Published:Updated:

"ஸ்டேஜ் ஏற முடியாதுன்னு சொல்லிட்டார்!"- பரபரக்கும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை - கதிர் பஞ்சாயத்து!

 சித்ரா - குமரன்
சித்ரா - குமரன்

"என்னைப் பொறுத்தவரை சேனல் எந்தவொரு நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாலும் 'நோ' சொல்லாம கலந்துட்டு வர்றேன். யார் வரலைன்னாங்களோ, அவங்களைப் போய்த்தான் நீங்க காரணம் கேக்கணும்!" - சித்ரா

விஜய் டிவியில் சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பான ஷோ 'ஸ்டார் ஜோடிகள்'. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிற சீரியல்களின் ஜோடிகள் கலந்து கொண்டு ஆட்டம், பாட்டம் என பெர்ஃபார்மன்ஸ் காட்டிய இந்த ஷோவில் சேனலின் முக்கிய பிரைம் டைம் சீரியலான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் சித்ரா - குமரன் ஜோடி கலந்து கொள்ளவில்லை.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரைப் பொறுத்தவரை மற்ற ஜோடிகளைக் காட்டிலும் சித்ரா - குமரன் ஜோடிக்கு ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகப்படியான‌ வரவேற்பு உண்டு. இவர்கள் இருவரின் கேரக்டர் பெயரான முல்லை - கதிர் பெயரில் ஆர்மியெல்லாம் அமைத்துக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

``தோனிக்கும் அஜித்துக்கும் ஈகோ அதிகம்... ஏனென்றால்?!'' - பார்த்திபன் தொடர் - 14

இந்தச் சூழலில் இந்த டிவி ஷோவில் இவர்கள் இருவரும் கலந்து கொள்ளாதது சீரியலைத் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. எனவே அவர்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். "சித்ரா ஈகோ பார்க்கிறதில்ல, குமரன் அவரோட சேர்ந்து ஆட மறுத்துட்டு வர்றார்; சேனல் அவரை மாத்திட்டு வேற ஆளைப் போடணும்" என சித்ராவின் ஆதரவாளர்களும், "ஏங்க சீரியல்ல நடிக்கறது வேற, ஆனா தனிப்பட்ட ஒரு ஷோவுல யார் கூட ஆடணும்கிறதைக்கூட ஒரு ஆர்ட்டிஸ்ட் முடிவு செய்யக் கூடாதா?" என குமரனின் ஆதரவாளர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

Pandian Stores
Pandian Stores
சரி, சித்ரா- குமரன் ஜோடி ஏன் கலந்து கொள்ளவில்லை? சேனல் மற்றும் சீரியலின் யூனிட் தரப்பில் விசாரித்தால், 'பெயரைக் குறிப்பிட வேண்டாம்' எனக் கேட்டுக் கொண்டு சிலர் பேசினார்கள்.

''இந்த ஜோடிக்கிடையிலான பிரச்னை ஓயற மாதிரியே தெரியலைங்க. சீரியல் தொடங்கின சில மாசங்கள் நல்ல நண்பர்களா இருந்திருப்பாங்கன்னு நினைக்கிறோம். பிறகு ரெண்டு பேருக்குமிடையில என்ன நடந்ததுன்னு யாருக்கும் தெரியலை. அடிக்கடி இவங்க ரெண்டு பேருக்கிடையில்‌ பஞ்சாயத்துங்கிற செய்திகள் வந்துட்டேதான் இருக்கு. அதேநேரம் ஷூட்டிங்ல நடிக்கிறப்ப ரெண்டு பேரும் அழகா நடிச்சுக் கொடுத்துட்டுப் போயிடுறாங்க'' என்றார்கள்.

சித்ராவிடம் பேசினேன்.

''சேனல்ல இருந்து என்னைக் கூப்பிட்டது நிஜம். காஸ்ட்யூம், பாட்டெல்லாம் ரெடி பண்ணிட்டேன். கோரியோகிராஃபர் கமிட் ஆகிட்டார். மறுநாள் ரிகர்சலுக்குப் போகணும்கிற சூழல்ல, முதல்நாள் நைட் பேசி 'இல்ல சித்ரா நீங்க வரவேண்டாம்; உங்களோட ஜோடியா ஸ்டேஜ் ஏற குமரன் மறுத்துட்டார்'னு சொல்றாங்க. என்னைப் பொறுத்தவரை சேனல் எந்தவொரு நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாலும் 'நோ' சொல்லாம கலந்துட்டு வர்றேன். யார் வரலைன்னாங்களோ, அவங்களைப் போய்த்தான் நீங்க காரணம் கேக்கணும்'' என்றார் சித்ரா.

குமரன்
குமரன்

குமரனிடமும் பேசினேன்.

'' 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்ல நடிச்சிட்டிருக்கிற மூணு ஜோடிகளையுமே நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. இதுதான் நிஜம். எல்லாருக்குமே அந்தத் தேதியில பர்சனல் கமிட்மென்ட் இருந்ததுங்கிறதுதான் உண்மை. அதனாலதான் யாருமே அந்த ஷோல கலந்துக்க முடியலை. ஆனா, 'ஏன் வரலை'ன்னு எங்கிட்ட மட்டுமே கேட்டு, இதைப் பெரிய பிரச்னையா ஏன் ஆக்குறாங்கன்னு தெரியலை. அந்தத் தேதியில கலந்துக்க முடியலை; இன்னொரு நாள் தேதி சரியா அமைஞ்சா கலந்துக்கப் போறேன். இதுக்கிடையில 'குமரன் வேணும்னே பண்ணறார்... அவர் சித்ராவுடன் ஆட மறுத்துட்டார்'னெல்லாம் எப்படித்தான் நியூஸ் கிளம்புதோ? உண்மையிலேயே எனக்கு வருத்தமா இருக்கு. யாராவது அவங்களா எதையாச்சும் நினைச்சுக் கிளப்பி விடற தகவலுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்றது?!" என்கிறார் குமரன்.

அடுத்த கட்டுரைக்கு