Published:Updated:

AKS - 39 | ஆணாதிக்கத்தைப் பண்பாடு என வளர்க்கும் பெண்களும், காதலுக்கு இடைஞ்சலாக நிற்கும் நட்பும்!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (14-10-2021) வெளியான 39-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:

AKS - 39 | ஆணாதிக்கத்தைப் பண்பாடு என வளர்க்கும் பெண்களும், காதலுக்கு இடைஞ்சலாக நிற்கும் நட்பும்!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (14-10-2021) வெளியான 39-வது எபிசோட் எப்படி இருந்தது?!

காயத்ரி இரண்டு நாள்கள் விடுமுறை முடிந்து சென்னை கிளம்புகிறாள். ”என்கிட்ட ஏதாவது சொல்ல வந்து சொல்லாம போறியா” என்று காயத்ரியிடம் அவளின் அண்ணி கேட்கிறாள். ”ஒன்றும் இல்லை” என்று சொல்லும் காயத்ரியிடம் திருமண வேலைகள் மும்முரமாக போய்க் கொண்டிருப்பதைப் பற்றி நினைவூட்டுகிறார்.

இந்த திருமணம் நிச்சயம் நடந்தே ஆக வேண்டும் என்றும் அப்படி நடக்கவில்லை என்றால் காயத்ரியின் தந்தை அதை தாங்கிக் கொள்ளமாட்டார் என்பதையும் கூறுகிறார். அதோடு மட்டுமல்லாமல் காயத்ரியிடம் நேரடியாகவே, “உன் அண்ணனை பற்றி உனக்கே தெரியும்” என்று அமைதியான தொணியில் எச்சரிக்கிறார். இவ்வளவிற்கு பிறகு, ”இதை எல்லாம் சாதாரணமாகத்தான் சொன்னேன், ஃப்ரீயா விடு” என்று காயத்ரியின் அண்ணி அவளிடம் கூறுகிறார்.

AKS - 39
AKS - 39
வெளியில் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு, சாதிப் பெருமை, ஊர்ப்பெருமை, ஆணாதிக்கம் பேசும் ஆண்களைவிட, சாதியை, ஆணாதிக்கத்தை பண்பாடு என்கிற பெயரில் போற்றி வளர்ப்பவர்கள் வீட்டுக்குள் இருக்கும் பெண்கள். பெண்களை அடிமைப்படுத்தும் சமூகத்தின் ஓர் அங்கமாக பல பெண்கள் இருக்கிறார்கள். காயத்ரியின் அண்ணி அவளுக்கு ஒரு அம்மாவைப் போல் இருக்கிறார்.

அம்மாவின் இடத்தில் இருந்து கவனித்துக் கொள்கிறார் என்பதற்காக அம்மாவின் தலைமுறைபோல நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. காயத்ரிக்கும் அவர் அண்ணிக்கும் கிட்டத்தட்ட சில வயது வித்தியாசம்தான் இருக்கும். காயத்ரிக்கு கல்வியும், வேலையும் கிடைக்கும்பொழுது அவள் அண்ணி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். ஆனால் காயத்ரிக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் கேட்காமல் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருப்பதில் காயத்ரியின் அண்ணிக்கும் பங்கு இருக்கிறது. அவர் நினைத்திருந்தால் காயத்ரி சென்னையில் வேலை பார்க்க, குடும்பத்தில் பேசி அனுமதி வாங்க முயற்சி செய்திருக்கலாம். ஆனால் பண்பாடு, குடும்பப் பெருமை என்கிற பெயரில் தான் ஒரு நல்ல மருமகள் எனப் பெயர் எடுக்க நினைத்து அதன்படி வீட்டில் ஆண்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவராக இருக்கிறார்.

அதேபோல் காயத்ரியும் படிப்பு வேலை எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருமணம் முடித்து, பிள்ளை பெற்று, வீட்டைக் கவனித்துக் கொண்டால் போதும் என்று நினைக்கிறார். நாளை அவருடைய பெண் குழந்தையையும் காயத்ரியை போல படித்தாலும் திருமணத்திற்குப் பிறகு வீட்டிலிருந்தால் போதும் என்பதுதான் அவரது பண்பாடாக இருக்கும்.

காயத்ரி, சென்னையிலிருந்து சுந்தருக்கு பரிசு பொருள்கள் வாங்கி வராததால் அவன் வருத்தம் அடைந்ததை கவனித்த காயத்ரியின் அண்ணி அவனுக்கு ஒரு பரிசு வாங்கி காயத்ரியிடம் கொடுத்து அவள் சென்னையிலிருந்து வாங்கி வந்ததாக பொய் சொல்ல சொல்கிறார். காயத்ரி மறுக்கிறாள்.

