Published:Updated:

நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைமுக்கெல்லாம் முன்னாடி நம் நாஸ்டால்ஜி சீரியல்ஸ்!

நாஸ்டால்ஜியா சீரியல்கள்

90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் சீரியல்களின் பட்டியல் இதோ... நாஸ்டால்ஜியா சீரியல்கள்!

நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைமுக்கெல்லாம் முன்னாடி நம் நாஸ்டால்ஜி சீரியல்ஸ்!

90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் சீரியல்களின் பட்டியல் இதோ... நாஸ்டால்ஜியா சீரியல்கள்!

Published:Updated:
நாஸ்டால்ஜியா சீரியல்கள்

கொரோனாவுக்கான குவாரன்டீன் நாள்களில், வீட்டில் பொழுதைக் கழிக்க நாஸ்டால்ஜியா கன்டென்ட்டுகளை மீண்டும் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன தொலைக்காட்சிகள். அப்போது ஹிட்டடித்த ரியாலிட்டி ஷோக்கள், மெகா சீரியல்கள், க்ளாசிக் படங்கள் என ரீவைண்டு ட்ராவலில் மக்களை கட்டிப்போட்டிருக்கின்றன தொலைக்காட்சிகள்.

நாஸ்டாலஜியா சீரியல்கள்
நாஸ்டாலஜியா சீரியல்கள்

அந்த வகையில், அப்போது 90’ஸ் ஹிட்ஸின் ஃபேவரைட் சீரியல்களின் பட்டியல் இதோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மர்மதேசம்:

மர்மதேசம்
மர்மதேசம்

இந்திராசெளந்தரராஜன் கதை எழுத, இயக்குநர்கள் நாகா மற்றும் பாஸ்கர் இணைந்து `மர்மதேசத்’தை இயக்கியிருந்தனர். 'ரகசியம்', 'விடாது கருப்பு', 'சொர்ண ரேகை', 'இயந்திரப்பறவை', 'எதுவும் நடக்கும்' என ஐந்து சீரிஸாக சன் டி.வி-யில் 1995 - 1998-ல் ஒளிபரப்பாகின. வெப்சீரிஸ்கள் வருவதெற்கெல்லாம் முன்னோடி என சமீபத்தில் இந்த சீரியலைக் கொண்டாடி, நாஸ்டால்ஜியாவில் திளைத்திருந்தனர் நெட்டிசன்கள்.

நவபாஷான லிங்கம், நாட்டார் தெய்வங்கள், கைரேகை சாஸ்திரங்கள், வர்மக்கலை, கற்பக விருட்சம் என ஒவ்வொரு சீரிஸும் ஃபேன்டஸி ஏரியாக்களைத் தொட்டு கிராஃபிக்ஸ் காட்சிகளோடு வலம்வந்த தொடரை தற்போதும் டிரெண்டிங்கில் வைத்திருந்தனர், `மர்மதேச’த்தின் ரசிகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விக்ரமாதித்யா:

விக்ரமாதித்யா
விக்ரமாதித்யா

நாம் சிறுவயதில் கேட்டு ரசித்த விக்ரமாதித்யன் கதைகளை 'மறுஜென்மம்', 'பதுமைகள்' என சுவாரஸ்யம் குறையாமல் கதையாக்கியிருந்தார்கள். நடிகை ஸ்ரீப்ரியா இயக்கத்தில் வெளிவந்த இந்தத் தொடர், அப்போது பள்ளிக் குழந்தைகளிடையே பயங்கர வைரலாக இருந்தது. சிறுவன் விக்ரமுக்கும் பதுமைக்கும் அது சொல்லும் கதைகளுக்கும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருந்தனர். சன் டிவி-க்குப் பிறகு பொதிகை இதை மறுஒளிபரப்பு செய்தது.

மை டியர் பூதம்:

மை டியர் பூதம்
மை டியர் பூதம்

2004 - 2007 சமயத்தில், சன் தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பான சீரியல், `மை டியர் பூதம்’. பெரும்பாலான படங்களில் வில்லத்தனமாகவே காட்டிய பூதத்தை இந்த சீரியலில் குழந்தைகளுக்கான ஹீரோவாக உலவவிட்டிருப்பார்கள். சிறுவன் மூசாவும் அவனது குடும்பமும் பூத குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்கள். மூசாவின் நண்பர்களுக்கு எதிரிகளால் தீங்கு ஏற்படும்போது, மூசாவும் அவர்களது குடும்பமும் எப்படி அவர்களைக் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் `மை டியர் பூதம்’.

மூசாவாக அபிலாஷ், பாரத், நிவேதா தாமஸ், கெளதம் என இந்த சீரியலில் நடித்த குட்டீஸுக்கு இப்போதும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

ஷக்கலக்க பூம் பூம்:

ஷக்கலக்க பூம் பூம்
ஷக்கலக்க பூம் பூம்

சன் டி.வி-க்கு ஒரு `மை டியர் பூதம்' போல, விஜய் டி.வி-க்கு ‘ஷக்கலக்க பூம் பூம்’. டிடி நேஷனலில் 2000-ம் ஆண்டு ஒளிபரப்பானது. அதன் பிறகு, இதன் தமிழ் வெர்ஷனை விஜய் டி.வி ஒளிபரப்பியது. சிறுவன் சஞ்சுவும் அவன் கண்டுபிடிக்கும் மேஜிக் பென்சிலும்தான் `ஷக்கலக்க பூம் பூம்’மின் ஹீரோக்கள். பேப்பரில் வரைவதை எல்லாம் அப்படியே கண் முன்னே கொண்டுவரும் அந்த பென்சிலுக்கு 90’ஸ் கிட்ஸே அடிமை. சஞ்சு, மேஜிக் பென்சில், ஏலியன் ஷான் இவர்களின் அட்வென்ச்சர்களும் மேஜிக் மொமென்டுகளும் சீரியல் முழுக்கவே இருந்தது.

வேலன்:

வேலன்
வேலன்

ஒரு பக்கம் ஃபேன்டஸி சீரியல்கள் பட்டையைக்கிளப்ப, மறுபக்கம் அதற்கு இணையாக ஆன்மிக சீரியல்களும் ஹிட்டடித்தன. `வேலன்', `ராஜ ராஜேஷ்வரி', `சிவசங்கரி' ஆகிய சீரியல்களுக்கு என்றைக்கும் நாஸ்டால்ஜியா லிஸ்ட்டில் ஃபேவரைட் இடம் உண்டு. வேலன், ராஜ ராஜேஷ்வரி ஆகியவற்றில் குழந்தைக் கடவுள்களின் பக்தி ஜாலங்களும் அவர்களைச் சுற்றி நடக்கும் பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு சொல்கிறார்கள் என்பதுமாய் கதை நகரும். இம்மூன்று சீரியல்களும் சன் டி.வி-யில் ஒளிபரப்பானவை.

சின்ன பாப்பா பெரிய பாப்பா:

சின்ன பாப்பா பெரிய பாப்பா
சின்ன பாப்பா பெரிய பாப்பா

சன் டி.வி-யில் ஒளிபரப்பான `சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலும் அதில் வந்த பட்டாபி கதாபாத்திரமும் மறக்க முடியுமா? நடிகை ஸ்ரீப்ரியா இயக்கத்தில் வந்த சீரியலில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே நடக்கும் காமெடி களேபரங்களே சீரியலின் ஒன்லைன். சின்ன பாப்பாவாக மாமியாரும், பெரிய பாப்பாவாக மருமகளும் இருக்க, இருவருக்குமிடையே நடக்கும் சண்டைகளும் அதைக் கலகலவென காமெடியாகக் காட்சிப்படுத்திய விதமும்தான் இதன் ஹிட் சீக்ரெட். மூன்று சீசன்கள் வரை ஒளிபரப்பானது. நளினி, ஸ்ரீப்பிரியா, தேவதர்ஷினி எனப் பலரும் சின்ன பாப்பா பெரிய பாப்பா கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

முதல் சீசனில், சின்ன பாப்பாவுக்கும் பெரிய பாப்பாவுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு பட்டாபி படும் பாடெல்லாம் காமெடி கதகளி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை பலரின் ஃபேவரைட்டாக இருந்த சீரியலை இந்த க்வாரன்டீன் நேரத்தில் ஒளிபரப்பு செய்தால், நாஸ்டால்ஜியாவில் திளைப்பார்கள் நம் மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism