Published:Updated:

ஓவியா - ஆரவ் காதல் விவகாரத்தில் ஆரவ் மட்டும்தான் தவறிழைத்தாரா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 55) #BiggBossTamilUpdate

ஓவியா - ஆரவ் காதல் விவகாரத்தில் ஆரவ் மட்டும்தான் தவறிழைத்தாரா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 55) #BiggBossTamilUpdate

ஓவியா - ஆரவ் காதல் விவகாரத்தில் ஆரவ் மட்டும்தான் தவறிழைத்தாரா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 55) #BiggBossTamilUpdate

ஓவியா - ஆரவ் காதல் விவகாரத்தில் ஆரவ் மட்டும்தான் தவறிழைத்தாரா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 55) #BiggBossTamilUpdate

ஓவியா - ஆரவ் காதல் விவகாரத்தில் ஆரவ் மட்டும்தான் தவறிழைத்தாரா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 55) #BiggBossTamilUpdate

Published:Updated:
ஓவியா - ஆரவ் காதல் விவகாரத்தில் ஆரவ் மட்டும்தான் தவறிழைத்தாரா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 55) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்

‘ஆண்டவரின்’ தீர்ப்பு நாள் ‘கேள்வி – பதில்’ நாளாக அமைந்துவிட்டது. கேள்விகள்.. கேள்விகள்.. பதில்கள்.. பதில்கள்…பங்கேற்பாளர்களிடம் கேள்விகள் அனுப்பலாம் என சமீபத்தில் விஜய் டிவி அழைப்பு விடுத்தது. அவற்றில் என்னென்ன கேள்விகள் வந்ததோ தெரியாது. ஆனால் அந்தக் கேள்விகள் பிக்பாஸ் பார்வையாளர்களின் மனதில் நீண்ட நாட்களாக உழன்று கொண்டேயிருந்த கேள்விகள். அது சார்ந்த கோப, தாபங்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வெடித்துக் கொண்டேயிருந்தன; பதில் கிடைக்காமல் அலைந்து கொண்டேயிருந்தன. 

அவற்றை சிறப்பாக தொகுத்து வரிசைப்படுத்தியது நன்று. 

நேற்றைய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சுமார் 75 சதவீதம் இந்தக் கட்டுரைத் தொடரில் ஏற்கெனவே கேட்கப்பட்டிருந்ததை நண்பர்கள் கவனித்திருக்கக்கூடும். மகிழ்ச்சி! 

சரி. கேள்விகள் கேட்கப்பட்டு விட்டன. திருப்தியான பதில்கள் நமக்கு கிடைத்தனவா? நிச்சயம் இல்லை. என்னளவில் இல்லவே இல்லை. ஏனெனில் தேர்வு நடத்தும் பொறுப்பை பள்ளிப்பிள்ளைகளிடம் தந்து விட்டு வாத்தியார் மரத்தடியில் ஒய்வெடுக்கச் சென்று விட்டதால் ஏற்பட்ட விபத்து இது. பிள்ளைகள் சீரியஸான கேள்விகளை தங்களுக்குள் சிரித்துக் கொண்டே கேட்டு பரஸ்பரம் விளையாடிக் கொண்டது போல் ஆகி விட்டது. 

சில கோபங்களால்தான் சில கேள்விகள் உருவாகின்றன. அவற்றிற்கு நியாயமான பதில்கள் கிடைக்காவிட்டால் அவை நிச்சயம் தணியாது. மாறாக, தக்க பதில்கள் கிடைக்காத நெருடலில் கோபம் இன்னமும் உயரவே செய்யும். நேற்றைய நிகழ்ச்சியிலும் அப்படித்தான் நடந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


சில பிரிவினருக்கு தங்கள் மனதிலுள்ள கேள்விகளை கேட்டு விட்டாலே போதும், அது சார்ந்த கொதிப்புகள் அடங்கி விடும். பதில் வருவதைப் பற்றி அத்தனை கவலைப்பட மாட்டார்கள் கடந்த கால தவறுகளுக்கு தக்க பதில்தராத அரசியல்வாதிகளையே மறுபடியும் தேர்ந்தெடுக்கும் தவற்றினைச் செய்வோமா?