AKS - 39
AKS - 39

சுந்தரை பார்க்க பாவமாக இருக்கிறது என்று இதை செய்ய சொல்கிறார். இன்னும் அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாக கூட வராத சுந்தரை பற்றி, அவன் முகம் வாடியதை பற்றி யோசிக்கிறார் காயத்ரியின் அண்ணி. ஆனால் தன் குடும்பத்தில் ஒருத்தியான காயத்ரியின் மனம், விருப்பம் பற்றியெல்லாம் கவலை இல்லை. இது பொதுவாக நம் வீடுகளில் இருக்கும் நடைமுறைதான். வீட்டுக்கு வரும் மாப்பிள்ளையின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் யாரும் தன் சொந்த மகள் அல்லது உடன் பிறந்தவர்களைப் பற்றி எண்ணுவது இல்லை.

காயத்ரியை ஊருக்கு வழியனுப்ப பேருந்து நிலையத்திற்கு சுந்தர் காரில் அழைத்துச் செல்கிறான். காலையிலேயே காயத்ரிக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி இருப்பதாகவும் அதை காயத்ரி இப்பொழுதுவரை பார்க்காமல் இருப்பதை பற்றியும் சுந்தர் கேட்கிறான். காயத்ரி நெட் ஆன் பண்ணவில்லை என்று சொல்கிறாள். சுந்தருக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது. ”இந்தக் காலத்து பெண்கள் எழுந்ததும் போனில்தான் கண் விழிப்பார்கள். ஆனால் என்னுடைய காயத்ரி வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் எதுவும் பயன்படுத்துவதில்லை” என்று பெருமைப்படுகிறான்.

முன்பே ஒருமுறை சுந்தருடன் காயத்ரி சரியாகப் பேசுவதில்லை என்று சொல்லும்பொழுது சுந்தரின் சித்தப்பா ஒருவர், “இந்த காலத்தில் இப்படிப்பட்ட பெண் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று பாராட்டுவார். இன்று சுந்தர், காயத்ரி சமூக வலைதளங்கள் பயன்படுத்தாமல் இருப்பது குறித்து பெருமையாக பேசுகிறான். சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் பெண்கள் தவறானவர்கள் என்கின்ற பிற்போக்குத்தனம் சுந்தரிடம் இருக்கின்றது.

சுந்தர் தான் நண்பர்களுக்கு கொடுக்க வேண்டிய பத்திரிகையின் நகலை காயத்ரிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி தேர்வு செய்யச் சொல்கிறான். காயத்ரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போலவும், காயத்ரி விருப்பப்படி நடப்பது போலவும், தங்களுக்குள் வெளிப்படைத்தன்மை இருப்பது போலவும் சுந்தர் காட்டிக் கொண்டாலும் எல்லாமே சுற்றி வந்து நிற்கும் புள்ளி ஒன்றுதான். அது காயத்ரியை தன் உடமையாக வைத்துக் கொள்ளும் எண்ணம்.

AKS - 39
AKS - 39

ராஜேஷும், கவிதாவும் தனியாக உணவகம் வந்துள்ளனர். முதல்முதலில் ராஜேஷ் கவிதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு காதல் வசனம் பேசியது பற்றி இருவரும் பேசிக் கொள்கின்றனர். ராஜேஷ் ப்ராக்டிகலாக இல்லாமல் மிகவும் நாடகத்தனமாக அன்று காதல் சொல்லியதாக கவிதா சொல்கிறாள். அதைத் தான் திருப்பி செய்தால் எப்படி நீங்கள் உணர்வீர்கள் என்றும் கேட்கிறாள். அவனுக்குக் கோபம் வரவில்லை. மாறாக ராஜேஷ் கவிதா சொல்வதை புரிந்து கொள்கிறான். ராஜேஷ் பேசிய வசனங்கள் நாடகத்தனமாக இருந்தாலும் அவனது உணர்வுகளைப் புரிந்து கொண்டதாகவும், அப்போது தனக்கும் பட்டாம்பூச்சிகள் பறந்ததாகவும் கவிதா சொல்கிறாள். ராஜேஷிற்கு நிம்மதியாக இருக்கிறது. இருவருக்குள்ளும் ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட காதல் மலர்ந்திருக்கிறது. இந்தக் காதல் கவிதை வாசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இருவரின் மத்தியில் எப்பொழுதும் போல் பாண்டியன் வந்து உட்காருகிறான். ராஜேஷும் எப்பொழுதும் போல் கோபப்படுகிறான்.

