Published:Updated:

''நெகட்டிவ் ரோல்லதான் நம்ம திறமை அதிகம் வெளிப்படும்!’’- 'சுமங்கலி' சுனிதா

''நெகட்டிவ் ரோல்லதான் நம்ம திறமை அதிகம் வெளிப்படும்!’’- 'சுமங்கலி' சுனிதா
''நெகட்டிவ் ரோல்லதான் நம்ம திறமை அதிகம் வெளிப்படும்!’’- 'சுமங்கலி' சுனிதா

''நெகட்டிவ் ரோல்லதான் நம்ம திறமை அதிகம் வெளிப்படும்!’’- 'சுமங்கலி' சுனிதா

'தெய்வமகள்' சீரியலில் சுஜாதாவாக அமைதியான மகளாகவும், நல்ல மருமகளாகவும் வந்து அனைவரின் கவனம் பெற்றவர் சுனிதா. தற்போது, 'சுமங்கலி' சீரியலில் வில்லியாக நடித்து, தனது இன்னொரு பரிணாமத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது சீரியல் பயணம் குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார். 

''என் சொந்த ஊர் கர்நாடக மாநிலம், சிக்மகளூர். படிச்சதெல்லாம் அங்கேதான். தாய் மொழி தமிழ்தான். படிச்சு முடிச்சதும் சென்னையில் ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு வந்துட்டேன். அங்கே நண்பர்கள் பலரும் 'நீ ரொம்ப அழகா இருக்கே. நடிக்கப் போகலாம்'னு சொல்லிச் சொல்லி எனக்கு ஆசையைத் தூண்டிட்டாங்க. அப்போ, 'தெய்வமகள்' சீரியலுக்கு ஆடிஷன் நடக்குதுன்னு தெரிஞ்சு போனேன். செலக்ட்டும் ஆகிட்டேன். நான் நடிக்கப் போறேன்னு சொன்னதும் எங்க வீட்டுல உள்ளவங்க எல்லோரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க'' எனப் புன்னகையுடன் தொடர்கிறார். 

 ''ஆரம்பத்தில் ஒரு பெரிய புரொடக்க்ஷனில் நடிக்கப்போறோம்னு தெரியாது. ஒண்ணு, ரெண்டு சீனுக்கு வரப்போறோம் அவ்வளவுதான்னு நினைச்சேன். அப்புறம்தான் இவ்வளவு பெரிய டீமில் பேசப்படும் ரோல் பண்றேன்னு தெரிஞ்சது. போன வருஷம்தான் எனக்குக் கல்யாணம் ஆச்சு. என் கணவரும் எனக்கு ஃபுல் சப்போர்ட்டா இருக்கார். அதனால், ஒவ்வொரு நாளும் ஜாலியா, ரசிச்சு நடிச்சுட்டிருக்கேன். ஒருநாள் ஷுட்டிங் இல்லைன்னாலும் ஒரு மாதிரி இருக்கும். அங்கே எல்லோரும் ஒரே குடும்பமா பழகுவோம். நான் நடிக்கும் சுஜாதா கேரக்டருக்கு மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறதால், ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்தக் குழந்தையோடு கொஞ்சி விளையாடிட்டு இருக்கிறது ரொம்பப் பிடிச்சிருக்கு'' எனத் தாய்மை உணர்வோடு பூரிக்கிறார் சுனிதா. 

''இப்போ 'சுமங்கலி' சீரியலில் நெகட்டிவ் ரோல் பண்றேன். உண்மையைச் சொல்லணும்னா, நெகட்டிவ் ரோல் பண்ணும்போதுதான் நம் நடிப்புத் திறமையை அதிகம் காட்ட முடியுது. இதுமாதிரி சேலஞ்சிங் ரோல் பண்றதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனாலும், ஒரு சீரியலில் மெயின் ஹீரோயினா வரணும்னு ஆசை இருக்கு. என் ஆசை சீக்கிரமே பலிக்கும்னு நம்புறேன்'' என்கிற சுனிதா, சூப்பரான பாடகி என்பது தெரியுமா? 

''காலேஜ் படிக்கும்போது புரோகிராம்களில் நல்லாப் பாடுவேன். எங்க வீட்லகூட நான் சிங்கராதான் ஆவேன்னு சொல்லிட்டிருந்தாங்க. நடிகையாக வராதிருந்தால் நிச்சயம் சிங்கரா ஆகிருப்பேன். ஏதாவது ஒரு புரொபஷன்ல சாதிக்கணும்னு மனசுக்குள் உறுதி இருந்துட்டே இருக்கும். நான் ரொம்பவே ஹார்டு வொர்க்கர். 'தெய்வமகள்' சீரியலில் என் குழந்தை இறந்து பிறக்கும். நான் ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு சீனோடு அந்த எபிசோடு முடிஞ்சுடும். அது ஒளிபரப்பான மறுநாள் என் ஃப்ரெண்ட்ஸோடு ஷாப்பிங் போயிருந்தேன். அங்கே ஒருத்தர் என்னைப் பார்த்துட்டு 'நேத்துதான் குழந்தைப் பிறந்துச்சு. அதுக்குள்ள மார்டன் டிரஸ் போட்டு ஷாப்பிங் வந்துருக்கியே'னு கேட்டாங்க. என்னால் சிரிப்பை அடக்கவே முடியல. அவங்ககிட்ட 'ஸாரிம்மா'னு சொல்லிட்டு வந்துட்டேன்'' எனச் சிரிக்கிறார் சுனிதா. 

இப்போ வரைக்கும் வெள்ளித்திரையில நடிக்குறதுக்கு எந்த வாய்ப்பும் வரல. ஒருவேளை வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் நடிப்பேன். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டர உள்வாங்கி நடிக்குறதுதான் என்னோட ஸ்பெஷல். அதுனால என்னை சீக்கிரமாவே நீங்க வெள்ளித்திரையில பார்ப்பீங்கனு உற்சாகத்தோடு முடிக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு