Published:Updated:

''எங்க கலாட்டா ஜாலி கேங்க் இதான்!'' - ஜாக்குலின், ரேகா குமார், ரச்சிதா, வைஷாலியின் தம்ஸ்-அப் #FriendshipDay

வெ.வித்யா காயத்ரி
''எங்க கலாட்டா ஜாலி கேங்க் இதான்!'' -  ஜாக்குலின், ரேகா குமார், ரச்சிதா, வைஷாலியின் தம்ஸ்-அப் #FriendshipDay
''எங்க கலாட்டா ஜாலி கேங்க் இதான்!'' - ஜாக்குலின், ரேகா குமார், ரச்சிதா, வைஷாலியின் தம்ஸ்-அப் #FriendshipDay

சீரியலில் ஃப்ரெண்டா, வில்லியா, ஹீரோயினா வந்து கலக்கும் நடிகைகளிடம் 'உங்க ஃப்ரெண்ட் பத்தி சொல்லுங்க'' என்றது தான் தாமதம்.. நெகிழ்வாக, மகிழ்வாக, முகம் கொள்ளா சிரிப்புடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். 

ரேகா குமார், 'தெய்வமகள்' சீரியல் 

''ஃப்ரெண்ட்ஸ் என் வாழ்க்கையின் ஓர் அங்கம். எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்கள்ல குறிப்பிட்டு சொல்லணும்னா என் தோழி அனுவைச் சொல்லலாம். அவ என் பெஸ்ட் ஃப்ரெண்ட். ஸ்கூல் டேஸ்ல அறிமுகமான தோழி. அங்க ஆரம்பிச்ச நட்பு அப்படியே காலேஜ் வரைக்கும் டிராவல் ஆச்சு, இப்ப வரைக்கும் நாங்க திக் ஃப்ரெண்ட்ஸா இருக்கிறதுக்குக் காரணம் அவளோட குணம். 

எங்க ரெண்டு பேர்ல எனக்குத்தான் முதல்ல கல்யாணம் ஆச்சு. அதுக்கப்புறம்தான் அவளுக்குக் கல்யாணம் ஆச்சு. குடும்பவாழ்க்கையிலும் சரி, நடிப்புத்துறையிலும் சரி எனக்குக் கஷ்டம் வரும் போதெல்லாம் என் மனசு தேடுறது அனுவைத்தான். 

இப்பவும் நான் வெளியூர் போறதா இருந்தா என் பொண்ணை தன் மக மாதிரி அத்தனை பொறுப்பா பார்த்துப்பா அனு. அவளை நம்பி என் பொண்ணை எத்தனை நாள் வேணும்னாலும் விட்டுட்டுப் போகலாம். அதே மாதிரி எனக்கு அனுவோட பசங்க என் பசங்க மாதிரி. ஹேப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே பேபி அனு.''. 

வைஷாலி தனிகா, 'மாப்பிள்ளை' சீரியல்

''என்னை பொருத்தவரைக்கும் 'ஃப்ரெண்டப் போல யாரு மச்சான்'' பாட்டு என் அத்தனை ஃப்ரெண்ட்ஸுக்கும் பொருந்தும். அவங்கள்ல முக்கியமானவ கீதா செல்லம். அவளும் நானும் குட்டியூண்டு வயசுல இருந்து ஃப்ரெண்ட்ஸ். அப்படி வளர ஆரம்பிச்ச எங்க நட்பு செம திக்கானது, நான் மீடியாவுக்குள்ள என்டர் ஆக அவ சிக்னல் கொடுத்தப்பதான். குளோஸ்ஃப்ரெண்ட்ஸ்னா சண்டை போடாம சமத்துக்குட்டியா இருப்போம்னு நினைக்காதீங்க. ரெண்டு பேரும் டெரரா சண்டைபோடுவோம். ஆனா ஜீரோ பெர்சன்ட்கூட ஈகோ  கிடையாது. யார் மேல தப்பு இருக்கோ... அவங்க சட்டுனு சாரிசொல்லிடுவோம். 