**

‘உங்களுக்கு தரப்பட்ட பணியை ஒழுங்காகச் செய்யவில்லை. ஒழுங்கீனங்கள் நிறைந்திருந்தன’ என்பதுதானே கமலின் கோபம்? எனில் ஒரு நெறியாளராக அவரே முன்நின்று இந்தக் கேள்விகளை போட்டியாளர்களின் முன்னால் தன்னுடைய பிரத்யேகமான பாணியில் கறாராக வைத்திருக்க வேண்டும்.. அப்போது ஒருவேளை முறையான பதில்கள் கிடைத்திருக்கலாம். 

போட்டியாளர்களிடம் மட்டுமல்ல கமல் முன்னால் வைக்கப்பட வேண்டிய கேள்விகளும் இருக்கின்றன. ‘எதற்கு வம்பு’ என்று கேள்விகளை புதுப்போட்டியாளர்களை வைத்து கேட்டு விட்டாரா? இதன் மூலம் சிலருக்கு அதிகச் சங்கடத்தை தர வேண்டாம் என்கிற மறைமுக சலுகையா? ‘கேள்விகள் கேட்கப்பட்டாயிற்று. யார் கேட்டால் என்ன?’ என்கிற சம்பிரதாயமா?

கமலின் கோபமும் ஒதுங்கலும் நிஜமா? திட்டமிட்ட நாடகமா?


**

‘பேய் task-ல் சிநேகன் சொன்ன ‘நீதி’யின் படி பேய் இல்லை என்றாகி விடாது. அகப்பேய் என்றொன்று இருக்கிறது. அதுதான் உள்ளேயுள்ள போட்டியாளர்களிடமும் சரி, வெளியே உள்ள பார்வையாளர்களிடமும் சரி, குத்தாட்டம் போடுகிறது என்பது போல கமல் குறிப்பிட்டது மிகவும் உண்மை. பேய் என்பது உண்மையாகவே இருந்தால் கூட அவற்றின் அட்டகாசங்களை எளிதில் சமாளித்து விடலாம். ஆனால் அகப்பேய்களின் அட்டகாசங்கள் மிக மிக ஆபத்தானவை. ‘மனச்சாட்சி’ ‘சுயபரிசீலனை’ ‘நேர்மை’ போன்ற தாயத்துக்களையும் மந்திரங்களையும் வைத்துதான் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் முற்றிலுமாகவும் ஒழித்து விட முடியாது. ஒழித்து விட்டால் வாழ்வில் சுவாரசியமே இருக்காது என்பதும் வேடிக்கையான உண்மைதான். 

இந்த பிக்-பாஸ் நிகழ்ச்சியில் ஒருவரின் தனிப்பட்ட விஷயம் கொத்து பரோட்டாவாக அதிகம் கூறுபோடப்பட்டது எவருடையதென்றால் அது ஆரவ்வின் காதல் விவகாரமாகத்தான் இருக்க முடியும். அந்தளவிற்கு வீட்டின் உள்ளே இருப்பவர்களும் சரி, வெளியே இருப்பவர்களும் சரி.. சும்மா.. பிரித்து மேய்ந்து கொண்டேயிருக்கிறார்கள். ஓவியாவின் மீதுள்ள பிரியங்கள் எல்லாம் ஆரவ்விற்கு எதிரான வெறுப்பாக சென்று முடிகின்றன. ஒருவகையில் அவரைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. சம்பந்தப்பட்ட இரு தனிநபர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய (வயதின் முதிர்ச்சியின்மையால் அவர்களுக்கே கூட தெரியுமா என தெரியாது) ஒரு விஷயத்தை ‘கண்ணால் பார்த்தவர்களும்’ ‘காதால் கேட்டவர்களும்’ ‘தீர விசாரித்தவர்களும்’ அப்படியே நம்புவதும் அப்படி நம்புவதை சரி என நினைத்துக் கொள்வதும், அப்படி சரி என நினைத்துக் கொள்வதை வைத்துக் கொண்டு தீர்ப்பு சொல்வதும், அவமானப்படுத்துவதும் நிச்சயம் நியாயமில்லை. சந்தேகத்திற்கான பலன் ஆரவ்விற்கும் நிச்சயம் தரப்பட்டாக வேண்டும். 

