Published:Updated:

ஓவியாவின் உளவியல் சிக்கல் உங்களுக்குப் புரியுமா? ஒரு பெண்ணின் பார்வையில் பிக் பாஸ் #BiggBossTamil

ஓவியாவின் உளவியல் சிக்கல் உங்களுக்குப் புரியுமா? ஒரு பெண்ணின் பார்வையில் பிக் பாஸ் #BiggBossTamil
ஓவியாவின் உளவியல் சிக்கல் உங்களுக்குப் புரியுமா? ஒரு பெண்ணின் பார்வையில் பிக் பாஸ் #BiggBossTamil

ஓவியாவின் உளவியல் சிக்கல் உங்களுக்குப் புரியுமா? ஒரு பெண்ணின் பார்வையில் பிக் பாஸ் #BiggBossTamil

மீபத்தில், டாக்டர்களுடன் கலந்துகொள்ளும் 'டாக் ஷோ' ஒன்றிற்குச் சென்றிருந்தேன். எங்கள் அணி மீதான குற்றசாட்டுகளை அவர்கள் அடுக்கிக்கொண்டே போக அதற்குப் பதில் அளிக்க, மறுத்து பேச வாய்ப்பு தரவில்லை. அவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்க, கோபத்தில் கை நடுங்க ஆரம்பித்தது. நேரமாக, நேரமாக நான் 'பிக் பாஸ்' காயத்ரியாக மாறி இருந்தேன். ரியாலிட்டி ஷோக்களில் யாரைவாது டார்கெட் செய்து அவரின் ஈகோவைக் கிளறிவிடுவார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். மதியம் பன்னிரண்டு மணிக்கு ஒளிப்பராகும் டாக்டர் நிகழ்ச்சியிலேயே இந்த நிலை என்றால், பிக் பாஸ் போன்ற பெரிய நிகழ்ச்சியில் என்னவெல்லாம் நடக்குமோ எனும் எண்ணம் மனதில் ஓடத்தொடங்கியது.
 
பிக் பாஸில் நடப்பவை ஸ்க்ரிப்ட் என்றால் எளிதில் சாயம் வெளுத்து விடும். நமீதா போன்றவர்கள் கோடி ரூபாய் கிடைத்தாலும் பேர் கெடும் என்றால் வெளியே வந்ததும் உண்மையைச் சொல்லியிருப்பார்கள். எனவே, முக்கால்வாசி நிஜம்தான் என்கிற முடிவுக்கு வர முடிகிறது. ஆனால், அந்த விளையாட்டு எப்படி ஆடப்படுகிறது என்பதைத்தான் நாம் பேச வேண்டியிருக்கிறது. ஆரம்பித்திலிருந்தே ஓவியா - ஆரவ் நெருக்கமானதை வைத்து 'பிக் பாஸ்' விளையாட ஆரம்பித்து விட்டது. இதில் பலியானது ஓவியாவின் fragile women heart or mind. வழக்கமான விஷயங்களோடு முதல் இரு வாரங்கள் நகர்ந்ததும், ஓவியாவுக்கு ரசிகர்களின் ஆதரவைப் பார்த்து ஆரவ் உள்பட எல்லாருக்கும் பொறாமையைத் தூண்டி விட்டார்கள் பிக் பாஸ் குழுவினர் .குழுவில் சரி சமமாய் இருக்கும் ஒரு பெண், ஆண்களை விடவும் அதிகமாய்க் கொண்டாடப்படும்போது அதை ஆண்களாலும், சக பெண்களலும் ஜீரணிக்க முடிவதில்லை. (ஓர் ஆண் கொண்டாடப்பட்டால் ஹீரோ ஆகிடுவார். அருகில் இருப்பவர்களுக்குப் பெரிதாய் மனச்சிக்கல் வருவதில்லை) 

