Published:Updated:

தனக்குத்தானே ட்ரிக்கர் ஆகிறாரா காயத்ரி?! என்ன நடக்கும்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (50-ம் நாள்) #BiggBossTamilUpdate

தனக்குத்தானே ட்ரிக்கர் ஆகிறாரா காயத்ரி?! என்ன நடக்கும்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (50-ம் நாள்) #BiggBossTamilUpdate

தனக்குத்தானே ட்ரிக்கர் ஆகிறாரா காயத்ரி?! என்ன நடக்கும்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (50-ம் நாள்) #BiggBossTamilUpdate

தனக்குத்தானே ட்ரிக்கர் ஆகிறாரா காயத்ரி?! என்ன நடக்கும்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (50-ம் நாள்) #BiggBossTamilUpdate

தனக்குத்தானே ட்ரிக்கர் ஆகிறாரா காயத்ரி?! என்ன நடக்கும்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (50-ம் நாள்) #BiggBossTamilUpdate

Published:Updated:
தனக்குத்தானே ட்ரிக்கர் ஆகிறாரா காயத்ரி?! என்ன நடக்கும்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (50-ம் நாள்) #BiggBossTamilUpdate

‘பிக் பாஸ்’ - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

பிக் பாஸ் விளையாட்டின் 50வது நாள் இது. இத்தனை விரைவில் ஐம்பது நாட்களை கடந்து விட்டது என்று ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை குறுகிய காலத்திற்குள் இந்த விளையாட்டு தமிழக மனங்களுக்குள் பிரிக்க முடியாதபடிக்கு ஆழமாக பதிந்து விட்டது. 

இதையொரு வம்பு நிகழ்ச்சியாக மட்டும் பார்க்காமல், போட்டியாளர்களின் குறைகாணும் வாய்ப்பாக மட்டும் பயன்படுத்தாமல் தம்மை நோக்கிய சுயபரிசீலனைக்கான பரிசோதனையாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும். பிக் பாஸ் விளையாட்டு வெற்றியோ, இல்லையோ.. அத்தனை மணி நேரங்களை செலவு செய்த பார்வையாளர்களின் வெற்றி இதுவாகத்தான் இருக்கும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐம்பதாவது நாள் மட்டுமல்ல, இன்று நாமினேஷன் நாளும் கூட. எனவே அது சார்ந்த எதிர்பார்ப்பும் இருக்கிறது. 

‘சக்தி’ விலகி விட்டதால் எதிர்பார்த்தபடியே காயத்ரி இன்று ருத்ரமூர்த்தியாக மாறினார். வழக்கத்தை விடவும் அதிகமாக தன்னை இன்று அம்பலப்படுத்திக் கொண்டது ஒரு துன்பியல் நாடகம். வாக்காள பெருமக்கள் உற்சாகமாக தயாராகி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

அதற்கு முன் - 

**

49வது நாளின் நிகழ்வுகள் இன்னமும் முடியவில்லை. காயத்ரி இன்னமும் அச்சத்தின், பதட்டத்தின் பிடியில் இருப்பது போலிருக்கிறார். எனவே அதுவே மிரட்டலாக வெளிவருகிறது. ‘என்னைக் கட்டுப்படுத்த சக்தியும் இல்லை. எனவே ரைசாவை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்கள். இல்லையெனில் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது’ என்கிறார். ஏறத்தாழ இது மிரட்டல்தான். ஆனால் இது உண்மையில் அவருடைய உள்ளார்ந்த அச்சத்தின் வெளிப்பாடு. 

இன்னொரு பக்கம் ரைசாவிற்கும் இது சார்ந்த கவலை இருக்கிறது. கவுண்டமணி பாணியில் ‘பாருங்க மக்களே.. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை.. நான் ஏதாவது செஞ்சனா.. அவங்களா.. ஏதோ சொல்லிட்டே இருக்காங்க. ஓவியாவின் நிலைமைதான் எனக்கும் ஆகி விடும் போலிருக்கிறது’ என்றார். 

‘அது உன் மீதுள்ள கோபமில்லை. என் மீது காட்ட முடியாத கோபத்தைத்தான் உன் மீது காட்டுகிறார்.’ என்கிறார் சினேகன். 

வேலியில் செல்கிற ஓணான் எந்த திசையில் பாய்ந்தாலும் பிரச்னைதான். 

**
சக்தி போய் விட்ட பிறகு தானும் கிளம்பி விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த காயத்ரிக்கு திடீரென்று என்ன ஞானோதயம் வந்ததோ தெரியவில்லை, ஆர்த்தி, ஜூலியின் சார்பாக தான் இருந்து இந்த விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறார். 

முதலில் வெளியேற அடம் பிடிக்கிறவர்கள், பின்பு அங்கேயே தங்க விரும்புவது பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இடைப்பட்ட நேரத்தில் என்னதான் நடக்கிறது? ‘கெட்ட வார்த்தை பேசுகிறேன் என்கிறார்கள். என்னை நிரூபிப்பதற்காகவது இங்கு இருப்பேன்’ என்றவர் கூடவே ‘ஆனால் என்னை எவராவது தூண்டி விட்டால் என்ன செய்வேன் என்று தெரியாது’ என்கிற குறிப்பையும் சொல்லத் தவறவில்லை. தாம் ‘Trigger’ சக்தியின் நண்பர் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

**
50 வது நாள் காலை. 

காயத்ரி – ரைசாவின் மனநிலை தெரியாமல், ‘Where is the party, அட.. எங்க வீட்ல party’  என்கிற பாடல் அசந்தர்ப்பமாக ஒலித்தது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போல, ஓவியா இல்லாத வீட்டில் பாடல் இசைப்பது வீண். அதற்குப் பதில் ஷெனாய் இசை போட்டு போட்டியாளர்களை எழுப்பலாம். 

வழக்கத்திற்கு மாறாக கணேஷ், காயத்ரியுடன் இணைந்து நடனம் ஆடினார். 

‘நான் ஒண்ணுமே செய்யலையே. பின் ஏன் என் மேல அவங்க கோபப்படறாங்க’ என்பது ரைசாவின் குழப்பமான கேள்வி.

காயத்ரி தன்னிடம் சொன்னதாக சொன்ன விஷயங்களை ரைசாவிடம் சொன்னார் சினேகன். இது மாதிரியான போக்கை சினேகன் இன்னமும் மாற்றிக் கொள்ளவில்லை.

‘அவளை ஒழுங்கா இருக்கச் சொல்லு. முட்டியை உடைச்சுடுவேன். நூறு ரூ-க்கு நடிக்கச் சொன்னா, ஆயிரம் ரூ.-க்கு நடிக்கறா.. (இதையேதான் காயத்ரியும் நாமினேஷன் சமயத்திலும் சொன்னார்). நான் எவிக்ஷன்-ல வெளிய வர்றது ரொம்ப ஈசி. ஒரேயொரு கெட்ட வார்த்தை போதும்’ என்று காயத்ரி சொன்னதையெல்லாம் ரைசாவிடம் போட்டுக் கொடுத்தவர், தன் சார்பிலும் புகார்ப்பட்டியலை வாசித்தார். 

ஜூலி – ஆர்த்தி சண்டை வருவதற்கு காயத்ரிதான் காரணம். நிறைய பேர் இங்கிருந்து வெளியேறியதற்கும் காரணம் அவரே. ஜூலியை காயத்ரி நன்றாக உபயோகித்துக் கொண்டார். “ஓவியா அளவிற்கு ஏன் என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை’’ என்று வெளியேற்றத்தின் போது ஜூலி என்னைக் கேட்டார். ‘உனக்கு காயத்ரி குழுவின் ஆதரவு இருக்கிறது. ஆனால் ஓவியா தனிமையில் இருக்கிறாரே’ என்பதாக  சினேகன் சொன்னது சரியான காரணம். 

‘காயத்ரிக்கு எதிரிப் பட்டியலில் இருக்கிறவர்களை நான் ஆதரித்ததால், என்னையும் அவர் எதிரியாக எண்ணுகிறார். இப்போது உன்னை ஆதரிப்பதால்தான் என்னிடமும் பாராமுகமாக இருக்கிறார்’ என்று சினேகன் சொன்னதைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

இந்திய மரபில் ஆலயங்களுக்கு பயணம் செய்வது ஒரு முக்கியமான பழக்கம். ஆன்மீகத்தின் வழியாக அதைப் பிணைத்து வைத்திருக்கிறார்கள். குறுகிய இடத்தில் இருக்கும் போது நம் மனமும் குறுகலாகிறது. இதுவே நிறைய இடங்களுக்குப் பயணப்படும் போது, பல பிரமாண்டமான வெளிகளை, பல்வேறு மனிதர்களை எதிர்கொள்ளும் அனுபவங்கள் கிடைக்கும் போது நம் மனமும் விசாலமாகிறது. மிக குறிப்பாக இமயமலை போன்ற மலைப்பிரதேசங்களின் உச்சிக்கு பயணம் செய்கிறவர்களுக்கு, இந்தப் பிரபஞ்சத்தின் முன்னால் தான் ஒரு தூசி அளவு கூட இல்லை’ என்கிற உள்நோக்கிய மனத்திறப்பு நிகழ்வதாகச் சொல்கிறார்கள். பொதுவாக ஆலயங்கள் பிரமாண்டதாக கட்டப்படுவதற்கு இது ஒரு காரணம் என்கிறார்கள்.  பிக் பாஸ் எனும் சிறிய வீட்டில் எத்தனை அரசியல். அது சரி, அதுதானே இந்த விளையாட்டின் நோக்கமும்.