**

கேள்வி –பதில் பகுதிக்குள் செல்வதற்குள் வீட்டினுள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம். 

புது வரவான காஜல், தனக்கு தரப்பட்ட task-ல் ஆரவ் விவகாரத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு அது சார்ந்து பல கேள்விகளை வீசினார். இதர போட்டியாளர்கள் ஆளாளுக்கு ஒன்று சொல்ல, ஆரவ்வும் மென்று முழுங்கி சில பதில்களைச் சொன்னார். எனவே மறுநாள் காலையிலும் அது சார்ந்த உரையாடல்கள் தொடர்ந்தன. 

‘கமிட்டட்’ –ன்ற விஷயத்தை அவன் நம்மகிட்ட சொல்லவேயில்லையே’ என்று ஆரவ்வும் வையாபுரியும் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் வருவது போல ‘நாம் மொதல்ல இருந்து வருவமா?’ என்று நமக்கு கேட்கத் தோன்றியது. இந்த விவகாரத்தில் அத்தனை குழப்பம். 

இதே விவகாரத்தைப் பற்றி வெளியில் ஆரவ் உள்ளிட்ட இதர நபர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘சிநேகனுக்கு ‘கமிட்டட்’ விஷயம் தெரியும். தெரியாத மாதிரியே நேத்து பேசினாரு’ என்று ஆரவ் சொல்ல.. ‘ஙொய்யால.. அங்கயே சொல்ல வேண்டியதுதானே’ என்று படு சரளமாக ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் காஜல். ‘யக்கோவ்’ என்று அன்னியோன்யமாக அழைக்கத் தூண்டுமளவிற்கு இருக்கிறது காஜலின் உடல்மொழியும் தோரணையும். ஆனால் நேர்காணல்களில் தென்படும் கமலின் குழறல்களை விட அதிகமாக இருக்கிறது இவரின் குழறல். வெறும் நீர்தான் அருந்துகிறாரோ என்று கூட சமயங்களில் சந்தேகம் வந்து விடுகிறது. ஆனால் துணிச்சலாக பட்டென்று தேங்காய் உடைத்து விடுவதில் ‘மன்னி’யாக இருக்கிறார். காயத்ரியே இவர் எதிரில் பம்மி அமர்ந்திருப்பது கண்கொள்ளா காட்சியாகத் தெரிகிறது. 

‘அதோட வாய்ஸே பயமாக இருக்கே’ என்ற வையாபுரியுடம் ‘ஆமாம். அஞ்சு ஆம்பளைக்கு சமம்’ என்றார் சிநேகன் பெருமையாக. எனில் காஜலுக்கு ஆறுதல் சொல்ல சிநேகன் முனைவாரா, மாட்டாரா?

பெண்கள் எண்ணிக்கையை விட ஆண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்தான் ‘நானும் ரைசாவும்’ நாமினேட் ஆனோம் என்பது காயத்ரியின் தர்க்கம். ஆண்கள் தங்களுக்குள்தான் ஆதரவு தந்து கொள்வார்களாம். 

இனக்கவர்ச்சி, எதிர்துருவ ஈர்ப்பு என்பது போன்று காலம் காலமாக சொல்லப்பட்ட பல விஷயங்களை காயத்ரியின் இந்த தர்க்கம் அடித்து நொறுக்குகிறது. எனில் இதுவரை பல வாரங்களில் காயத்ரி நாமினேஷன் பட்டியலில் ஒருமுறை கூட வராததிற்கான காரணம் என்ன? 