பிறகு, ஜுலி Vs ஓவியா என்று காமிரா சுழல ஆரம்பித்தது. ரகசிய டாஸ்க் மூலம், ஜூலியின் தாழ்வு மனப்பான்மையுடன் விளையாடினார்கள். அடுத்து, ஓவியாவுக்கு 'யார் பேச்சும் கேட்காத பெண்' என்று டாஸ்க் கொடுக்கப்பட்டு எல்லாரின் வெறுப்புக்கும் ஆளாக வைத்தார்கள். ஏனென்றால், இந்தச் 'சொல் பேச்சு கேட்காத' டாஸ்க் மூலம் மற்றவர்களின் ஈகோவும் பயங்கரமாகத் தூண்டப்பட்டு இருக்கும். இதையெல்லாம் மறக்க வைக்க ஜூலியின் டிராமா அரங்கேற்றப்பட்டது. இல்லாவிடில் ஓவியா மேல், உடனிருப்பவர்களுக்கு இன்னும் பயங்கர வெறுப்பு உருவாகி இருக்கும். 

இந்த ரியாலிட்டி ஷோவை நகர்த்துவதில் முதன்மையானது... டாஸ்க் மூலம் ஈகோ தூண்டப்படுவது. ஜுலியை நடுவராக வைத்து ரெட் கார்பெட் டாஸ்க் வைத்து, எதற்கும் அஞ்சாத ஓவியாவின் ஈகோவை அசைத்து பார்த்தார்கள். ஏற்கெனவே தனிமை, புறக்கணிப்பு, ஏமாற்றம் என்று மனதளவில் உடைந்து போயிருக்கும் ஓவியாவை, ஜூலி நடக்கச் சிவப்புக் கம்பளம் விரிக்கச் சொன்னபோது, ஓவியாவின் ஈகோ பெரும் ஆட்டத்தை ஆடிதான் அடங்கியது. ஒருவேளை அந்தச் சம்பவம் நடைபெறாவிட்டால், ஓவியா மனதுக்குள் மிகப்பெரிய வன்மம் எழுந்திருக்கும். அதிலும் அவர் தெளிவாகவே இருப்பதாகவே தோன்றியது. 

ஒரு பெண்ணைக் காதலிக்கவில்லை என்றால் 'நண்பர்களாக இருக்கலாம்' என்கிற கதையெல்லாம் வேலைக்கு ஆகாது. முற்றிலுமாக ஒதுங்கிவிட வேண்டும். ஆரவ் ஆரம்பம் முதலே, நட்பை விட கூடுதலாகவே ஓவியாவிடம் பழகி உள்ளார். ஒரு காட்சியில் ஆரவும் ஓவியாவும் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது ஓவியா எழுந்து செல்ல, ஆரவ் தன் காலால் ஓவியாவின் பின்புறத்தில் உதை கொடுப்பார். அதைப்போல ரைசாவிடமோ, ஜூலியிடமோ ஆரவ் செய்ய முடியுமா.. ஓவியாவுடன் தனக்கு இருப்பது நட்பு மட்டுமில்லை என்று உடல் மொழியால் காட்டிவிட்டு, வார்த்தைகளில் கவனமாக இருக்கிறார் ஆரவ். ஏனென்றால் ஓவியா மூலம் வெற்றியும், அதே சமயத்தில் வெளி உலகில் தனது இமேஜும் முக்கியம் எனும் ஆண் மனநிலைத்தான் காரணம். ஒவியாக்குத் தேவை அவள் அன்பைக் கொண்டாடும் நபர். ஆனால், ஆரவ்வின் தோற்றமும் மற்றவர்கள் அவர் மீது ஈர்ப்புடன் இருப்பதும் பெண்களிடம் மைன்ட் கேம் விளையாடுவதற்கான துணிச்சலைத் தந்துள்ளது. அதாவது, கமிட்மென்ட் இல்லாமல் ரகசிய காதல்களுக்கு ஆரவ் தயார். அதனால் துளி இமேஜோ, சக மனிதர்களின் நட்போ, தன் வெற்றியோ பாதிக்கப்பட்டு விடக்கூடாது.
 
