Published:Updated:

பிக் பாஸ் கண்டுபிடிக்க முடியாத சினேகனின் வீடு எங்கே இருக்கு... தெரியுமா?

பிக் பாஸ் கண்டுபிடிக்க முடியாத சினேகனின் வீடு எங்கே இருக்கு... தெரியுமா?
பிக் பாஸ் கண்டுபிடிக்க முடியாத சினேகனின் வீடு எங்கே இருக்கு... தெரியுமா?

பிக் பாஸ் கண்டுபிடிக்க முடியாத சினேகனின் வீடு எங்கே இருக்கு... தெரியுமா?

`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் சினேகன் ஒரு முக்கியப் போட்டியாளர். ஆனால், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பார்ப்பவர்களுக்குத் தெரியுமா? ஒரு சிலருக்குத் தெரிந்தாலும், பலருக்குத் தெரியாது... ஏன்? கடந்த வாரம் `பிக் பாஸ்' டாஸ்கில், பிக் பாஸ் என்ன சொல்லியிருந்தார் தெரியுமா? `சினேகனின்  குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை' எனச் சொல்லியிருந்தார். ஆம், `பிக் பாஸ்' குழுவினரால் கண்டுப்பிடிக்க முடியாததை, நாம் இப்போது கண்டுபிடித்திருக்கிறோம்.

``நான் ஊருக்குப் போய் 15 வருஷங்களுக்குமேல் ஆச்சு. எனக்கு யாருமே இல்லை'' என்று `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார் சினேகன். உண்மையிலேயே அவருக்கு யாருமே இல்லையா? அவர் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்தவர். அவருடைய குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க, அவருடைய சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், புதுகரியப்பட்டி கிராமத்துக்குப் புறப்பட்டோம்...

தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்,  23-வது கிலோமீட்டரில் செங்கிப்பட்டிதான் சுற்றுவட்டார கிராமத்துக்கு லேண்ட்மார்க். செங்கிப்பட்டியில் இறங்கிய நமக்கு, ``புதுக்கரியப்பட்டியா... இப்படியே போங்க. மூணே மூணு கிலோமீட்டர்தான். ஆமாம்... யாரைப் பார்க்க?''

``இல்ல... சினேகன் வீட்டுக்கு.''

``யாரு... நம்ம செல்வத்து வீட்டுக்கா...''

``இல்லை, சினேகன் வீட்டுக்கு'' என்று இழுத்தோம். அவர் பெயர் இங்கே நாங்க கூப்பிடுறது செல்வம். இப்ப நீங்க அவரை இங்க பார்க்க முடியாது. சென்னைக்குப் போனா `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பார்க்கலாம்'' என்று சொன்னார்.

``அவங்க வீட்டுல வேற யாரும் இருக்காங்களா?''

``அவரு அண்ணன்கள் நான்கு பேர் இருக்கிறாங்க... போய்ப் பாருங்க'' என்று சொல்லி, வழி அனுப்பிவைத்தார்கள். 

சாலையின் இரு பக்கங்களிலும் கருவேலமரங்கள்தான். நீண்ட நாள்களுக்கு முன் போடப்பட்ட தார்  சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் மழைத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. `புதுகரியப்பட்டி, இன்னும் ஒரு கி.மீ' எனக் காட்டுகிறது மைல்கல். 

ஊரின் மையப் பகுதியில் நின்று... ``சினேகன் வீடு...'' எனக் கேட்க,

``ஃபர்ஸ்ட்ல இருக்கிற பெரிய மாடி வீடுதாங்க செல்வத்து அண்ணன் வீடு. வாங்க'' என்று அழைத்துப் போனவர் ``இதாங்க'' என்று சொன்னதும், நமக்கு ஆச்சர்யம். நான்கு வீடுகள் ஒரே இடத்தில், சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் முள்வேலியோடு பிரமிக்கவைக்கிறது.

``இந்த வீட்டை செல்வம் அண்ணன்தான் கட்டிச்சு. கீழே ரெண்டு வீடு. மேலே ரெண்டு வீடு. நாலு அண்ணன்களுக்குன்னு சொல்லித்தான் கட்டிச்சு . ஒரு அக்கா இருக்காங்க. அவங்கள இதே ஊர்லதான் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காங்க. ஊருக்குள்ள ஒரு ஓட்டு வீட்டுலதான் ஆரம்பத்துல இருந்தாங்க. அண்ணன்களுக்குக் கல்யாணம் ஆகியும் கூட்டுக்குடும்பமா இருந்ததால, புது வீடு கட்டினாலும் எல்லோரும் ஒண்ணா இருக்கணும்னுதான் செல்வத்தின் ஆசை.

ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் தோட்டம் அமைத்து, இயற்கையோடு வாழ்வதுதான் செல்வம் அபிப்பிராயம். ஊருக்கு வந்தால் சொந்த வீட்டில்தான் தங்க வேண்டும். அதுக்காகத்தான் இப்படி ப்ளான் செஞ்சு கட்டினார் செல்வம். பூர்வீக இடம் என்பதால், பார்த்துப் பார்த்துக் கட்டினாங்க. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓடித் திரிந்து விளாடிய ஊர்தான் இது. எங்க ஊர் தஞ்சாவூர் ஜில்லாவில் எங்கே போய்ச் சொன்னாலும், `சினேகன் ஊரா?'ன்னுதான் கேட்பாங்க. அவருடைய பாடல்களை நினைவுபடுத்துவாங்க. என்னான்னு தெரியலை. ஒரு அண்ணன் மட்டும் அந்த வீட்டுல இருக்கிறார்'' என்று ஷாக் கொடுத்தார்.

``செல்வம் அண்ணன், தஞ்சாவூர் வந்துச்சுன்னா எங்க ஊர்ல வந்து தங்கமாட்டார். தஞ்சாவூரிலேயே தங்கிடுவார். அண்ணன்கள் மேலே உள்ள பாசத்தால்தான் வீடு கட்டி கொடுத்திருக்கிறார். திருக்காட்டுப்பள்ளியில்தான் படிச்சிச்சு. இப்போ சென்னையிலே இருக்குது. நிறைய பாடல் எல்லாம் எழுதியிருக்கு. அம்மான்னா செல்வத்துக்கு அளவுகடந்த ப்ரியம். ஏன்னா, செல்வம்தான் கடக்குட்டி. உள்ளே போய்ப் பாருங்க'' என்றனர்.

உள்ளே சென்றால், சினேகனின் அப்பா சிவசங்கு, சட்டை இல்லாமல் வேட்டியோடு வெற்றிலைபாக்கை மென்றுகொண்டு நம்மை உற்று உற்றுப் பார்க்கிறார். ``வீட்டில் எல்லாரும் கோயிலுக்குப் போயிருக்காங்க. வந்துடுவாங்க. உட்காருங்க'' என்றார்.

அங்கிருந்து சினேகனின் பழைய ஓட்டு வீட்டுக்குச் சென்றோம். சிறிய ஓட்டு வீடு, கதவுகள் மூடப்பட்ட நிலையில் அப்படியே பாழடைந்து கிடக்கிறது. எங்கும் ஆட்டுப்புழுக்கைகள். சினேகன், ஜெயலலிதாவிடம் வாங்கிய விருது மட்டும் சுவரில் மாட்டப்பட்டு, கழற்றப்படாமல் பளிச்சிடுகிறது. ``இதுதான் சினேகன் வளர்ந்த வீடு. அவங்க அம்மா இங்கேதான் மறைந்தார்'' என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு