Published:Updated:

''கமல் சொல்லி கேட்கமாட்டேனு சொன்னா அவ அங்க இருக்கக்கூடாது!'' - காயத்ரி பற்றி கலா மாஸ்டர் #BiggBossTamil #VikatanExclusive

''கமல் சொல்லி கேட்கமாட்டேனு சொன்னா அவ அங்க இருக்கக்கூடாது!'' - காயத்ரி பற்றி கலா மாஸ்டர் #BiggBossTamil #VikatanExclusive
''கமல் சொல்லி கேட்கமாட்டேனு சொன்னா அவ அங்க இருக்கக்கூடாது!'' - காயத்ரி பற்றி கலா மாஸ்டர் #BiggBossTamil #VikatanExclusive

மீபத்தில், கலா மாஸ்டர் மற்றும் அவரின் அக்கா கிரிஜா (காயத்ரி அம்மா) இருவரும் இணைந்து நடிகர் கமல்ஹாசனை அவருடைய வீட்டில் சந்தித்ததாகவும், காயத்ரி குறித்துப் பேசியதாகவும் செய்தி பரவியது. இதுகுறித்து கலா மாஸ்டரிடம் பேசினோம்.

''நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு நீங்கள் சென்றீர்களா?'' 

''அப்படிச் செய்தி வந்த சமயத்தில் நான் ஊரிலேயே இல்லை. ஒரு டான்ஸ் ஷோ வேலைக்காக வெளியூரில் இருந்தேன். அப்படியிருக்க நான் எப்படி அவர் வீட்டுக்குப் போயிருக்க முடியும். தவிர, அவரைச் சந்தித்துப் பேசவேண்டிய அவசியம் என்ன? நான் ரஜினியின் தீவிர ரசிகை. கமல் வீட்டுக்கு எதுக்குப் போகப்போறேன்?'' என்றவர் காயத்ரியைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

''காயத்ரியைப் பொறுத்தவரைக்கும் அவளை நான் குழந்தையிலேயிருந்தே பார்த்துட்டு வர்றேன். பொதுவா காயத்ரி கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனதிலிருந்து அவளோட இன்னொரு முகத்தைப் பார்க்கிறேன். அவ பண்றது எல்லாம் தப்பு மேல தப்பா இருக்கு... சரி, நேர்ல வந்ததும் பேசிக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம். ஆனா, நேத்தைய எபிசோட்ல அவ தப்பா பேசின வார்த்தை பத்தி கமல் சார் கேட்கிறார். அப்பவும் அவ அதைத் தப்பில்லைன்னு சொல்றா. அம்மா அப்பாவே தப்பு பண்ணினாலும், தப்பு தப்புதான். அதுவும் வயதிலும், நடிப்பிலும் பெரியவரான கமல் கேட்கிறப்ப காயத்ரி அப்படி ரியாக்ட் பண்ணினது சுத்தமா பிடிக்கலை. 

நான் கமல் சார்கூட வொர்க் பண்ணினதில்லை. ஆனா அவர் மேல மதிப்பும் மரியாதையும் நிறைய இருக்கு. காயத்ரி இத்தனை நாள் பண்ணின தப்பைப் பத்தி நான் இதுவரைக்கும் வாய் தொறக்கலை. ஏன்னா கலா மாஸ்டரே தப்பு சொல்லிட்டாங்கனு வந்திரக்கூடாதுனு பொறுமையா இருந்தேன். 

ஆனா இதுக்குமேல அமைதியா இருந்தா என் மேல தப்பாகிடும். இன்னைக்கு ஒரு ட்ரைலர் பார்த்தேன். அதுல காயத்ரி 'கமல் சார் கேட்கிற கேள்விகள் எல்லாம் எனக்கு டிஸ்கரேஜிங்கா இருக்கு. கமல் சார் வாயால 'நீ கெட்ட வார்த்தை பேசற, கெட்ட வார்த்தை பேசற'னு சொல்றது டிஸ்கரேஜ்மென்டா இருக்கு. எனக்கு அந்த மாதிரி இமேஜ் தேவையில்ல. எனக்கு அது வேண்டாம். என்னை டிஜ்கரேஜ் பண்றது எனக்குப் பிடிக்காது. என்னை கரெக்ட் பண்றதுக்கு எங்கம்மாவுக்கு மட்டும்தான் உரிமை இருக்கு''னு பேசறா. 

அம்மா சொல்றதைத்தான் கேட்பேனு சொன்னா, அதுக்கு அவ அம்மா வீட்ல இருக்கணும். பிக்பாஸ் வீட்ல இருந்துட்டு அப்படிப் பேசக்கூடாது. நேத்து கமல் சார் அவகிட்ட கெட்ட வார்த்தைப் பிரயோகம் பத்தி கேட்கிறப்ப ரொம்ப சந்தோஷப்பட்டு 'நல்லா கேளுங்க சார். நல்லா கேளுங்க'னு டிவியைப் பார்த்து சொல்லிட்டிருந்தேன். 
இத்தனைக்கும் கமல் ரகு மாஸ்டரோட உயிர்த் தோழர். இந்தியாவை தன் நடிப்பால் ஆளக்கூடிய மனுஷன் 'நீங்க கெட்ட வார்த்தை பேசறீங்க'னு சொன்னா என்ன அர்த்தம்... 