**

தொடரின் முந்தைய அத்தியாயங்கள்


Day : 49  | 47  | 48  | 47  | 46  | 45  | 44  | 43   | 42 | 41 | 40  | 39 | 38 | 37 | 36 | 35  | 34  | 33 |
 

ஜன்மாஷ்டமியை பூஜை செய்து கொண்டாடும் task-ஆம். இதற்கெல்லாம் கூடவா task? பல்வேறு சமூகங்களைச் சார்ந்த பார்வையாளர்களும் பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் குறிப்பிட்ட மத அடையாளத்தைப் பற்றிய பண்டிகையை கொண்டாடச் சொல்லி வலியுறுத்துவது சரியா? ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான சார்பு அரசியல் வளர்ந்து வரும் நிலையில் இது சார்ந்த விஷயங்களை பிக் பாஸ் ஜாக்கிரதையாக கையாள வேண்டாமா?

இதே போல் மற்ற மதங்களின் பண்டிகைகளையும் சமமாக கொண்டாடினால் மட்டுமே இந்த பூஜை விளையாட்டு சரியாக இருக்கும். 

**
காயத்ரி பிரச்னை பற்றி, கணேஷ் மற்றும் ஆரவ்விடம் தான் பேசியதாக சினேகன், ரைசாவிடம் தெரிவித்தார். “கமல் வெளிப்படையான கருத்தைக் கேட்ட போதுதான் ரைசா சொன்னார். அவ்வளவுதானே? இதற்கு ஏன் காயத்ரி இத்தனை கோபம் கொள்ள வேண்டும். ஏன் இந்த திடீர் மாற்றம்? கடந்த வாரங்களில் இருவரும் இணைந்துதானே இருந்தார்கள்? சரி, இனி ரைசா அவர் விஷயத்தில் தலையிட மாட்டார். காயத்ரியும் ரைசாவின் விஷயத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’

இப்படியாக மூன்றாம் உலகப் போர் நிகழாதவாறு இதர நாட்டின் அதிபர்களான கணேஷ், ஆரவ்விடம் சினேகன் சமாதான உடன்படிக்கையை செய்து கொண்டார். காயத்ரி எனும் அணுகுண்டை பயன்படுத்தாமல் ஜாக்கிரதையாக கையாள்வது ஒரு முக்கிய ஷரத்தாக இந்த உடன்படிக்கையில் எழுதப்பட்டது. 

ரைசா இதற்கு திடீரென்று எரிச்சலானார். “அவங்க என்ன என் அக்கா, தங்கச்சியா, அவங்க மேல எனக்கு 0% interest-தான். (காயத்ரியை என்ன EMI –லயா வாங்கப் போறாங்க?) தற்காப்பு ஆட்டமாக காயத்ரியிடம் ஒதுங்கிச் செல்வதாக ரைசா கூறுவது ஒருவகையில் சரிதான். ஆனால் ஆட்டத்தின் முக்கிய விதியான சகிப்புத்தன்மையை கடைப்பிடிக்கும் விஷயத்தில் ரைசா பின்வாங்குகிறார். காயத்ரி இந்த விஷயத்தில் பல கிலோமீட்டர்கள் பின்னால் இருப்பதால் அவருக்கு இந்த விதி தேவையே படாது. 

**
சினேகன், ரைசா உரையாடல் தொடர்ந்தது. 

‘இரவு 03.00 மணிக்கு காயத்ரி என்னை வந்து எழுப்பினார். நான் பயந்து விட்டேன். ‘தலை பயங்கரமாக வலிக்குது. ஏதாவது மாத்திரை இருக்கா” என்று கேட்டார். கணேஷ், ஆரவ்வையெல்லாம் விட்டு விட்டு ஏன் என்னிடம் கேட்டார் என்று குழப்பமாக இருந்தது. எப்படியோ சமாளித்தேன்’ என்றார் சினேகன்.

ரைசா மீதான காயத்ரியின் பயமும் எரிச்சலும் தன்னிச்சையாக இந்த உத்தியை கடைப்பிடிக்கச் செய்திருக்கலாம். இப்போதைக்கு ரைசாவிற்கு ஆதரவாக இருக்கும் சினேகன்தான் ரைசாவின் பெரிய பலமும் ஆதரவும். அனுதாபத்தின் பேரில் அவரை தன் அணியில் இழுக்க முடியுமா என்று பார்ப்பதற்காக இந்த தலைவலி நாடகம் காயத்ரியால் நிகழத்தப்பட்டிருக்கலாம். யூகம்தான்.