தன் மீதுள்ள தவறுகளை ஒளிப்பதற்காக மனம் என்னென்ன மாய விளையாட்டுக்களையெல்லாம் நிகழ்த்துகிறது!இனிமேல் சண்டை நிகழ்ந்தால் எவர் எவரிடமில்லாம் வரும் என்பதை போட்டியாளர்கள் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்தார்கள். விளையாட்டு வினையாகலாம். 

**

‘காயத்ரி மாஸ்டரை எனக்கு நல்லாத் தெரியும். அவங்க குடும்பத்தையும். ஆரவ் .. பிரண்டுதானே.. அதனாலதான் இவன் கிட்ட சத்தம் போட்டேன்’ என்று ஏதோவொரு தர்க்கத்தில் பொருந்துகிற அல்லது பொருந்தாத காரணத்தைச் சொல்லி சிநேகன் கலங்க முற்பட, பக்கத்திலிருந்த கணேஷ் ப்ரோ உடனடியாக வந்து கட்டியணைத்து ஆறுதல் சொன்னார். சில பின்னடைவுகள் இருந்தாலும் இந்த விளையாட்டின் கடினமான போட்டியாளர் கணேஷ் என்பதை மறுபடியும் மறுபடியும் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்தளவிற்கான சகிப்புத்தன்மை. பிக்பாஸிடம்  உணவுக்கான ஆர்டர் கொடுத்தால் வந்து சேரும் என்று நம்புவது சுஜாவின் சிறுபிள்ளைத்தனம். அவருடைய சமீபத்திய வீடியோ நேர்காணலை பார்த்ததின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொடர்ந்து கவனிக்கிறார் என்பது தெரிய வருகிறது. எனில் ஒருமுறை கூட போட்டியாளர்கள் அவ்வாறு ஆர்டர் செய்யவில்லை என்பதை அவர் கவனித்திருப்பார். மட்டுமல்லாமல் கேட்கும் உணவுகள் வரும் என்றால் எதற்கு சமையல், லக்ஸரி பட்ஜெட்டிற்காக ஏன் இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்கிற கேள்விகளாவது எழுந்திருக்க வேண்டும்!

தமிழ் சினிமாவின் கதாநாயகிகளைப் போல தன்னை ‘லூசுப் பெண்ணாக’ ஏன் சுஜா சித்தரித்துக் கொள்கிறார் என்று தெரியவில்லை. புது வரவு என்பதால் மற்றவர்களின் விளையாட்டிற்கு பாவனையாக ஒத்துழைக்கிறாரா, உண்மையிலேயே இவர் இத்தனை வெள்ளந்தியா?


சுஜாவிடம் ஒருவேளை இருக்கக்கூடிய வெள்ளந்திதனத்தை மற்றவர்கள் பயன்படுத்துவது ஒருபக்கம் இருக்கட்டும். ‘பேய் task-ல் பிந்துவிற்கு இழைக்கப்படுவது அநீதி’ என்று மனச்சாட்சியுடன் பேசிய ரைசாவும் பாதிக்கப்பட்ட பிந்துவும் கூட இந்த விளையாட்டில் பங்கு பெற்றது முறையல்ல. உணவு வரும் போல என்று உண்மையாகவே சுஜா நினைத்துக் கொண்டு ஏமாந்தால் அது சரியா. எதில் எதில் விளையாட வேண்டும் என்கிற விவஸ்தை இல்லையா,?

பிந்துவின் சுயசரிதையை வையாபுரி துவக்கி வைக்க அதை மேலும் வர்ணித்து பிக்பாஸ் வீட்டை பாடல் இடம் பெற்ற ஸ்தலமாக்கினார் சிநேகன். பொழுது போகவில்லையென்றால் எதையாவது பேச வேண்டியதுதான். அதற்காக இப்படியா? … பிந்து பிந்து … என்று பிந்து அப்பள விளம்பரமாக சிநேகன் கூவுவது ஓவர்தான். மனுஷன் என்ன பிளான்ல இருக்காரோ.

அகப்பேய் வெளியே வரும். வேப்பிலையோடு ரெடியா இருங்க’ என்ற சூசகமான தகவலைச் சொன்னார் கமல்.

**

‘இதுவொரு ரியாலிட்டி ஷோ. ஒரு விஷயத்தை ஒத்துக்கிட்டு உள்ளே வந்திருக்கீங்க. திடீர்னு சில விஷயங்களுக்கு முரண்டு பிடிச்சா எப்படி? சிறுபிள்ளைத்தனமா இருக்கு. வெளியே போய் உங்க தொழில்லயும் இப்படித்தான் இருப்பீங்களா, நீங்கள்லாம் குழந்தைங்களா.. கொஞ்சி, கெஞ்சில்லாம் சொல்லிப் பார்த்துட்டேன். ‘ என்றெல்லாம் லெஃப்ட் ரைட்டாக வாங்கினார் கமல். 

ஆனால் அந்தந்த பிரச்னைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக கேட்காமல் பொத்தாம் பொதுவாகச் சொன்னதன் மூலம் அவர்களே யூகித்துக் கொள்ளட்டும் என்று கமல் விட்டுச் சென்றது பொருத்தமாகப் படவில்லை. 

‘எதுக்குன்னு ஸாரி சொல்லணும்’ என்று ரைசா குழம்பியது சரி. கமல் கேள்விகளை முன்வைத்த போது மாறிக் கொண்டேயிருந்த இவரின் முகபாவங்கள் ஒரு அழகான கொலாஜ் சித்திரம். (ரணகளத்துக்கு நடுவுல இந்தக் கிளுகிளுப்பு தேவையா)

பழைய போட்டியாளர்களுக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் நிச்சயம் தேவைதான். அந்தளவிற்கு சில சமயங்களில் சிறுபிள்ளைத்தனமாக முரண்டு பிடிக்கிறார்கள். குறிப்பாக உடலுழைப்பு சம்பந்தப்பட்ட taskகளுக்கு வையாபுரி காட்டும் அடமும் கோபமும் மிகையானது. வயதானவர் என்பதால் அவரால் செய்ய முடியாது என்று சொல்வது அவரளவில் சரி. ஆனால் அதையே உரக்க கத்தி மற்றவர்களின் மனநிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவது முறையல்ல.

மைக்கை மூடி விட்டு ரகசியம் பேசியது காயத்ரி. ஒருமுறை அவ்வாறு செய்தார் என நினைவு. இந்தக் கேள்வியை கமல் நேரடியாக அவரிடம் கேட்டிருக்கலாம். கேட்டிருக்க வேண்டும். காயத்ரிக்கு சலுகை காட்டப்படுகிறதோ என்கிற நெருடல் ஓய்ந்தபாடில்லை.ரைசா தூக்கம் விவகாரத்தில் கேள்வி எழுப்பப்படுவது முறையா எனத் தெரியவில்லை. ‘என்னுடைய தூக்கம் இரவில் பாழாகிறது. அதனால் பகலில் தூங்க அனுமதி வேண்டும். என்று ரைசா வேண்டியும் அதைப் பொருட்படுத்தாத பிக்பாஸ் அன்று இரவும் அது போன்ற சத்தங்களுக்கு அனுமதி தந்து விட்டு. பிறகு ரைசாவின் பிடிவாதம் குறித்து சீற்றம் கொள்வது அப்பட்டமான முதலாளித்துவதனம்.

சரி. இப்படி தனித்தனியாக சில பிரச்னைகளைப் பார்ப்பதை விட ஒட்டுமொத்தமாகவே பார்ப்போம். 