பெண்கள் அணி திடீரென்று ஒவியாவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுக்கிறது. இந்த முடிவால் தனக்கு என்ன கிடைக்கும் என்று ஒவ்வொருவரும் கணக்கிடுவது போல்தான் இருக்கிறது. இப்போது ஓவியாவை விட்டு விலகும் ஆரவை 'பிக் பாஸ்' ஓவியாவிடம் பேச சொல்லுகிறார். இதன் மூலம் நிகழ்ச்சியின் பரபரப்பு நுணுக்கமாகத் தூண்டிவிடப்படுகிறது. மைன்ட் கேம் விளையாடப்படுகிறது. ஓருவர் இன்னொருவராகப் பேசச் சொன்னது, பேசப்படும் நபரின் ஈகோவில் பெட்ரோலை ஊற்றியதுபோல ஆகிவிட்டது.

பொதுவாக, ஆண்களுக்கு வேட்டையாடும் குணம் உண்டு. தானாய் கிடைக்கும் எதுவும் அவர்களை ஈர்க்காது. தேடி அலைந்து, வேட்டையாடிக் கிடைக்கும் விஷயத்தையே கொண்டாடுவார்கள். அதுதான் ஓவியா - ஆரவ் விஷயத்தில் நடக்கிறது. திரில் இல்லாத காதல் ஆரவ்க்குச் சலிப்பு ஏற்படுத்துகிறது. ஆரவ் விரும்பியிருந்தாலும், ஓவியா துரத்துவதால் வெறுப்புதான் வருமே ஒழிய காதல் வராது. சாதாரண ப்ளே பாயான ஆரவ் வில்லனாகும் வாய்ப்பு ஏற்படலாம்.
 
இந்த விஷயத்தில் ஓவியாவின் மனம் உடைந்துவிடும் அபாயம் உண்டு. புறக்கணிப்பை இத்தனை பெரிய இடத்தில் இருக்கும் அவரின் மனம் ஏற்காது. 'அடைந்தே தீர்' என்று மனம் சொல்லும். எவ்வளவுதான் பக்குவமாக இருப்பவர் என்றாலும் புறக்கணிக்கப்படும்போது அந்தப் பக்குவம் உதவாது. மற்றவர்கள் ஏதேனும் சொல்லச் சொல்ல வைராக்கியம் வரும். 'ஆரவ் எனக்கானவன் பார்' என்று இன்னும் அருகே செல்ல, ஆரவ் தூரமாய்ச் செல்ல இன்னும் மனம் உடையும். கவுன்சலிங் உடனடியாகத் தேவைப்படும். ஏனென்றால் தன் பிரச்னையைத் தெளிவாக மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை ஓவியாவிடம் இல்லை. அதனால்தான் ஒட்டுமொத்த வீடுமே தன்னை ஒதுக்கி வைத்தபோதும், கமல்ஹாசன் காட்டிய குறும்படத்திற்காக ஓவியா காத்திருக்க வேண்டியிருந்தது.

இப்போதைய நிலையில், உடனடியாக ஆரவ் அல்லது ஓவியாவை வீட்டை விட்டு வெளியேற்றி, அவரின் பழைய பக்குவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். நாளை என்ன நடக்குமோ, எப்படித் திரும்புமோ.. ஆனால் யாரோ ஒருவர் மட்டும் பிக் பாஸ் வீட்டினுள் இருப்பது மட்டுமே இருவருக்கும் நல்லது. 

எனவே, ஒவியா மனதைக் காப்பாற்ற அவர் உள்ளே இருப்பதும், ஆரவ் வெளியே இருப்பதும் நல்லது. போன் தொடர்புகூட இல்லாமல் இருந்தால் விரைவில் மனம் மாறி விடும்.                

அடுத்த கட்டுரைக்கு