Published:Updated:

ஓவியா சார்பாக இவற்றையெல்லாம் நாளை கேட்பாரா கமல்? #BiggBossTamil #VikatanExclusive

ஓவியா சார்பாக இவற்றையெல்லாம் நாளை கேட்பாரா கமல்? #BiggBossTamil #VikatanExclusive
ஓவியா சார்பாக இவற்றையெல்லாம் நாளை கேட்பாரா கமல்? #BiggBossTamil #VikatanExclusive

ஓவியா சார்பாக இவற்றையெல்லாம் நாளை கேட்பாரா கமல்? #BiggBossTamil #VikatanExclusive

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களும் சனி ஞாயிறுகளை எதிர்பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம், அந்த வார நிகழ்வுகளைக் குறித்து கமல் சாதுர்யமான கேள்விகளை அவர்கள் முன் வைப்பதும், அதன்மூலம் பார்வையாளர்களையும் ‘நெனைச்சேன். கரெக்டா கேட்டுட்டார் பாரு’ என்று சொல்ல வைப்பதும்தான். இந்த வாரம் ஓவியா ஆதரவாளார்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். காரணம், ஓவியா தன் காதல் பிரச்னை காரணமாக நடந்துகொள்ளும் விதம். ஓவியாவின் சார்பாக கமல் சிலவற்றைக் கேட்டால் நன்றாகத்தான் இருக்கும். யாரிடம் என்ன கேட்கலாம்?  

ரைசா:

தனது பெர்சனலை ஓவியா பேசிவிட்டார் என்பது ரைசாவின் கோபம். தப்புதான். ஆனால், ஓவியா ஒருமுறை சொல்லி, ரைசாவின் வேண்டுகோளுக்கிணங்க அது எடிட்டும் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் திரும்பத் திரும்ப ரைசா  அதைப் பற்றிப் பலமுறை பேசிவிட்டார். அது ஓகேவா?  

ஜூலி:

ஆரவ்விடம் போனவாரம் ‘ஏன் பனிஷ்மென்ட்களை இளையவர்களுக்கே கொடுத்தீர்கள்? பெரியவர்களிடம் மரியாதை இருக்கலாம்; பயம் இருக்க வேண்டியதில்லை’ என்றார். ஜூலியிடமும் இதைச் சொல்லலாம். குறிப்பிட்ட சிலர் பின்னால் இவர் ஒண்டிக்கொண்டே இருப்பது ஏன் என்று கேட்கலாம். போதாதற்கு மசாஜ் செய்துகொண்டே இருக்கிறார். ‘அந்தாக்‌ஷரி பிடிக்கும்’ என்று பாடிய இவர் ‘கொஞ்ச நேரம் உன்னைக் கொல்லட்டா’ என்று ஓவியா பாடிச்சென்றதை சக்தியிடம் கூறும்போது ‘கைய நீட்டி மெரட்டீட்டே சொன்னா’ என்றார். ’இன்னொரு குறும்படம் போடவா?’ என்று கேளுங்கள். கமலிடம் கொடுத்த வாக்குறுதியை மீறி, இந்த வாரமும் ஓவியாவைப் பற்றிப் புறம் பேசுவதும், அவரை ஒதுக்குவதுமாகவே கழிக்கிறார். ஏன்?

ஆரவ்:

இவர்மீதான காதல்தான் ஓவியாவின் பிரச்னை. பிக் பாஸ் சொன்னபின்னாலும், அவர் ஏன் ஓவியாவிடம் பேசாமல் எல்லோரிடமும் ஓவியாவைப் பற்றிப் புகார் சொல்லிக்கொண்டிருக்கிறார்? உங்களுக்கு ஓவியாவால் பெயர் கெடும் என்று தவிர்க்கும் நீங்கள், ஓவியாவைப் பற்றி காயத்ரி, ஜூலி, ரைசாவிடம் பேசிக்கொண்டே இருப்பது ஒளிபரப்பாவதால், உங்களால் ஓவியாவுக்குப் பெயர்கெடும் என்று ஏன் யோசிக்கவில்லை? 

சினேகன்:

ஞாயிறன்று சினேகன்,  சக்தி - காயத்ரியிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது  ”ஓவியாவைக் காப்பாத்தறது சேனலும் பிக்பாஸ் க்ரூப்பும்கறது யாருக்கும் தெரியாது” என்றார். அப்படியா என்ன? அப்ப ரசிகர்கள் ஓட்டுப் போட்டு அவர் தப்பிக்கலையா சார்? ஒரு தலைவராக இருக்கும் சினேகன்,  ‘ஓவியா தன்  பெர்சனலைப் பேசிவிட்டார்’ என்று கோபமாக இருக்கும்போது ‘நான் அவளைப் பத்தி நல்லதுதானே சொன்னேன். அவளைப் பத்தி எல்லாம் எனக்குத் தெரியும். அவ பண்ணதுதப்புதான்’ என்று ஏன் ஏத்திவிட்டது தப்புதானே?