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் கூட இத்தனை சிறந்த பாயிண்டை சரியான சமயத்தில் எடுத்திருக்க முடியாது. அதைவிடவும் சிறப்பான பாயிண்ட்டை எடுத்தார் ரைசா. பொண்ணு புத்திசாலி ஆகிட்டே வருது. 

‘என் பிரச்னைகளை நானே பார்த்துப்பேன்’னு சொல்றதுதானே காயத்ரி ஸ்டைல். இப்ப என்னவாம்? இந்த உரையாடலுக்குப் பின்தானே பிரச்னை தீவிரமானது” என்றெல்லாம் தர்க்கபூர்வமான கேள்விகளை அடுக்கினார்.
 
‘என் மேல இருக்கற கோபத்தைத்தான் உன் கிட்ட காட்டறாங்க. சக்தி போன உளைச்சல் வேறு’ என்று சினேகன் சொன்னதும். விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற ரைசா, ‘எல்லோரும் போய் சாவுங்க’ என்றார். 

பார்வையாளர்களைத்தான் சொல்கிறாரோ? கோபப்படும் போதும் அழகாக இருக்கீங்க, மேடம். (ரைசா பேரவையின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்ததாமே?)

**

கிருஷ்ண பஜனை துவங்கியது. ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்று கும்பிட்டுக் கொண்டிருந்த நமீதா இப்போது இருந்திருந்தால் பண்டிகை களைகட்டியிருக்கும். ‘நா என்ன சொல்ற.. எல்லாம் நல்லா.. பாட்டு பாடுது..

தன் கந்தர்வ குரலில் ‘அலை பாயுதே கண்ணா’வை காயத்ரி பாட, விழா இனிதே நிறைவுற்றது. (இது பொருத்தமான பாட்டா?)

**

தலைவி பொறுப்பிலிருந்து ரைசா விடுவிக்கப்பட்ட அறிவிப்பு வந்தது. (என்ன… சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா.. ஐயகோ.. கடை அடைப்பு…)

அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான task துவங்கியது. தலையின் மீது ஒரு பாட்டிலை வைத்துக் கொண்டு ஒரு காலையும் தூக்கி வைத்துக் கொண்டு எவர் அதிக நேரம் நின்று தாக்குப் பிடிக்கறார்களோ அவரே தலைவர். 

உடல் பலத்தை சார்ந்து இவ்வாறெல்லாம் போட்டி வைப்பது அபத்தம். பெண்கள் இதில் தோற்றுப் போகும் வாய்ப்பு அதிகமுண்டு. நாம் வாக்களித்து சட்டமன்றத்திற்கு தலைவராக அனுப்பி வைத்தவர்கள், அணிக்கு அணி தாவி சர்க்கஸ் வேலை காட்டிக் கொண்டிருக்கும் போது விளையாட்டுப் போட்டிகளின் மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது ஆபத்தானது மட்டுமல்ல, சிறுபிள்ளைத்தனமானதும் கூட. 

‘ஒரு காலைத் தூக்கி தவம் செய்யும் தாசா…’ என்கிற கடலோரக் கவிதைகள் பாடலை பின்னணியாக ஒலிபரப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கரகாட்டக்காரங்க மாறி நிக்கறாங்க பாரு’ என்று தோற்று இறங்கிய வையாபுரி மற்றவர்களை கிண்டலடித்துக் கொண்டிருந்தார். 

பிந்து இறுதி வரை  தாக்குப் பிடித்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக யூகிக்கிறேன். அவர் முதலிலேயே இரு கையையும் சமமாக உயர்த்திக் கொண்டு நின்றார். இதன் மூலம் சமநிலையாக அவர் நிற்பதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் மற்றவர்கள் இதைச் செய்ய தவறி விட்டனர். 

பிந்து தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். (சரி, என்ன செஞ்சு தொலையறது, பிந்து பேரவையும் ஒண்ணு ஆரம்பியுங்க)

**

இன்றைய நாளின் அதிகம் எதிர்பார்க்ப்பட்ட பகுதி வந்தது. Nomination. வழக்கமாக ரகசிய அறையில் தனியாக நடக்கும் இந்த சடங்கு இந்த முறை வில்லங்கமாக ஆக்கப்பட்டது. ஆம், பொதுவில் நடக்கும் இந்த நிகழ்வில் இருவரை நாமினேட் செய்து விட்டு அதற்கான காரணங்களையும் கூற வேண்டும்.

ஆடுகளுக்கு இலை, தழையைப் போட்டு விட்டு களத்தில் மோத விடுவதற்காக அழைத்துச் செல்லும் ‘வீர விளையாட்டை’ பிக் பாஸ் நடத்த முடிவு செய்து விட்டார். ‘This is called வெச்சு செய்யறது’ என்றார் தலைவி பிந்து. ‘வட போச்சே’ மாதிரி ‘எனக்கு கட்அவுட் போச்சே’ என்பது தலைவியின் ஆதங்கம்.