மனிதர்களின் சில அடிப்படையான சுதந்திரங்களைப் பறித்து விட்டு அவர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்தால் அது சார்ந்த உளைச்சலில் என்னென்னவெல்லாம் நிகழுமோ அவையெல்லாம்தான் இங்கு நிகழ்கின்றன. அதுதானே பிக்பாஸின் திட்டமும் வணிகமும்? இது விளையாட்டுதான் என்றாலும் மனித உணர்வுகளின் மீது ஆடப்படும் சூதாட்டம். இதில் அவர்கள் இயந்திரங்கள் போல சொன்ன பணிகளையெல்லாம் தலைமேல் வைத்து செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகையல்லவா?

மனிதர்களை பலவீனங்களோடும் படைத்தது கடவுள் என்பது உண்மையானால், அவரே ஒரு நாள் நேரில் வந்து ‘ஏம்ப்பா இப்படியெல்லாம் அடிச்சுக்கறீங்க?’ என்று கேட்டால் நமக்கு எப்படியிருக்கும்?  பிரச்னைகளின் சூத்ரதாரியே அவை குறித்து குறுக்குவிசாரணை நிகழ்த்துவது முரண்நகை மட்டுமல்ல அநீதியும் ஆகும்..
பலத்திற்கும் பலவீனங்களுக்குமான போராட்டங்களுக்கு அழிவேயில்லை. பலவீனங்களை முற்றிலுமாக ஒழித்தால் மனிதன் கடவுளுக்குச் சமமாகி விடுவான். 

**

கமல் கோபமாக (?!) வெளியேறிச் சென்றதும் முதலில் பதறிப் போனவர் வையாபுரி. (கமல் படங்களில் வையாபுரி அதிகம் நடித்திருக்கிறார்) அந்தப் பதட்டத்தை உடனே வழிமொழிந்தவர் சிநேகன். மற்றவர்களின் பாவங்களுக்காக சிலுவையைச் சுமந்த இவரின் பாவமன்னிப்பு உண்மையிலேயே ஆத்மார்த்தமானதாகத் தெரிந்தது. அதில் போலித்தனம் தெரியவில்லை. 

பழைய போட்டியாளர்களின் பிழைகளுக்காக புதிய போட்டியாளர்களிடமும் பேசாமல் இருப்பது முறையல்ல என்றுணர்ந்த கமலின் ஞானம் காரணமாக அவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தரப்பட்டது. 


தன்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார் சுஜா. இனியாவது அவரது கலைப்பயணம் மேலுயரட்டும். ‘இதுவரை வெளியில் இருந்து பார்த்ததற்கும் உள்ளே சென்று பார்த்ததற்கும் வித்தியாசமாகத் தெரிந்த நபர் யார்?’ என்கிற கேள்விக்கு ‘சிநேகன்’ என்று பதில் அளித்தார். ‘விஷூவலா பார்க்கும் போது அவருடைய ஆறுதல் நடவடிக்கைகள் சந்தேகமாகத் தெரிந்தன. ஆனால் உள்ளே வந்து பார்க்கும் போது அவர் உண்மையாகவே ஆறுதல் சொல்கிறவராகத் தெரிகிறார்’

நம்முடைய காட்சிப்பிழைகளுக்கும் சுஜாவின் இந்த பதில் உதவக்கூடும். சிநேகனை பலமுறை அப்படித்தான் நாமும் சந்தேகப்பட்டிருக்கிறோம். சுஜாவின் பதிலைத் தாண்டியும் ‘தடவியல் நிபுணர்’ என்று சிநேகனை கமல் வர்ணித்தது ஒருவகையில் ரசிக்கத்தக்க குறும்பு  என்று தோன்றினாலும் மறுபுறம் அது முறையல்லவே என்கிற நெருடலும் தோன்றிற்று.

‘இந்த வீட்டிற்கு எவர் மறுபடியும் வந்தால் சந்தோஷமடைவீர்கள்? என்ற கேள்விக்கு தயக்கமே இல்லாமல் ‘ஓவியா’ என்றார். முன்னணி நடிகரின் பெயரை உச்சரித்துமே அவரின் ரசிகர்கள் என்றல்லாது பொதுவாகவே எழும் பலத்த கைத்தட்டல்களைப் போலவே அம்மணிக்கு ‘தானா சேர்ந்த கூட்டத்தின்’ அன்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது. 

