட்ட  மகளைத் தேடுகிறார். இதில் வித்யா சின்ஹா தன் மகளுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார். கால்கள் செயலிழந்திருக்கும் மகளை, சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில், ஒருநாள் மின்னி காணாமல்போய்விடுகிறாள். மொபைலில் மின்னியின் படத்துடன் அவள் கடத்தப்பட்ட செய்தியும் வித்யாவுக்குக் கிடைக்கிறது. தன் மகளைத் தேடும் பணியில் இறங்கிய வித்யா, திடீரென விபத்துக்குள்ளாகி கோமாவுக்குச் செல்கிறார். பிறகு மகள் எப்படிக் கிடைத்தார் என்பதுதான் எண்ட் ட்விஸ்ட். 

விஜய் டிவி: `பிக் பாஸ்', சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 :

போன வாரம் வரையிலும் ஜூலியானாவை டார்கெட் செய்த பிக்பாஸ் குழுவினர், தற்போது பரணியைப் பிடித்துள்ளனர். இருப்பினும்,  இவர்களை, வெளியே அனுப்பாமல் இருப்பதுதான் பிக்பாஸ் ஸ்டைல். வழக்கம்போல ஏதாவது ஓர் அப்பாவிதான் இந்த வாரமும் பலிகடா!

வாராவாரம் பல படங்கள் நம் டிவி ஷெட்யூலில்  இருந்தாலும், சில படங்கள் மட்டுமே எவர்கிரீன் காட்சிகளாக மனதில் பதிபவை. அப்படியான  படங்கள் திரையிடப்படும் ஜானரில் நீங்கா இடம்பெற்றவை. Must watch படங்களுடன் இந்த வீக்எண்ட் ஹேப்பி  வீக்எண்ட்!

அடுத்த கட்டுரைக்கு