Published:Updated:

"பயில்வான் ரங்கநாதனை நேரில் பார்த்தா அறையணும்னு தோணும்!"- சீரியல் நடிகர் அருண் குமார் ராஜன்

அருண் குமார் ராஜன்

"அப்பா, ராமதாஸ் அவர்களுக்கு ரொம்ப நெருங்கிய தொடர்பில் இருப்பவர். நாம சாதியை உயர்த்திப் பேசணும் என்பதற்காக ஒருத்தரைத் தாழ்த்தி நாம பெருமைப்பட வேண்டிய அவசியமில்லைன்னு எனக்கு தோணுச்சு. 'ஜெய் பீம்' தொடர்பாக என் கருத்தைச் சொல்லி பதிவிட்டேன்." - அருண் குமார் ராஜன்

"பயில்வான் ரங்கநாதனை நேரில் பார்த்தா அறையணும்னு தோணும்!"- சீரியல் நடிகர் அருண் குமார் ராஜன்

"அப்பா, ராமதாஸ் அவர்களுக்கு ரொம்ப நெருங்கிய தொடர்பில் இருப்பவர். நாம சாதியை உயர்த்திப் பேசணும் என்பதற்காக ஒருத்தரைத் தாழ்த்தி நாம பெருமைப்பட வேண்டிய அவசியமில்லைன்னு எனக்கு தோணுச்சு. 'ஜெய் பீம்' தொடர்பாக என் கருத்தைச் சொல்லி பதிவிட்டேன்." - அருண் குமார் ராஜன்

Published:Updated:
அருண் குமார் ராஜன்
`அழகி' சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரியானவர் அருண் குமார் ராஜன். எந்தவித பின்புலமும் இல்லாமல் மீடியாவிற்குள் நுழைந்தவர். தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `கண்ட நாள் முதல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலைப் பொழுதில் அவருடைய இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.
அருண் குமார் ராஜன்
அருண் குமார் ராஜன்

"ஸ்கூல் படிக்கும்போது டிராமாவில் கலந்துப்பேன். அப்போதிலிருந்து நடிப்பு மீது தீராக்காதல் எனக்குள்ள இருந்துட்டே இருந்தது. எம்.பி.ஏ படிச்சிட்டு ஒரு எம்.என்.சி கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்தேன். வாழ்க்கை எந்தப் பாதையில் என்னைக் கூட்டிட்டு போகப் போகுது என்கிற குழப்பத்துடன்தான் பயணிச்சிட்டு இருந்தேன். விகடன் ஒர்க்‌ஷாப்பில் கலந்துகிட்டு நடிப்புன்னா என்னன்னு கத்துக்கிட்டேன். எதார்த்தமா எனக்கு அமைஞ்ச புராஜக்ட்தான் 'அழகி'. நடிப்புன்னா என்னன்னு எனக்கு கத்துக் கொடுத்த இடம் அதுதான்!

அருண் குமார் ராஜன்
அருண் குமார் ராஜன்

அந்த சீரியலில் நடிக்கப் போறேன்னு தெரிஞ்சதும் கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய் வரையில் சம்பாதிச்சிட்டு இருந்த வேலையை விட்டுட்டேன். அடுத்து என்ன ஆகப்போகுதுன்னே எனக்குத் தெரியாது. என்னோட சின்ன பையன் பிறந்த மறுநாள் அந்த சீரியல் டிவியில் டெலிகாஸ்ட் ஆச்சு. நமக்கு லைஃப் எப்ப வேணும்னாலும் மாறும் என்பதற்கு நானே உதாரணம்! என் ரெண்டாவது பையன் பிறந்த பிறகுதான் நான் மீடியாவுக்குள்ளேயே வந்தேன். என் குடும்பம் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. என்னோட உணர்வுக்கு மதிப்பு கொடுத்தாங்க. நான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்ச பிறகு என்னோட மூணு புராஜெக்ட் 1500 எபிசோடுகள் வரைக்கும் கூட ஒளிபரப்பாகியிருக்கு. தொடர்ந்து 12 வருஷமா நடிச்சிட்டேதான் இருக்கேன். என்னை சலிக்காம மக்கள் ஏத்துக்கிட்டது என்னோட பலமாகிடுச்சு. ஒவ்வொரு கேரக்டரையும் வித்தியாசப்படுத்தி காட்டுறதுக்காக அதிகமாகவே மெனக்கிட்டேன்" என்றவரிடம் தன் கைப்பட படங்கள் வரைந்து விற்பனை செய்து வருகிற விஷயம் குறித்துக் கேட்கவும் புன்னகைக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாடி பர்சனலா ரொம்ப மன உளைச்சலுக்குள் போயிட்டேன். எனக்கு டிராயிங் ரொம்ப பிடிக்கும். என்னோட ஸ்ட்ரெஸ் முழுவதையும் பெயிண்ட்டிங் வழியாக வெளிக்காட்ட ஆரம்பிச்சேன். அது எனக்குள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துச்சு. பிறகு என் நண்பர்கள், குடும்பத்தினர்களுக்கு என் கையாலேயே படங்கள் வரைந்து கிஃப்ட் பண்ணினேன். அது பலருக்கும் பிடிச்சிருந்தது. பிறகு கேட்கிற கஸ்டமர்ஸூக்கும் வரைஞ்சு கொடுக்க ஆரம்பிச்சேன். இப்பவும் அது தொடர்ந்துட்டு இருக்கு!" என்றவரிடம் 'ஜெய் பீம்' சர்ச்சை குறித்து பேசினோம்.