**

அடுத்து ஹரீஷ். ‘சில போட்டியாளர்கள் காமிராவைப் பார்த்து ‘எப்படியாவது இங்க இருந்து போயிடணும்’னு சொல்றாங்க’ உண்மையாகவே போகணும்னு விரும்பறாங்களா?’ 

ஹரிஷ் இந்தக் கேள்வியை சிநேகனிடம் கேட்டாராம். ‘இருந்து பாருங்கள். புரியும்’ என்று சிநேகன் பதிலளித்தாராம். ஹரீஷ் தன்னுடைய போட்டியாளராக ஆரவ்வை கருதுகிறார். (ஆனால் ஆரவ் அவ்வாறு கருதவில்லை என்கிறார்)
‘இங்க அவருக்கு நல்ல நேம் இருக்கு” என்றதும் சபையினரின் கேலியான கூக்குரல் கேட்டது. “ஆண்களிடமா, பெண்களிடமா” என்றொரு நையாண்டியை வீசினார் கமல். மறுபடியும் அதேதான். ‘ஓவியா’ என்ற பெயரைச் சொன்னதும் விசில் ஒலிகள். 

**
காஜலை எதிர்கொள்வது கமலிற்கே சவாலாக இருந்திருக்க வேண்டும். அந்தளவிற்கு அநாயாசமாக பேசினார் காஜல். இதர நடிகர்கள் போல் கடவுளைப் பார்த்தது போல் எல்லாம் இவர் பம்மவில்லை. 

‘வெளியில் இருந்து வந்திருக்கும் என்னிடம் வாயைப் பிடுங்குகிறார்கள். அது தவறு என்று அவர்களுக்குத் தெரிகிறது. அவர்களின் ஆர்வம்தான் காரணம். ஆனால் உளறி விடுவதற்கு அவர்கள் காரணம் அல்ல. என் மீதுதான் தவறு’ என்று நேர்மையாக தன் கேள்வியை எதிர்கொண்டார் காஜல். 

“உள்ளிருக்கும் நபர்களில் காயத்ரியும் ரைசாவும் மட்டுமே சட்டென்று மனம்திறந்து உண்மையைப் பேசுகிறார்கள். மற்றவர்கள் நடிப்பது போலத்தான் தெரிகிறது. சிலருக்கு என்னைக் கண்டால் பிடிக்கவில்லை என்று தெரிகிறது” என்று காஜல் சொன்ன பதில் நம்மில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். உள்ளே சென்றவரின் அனுபவம் உண்மையாக இருக்கக்கூடும். 

வெளியே இருந்து கொண்டு நாம் வெறுப்பவர்கள், அத்தனை கீழ்மையானவர்களாக இல்லாமலிருக்க வாய்ப்புண்டு. போலவே நல்லவர்களாக நாம் நம்புவர்களும். எல்லாமே காட்சிப்பிழைகளின் மாயத் தோற்றங்கள். 

**கேள்வி பதில் session துவங்கியது. முன்னர் குறிப்பிட்டது போல இதை கமல் நேரடியாக நிகழ்த்தியிருந்தால் சுவாரசியம் கூடியிருக்கும். உண்மைகள் வந்திருக்கலாம். மக்களின் கேள்விகள் புது வரவுகளின் மூலம் வெளியானதால் தீவிரத்தன்மையுடன் அமையவில்லை. 

எனவே அவரவர்களுக்கான தற்காப்பு ஆட்டங்களுடன் சுயநியாயங்களுடன் மழுப்பலாகவும் தெளிவற்றும் பதில்கள் வெளிப்பட்டன. அவற்றில் நேர்மையும் உண்மையும் எங்காவது இருந்திருக்கலாம். ஒவ்வொருவரின் பதில்களின் உள்ள நம்பகத்தன்மையை சோதிக்க, அவர்களுக்கே அதைக் காட்ட ‘குறும்படம்’ அல்ல, இதுவரையான எபிஸோட்களையே மொத்தமாக போட்டுக் காட்டினால்தான் முடியும். 

