Published:Updated:

''சீரியலில் முத்தக் காட்சியில் நடிப்பது எப்படி?"- 'மாப்பிள்ளை' ஜனனியின் பதில் என்ன?

''சீரியலில் முத்தக் காட்சியில் நடிப்பது எப்படி?"- 'மாப்பிள்ளை' ஜனனியின் பதில் என்ன?
''சீரியலில் முத்தக் காட்சியில் நடிப்பது எப்படி?"- 'மாப்பிள்ளை' ஜனனியின் பதில் என்ன?

''சீரியலில் முத்தக் காட்சியில் நடிப்பது எப்படி?"- 'மாப்பிள்ளை' ஜனனியின் பதில் என்ன?

”மாப்பிள்ளை” சீரியலின் மூலம் முதன்முதலாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர் ஜனனி. முதல் சீரியல் என்றே தெரியாத அளவுக்கு நடிப்பில் கலக்கி வருகிறார். சீரியல், மாடலிங் என பிஸியாக வலம் வரும் அவரோடு ஒரு ஜாலி மீட்.

உங்களைப் பற்றி..?

''என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். அப்பா ஒரு ஸ்கூல்ல டிரான்ஸ்போர்ட் மேனேஜரா இருக்காங்க. அம்மா காஸ்டியூம் டிசைனர். சீரியல்ல நான் போடுற எல்லா டிரெஸ்ஸும் அம்மா டிசைன் பண்ணதுதான். அக்கா கல்யாணம் ஆகி பொள்ளாச்சில செட்டில் ஆகிட்டாங்க''.

அம்மாவோட பிசினஸ்ல நீங்களும் ஒரு பார்ட்னராமே..?

''ஆமாங்க. நான்தான் அம்மாக்கு ஆன்லைன்ல பிசினஸ் பண்றதுக்கான ஐடியாவைக் கொடுத்தேன். அப்படியே ஃபேஸ்புக்ல ஒரு பேஜ் கிரியேட் பண்ணி கொடுத்தேன். காஸ்டியூம் டிசைனோட சேர்த்து மணப் பொண்ணுக்குத் தேவையான ஜுவல் செட், மேக்கப்னு எல்லாமே பண்றோம். அம்மா டிசைனிங் பண்ணுவாங்க. நான் மேக்கப் பண்ணுவேன்''.

பியூட்டி கோர்ஸ் படிச்சிருக்கீங்களா..?

''மொத்தமா பியூட்டி கோர்ஸ் படிக்கல. மேக்கப் கோர்ஸ் மட்டும் படிச்சிருக்கேன். எனக்கு மேக்கப் பண்றது ரொம்பப் பிடிக்கும். அதனால நான் விரும்பிப் படிச்சேன்''.

மீடியா வாய்ப்பு எப்படி கிடைச்சது..?

''நான் பிளஸ் டூ முடிச்சதுமே கோயம்புத்தூர்ல ஒரு லோக்கல் சேனல்ல வீஜே வாய்ப்புக் கிடைச்சது. அதைப் பண்ணிட்டு இருக்கும் போதே மாடலிங் வாய்ப்பு  வர ஆரம்பிச்சது. கணபதி சில்க்ஸ், ஜுவல் ஒன் மாதிரி சில நிறுவனங்களுக்கு மாடலிங் பண்ணிருக்கேன். அதுக்கப்புறம் இதுக்கெல்லாம் பிரேக் கொடுத்துட்டு ஐ.டி கம்பெனியில வேலை பார்த்தேன். அப்பவும் ஃப்ரீ டைம்ல மாடலிங், காம்பயரிங் பண்ணிட்டு  இருந்தேன். ஆனா எனக்கு அதுல எல்லாம் திருப்தியே இல்ல. அப்போதான் விஜய் டி.வியில சீரியல் வாய்ப்பு கிடைச்சது. உடனே ஒத்துக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சிட்டேன்''.

சீரியல்ல முத்தக் காட்சியில நடிக்கிறது எப்படி?

'' கலாய்க்கிறீங்களா?'' என்னைப் பொறுத்தவரைக்கும், டைரக்டர் கொடுக்கிற காட்சிகளை உருப்படியா நடிக்கணும். படங்கள்ல எப்படி முத்தக்காட்சியை பார்க்குறீங்களோ அப்படிதான் சீரியல்லயும். ஆனா, மக்கள் இதுவரை சீரியல்ல முத்தக்காட்சியை பார்க்காததால இதைப் பெருசா பேசுறாங்க. நானும், கமலும் எப்பவும் தப்பான எண்ணத்தோட ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டதும், உணர்ந்துகிட்டதும் இல்ல. நாங்க அந்தக் கதாபாத்திரத்துக்குத்தான் உயிர் கொடுக்குறோம். இது எனக்குப் பெரிய விஷயமா தெரியல''.  

நிஜத்தில் ஜனனி எப்படி..?

''நீங்க சீரியல்ல பார்க்குற ஜனனிக்கும் நேர்ல பார்க்குற ஜனனிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. ஆனா, சீரியல்ல பார்க்கிற ஜனனிக்கு லவ் இருந்துச்சு. எனக்கு லவ்லாம் இல்ல. அதே மாதிரி நான் ரொம்பவே போல்டான பொண்ணு''.

படங்கள்ல நடிச்ச அனுபவம்..?

''விஷ்ணு விஷால், ரெஜினா நடிக்குற  “சிலுக்குவார்பட்டி சிங்கம்”  படத்துல ரெஜினாக்கு ஃப்ரண்டா நடிச்சிருக்கேன். அதே மாதிரி “ஏமாளி”னு ஒரு படத்துல ஹீரோயின் ஃப்ரண்டா நடிச்சிருக்கேன். ஆனா, எனக்கு சீரியல்ல நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு. ஏன்னா எல்லார் வீட்டுக்குள்ளேயும் போகக்கூடிய சான்ஸ் யாருக்குக் கிடைக்கும் சொல்லுங்க. எனக்கு அது பிடிச்சிருக்கு. இனிமே வெள்ளித்திரையில பேசப்படுற கதாபாத்திரம் கிடைச்சா மட்டும்தான் பண்றதா இருக்கேன்''.

சீரியல்ல உங்களுடைய பிளஸ்னு நீங்க நினைக்கிறது..?

''டைரக்டர் என்ன சொன்னாலும் தயங்காம தைரியமா நடிப்பேன். அதேமாதிரி “மாப்பிள்ளை” சீரியல்ல அந்த கேரக்டருடைய பெயரும் ஜனனி, அதுக்கு நாந்தான் வாய்ஸ் கொடுத்திருக்கேன். அதைக் கேட்டுட்டு நிறைய பேர், 'உங்கக் குரல் நல்லா இருக்கு மேடம்'னு புகழ்வாங்க. என் குரலை பாதுகாக்க தினமும் தேன் குடிப்பேன். சளிப் பிடிச்சாக்கூட ரொம்ப ஃபீல் பண்ணுவேன். எனக்கு என் குரல்தான் பிளஸ்''.

நெக்ஸ்ட் பிளான்..?

சீரியல்ல தான் நடிப்பேன். இப்போ செகண்ட் ஹீரோயின் ரோல் பண்றேன். இனிமே வாய்ப்பு கிடைச்சா மெயின் ரோல் பண்ணுவேன்.

அடுத்த கட்டுரைக்கு