டெய்லி வேலைக்குப் போற மாதிரி அவ கூட போன்ல பேசுறதும் எனக்கு தினப்படி நடக்கிற சந்தோஷமான வேலைல ஒண்ணு. எனக்கு ஒண்ணுன்னா சட்டுனு வந்து நிக்கிறது என் செல்லம்மாதான் இருப்பா. ஹேப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே மச்சி'' 

ஜாக்குலின், தொகுப்பாளினி 

''ஒருத்தர் ரெண்டு பேரில்ல... அஞ்சு பேர் கொண்ட கலக்கல் கானா கேங் எங்களோடது. ஒட்டுமொத்த கேங்கலயும் ஒருபொண்ணுகூட கிடையாது. அத்தனையும் பாய்ஸ்தான். என்னை பொண்ணா அவங்க நினைச்சதேயில்ல. டேய்னு கூப்பிட்டு என்னை அவங்கள்ல ஒருத்தரா ட்ரீட் பண்றதே எனக்கு அவ்வளவு ஹேப்பியா இருக்கும். அவங்கக்கூட இருக்கும்போது சிரிச்சுசிரிச்சு என் வயிறு புண்ணாப்போகிடும்னா பார்த்துக்கோங்க. மனக் கஷ்டம்னு மட்டும் சொல்லிட்டா போதும். 'விடுமச்சி'னு சொல்லிட்டு அதைப் பத்தி பேசாம என்னை டைவர்ட் பண்ணி, அந்தக் கஷ்டத்தையே மறக்கடிச்சிருவாங்க. எனக்கு அப்பா இல்ல. அம்மாவும் தம்பியும் ஊர்ல இருக்காங்க. இங்க நான் தனியாதான் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். ஆனா தனியானு ஜஸ்ட் வார்த்தையாதான் சொல்றேன். மனசளவுல நான் தனியாளுங்கிற எண்ணத்தை என் ஃப்ரெண்ட்ஸ் எனக்குவரவிட்டதே இல்ல. லவ் யூ கைஸ். 

ரச்சிதா, சரவணன் மீனாட்சி 

'' 'பூவெல்லாம் உன் வாசம்' படம் பார்த்திருக்கீங்களா? அந்தப் படத்தில் அஜித் - ஜோதிகா போலத்தான் நானும் வினயும். குட்டி குழந்தையா ஓடி விளையாடுறப்ப ஆரம்பிச்ச ஃப்ரெண்ட்ஷிப். ஒரே ஒரு விஷயம்... பூவெல்லாம் உன் வாசம் படம்மாதிரி எங்களுக்குள்ள காதல் மட்டும் உள்ள நுழையாம அழகான நட்பு தொடருது. 

அந்தப் படத்துல வர்ற மாதிரியே பக்கத்துவீடு. ஜன்னல் வழியே சாப்பாடு பரிமாகிறது, ரெண்டு குடும்பமும் பாசமாஇருக்கிறது, நாங்க ரெண்டுபேரும் ஒண்ணாவே காலேஜ் போறதுனு அத்தனை அழகா இருக்கும் எங்க ஃப்ரெண்ட்ஷிப். 

அடிக்கடி ரெண்டு பேரும் சண்டைப் போட்டுப்போம். அப்பலாம் என்னைச் சமாதானப்படுத்த எதையாவது வாங்கிக்கொடுத்திடுவான் வினய். என்னோட குளோஸ் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்தவன் இப்ப என் கணவர் தினேஷோட குளோஸ் ப்ரெண்ட்டா ஆகியிருக்கான். பெங்களூரூவுல ஒரு கம்பெனியில மேனேஜரா வேலை பார்க்கிற வினய்க்கு இந்த வருஷம் நாந்தான் முந்திகிட்டு ஃப்ரெண்ட்ஷிப் டே விஷ் பண்ணப்போறேன். ஹேப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே நண்பா'' என்றபடியே ஃப்ரெண்ட்ஷிப் டே கொண்டாட்டத்துக்குத் தயாரானார் ரச்சிதா