பாண்டியன் ராஜேஷிடம் போனை கொடுத்து தன்னை ஒரு போட்டோ எடுத்துக் கொடுக்கும்படி கேட்கிறான். ராஜேஷ் கோபப்பட்டு, “எங்கள் இருவருக்கும் தனிப்பட்ட நேரம் என்பதே கிடையாதா, எப்போது கூப்பிட்டாலும் வந்து விடுவீர்களா” என்று முகத்தில் அறைந்தாற் போல் கேட்டுவிடுகிறான். பாண்டியன் மன்னிப்பு கேட்டு வெளியேறுகிறான். கவிதா ராஜேஷிடம் கோபப்பட்டு பாண்டியனைச் சமாதானம் செய்ய அவன் பின்னாலே போகிறான்.

கவிதா பாண்டியனைக் கண்டுபிடித்து அவனிடம் சமாதானம் பேசுகிறாள். ஆனால் பாண்டியன் ராஜேஷின் இடத்திலிருந்து அவன் செய்தது சரிதான் என்றும் தான் இவ்வளவு நாள்களாக அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது தவறு என்றும் உணர்ந்து பேசுகிறான். ராஜேஷும் கவிதாவும் இப்பொழுதுதான் பேசி பழக ஆரம்பித்திருக்கிறார்கள். அலுவலகத்தில் பேசக் கூடாது என்பதில் கவிதா தெளிவாக இருக்கிறாள். அதே சமயம் வெளியில் செல்லும் ஒவ்வொரு முறையும் தவறாமல் பாண்டியனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வருகிறாள். ராஜேஷின் இடத்தில் யாராக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும்.

ராஜேஷ் அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பை மதிக்கிறான். ஒரே அறையில் தங்கி இருப்பதை புரிந்து கொள்கிறான். ஆனால் ஒரு நாளைக்கு சில நிமிடங்களாவது தனக்கும் கவிதாவுக்குமான தனிப்பட்ட நேரம் வேண்டும் என்று ஆசைப்படுகிறான். கவிதா இவ்வளவு பிரச்னைகளுக்கு பிறகும் தனக்கும் பாண்டியனுக்கும் இருக்கும் நட்பை ராஜேஷ் புரிந்துக் கொள்ளவில்லை எனக் குற்றம் சாட்டுகிறாள். அதிக மன முதிர்ச்சியுடன் இருப்பதாக வெளியில் தெரியும் பலரும் கவிதாவை போல் சின்ன சின்ன விஷயங்களில் சூழ்நிலைக்கு ரியாக்ட் செய்பவர்களாக இருக்கிறார்கள்.

AKS - 39
AKS - 39

நல்லவேளையாக பாண்டியன் ராஜேஷின் நிலைமையை சரியாக புரிந்து கொள்கிறான். இதுவரையில் விளையாட்டுத்தனமாக தெரிந்த பாண்டியன் முதல் முறையாக தான் செய்த தவற்றை உணர்ந்து அதோடு மற்றவர்களின் சூழ்நிலையும் புரிந்து கொண்டு பேசுகிறான். அதோடு கவிதாவிடம் ராஜேஷை சமாதானம் செய்யுமாறு கூறுகிறான். கவிதாவிற்கு பாண்டியன் தன்னால் அவமானப்பட்டான் என்கிற குற்ற உணர்ச்சி இருக்கிறது. ராஜேஷின் மீது தவறு இல்லை என்று புரிந்தாலும் பாண்டியனை விட்டுத் தர முடியாததால் கவிதா ராஜேஷிடம் கோபமாக இருக்கிறாள்.

பாண்டியன் புரிந்துகொண்டதை போல கவிதா ராஜேஷின் கோபத்தில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்வாளா?
காயத்ரியுடன் “சர்ப்ரைஸாக” சென்னை வரும் சுந்தருக்கு சென்னை வைத்திருக்கும் சர்ப்ரைஸ் என்ன?

காத்திருப்போம்!

இணைய தலைமுறையை சந்திக்க இளைய தளத்திற்கு வருகிறோம். செவிக்குணவாக ஹலோ விகடன். இப்பவே கேளுங்க!
Hello விகடன்
Hello விகடன்