Published:Updated:

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா vs போட்டோஷூட் ஷிவானி... எல்லை மீறும் வார்த்தைகள், பிரச்னை என்ன?!

ஷிவானி
ஷிவானி

சித்ரா யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் போட்ட கமென்ட்டுக்கு, அடுத்த சில மணிநேரங்களில் ஷிவானியிடமிருந்து பதில் வந்ததும்தான், 'சண்டை இவங்களுக்கிடையில‌தானா' எனப் பேசத் தொடங்கியது வெளியுலகம்.

இன்ஸ்டாகிராம் விவகாரம் எந்நேரமும் வெடிக்கலாம் எனப் பரபரக்கிறது சின்னத்திரை உலகம். சோஷியல் மீடியா லைவில் வனிதா விஜயகுமார் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வசை மொழி பார்த்து வாயடைத்துப் போனவர்கள் பல பேர். அதேபோல் இன்னொரு சண்டையும் எந்த நேரத்திலும் பெரிய அளவில் வெடிக்கலாம் என்கிறார்கள்.

வனிதா விவகாரத்திலாவது கடைசிக் கட்டத்தில்தான் கேட்டன கெட்ட வார்த்தைகள். இந்தச் சண்டையோ, எடுத்த எடுப்புலயே எல்லை மீறும் கெட்டவார்த்தைகளோடு தொடங்கியிருக்கிறது. யார் யாருக்கிடையில் மல்லுக்கட்டு என நெட்டிசன்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். புரியாத சிட்டிசன்களுக்காக இங்கே...

ஷிவானி
ஷிவானி

நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாணத்துக்குத் தயாராகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ராவுக்கும், கடிகாரம் சரியாக சாயந்திரம் நாலு மணி எனக் காட்டினால், வீட்டு மொட்டை மாடி அல்லது திறந்த வான்வெளியில் கலர் கலர் கவர்ச்சி புகைப்படமெடுத்து அவற்றைச் சமூகவலைதளப் பக்கங்களில் தன் ரசிகர்களுக்காகப் பகிரும் 'நாலு மணி வாலு' ஷிவானிக்கும்தான் சண்டை.

சண்டை எங்கிருந்து தொடங்கியது?

''சித்ரா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்துல வழக்கம்போல் ஃபோட்டோ போட்டுட்டிருந்தாங்க. குசும்பு பிடிச்ச ஒரு ரசிகர், 'ஏங்க கிளாமர் போட்டோலாம் போட மாட்டீங்களா'னு கேட்டார். கல்யாணத்துக்குத் தயாராகிட்ட பொண்ணுகிட்டப் போய் இந்த மாதிரிக் கேள்வி கேட்டா, கடுப்பாகாதா?

'போ அந்தப் பக்கமா... ரெண்டாயிரத்துல பொறந்த எவளாச்சும் நீ கேட்ட மாதிரி போட்டோ போடுவா... பார்த்து ரசிச்சுக்கோ'னு அந்த ரசிகருக்குப் பதில் தந்தாங்க சித்து.

ரெண்டாயிரத்துல பிறந்தவங்க எத்தனையோ பேர் சமுக வலைதளங்கள்ல இருக்காங்க. யாருக்கும் வராத கோபம் அந்தப் பொண்ணுக்கு மட்டும் ஏன் வரணும்'' என்கிறார், சித்ராவுக்கு ஆதரவான ரசிகர் ஒருவர்.

VJ Chithra
VJ Chithra

சித்ரா யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் இப்படிப் போட்ட கமென்ட்டுக்குப் பதில் சொல்லும்படியாக அடுத்த சில மணிநேரங்களில் ஷிவானியிடமிருந்து பதில் வந்ததும்தான், 'ஆஹா, இந்தச் சண்டை இவங்க ரெண்டு பேருக்கிடையிலதானா' எனப் பேசத் தொடங்கியது வெளியுலகம்.

சித்ராவைப் போலவே யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், ஷிவானி போட்டிருந்த பதில் கமெண்ட் இதுதான்.. ''அடுத்தவங்களைப் பத்தி ஏதாச்சும் சொல்றதுக்கு முன்னாடி உன் முதுகைப் பார்''.

கூடவே வனிதா- லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பயன்படுத்திய அதே கெட்ட வார்த்தைகளும் ஷிவானியிடமிருந்து வந்தது.

சோஷியல் மீடியாவில் ஷிவானியை அன் ஃபாலோ செய்து விட்டதாகச் சொல்லும் சித்ரா தரப்பிலோ, ''அந்தப் பொண்ணு 'அக்கா அக்கா'னு நல்லாதான் பேசிட்டிருந்தது. ஆனா அது ஒரு மாதிரியா ஃபோட்டோ போடத் தொடங்கினதும்தான் அன்ஃபாலோ பண்ண வேண்டியதாகிடுச்சு. அது சரி, 2000ம் வருஷத்துல பிறந்தவங்கனுதான் நாங்க குறிப்பிட்டிருக்கோம். 2001-ல் பிறந்த அவங்களுக்கு ஏன் கோபம் வரணும்'' என்கிறார்கள்.

ஷிவானி
ஷிவானி
"ஸ்டேஜ் ஏற முடியாதுன்னு சொல்லிட்டார்!"- பரபரக்கும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை - கதிர் பஞ்சாயத்து!

சித்ராவிடம் நேரடியாகவே இதுகுறித்து நாம் கேட்டபோது, ''நான் கல்யாண வேலைகள்ல பிசியா இருக்கேன். யாரையும் குறிப்பிட்டு நான் எதையும் சொல்லலை. அதே மாதிரி சர்ச்சையைக் கிளப்பி அதுமூலமா விளம்பரம் தேடணும்னு ஆசைப்படுறவ இல்ல நான்" என முடித்துக் கொண்டார்.

சித்ரா அன்ஃபாலோ செய்ததுமே அவரை ஷிவானியும் பிளாக் செய்தாராம். ஆக இருவருக்குமிடையில் ஏற்கனவே புகைந்து கொண்டுதானிருந்திருக்கிறது.

ஷிவானியிடம் இதுகுறித்துக் கேட்கலாம் எனத் தொடர்பு கொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

ஷிவானி பிக் பாஸ் வீட்டுக்குக் கிளம்ப ரெடியாகி விட்டதாகவும் பேச்சு.

அடுத்த கட்டுரைக்கு