அந்தளவிற்கு சில பிழைகளை செய்தவர்களாலேயே உணர முடியவில்லை. உணர்ந்தாலும் அதை மறைப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். ‘நான் எப்ப ‘கட்டிப்பிடி பாட்டு பாடினேன்’’ என்று வையாபுரி குழம்பியதும் ‘பார்த்தவர்களின் பார்வை அப்படியிருந்திருக்கலாம்’ என்று சமாளித்ததும் ஒரு உதாரணம். 

(இதைக் கேட்டதும் சுஜாவின் எதிர்வினையைப் பார்க்க பாவமாக இருந்தது. வையாபுரியை ஒரு தந்தையாக நினைத்து பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் எத்தனை பாடங்கள் நமக்கு கிடைக்கின்றன)

சபையின் எதிர்வினை பதிலளிப்பவர்களுக்கும் கேட்கும் படியான ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். அந்த சத்தங்களே பதிலளிப்பவர்களுக்கு பல விஷயங்களை உணர்த்தியிருக்கக்கூடும். 

‘கட்டிப்பிடி வைத்தியம் தொடர்பாக சிநேகனிடம் வைக்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் நியாயமாகப் பட்டது. பெண்களுக்கு இது சார்ந்த பிரத்யேகமான எச்சரிக்கையுணர்வு உண்டு. அவர்களால் அந்தத் தொடுதலின் வித்தியாசங்களை நுட்பமாக உணர முடியும். இதுவரையில் சிநேகன் குறித்து எந்தப் பெண்ணும் புகார் சொல்லவில்லை என்கிற அளவில் சிநேகன் உண்மையாகவே ஆறுதல் அளிப்பவராகத்தான் தோன்றுகிறது. எனவே இந்த நோக்கில் அவரைக் கொச்சைப்படுத்துவது முறையல்ல.
‘கமல் உங்களைத் திருத்த முற்படுவது பிடிக்கவில்லையா?’ என்ற காயத்ரியிடம் கேட்கப்பட்டது. ‘என்னைக் கேள்வி கேட்கும் உரிமை என் அம்மாவிற்கு மட்டுமே உண்டு’ என்று முன்பு சொன்ன காயத்ரி. ‘கமல் சொன்னா.. நிச்சயம் 100 சதவீதம் கேட்பேன். அஞ்சு வயது குழந்தை மாதிரி நான். மெல்லமாத்தான் மண்டைல ஏறும். மரமண்டை’ என்றார். இந்த சுயவாக்குமூலத்தை முன்பே தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

**


இந்தக் கேள்விகளை எதிர்கொண்டது நாமாக இருந்திருந்தால் கூட ஏறத்தாழ இப்படித்தான் எதிர்வினையாற்றிருப்போம். மற்றவர்கள் தங்களின் பிழைகளை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், எத்தனை முறை நாமும் அப்படிச் செய்திருப்போம் என்று சுயபரிசீலனையுடன் யோசித்தால் இது புரியும். 

இருந்தாலும் இந்தக் கலந்துரையாடலில் எனக்கு தென்பட்ட ஒரே ஆதங்கம், இந்தச் சமயத்திலாவது இவர்கள் தங்களின் பிழைகளை நேர்மையாக ஒப்புக் கொண்டிருந்தால் அவர்களின் மதிப்பு இன்னமும் உயர்ந்திருக்கும். 

ஜெயகாந்தனின் மேற்கோளை கமல் ஏற்கெனவே குறிப்பிட்டது போல…

‘சில நேரங்களில்…. சில மனிதர்கள். சில தவறுகள் செய்யத்தான் செய்கிறார்கள். மனிதர்கள்தானே…. தவறுகள் குற்றங்கள் அல்ல… ‘