**
கொலைவெறியில் காத்துக் கொண்டிருந்த காயத்ரி, தன் பெயர் அறிவிக்கப்பட்டவுடனேயே ரைசாவின் கட்அவுட் அருகில் சென்றார். செய்முறைக்கான விதிகள் கூட சொல்லி முடிக்கப்படாத நிலையில், அவசரம் அவசரமாக ரைசா படத்தின் மீது ஸ்பிரே அடித்தார். 

“ரைசா முதலில் தன்னை வெளிப்படுத்தவில்லை. நான்தான் அவரை அணுகி பல விஷயங்களை கற்றுத் தந்தேன். இப்போது அதுவே எனக்கு வினையாகி விட்டது. பத்து ரூபாய்க்கு நடிக்கச் சொன்னா ஐம்பது ரூபாய்க்கு நடிக்கறாங்க. (அப்ப.. நடிக்கவா.. சொல்லித் தந்தீங்க.. சிவாஜி படங்களை உதாரணம் காட்டிட்டீங்களோ). அவங்களுக்கு Attitude அதிகமாகிடுச்சு. மரியாதை இல்ல. இதை வெளியில் காண்பித்தால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளட்டும். எனவேதான் அவரை வெளியே அனுப்புகிறேன்’ என்று பொரிந்து தள்ளினார். (நீங்கள் வெளியே வந்தால் கூட அந்தப் பாடம் கற்றுத்தரப்படுமோ என்று தோன்றுகிறது, காயத்ரி)

இப்படியாக காயத்ரி ரகளை செய்து கொண்டிருந்த போது ரைசாவின் எதிர்வினையாக அவரின் முகபாவங்கள் ரசிக்கத்தக்கதாக இருந்தன. (ம்.. சொல்லுங்க.. அண்ணாச்சி… சொல்லுங்க..) ‘இனிமே இந்தப் போட்டி உக்கிரமா இருக்கும். வையாபுரிக்கு பிஞ்சு உடம்பு, மனசு.. தாங்க மாட்டாரு. எனவே அவரையும் நாமினேஷன் செய்யறேன்’ என்று கருணை காட்டினார் காயத்ரி. ‘நூறு நாள் இருப்பேன்’ என்று வீட்டம்மணியிடம் சபதம் போட்ட வையாபுரி உள்ளுக்குள் வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்.

கணேஷூம் காயத்ரியை தேர்ந்தெடுத்தது ஆச்சரியம். ‘காயூ… உங்க கிட்ட நெறய நல்ல குணங்கள் இருக்கு. கோபம்தான் உங்களோட ஒரே பலவீனம். ஒரு விஷயம் உங்க மண்டைல ஏறிட்டா இறங்கறதுக்கு நேரம் ஆகுது. மத்தவங்க சொல்ற உபதேசங்களை அப்பத்திக்கு கேட்டுட்டு மறுபடியும் முருங்கை மரத்துல ஏறிடுவீங்க. ‘Self anyalysis’ நடக்கணும். அந்த நெகட்டிவ் விஷயத்துக்காக உங்களை நாமினேட் பண்றேன்’ என்றார். (இதுதான் ராஜதந்திரமோ)

‘ரைசா.. நீங்களும் எனக்கு நல்ல பிரெண்டுதான்..(கணேஷ்…உங்களுக்கு யார்தான் பிரெண்டு இல்ல.. வீட்டுக்குள்ள வந்த திருடனும் பிரெண்டுதான்) சில விஷயங்கள் ரூடா பண்றீங்க.. ஹர்ட் ஆகாம செஞ்சா நல்லாயிருக்கும்’ என்று ரைசாவை நாமினேட் செய்த காரணத்தைச் சொன்னார். கணேஷ் 

ஆரவு்வும் சேம்சைட் கோல் போட்டு பாசமிகு அக்காவை பொதுவில் அம்பலப்படுத்தினார். ‘கோபம்தான் உங்கள் பலவீனம்’ ரைசாவை மயிலிறகால் தடவி விட்டுச் சென்றார். (பின்ன.. ரைசா போயிட்டா…டைம் எப்படி பாஸாகும்..) ‘நீ நடந்துக்கறது சரியா இருக்கலாம். ஆனால் சிலருக்கு அப்படித் தெரியாது.”

காயத்ரியை தேர்வு செய்த வையாபுரி, கணேஷ் சொன்ன காரணத்தையே சொன்னார். ரைசாவின் நலனுக்காக அவரை வழியனுப்பி வைப்பது அவருடைய தேர்வு.
**
கணேஷை தேர்வு செய்த சினேகன் குறிப்பிட்ட காரணம் சரியானது. ‘அவர் எல்லாவற்றிலும் ஜாக்கிரதையாக நடுநிலைமை இருக்கப் பார்க்கிறார். சுயமுடிவு எடுக்காமல் எல்லோரிடமும் கலந்தாலோசிக்கிறோர். சுயமாக இல்லை’ ஆரவ்விற்கும் இதே காரணம்தான்.