அவர் நடக்காத ஒண்ணைப் பத்தி பேசலியே... நீங்க பேசுற வார்த்தையைத் தப்புனு சுட்டிக் காட்டுறார். 
காயத்ரி வீட்டுக்கு வந்தா நான் கண்டிப்பா பேச மாட்டேன். ஏன்னா அவ நான் பார்த்த பொண்ணு இல்ல. எங்க வீட்டுல இல்லாத ஒரு பொண்ணாதான் அவளை நான் பார்க்கிறேன். சொன்னா நம்ப மாட்டீங்க. கடந்த ஒரு மாசமா பிக் பாஸ் காயத்ரியைப் பார்த்து இவளா நம்ம பொண்ணுனு மனசுக்குள்ள கேட்டுட்டே இருக்கேன். 

மனசு உறுத்துது. இதைப் பத்தி நான் ஏன் இவ்வளவு நாளா பேசலைன்னா, எனக்கே அவ நடந்துக்கிற விஷயம் ஷாக்கிங்கா இருக்கு. காயத்ரி விஷயத்துல நான் கமலுக்கு மட்டும்தான் சப்போர்ட் பண்ணுவேன். 

வெளியில் வந்து எல்லோரும் வேற வேற இடத்துக்குப் போய்ட்டாங்க. ஆனா ஜூலி பாவம். ரொம்ப ஏழைப் பொண்ணு. அந்தப் பொண்ணோட வாழ்க்கை இனிமேதான் ஆரம்பிக்கப்போகுது. அந்தப் பொண்ணுதான் நேர்மையா மன்னிப்பு கேட்குதே. கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பொண்ணு அவ கேரக்டர மாத்திப்பா. கமல் சார் பேச்சுக்கு மரியாதை கொடுங்க. அந்தப் பொண்ண நிம்மதியா வாழவிடுங்க. இந்த உலகத்துல யார்தான் தப்புப் பண்ணல. நம்ம வீட்டுல ஒருத்தரா மன்னிச்சி விட்டுருவோம்''.

'' 'பிக் பாஸ்' பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?'' 

''நான் முதல் எபிசோடு பார்த்தபோதே, 'இப்படி ஏசி வீட்டுக்குள் சும்மா இருக்க விடுவதற்குப் பதிலாக, ஒரு கிராமத்து நிலத்தில் விவசாயம் பண்ணச் சொல்லியிருக்கலாம். அது மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கும்' என்றுதான் நினைத்தேன். இந்த நிகழ்ச்சியில் என்ன கலாசாரம் இருக்குனு தெரியலை''. 

''ஓவியாவுக்குக் கிடைத்திருக்கும் சப்போர்ட் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''ஓவியாவும் எனக்கு நல்ல ஃபிரெண்ட்டுதான். அவங்களை எனக்கு நல்லா தெரியும். நான் டான்ஸ் நிகழ்ச்சி நடத்திட்டிருந்தப்போ, ஓவியா, இனியா, பூர்ணா போன்றவர்களை எப்போ கூப்பிட்டாலும் வருவாங்க. 'பிக் பாஸ்' வீட்டின் சூழல் எப்படினு தெரியலை. மத்தபடி எல்லோருமே நல்லவங்கதான். தவறான விஷயங்களாக இருந்தால், அதைத் திருத்துவதற்கான வழியைச் சொல்றதுதானே நல்லது. அதை மேலும் தவறாகக் காண்பிப்பது சரியில்லை.'' 

''ஜூலி பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?'' 

''ஜூலி மட்டுமல்ல அங்க இருக்கும் எல்லோருமே நல்லவங்கதான். ஜூலிக்கு 24 வயசுதான் ஆகுது. மெச்சூரிட்டி குறைவாகத்தானே இருக்கும். பாவம், அவங்களுக்குப் பேசத் தெரியலை. தோல் உரிய உரிய கேரக்டர் மாறிக்கிட்டே இருக்கும். அப்படித்தான் ஒவ்வொரு மனுஷரும் வளரும்போது, ஒவ்வொரு விஷயத்தை அனுபவிச்சுக் கத்துக்க ஆரம்பிப்பாங்க. அதுதான் நிதர்சனம்.'' 

'' 'பிக் பாஸ்' வீட்டில் இருப்பவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறீங்க?'' 

''கமல் சார் எவ்வளவு பெரிய ஆள். சினிமா மட்டுமில்லாமல் பல விஷயங்களைக் கரைத்துக் குடித்தவர். அப்படியிருக்கும்போது அவர் முன்னாடி கால் மேல் கால்போட்டு உட்காருவது மரியாதையற்ற செயல். பெரியவங்களின் வயசுக்கும் அனுபவத்துக்கும் மரியாதை கொடுக்கணும்னு நினைக்கிறேன். அங்கே இருக்கிறவங்க அதைச் செய்தால், இன்னும் மதிப்பும் மரியாதையும் கூடும். அதைத்தான் நான் ஃபீல் பண்றேன்.'' 

''காயத்ரியைப் பார்க்கணும்னு முயற்சி செய்தீங்களா?'' 

''பத்து நாள் முன்னாடி என் அக்கா கிரிஜாவுக்கு வயித்து வலி வந்தது. ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணோம். அதைக்  காயத்ரிக்குத் தெரிவிக்கணும்னு பலரும் சொன்னாங்க. அப்பவும் 'வேண்டாம், நாமே பார்த்துக்கலாம்'னு சொல்லிட்டேன் . காயத்ரி இதைக் கேள்விப்பட்டா ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க. அதனால் தவிர்த்துட்டோம். ஸோ, எந்த வகையிலும் அவரைப் பார்க்க முயற்சி செய்யலை.''