அருண் குமார் ராஜன்
அருண் குமார் ராஜன்

அப்பா, ராமதாஸ் அவர்களுக்கு ரொம்ப நெருங்கிய தொடர்பில் இருப்பவர். நாம சாதியை உயர்த்திப் பேசணும் என்பதற்காக ஒருத்தரைத் தாழ்த்தி நாம பெருமைப்பட வேண்டிய அவசியமில்லைன்னு எனக்கு தோணுச்சு. 'ஜெய் பீம்' படம் தொடர்பாக சர்ச்சை வந்தப்ப என் கருத்தைச் சொல்லி சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டேன். அதைப் பார்த்துட்டு நிறைய மிரட்டல்கள் வந்துச்சு. 'உன் கருத்தில் நீ உறுதியா இருக்கியா'ன்னு மட்டும்தான் அப்பா என்கிட்ட கேட்டார். 'எல்லாருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கு. அது உன் கருத்து'ன்னு அப்பா தெளிவா சொன்னார் என்றவர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் மீடியாவைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் நடந்து கொண்டது குறித்து கேட்டோம்.

"அவர் பண்றது ரொம்ப கேவலமான விஷயம். எல்லார் வாழ்க்கையிலும் ஒரு கசப்பான சம்பவம் நிகழ்ந்திருக்கும். அவங்க, அவங்களோட சூழல் அவங்களுக்கு மட்டும்தான் தெரியும். ஒரு பெண் மீடியாவில் இருந்தாங்கன்னா அவங்க என்ன கிள்ளுக்கீரையா? அவங்களோட பர்சனல் விஷயங்களை பொது வெளியில் பேசுறதுக்கு உங்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது? பேச்சுரிமை எல்லாருக்கும் உண்டு, ஆனா அதுக்கும் மீறி ஒருத்தருடைய பர்சனலும் அதில் அடங்கியிருக்கு என்னும் போது தோணுறதை எல்லாம் பேசிட முடியாது.

மக்கள்கிட்ட கொண்டு சேர்க்க ஆயிரம் நல்ல விஷயங்கள் இருக்கு. ஒருத்தரை மதிக்க தெரியலையா, அப்ப ஒதுங்கி போயிடணும். எந்த விதத்தில் நீங்க உங்களைப் பெரிய ஆளாக நினைச்சிட்டு இருக்கீங்க? வாழ்க்கை ஓட்டத்தில் தப்பான கண்ணோட்டத்தில் பேசி உங்கப் பொண்ணை யாராவது சுட்டிக் காட்டினால் அதை கேட்டுட்டு நார்மலான பர்சனா இருப்பீங்களா... எனக்கு ரொம்ப மனசு வலிக்குது... எல்லாரும் அசிங்கத்து மேல கல் அடிக்க வேண்டாம் என்கிற மனநிலையில ஒதுங்கிதான் போறாங்க. எல்லாருமே ஏதோ ஒரு வகையில் தப்பு பண்ணியிருப்பாங்க. பிறகு அந்தத் தப்பை உணர்ந்து அவங்களே சரி செய்துடுவாங்க... அதுதான் மனித வாழ்க்கையே! ஆனா இப்படிப் பேசுறது தனி மனிதரை மட்டும் பாதிக்காம அந்தக் குடும்பத்தையே பாதிக்கும்.

அருண் குமார் ராஜன்
அருண் குமார் ராஜன்

இன்னைக்கு அவர் கூட நடிச்ச சீனியர் நடிகர்கள் குறிப்பா கவுண்டமணி சார் பற்றியெல்லாம் பேசுறது எப்படிச் சரியா இருக்கும்... இந்த மாதிரி பேசி சம்பாதிக்கிற காசில் எப்படிச் சாப்பிடுறது செரிக்குதுன்னு எனக்கு தெரியல! இவர் பேசினதால எத்தனை பேர் மனசு உடைந்து அழுதுருப்பாங்க! அப்படி ஒருத்தரை துன்புறுத்தி அதன் மூலமா கிடைக்கிற பணத்தில் அவரோட குடும்பமே சாப்பிடுறாங்கன்னா அது ஜீரணம் ஆகாது. அவரை நேரில் பார்த்தா எனக்கும் அறையணும்னுதான் தோணும்!" என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்க்கை கிளிக் செய்யவும்!