‘என்னைப்பத்தி என்னங்க புரியணும் உங்களுக்கு.. எனக்கு 1990-ல் அம்மை ஊசி போட்டாங்க. 95-ல் எல்கேஜி வகுப்பு சேர்ந்தேன். அப்ப என் பக்கத்துல உட்கார்ந்திருந்த பொண்ணு பேரு காவ்யா..’ என்றெல்லாம் ஆரவ் பிறகு ஜாலியாக சினேகனை கலாய்த்துக் கொண்டேயிருந்தார்
.
ஆண்கள் தங்களுக்கு இடையே உருவாகும் பிரச்னைகளை நகைச்சுவையாக எளிதில் தாண்டி வந்து விடுகிறார்கள். ஆனால் பெண்கள்.. ப்பா….

**

தலைவி பிந்துவின் முறை. அவர் காய்களை நேரடியாக, வெளிப்படையாக நகர்த்தியதற்கு பாராட்டு. ‘காயத்ரி.. உங்களால்தான் நிறைய பிரச்னைகள் உருவாகுது. எனவே நீங்கள் வெளியே போகணும்..

And.. ‘ஆரவ்… ஓவியா பிரச்சினையில் உங்கள் மேல் தவறில்லை என்பது போல பலர் நினைக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. உங்கள் மேல் தவறுள்ளது’ 
இறுதியாக ரைசா. 

வையாபுரியை தேர்ந்தெடுத்தற்கு காயத்ரி சொன்ன அதே காரணம். ‘போட்டி உக்கிரமா இருக்கும்’ இந்த விஷயத்தில் ரைசாவும் காயத்ரியும் ஒரே அலைவரிசையில் சிந்திக்கிறார்கள் போல.

அடுத்து காயத்ரியை தேர்ந்தெடுத்தார். எளிதாக யூகிக்கக்கூடியதுதான்.

“காயத்ரி.. உங்களுக்கு என் மேல கோபம் இருக்கு. அது ஏன்னு எனக்கே தெரியல. சமயத்துல கோபமா பேசறீங்க.. சமயத்துல சிரிச்சு பேசறீங்க. என்னால புரிஞ்சுக்க முடியல. குழப்பமா இருக்கு. ‘வீட்டுக்குப் போகணும்’ன்றது என் விருப்பம். இருந்தாலும் வெளிப்படையாக நடந்துக்க விரும்பறேன். அது உங்களுக்கு முரட்டுத்தனமா தெரிஞ்சா.. ஒண்ணும் செய்ய முடியாது’ என்பது போல் அவரது விளக்கம் இருந்தது. 

எனவே இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் இரண்டு பேர். காயத்ரி மற்றும் ரைசா.

சினேகன் மட்டுமே எவராலும் நாமினேட் செய்யப்படவில்லை. பெண்கள் வாக்கு அவருக்கு எதிராக விழாததனின் ரகசியத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆண்களும் ஏன் எதிராக வாக்களிக்கவில்லை? சினேகனின் சமையல் திறமைதான் காப்பாற்றியதோ?

**
கடந்த வாரம் காயத்ரியை வெளியேற்றுவதற்காக மண்டையை உடைத்து கணக்குப் போட்டு வாக்களித்தவர்களுக்கு உற்சாகமான செய்தி. மறுபடியும் வீறு கொண்டு எழலாம். இடையில் வேறு ஏதாவது நீட் தேர்வு முறையில் காயத்ரி காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருக்காது என்றே நம்புவோம். 

இந்தக் கணிதவியல் வல்லுநர்களில் இன்னொரு பிரிவும் இருப்பதாகத் தோன்றுகிறது. அது சற்று குருரமான யோசனை. சக்தியும் வெளியேறி விட்ட நிலையில் தனிமையில் உள்ள காயத்ரியை வீட்டினுள் தங்க வைத்து ‘வெச்சு செய்யறது’ என்கிறார்கள். 

வேண்டாம். ஓவியாவாக மாறுவதுதான் இந்த விளையாட்டின் மூலம் நாம் கற்றுக் கொள்வதாக இருக்க வேண்டும். காயத்ரியாக மாறுவதல்ல.
**

நாமினேஷன் படலம் முடிந்ததும் தங்களின் தேர்வுகளைப் பற்றி போட்டியாளர்கள் தாங்களே கிண்டலடித்துக் கொண்டார்கள். எவராலும் ஸ்பிரே அடிக்கப்படாத சினேகனின் கட்அவுட்டின் மீது ஆசை தீர வர்ணம் பூசினார் பிந்து. 