இவர் பேசும்போது ஓவியா ‘ஆமால்ல.. தப்பு என் மேலதான்ல?’ என்று புரிந்து கொள்கிறார்தானே? அப்படி இருக்க, காயத்ரி, சக்தியிடம் ‘இனிமே ஓவியாவை ஒதுக்கறது, அவங்களை கார்னர் பண்றது வேண்டாம். அதுதான் அவங்களை டிஸ்டர்ப் பண்ணுது. நாம எல்லாரும் அவங்களுக்கு சப்போர்ட்டா இருப்போம்’ என்று கண்டிப்பாக ஏன் சொல்ல முடியவில்லை? ஓவியா சினேகன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்ற வேண்டுமல்லவா?

காயத்ரி:

‘கமல் சார், இவங்களைக் கேள்வியே கேட்கறதில்லை’ என்ற குற்றச்சாட்டை இந்தவாரம் தீர்த்துவைப்பார் என்று நம்புகிறோம். காயத்ரியிடம் நிறைய கேட்கலாம்.

ஓவியாவைக் கண்காணிப்பதையும், அவரைப் பற்றி எல்லோரிடமும் பேசிக்கொண்டிருப்பதையும் தவிர வேறு எந்த வேலையும் இல்லையா இவருக்கு? 

இவர் ஓவியாவைப் பற்றி எல்லோரிடமும் பேசியதைக் குறும்படமாகப் போடலாமே?

இவர் உபயோகப்படுத்தும் வார்த்தைகளெல்லாம் ஓகே ரகமா?  ஓவியா சின்க்கில் போட்ட ஸ்பூனை அப்படித் தூக்கி எறிந்தது ஓகேவா? உங்கள் கோபத்தை எல்லோரிடமும் புரணி பேசித் தீர்க்கிறீர்கள். ஓவியா நேரடியாக யாரிடம் கோபமோ, அவரிடம் மட்டும்தானே கோபப்படுகிறார்?

பிந்து மாதவியிடம் ‘இப்ப பாரு.. அவ கேமரா முன்னாடி ஆடுவா’ என்ற இவர்தான், கடந்த நான்கு நாள்களாக காலைப் பாடலுக்கு ஆடிக்கொண்டிருக்கிறார்.

பிந்து மாதவி பரணி பற்றிக் கேட்டபோது ‘விழுந்தா என்ன, கால் உடையும் அவ்ளதானே’ என்று எப்படிச் சொல்ல முடிகிறது இவரால்?

ஜூலி அந்த வீட்டில் காயத்ரிக்கு யார்? ஏன் எப்போதும் ஜூலியை ஓர் அடிமைபோல நடத்துகிறார்?

ஜூலியை ஆரம்பத்தில் ‘இனி எங்கிட்ட பேசின... அவ்ளதான்’ என்று சொன்னவர், இன்றைக்கு ஜூலிக்கு நட்பாக இருக்கிறார். ஆனால் ஏன் ஆரம்பத்திலிருந்தே ஓவியாவை எதிரியாகவே பார்க்கிறார்? 

இவற்றையெல்லாம் கமல் கேட்பார் என்று நம்புவோம். முதிர்ச்சியுடன் நடந்துகொண்ட வையாபுரியைப் பாராட்டியே ஆகவேண்டும். அதுதவிர, இந்த வாரம் ஏன் தலைவர் தேர்ந்தெடுக்கவில்லை என்று தெரியவில்லை. அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டு, இன்னொன்றும் கமல் பொதுவாகச் சொல்லலாம்.

ஆடியன்ஸ் ஓவியாவுக்குக் கைதட்டுவதைக் கேட்டாலே காயத்ரி, சக்தி ஆகியோர் ஓவியா எதிர்ப்பு நிலைக்குப் போய்விடுகிறார்கள். எல்லோரிடமும் ஒன்று சொல்லலாம். வாராவாரம் இவர்கள் நாமினேஷன் செய்தாலும், ஓவியாவுக்கு மக்கள் ஓட்டு போடுவதிலிருந்து அவர் பக்கம் ஏதோ நியாயம் இருக்கிறது என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை? ஓவியாவை எதிர்ப்பதை விட்டுவிட்டு, இணக்கமாகப் போனாலே போதுமே? அன்பு மட்டுமே அவர் வீக்னெஸ் எனும்போது, அந்த அன்பைக் கொடுத்து அவரை அமைதிப்படுத்துவதில் என்ன தயக்கம் இவர்களுக்கு?  

எல்லாம் சரி. ஆனால் ஓவியா இருக்கும் மனநிலையில் ‘கமல் சார், எனக்கு டயர்டா இருக்கு. நான் தூங்கப்போறேன். நாளைக்கு உங்ககிட்ட பேசறேன்’ என்று சொன்னாலும் சொல்லலாம். அதற்கும் தயாராக இருங்கள் கமல் சார்...  ப்ளீஸ்.

வேறு என்னவெல்லாம் கமல் கேட்கலாம் என்று உங்கள் யோசனையை கமென்டில் சொல்லுங்களேன்..

அடுத்த கட்டுரைக்கு