Published:Updated:

"சென்னைல நான் லவ் பண்றது எதை தெரியுமா..?!" - 'கல்யாணப்பரிசு' நேஹா

"சென்னைல நான் லவ் பண்றது எதை தெரியுமா..?!" - 'கல்யாணப்பரிசு'  நேஹா
"சென்னைல நான் லவ் பண்றது எதை தெரியுமா..?!" - 'கல்யாணப்பரிசு' நேஹா

"தமிழ் எல்லாம் நமக்கு செட் ஆகாதுனு ஒதுங்க நினைச்சவள்தான் நான். இப்போ, சென்னையும் 'கல்யாணப்பரிசு' சீரியல் டீமும்தான் பெஸ்ட்னு சொல்வேன். அந்த அளவுக்குச் சென்னையையும் தமிழ் மக்களையும் பிடிச்சுப்போச்சு'' என மெல்லியச் சிரிப்போடு பேசுகிறார், நடிகை நேஹா. சன் டிவியின் 'கல்யாணப்பரிசு' சீரியலில் காயத்ரியாக மனம் கவர்ந்தவர். 

"உங்க ஆக்டிங் பயணம் தொடங்கியது எப்போது?" 

"பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூரு. என் அப்பா ராமகிருஷ்ணன், ஆக்டர் வித் மேக்கப் ஆர்டிஸ்ட். நடிகர் கமல்ஹாசனுக்கு பெர்சனல் மேக்கப் ஆர்டிஸ்டாக இருந்தவர். கன்னட நடிகர் உபேந்திராவுக்கு மேக்கப் ஆர்டிஸ்டா இப்போ வரை வொர்க் பண்ணிட்டிருக்கார். கன்னடப் படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடிச்சிட்டிருக்கார். சின்ன வயசிலிருந்தே சினிமா ஃபீல்டு பரிட்சயமா இருந்தாலும் எனக்கு ஆக்டிங்ல எந்த ஆர்வமும் இருந்ததில்லை. டென்த் முடிச்ச சமயத்தில்தான், தியேட்டர் ஆர்டிஸ்டா வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சுது. மேடை நாடகங்களிலும் ஷார்ட் ஃபிலிம்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன்." 

"சீரியல் என்ட்ரி பற்றி..." 

"காலேஜ் படிச்சுக்கிட்டே தியேட்டர் ஆக்டிங் பயணம் போயிட்டிருந்துச்சு. அது தெரிஞ்சு சீரியல், சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. 'படிப்பு முடிச்சுட்டுதான் முழு நேர நடிப்புக்குப் போகணும்'னு அப்பா சொல்லிட்டார். பி.காம்., முடிச்சதும் 2013-ம் வருஷம் ஒரு கன்னட சீரியல் வாய்ப்பு வந்துச்சு. அதிலிருந்து முழு நேரமா நடிக்க ஆரம்பிச்சேன்.'' 

" 'கல்யாணப்பரிசு' சீரியல்ல நடிக்க முதல்ல சிரமப்பட்டீங்களோ?" 

"ஆமாம். நாலு வருஷத்துக்கு முன்னாடி 'கல்யாணப்பரிசு' வாய்ப்பு வந்துச்சு. எனக்கோ சுத்தமா தமிழ் தெரியாது. 'இதில் நாம எப்படி நடிச்சு பெயர் வாங்க முடியும்'னு நெகட்டிவ் எண்ணம் இருந்துச்சு. 'நாங்க ஹெல்ப் பண்றோம்'னு சீரியல் டீம் சொன்னதால் ஒத்துக்கிட்டேன். ஒவ்வொரு காட்சியையும் கன்னடத்தில் விளக்கி, தமிழ் வார்த்தைகளை கத்துக்கொடுத்து நடிக்க வெச்சாங்க. அதேமாதிரி, சென்னையின் க்ளைமேட் பிடிக்கவே இல்லை. 'கொஞ்ச நாள் பழகிட்டா, பிடிச்சுப்போகும்'னு சொன்னாங்க. அது உண்மைதான்னு சிக்கீரமே தெரிஞ்சுக்கிட்டேன். சும்மா இருக்கிற நேரங்களில் சென்னையின் பல இடங்களுக்குப் போனேன். அந்த இடங்களும் பழகின மனிதர்களும் மனசுக்கு ரொம்ப நெருக்கமாயிடுச்சு. இப்போ கேட்டால், 'ஐ லவ் சென்னை'னு கத்தி சொல்வேன். அந்த அளவுக்கு சென்னை ஷாப்பிங் மால்ஸ், தியேட்டர், பீச்னு பல இடங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்." 

"அதுமட்டுமா... 'கல்யாணப்பரிசு' டீம்தான் பெஸ்ட்னு சொல்றீங்களாமே..." 

"பின்னே... ஃப்ரீ டைமில் சக ஆர்டிஸ்ட் பலரும் எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்து ஊக்கப்படுத்தினாங்க. இப்போ ரொம்ப நல்லா தமிழ் பேசுறேன். சக ஆர்டிஸ்ட் பலரும் அவங்க வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டுவந்து பாசம் காட்டி, சொந்த பந்தங்களா மாறிட்டாங்க. ஷூட்டிங் இல்லாத நாட்களில் சக ஆர்டிஸ்ட்களோடு சேர்ந்து அவுட்டிங் போவோம். வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகிட்டு கலகலப்பா இருப்போம். தமிழ், கன்னடம், தெலுங்கு என மூணு மொழி சீரியல்களில் நடிச்சுட்டிருந்தாலும், 'கல்யாணப்பரிசு' டீம்தான் பெஸ்ட். ஆரம்பத்தில் என் அம்மாவோடு சென்னை ஷூட்டிங் வந்துட்டிருந்தேன். இப்போ, தனியா அனுப்பும் அளவுக்கு இந்த சீரியல் டீம் எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு." 

"உங்களுக்கு அப்பா மேக்கப் போட்டுவிடுவாரா?" 

"சின்ன வயசிலிருந்து நானும் அக்கா ஸ்ருதியும், மேக்கப் போட்டுவிடச்சொல்லி அப்பாவை நச்சரிச்சுட்டே இருப்போம். அவரும் மேக்கப் போட்டு எங்களை ரொம்ப அழகாக்குவார். நான் நடிக்க வந்ததும், அப்பா கூடுதல் அக்கறையோடு அழகுபடுத்துவார். நிறைய பியூட்டி டிப்ஸ் கொடுப்பார்.'' 

"டான்ஸ்ல ஆர்வம் உண்டா..?" 

"ரொம்ப! சின்ன வயசிலேயே வெஸ்டர்ன் கத்துக்கிட்டேன். பல வருஷமா பல புரோகிராம்களில் டான்ஸ் ஆடி இருக்கேன். இப்பவும் அவார்டு ஃபங்ஷன்களில் டான்ஸ் ஆடிட்டிருக்கேன்" எனப் புன்னகைக்கிறார் நேஹா. 

பின் செல்ல