மற்றவர்கள் உணவருந்தும் போது காயத்ரி செல்லவில்லை. கணேஷ் அழைத்தும் செல்லாமல் சோகத்துடன் படுத்திருந்தார். (ஓவியாவும் இதே போல் முன்பு இருந்த நிலை நினைவிற்கு வந்தது. கடவுள் இருக்கான் குமாரு)

மற்றவர்கள் உணவருந்திக் கொண்டதையும் காயத்ரி சோகமாக படுத்திருந்ததையும் ஒரே கோணத்தில் காட்டிய காமிராமேன் புத்திசாலி.

**
‘எவரும் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தலைவரின் பொறுப்பு’ என்று பிந்துவின் கடமையை பிக் பாஸ் நினைவுப்படுத்தினார். (அந்த நாய் என்னதான் ஆச்சு?) தானும் நாயைப் போலவே குரல் எழுப்பினார் பிந்து. (தலைவரா இருக்கறது கஷ்டம்தான் போல). போட்டியாளர்கள் பிந்துவை அதிகம் சட்டை செய்யவில்லை. தலைவர்கள் ஏன் சர்வாதிகாரிகளாக மாறுகிறார்கள் என்கிற ரகசியம் பிடிபடுகிறது. மட்டுமல்ல, சர்வாதிகாரத்தனத்துடன் இருப்பவர்கள்தான் தலைவராக தாக்குப்பிடிக்க முடியும் போல. 

**

காயத்ரி ‘நீலாம்பரியாக’ மாறிய ஓர் உக்கிரமான தருணம் ஆரவ்வுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்த போது வெளிப்பட்டது. அவரைக் கட்டுப்படுத்த சக்தியும் இல்லாத சூழல். எனவே ஆட்டம் ஓவராக இருந்தது.

“ரைசாவும் நேர்மைதான். நானும் நேர்மைதான். ஆனா நான் நேர்மையா இருக்கறது மட்டும் முரட்டுத்தனமா தெரியுதா.. ஒரு சப்பை கேரக்டர் வந்து ‘இப்படி இரு.. அப்படி இரு’ ன்னு.. நீ முகத்தை திருப்பிக்கறே.. நீ வந்து என்னை சொல்றதுக்கு ஆளே கிடையாது.. என்னோட ‘திமிரை’ நான் விட்டுக்கொடுக்க முடியாது. (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்)  இருபது வருஷம் அனுபவம் எனக்கு இருக்கு. எத்தனையோ விஷயம் கடந்து வந்திருக்கேன். கற்பனையே செய்ய முடியாத அவலங்களையெல்லாம் கடந்து வந்திருக்கேன். இதெல்லாம் எனக்கு மேட்டரே கிடையாது.. அவளுக்கு எத்தனையோ உதவி செஞ்சிருக்கேன்.. என் கிட்டயேவா…’ என்றெல்லாம் ருத்ரதாண்டவம் நடந்தது.

காயத்ரியின் கோபத்துடன் ஊடே.. அந்த வசனங்களை திறமையான மாடுலேஷனில் அவர் சொன்னதுதான் ரசிக்கும்படி இருந்தது. ரகுவரனால் கூட இப்படி பேசியிருக்க முடியாது.  சக்தியைப் பற்றி ஏதோ சொல்லியதுதான்.. காயத்ரியை அதிகம் புண்படுத்தியதாம். அதற்குத்தான் அதிகம் அழுதாராம். சக்தி வெளியேற்றத்திற்கு கூட இல்லையாம்.. (சக்தி இதைக் கேட்டு trigger ஆவாரா) ‘என்னமோ இவங்கதான் உத்தமங்க மாதிரியும்… அது……. தான் எனக்கு கோபம் வந்தது. என்கிறார் காயத்ரி.

.. அடப் போங்கய்யா.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு. Human behavior பற்றியெல்லாம் காயத்ரி பேசுவது சாத்தான் வேதம். 

பீதியுடன் அமர்ந்திருந்த ஆரவ், இதற்கு ஏதும் மறுப்போ கண்டனமோ சொல்லவில்லை.. (ஏன் சொல்லித்தான் பாரேன்….)

**
பிக் பாஸ் வீட்டில் பேய் இருப்பதாக ஒரு போட்டியாளரை நம்ப வைக்க வேண்டும் என்று ஒரு task. மனதளவில் எவர் பலவீனமானவர் என்று கண்டுபிடிப்பதற்காகவா இந்த விளையாட்டு? என்னமோ சிறுபிள்ளைத்தனமாக இருக்கு.

சினேகனின் தலைமையில் பலியாடாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிந்து. (கட் அவுட் முகத்தில் கரி பூசியதுதான் காரணமோ)

**
இது போன்ற விளையாட்டு நம் வாழ்க்கையிலேயே கூட தன்னிச்சையாக நடந்திருக்கும். பேய்ப்படம் ஏதாவது பார்த்துக் கொண்டிருப்போம். வழக்கமாக காற்றில் ஆடும் திரைச்சீலை கூட அன்று உக்கிரமாக ஆடுவது போல தோன்றும். பயந்து போய் படத்தை நிறுத்தி விடுவோம். ஆளாளுக்கு பேய்க்கதைகளை சொல்ல ஆரம்பிப்பார்கள். பொய்யும் மெய்யுமாக தனியனுபவங்கள் துவங்கும். தங்களை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக எத்தனை மசாலா சேர்க்க முடியுமோ அத்தனையும் சேர்த்து கதை சொல்வார்கள்.

பேயை நம்பாத ஒருவர் அந்தக் கூட்டத்தில் நிச்சயமாக இருப்பார். மற்றவர்களை கிண்டல் செய்து கொண்டேயிருப்பார். ஆனால் கூட்டம் கலைந்து வீட்டிற்குப் போகும் போது அவர்தான் அதிக திகிலுடன் செல்வார். 

மனம் நிகழ்த்தும் மாய விளையாட்டுக்கள் இவை. இது தற்காலிகமாக அமைந்தால் பரவாயில்லை. பிக் பாஸ் திட்டம் போல இத்தனை நீண்ட நாடகமாக நிகழ்த்துவது ‘கப்பித்தனமான’ ஐடியாவாக இருக்கிறது.

மட்டுமல்ல, பயப்படுகிறவர்களுக்கு உண்மையிலேயே ஏதாவது மனபாதிப்பு ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. ‘என்ன வேண்டுமானாலும் செஞ்சிக்கங்க’ என்று உத்தரவு தந்த பிக் பாஸ் இதைக் கருத்தில் கொண்டாரா?

எனவே ஆளாளுக்கு பேய் இருப்பது போன்ற உணர்வுகளை பிந்துவின் மனதில் பதிவு செய்ய முயன்றார்கள். ‘நான்தான் அதிகம் பயப்படுவேன். என்னை தேர்ந்தெடுத்திருக்கலாமே’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார் காயத்ரி. (பார்வையாளர்களின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்) ஆனால் பயமுறுத்தப்படுவராக காயத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் என்னவெல்லாம் பிறகு நடந்திருக்கும்? task முடிந்த பிறகு மற்றவர்களின் கதி என்ன? ஒருத்தன் ஒழுங்கா ஊருக்கு போய் சேர முடியாது. 

ஆனால் இதை கணேஷிடமிருந்து மறைத்தது விளையாட்டின் விதிமீறல். ‘அவன் ஓவர் ஆக்ட்’ செஞ்சிடுவான் என்று சொல்லப்பட்டது. அவர்தான் வந்தது முதலே விருதுப்படங்களின் முகபாவத்தைக் கொண்டிருக்கிறாரே.. பிறகு எப்படி ஓவர் ஆக்ட்?

**

சினேகனின் கவிதையைக் கேட்டு பிந்து குமுறி குமுறி அழுதார். இன்னொரு முறை அந்தக் கவிதை சொல்லப்பட்டால் நம்முடைய நிலைமையும் அதுதான். 

தனிமைச் சிறையில் அடைக்கப்படுவர்கள் சிறிய அசைவிற்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதுதான் பிந்துவின் கலங்குதலுக்கு காரணமாக இருக்கக்கூடும். இந்த வாய்ப்பை தவற விட விரும்பாத சினேகன் பிந்துவிற்கு தன் வழக்கமான பாணியில் ஆறுதல் சொன்னார். (இதற்காகதான் கவிதையைச் சொன்னாரா!)

‘நம்முடைய முகமூடிகள் நம்மையறியாமலே வெளிப்பட்டு விடுவதுதான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம்’ என்று சினேகன் சொல்லியது சரியானது. 

‘இன்னாடா.. அவார்டா கொடுக்கறாங்க.. ரேஞ்சிற்கு சினேகன் நடுஇரவில் கத்தி கலாட்டா செய்தார். ஆனால் இந்த பேய் task-ஐ நாம் அறிவதற்கு முன்னால் விளம்பர இடைவேளைக்கு இந்தக் காட்சி காட்டப்பட்ட போது  நமக்கு டெடரராகத்தான் இருந்தது. தெரிந்த பிறகு பயமில்லை. 

பேய் பற்றிய விஷயங்களும் இப்படித்தான். நம்முடைய கற்பனைகள்தான் நம்மையே பயமுறுத்துகின்றன. 

பேய்களின் விளையாட்டு நாளைக்கும் தொடரும் போல. தொலைக்காட்சியின் மீது தாயத்து கட்டி வைக்க வேண்டியதுதான்.